அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…! - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை

Home » Articles » அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!

 
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!


செல்வராஜ் P.S.K
Author:

இலட்சிய வீரர்களே

கடமை கசந்துவிட்டதா? செயல்பாட்டில் ஈடுபாடில்லையா? உலகில் எத்தனை கோடி போர் வந்தார்கள்? எத்தனை பேர் வரலாற்றில் உள்ளார்கள்?

வந்தவரெல்லாம் வரலாற்றில் நிலைத்து நின்றிருந்தால் இந்த வரலாறுதான் என்னாவது? இந்த சரித்திரத்திற்குச் சக்தி ஏது? மதிப்பேது?

வந்தவர் எல்லாம் வென்றிருந்தால் வெற்றிக்கு மதிப்பேது? உடனடியாக, விரைவில், எளிதில் கிடைத்துவிடுவது வெற்றியல்ல..

வெற்றி அவ்வளவு எளிதாக இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை. அறிவும் தெளிவும், துணிவும், தெரிவும், வீரமும், விவேகமும், விழிப்பும், திறமையும் எந்த ஒரு இளைஞனிடம் ஸ்தம்பிக்கின்றதோ அந்த இளைஞனால் எதையும் சாதிக்க முடியும்.

அவனிடம் பல வெற்றிகள் காணப்படும். அந்த இளைஞனால் சாதிக்க முடியாதது எதுவும் உலகில் இல்லை.. இருக்காது இருக்கவும் முடியாது.

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒவ்வொரு துறைக்கான படைப்பாற்றல் உள்ளது. அதை தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு அதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்துபவர்களே முன்னேறுகின்றனர் வாழ்வில் சாதனை படைக்கின்றனர்; வரலாற்றில் இடம் பெறுகின்றனர்.

உன்னிடமும் ஒரு திறமை இருக்கின்றது. என்பதை நீ கண்டறி. இப்படிக் கண்டறிந்தால் போதும், உலக அரங்கில் உன் திறமை ஒரு நாள் கண்டிப்பாகப் பேசப்படும்.

கல்வெட்டாக வரலாற்றில் பதிந்து கிடக்கும் சாதித்தவர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ளாத எவனுக்கும் சாதிக்கின்ற அந்த நம்பிக்கை வராது சாதிக்கவும் முடியாது.

அன்பு மிக்கவனே

என் ஆருயிர்த் தோழனே

நீ எதையும் சாதிக்கப் பிறந்தவன்

நீ எதையும் சந்திக்கப் பிறந்தவன்

நீ எதையும் சிந்திக்கப் பிறந்தவன்

நீ எதையும் போதிக்கப் பிறந்தவன்

எதிலும்  வெற்றி வாகை சூட வந்தவன்

நீ, எதற்கும் நாதியற்றவன் அல்ல

இதுவரை, உலகில் தோன்றி மறைந்தோர் எத்தனையோ கோடி பேர், தோன்றிய எல்லோருக்கும் வரலாறு என்று ஒன்று இல்லை. இதில் சிலருக்கே உண்டு. 

இந்த சரித்திரப்பட்டியல் நீதி, அநீதி என இருவகைப்படும். இதில், எதில் நீ இடம்பெறப் போராடிக் கொண்டிருக்கிறாய்?  காந்தி இருக்கும்  பெயர் பட்டியலிலா? கோட்சே இருக்கும் பெயர்ப் பட்டியலிலா? 

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!