Home » Articles » மேம்படட்டும் மனிதவளம்

 
மேம்படட்டும் மனிதவளம்


மலர்விழி ஜெ
Author:

வளரும்  பருவத்தில் அறியாமை, வளர்ந்த பின்னும் அறியாமை எதுவாயினும் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அறியாமை இருளில் இருப்பவர்களை மட்டுமல்லாமல் சுற்றியிருப்போரையும் பாதிப்புக்குள்ளாக்கும்.

ஒரு தனியார் பள்ளியல் படிக்கும் ஆசிரியையின் 6 வயது மகன் திடீரென்று இரண்டாவது  மாடியிலிருந்து குதித்துவிட்டான். என்ன காரணம் என்று ஆராயும் போது பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். அவர்கள் குழந்தையிடம் கலந்துரையாட நேரம் ஒதுக்குவதில்லை, மேலும் அவன் ஆங்கில திரைப்படங்களையும் கார்ட்டூன் திரைப்படங்களையும் பார்க்கும் வழக்கம் கொண்டவன், என்று  தெரிய வருகிறது. அவர்களும் குதிக்கிறார்களே அவர்களை போல நாமும் குதிக்க வேண்டும் என்ற தாக்கம் அவனை பெரிதும் பாதித்துள்ளது.

புரிதல் திறனை வளருங்கள்:

குழந்தைகளுடன் பெற்றோர்கள் மாலைப் பொழுதிலும், விடுமுறை நாட்களிலும் நேரத்தைச் செலவழியுங்கள். அவர்களின் மனம் சார்ந்த போக்கினை அறிய வேண்டும், சினிமாவில் காண்பிக்கப்படும் காட்சிகள் எதுவும் உண்மையில்லை, அவர்கள் பாதுகாப்பான முறையிலே செய்வார்கள்  என்ற புரிதலை அவனுக்குள் புரிய வைக்க வேண்டும்.

நிழலும் நிஜமும் புரிய வையுங்கள்:

மற்றொரு வீட்டில் ஒரு சிறுவன் சட்டை பட்டனைக் கழற்றிவிட்டு லுங்கியுடன் தொலைக்காட்சியில் ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரைப் போலவே இவனும் ஆடிக்கொண்டிருக்கிறான். அடுத்த நாள் அதே நடிகர் அழகான ஆடை அணிந்து தொலைக்காட்சியில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்தக்குழந்தையை அழைத்து நிஜத்தில் அந்த நடிகர் நல்ல ஆடையை அணியக்கூடியவர் தான் படித்திற்காக அப்படி ஒரு ஆடையை அணிந்து நடிக்கிறார். இதனால் நிழல் எது, நிஜம் எது என்று புரிய வைக்க வேண்டும்.

முடிவெடுக்கும் திறனை வளருங்கள்:

காதலென்னும் மாய வலையில் விழும் இளைய சமுதாயத்திற்கு எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வும், தெளிவாக முடிவெடுக்கும் திறனும் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது. பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னேறி வருகிறார்கள். ஆனால் அந்த சுதந்திரத்தை அறியாமை இருளால் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்கிறார்கள். வீட்டில் தனது பொறுப்புகளைச் சரிவர செய்யாமல், குடும்பத்தைச் சிறந்த முறையில் நிர்வகிக்காமல் ஆணவமாக நடத்தாமல் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு தாயராக செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. 

மாற்றங்களையும் வரைமுறைகளையும் கவனியுங்கள்:

தொழிற் நுட்பங்களை நன்கு அறிய வேண்டும், அதற்கு எற்றார் போல மாற்றங்களைச் சந்திக்க  வேண்டும். அறியாமையால் குறுகிய காலத்தில் அதிக பொருளை ஈட்ட வேண்டும்  என்பதால் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கிறார்கள்.

தானே முன் வந்து செயல்படுங்கள்:

படிக்கும் வயதிலேயே விடுமுறை நாட்களில் சம்பாதிக்கும் பழக்கம்  வெளி நாடுகளில் இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து வைப்பதே பெற்றோர்களின் கடமையாக இருக்கிறது.

இன்றும் சில பிள்ளைகளைப் பார்க்கிறோம். அவர்கள் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் சென்றே படிக்கிறார்கள். அவர்கள் தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். காலை முழுவதும் படிப்பும் பள்ளியுமாக இருக்கிறார்கள். ஆனால் மாலை ஆனவுடன் வேலைக்கு வந்து விடுகிறார்கள். படிக்கின்ற காலத்திலேயே வேலைக்குச் சென்ற நிறைய பேர் இன்று சாதனையாளராக இருக்கிறார்கள் என்பதை நாம் வரலாற்றில் படித்தும் கேட்டும் கொள்கிறோம்.

ஆனால் ஒரு சில வசதி படைத்த பிள்ளைகள் பெற்றோர்களின் பணத்தை விரயம் செய்து, படிப்பிலும் பின் தங்கிய மாணவர்களாக இருக்கிறார்கள் இந்நிலை மாற வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பணத்தைக் கொடுக்க வேண்டும்.

மீனை சாப்பிட கற்றுக் கொடுக்காமல் மீனை பிடிக்கும் முறையைக் கற்றுக் கொடுங்கள்.

அறிவியல் உண்மைகளை உணருங்கள்:

வீட்டில் பிரசவம் பார்த்த காலத்திலும் சரி, தற்போதும் சரி குழந்தை பிறந்து விட்டால், ஒரு மாதத்திற்கு பிரசவித்த பெண் தண்ணீர் குடிக்க கூடாது என்றும், வயிற்றில் துணியை இருக்கக் கட்டினால் வயிறு குறையும் என்ற மூடப்பழக்கம் உள்ளன.

அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலக் கட்டத்திலும்  தாய்மை என்ற அற்புதத்தை அழகாய் அனுபவிக்காமல் தவிக்கிறார்கள்.

மேலும் சிறு வயதிலேயே இவனுக்க இவள் என்று முடிவு செய்வது, மாமன் மகள், அத்தை மகள்  போன்ற உறவுகளில் மணமுடிப்பது போன்றவற்றால் அறிவியல் சார்நத பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.

அறியாமை இருளைப் போக்க சில வழிமுறைகள்:

கல்வியறிவை வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் நடைமுறைப் படுத்த வேண்டும்.

சமுதாய பழக்க வழக்கங்களை அனுபவம் பெற்றவர்களால் வழிநடத்த வேண்டும்.

குழந்தைகளை வளர்க்கும் முறைகளில் அதிக அக்கரை வேண்டும். அவர்களின் எதிர்கால நலனைகங கருத்தில் கொண்டு மாற்றங்களை உருவாக்கித்தர வேண்டும்.

புரிதல் திறனை அதிகரிக்க வீட்டின் பெரியோர்களிடம் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக உறவு முறையில் பேணிகாக்க வேண்டும்.

அவரவர் கடமைகளையும் ,  பொறுப்புகளையும் செவ்வனே செய்ய  வேண்டும்.

காலத்திற்கு ஏற்ப மாறுதலை அறிந்து தன்னை வளர்த்து முன்னிருத்திக் கொள்ள வேண்டும்.

முடநம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும். 

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!