Home » Articles » கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?

 
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?


சுவாமிநாதன்.தி
Author:

கோபம் என்பது மனிதர்களுக்கிடையே எழும் கடுமையான உணர்ச்சியாகும். உள்ளத்திலிருந்து பொங்கி வரும் ஒரு உணர்வு. ஒரு மனிதன் தன்னை அச்சுறுத்தும் வேறு ஒரு வெளி சக்தியை எதிர்க்க எடுக்கும் முடிவே கோபம். கோபத்திற்கு சினம், வெகுளி, குரோதம், சீற்றம் என்று பல பெயர்கள் உண்டு. தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கி, எதிர்காலத்திலும், துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு கோபமாகும். மனிதன் தெரிந்தே செய்கிற ஆனால், திருத்திக் கொள்ள முன்வராத தவறாகவே எல்லோரிடமும்  உள்ளது இந்த கோப உணர்வு.  மனிதனின் வாயிலிருந்து கோபத்தில் வார்த்தைகள் அறிவை விட வேகமாக வந்து விழுகிறது.

நாம் கோபப்படுவது ஏன்?

நாம் அவமதிக்கப்பட்டால். பொதுவாக நாம் விரும்புவது நடைபெறாமல் போனால், நம் பிள்ளைகள் படிக்காமல் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தால் நமக்கு கோபத்தை ஏற்படுத்தும். நாம் சார்ந்த மதத்தை யாராவது தவறாகப் பேசினால் கோபம் வரும். நம் வீட்டிற்குள் காலணியை கழட்டாமல் உள்ளே வருபவர்கள் மீது, நம்மிடம் ஆவேசமாகப் பேசுபவர்கள் மீது, நம் முன்னிலையில்  கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பவர்கள் மீது,  மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதை நினைத்து எரிச்சல் வரும்.

யார் மீது அதிகம் அன்பும் நம்பிக்கையும் கொள்கிறோமே அவர்களிடம்தான் உண்மையில்; நாம் அடிக்கடி கோபம் கொள்கிறோம்.  நம்மால் அதிகம் நேசிக்கப்படுகிறவர்களிடம்தான் நாம் அதிகம் கோபம் கொள்கிறோம். கோபம் இருக்குமிடத்தில் காமமும் இருக்கும். காமமும், கோபமும் இரட்டைக் குழந்தைகள் என்கின்றனர் அறிஞர்கள்.

நமது காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால், நமது நன்மைக்கு இடையூறு ஏற்பட்டால் நமக்கு கோபம் கொந்தளிக்கிறது. தற்பெருமை, ஆடம்பரம், வறட்டுக் கௌரவம் ஆகியவற்றாலும் கோபம் உருவாகிறது. தன்னை கேவலமாகக் கருதுபவர்கள், தன்னை பிறருக்கு மத்தியில் கேவலப்படுத்துபவர்கள், நமது செல்வாக்கை நீக்குபவர்கள், நமது பெருமையை குலைத்து, நமக்கு ஏற்படும் இன்னல்களை கண்டு மகிழ்பவர்கள், நட்பை விரும்பி நாம் போனாலும் நம்மை கண்டுகொள்ளாதவர்கள், நம்மை அவதூறு பேசுபவர்கள், கேலி கிண்டல் செய்பவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம்மை துன்புறுத்துபவர்கள், நமக்கு சேர வேண்டிய உரிமைகளை நம் மீது உள்ள வெறுப்பினால் ரத்து செய்பவர்கள் மீது நமக்கு கோபம் நிச்சயம் வரும்.

நமக்கு பிடிக்காத வகையில் எவரேனும் நடந்து கொண்டால் நாம் மகிழ்ச்சியை இழக்கிறோம். நாம் வேண்டுவது நடக்காவிட்டாலும் நமக்கு வேண்டாதது எதுவும் நடந்தாலும் நமது மனம் இறுக்கம் அடைகிறது. தவறான மனிதர்கள் தங்கள் தவறை ஓத்துக்கொள்ளவோ உணரவோ மறுப்பவர்கள்தான் அடிக்கடி கோபப்படுவார்கள்.

கோபத்தினால் ஏற்படும் விளைவுகள்:

கோபம் நம் உடலை, நம் நடத்தையை, நம் அறிவை பாதிக்கக்கூடியது. எப்போழுதுமே கோபமாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை போன்ற வியாதிகள் வர வாய்ப்பு அதிகமாகிறது. கோபப்படும் போது நம் அழகிய முகம் விகாரமாகிறது. ரத்தம் கொதிக்கிறது. கண்கள் சிவக்கிறது. நாக்கு குளறுகிறது. முக அழகு கெடுகிறது. வெறி கொண்ட நாய் போன்ற வெறுப்பான தோற்றம் நமக்கு தேவையா? மனம் கொந்தளிக்கிறது. நரம்புகள் பலவீனம் அடைகிறது. நோய்கள் உண்டாகின்றன. உயிர் ஆற்றல் அதிகம் செலவாகிறது. ஹைபர் டென்ஷன், ரத்த கொதிப்பிற்கு காரணமே கோபம்தான். கோபத்தின் வெளிபாடுகளாக உரத்த குரலில் பேசுவது, பற்களை நற நறவென கடிப்பது, முறைப்பது என தாறுமாறாக நடந்து கொள்கிறோம்.

கோபத்தில் இருந்து அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடு சொற்கள், தாக்குதல் ஆகிய எட்டு தீய குணங்கள் பிறக்கின்றன. கோபத்தில்தான் கொலை செய்கிறார்கள். கடுமையான மொழிகளில் எடுத்தெறிந்து பேசுகிறார்கள். சொல்லத் தகாததை சொல்கிறார்கள். செய்யத் தகாத செயலை செய்கிறார்கள். கோபத்தினால் ஒரு போதும் ஆக்கம் இல்லை. இழப்புதான். கோபம் நெருங்கிய தோழமையை பிரிக்கும். கோபத்தில் செய்த செயல்களால் வாழ்க்கையே அழிந்து சிறையில் உள்ளவர்கள் ஏராளம். கோபத்தில் துவங்குவது அவமானத்தில் முடிகிறது. நம்முடைய சினமும், சீற்றமும் எதிராளியை அச்சமூட்டுகிறது. கோபம் வெளிப்படுத்த இயலாத இடத்தில் வஞ்சமாக மாறுகிறது. கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய். நல்ல உறவை அறுக்கிறது. துயரைக் கொடுக்கிறது. எதையும் கூடி வர விடாது.

பிறரின் வெறுப்பை சம்பாதிக்கிறோம், உடல் நலம், நட்பு நலம், சமுதாய நலம் பாதிக்கப் படுகிறது. பிறர் உள்ளத்தை புண்படுத்துகிறது. தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான். முகத்தில் சிரிப்பையும், மனதில் மகிழ்ச்சியையும் கொன்று விடுகிறது. கோபம் கொண்டவர்கள் அழிவது உறுதி. அவர்கள் மட்டும் அல்லாமல் அவர்களைச் சேர்ந்தவர்களையும் அழித்து விடும். முட்டாள்தனத்தில் ஆரம்பித்து வருத்தத்தில் முடிகிறது. கோபம் நல்வாழ்வை சீரழிக்கும் நஞ்சாகும். மனிதனை மிருகமாக்குகிறது. அன்பு, அகிம்சையை தகர்க்கும் வெடிகுண்டு. கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வெடிக்கும் எரிமலை. காட்டாற்று வௌ;ளம். நமது கோபம் பிறர் முகத்தை சுளிக்க வைக்கிறது. சந்தோஷங்களை துண்டிக்கிறது. கோபத்துடன் செய்யும் செயல்கள் யாருக்கும் நன்மையை தராது. கோபத்தில்; புத்தி மழுங்குகிறது. வலியவரிடம் கோபத்தைக் காட்டினால் கெடுதலாக முடியும். மேலதிகாரியிடம் கோபத்தைக் காட்டினால் வேலை போய்விடும். 

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!