Home » Articles » சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

 
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்


கிரிஜா இராசாராம்
Author:

கம்பிலிருந்து கீழே விழந்தது ஆமை

நண்பர்கள் சொல்லும் வழிகாட்டுதலை கடைபிடிப்பதிலிருந்து தவறினால் அவன் துயரத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையை சந்திக்க நேரிடும் என்ற மையக்கருத்தை விளக்கும் கதை.

கம்புகிரிவா என்ற ஆமை ஒரு ஏரியில் வாழ்ந்து வந்தது. அதற்கு இரண்டு அன்னப்பறவைகள் நல்ல நண்பர்கள். ஒவ்வொரு நாளும், மாலை நேரம் வரும் முன் மூவரும் அன்றாடம் நடந்த விசயங்களைப் பேசி மகிழ்ந்து கொள்வர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்த ஊரில் ஒரு வருடமாக மழையில்லை. அந்த ஏரியில் நீர் வற்றத் தொடங்கி விட்டது. அதனால் தண்ணீர் உள்ள வேறு ஒரு ஏரியைப் தேடிப் போகலாம் என்று முடிவு செய்தனர். இரண்டு அன்னப்பறவைகளும் தண்ணீர் உள்ள ஏரியைப்பார்த்து விட்டு கம்புகிரிவாவை அழைத்துச் செல்ல வந்தனர். அதற்காக ஒரு கம்பை தயார் செய்து, தங்கள் கால்களில் கம்பை கெட்டியாகப் பற்றிகங கொண்டு, கம்புகிரிவாவைப் பார்த்து நீ உன் வாயினால் கம்பை கெட்டியாகக் கவ்விக் கொண்டு வரவேண்டும்.

நாங்கள் பறக்கும் போது எந்த காரணத்தைக் கொண்டும் வாயைத் திறக்க கூடாது, அப்படித்திறந்தால் கிழே விடுவாய் என்ற அறிவுரைக் கூறி புதிய ஏரியை  நோக்கி பறக்கத் தொடங்கியது. இந்த மூவரும் பறந்து செல்லும் வினோத  காட்சியைப் பலரும் பார்த்தனர்.

ஒரு இடத்தைக் கடக்கும் போது அங்கிருந்தோர் அவர்களின் அதிகபடியான ஆவலாய் ஆரவாரம் செய்தனர். கம்புகிரிவா, தங்கள் நண்பர்கள் கூறிய அறிவுரையை மறந்து இது என்ன சப்தம்  என்று வாயைத் திறந்து பேசியதும் கிழே விழந்தது. ஆரவாரம் செய்த அந்த நபர்கள் நமக்கு இன்று ஒரு நல்ல உணவு கிடைத்தது என்று கிழே விழந்த கம்புகிரிவா என்ற ஆமையை எடுத்துச் சென்று உணவு சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

இக்கதையின் நிகழ்வுகள் நட்பு பற்றிய பல வரலாற்று நிகழ்வுகளையும், இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள நட்பு பற்றிய செய்திகளையும் நம் கண் முன் கொண்டு வருகின்றன. கரடியும் இரண்டு நண்பர்களும் என்ற சிறுகதையில் நண்பர்கள் இருவர் காட்டிற்குள் செல்லும் போது கரடி ஒன்று ஒன்று வருவதைப் பார்த்தவுடன் மரம் ஏறத் தெரிந்தவன் மரத்தில் ஏறி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான்.

தன் உடன் வந்த நண்பனின் உயிர் பற்றி அவன் கவலைப் படவில்லை. ஆனால் அந்த மற்றொருவன் தன்னுடைய சமயோகித புத்தியினால் இறந்தவன் போல் படுத்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வான். அந்த கரடியும் இவன் அருகில் வந்து அவனை முகர்ந்து பார்த்து இறந்தவன் உடம்பினால் தனக்குப் பயனில்லை என்று சென்று விடும். மரத்திலிருந்து இறங்கி வந்து நண்பனிடம் கரடி வந்து  உன் காதருகில் என்ன சொன்னது என்ற கேள்விக்கு ஆபத்தில் உதவாத நண்பன் உன் நண்பன் இல்லை என்று சொல்லியதாகப் பதில் அளித்தான்.

கம்பிலிருந்து கிழே விழுந்த ஆமை கதையில் உள்ள அன்னப்பறவைகள் இரண்டும் தாங்கள் மட்டும் புதிய ஏரிக்குச் சென்று வாழலாம் என்று எண்ணாமல் தங்கள் நண்பன் கிம்புரிவா என்ற ஆமைக்கு உதவி செய்ய முன் வந்தனர். துன்பத்திலும் பங்கு  கொண்டு அவனைக் காப்பாற்றினர்.

நட்பு என்ற சொல் உச்சரிக்கும் கோது பிசிராந்தையார் என்ற அறிஞனும் கோப்பெருஞ் சோழன் என்ற மன்னனும் கொண்ட நட்பு தான் நினைவுக்கு வரும். நட்பு பற்றிய சிறுகதை விளக்கத்தில் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்வது ஏற்புடையதாகும்.

அவரை முதுமை, பிணி இரண்டும் அணுகவில்லை. காரணம் என்ன வென்றால், அவருக்கு நல்ல மனைவி, குறிப்பறிந்து பணியாற்றும் பணியாளர்கள், அறம் வழி நடக்கும் மன்னன் மற்றும் கற்றறிந்தோர், சான்றோர் சூழ்ந்திருக்கும் சூழ்நிலை. அவன் சோழ நாட்டு மன்னன் மீது மனதால் தன் நட்பை வளர்த்திருந்தார். சோழநாடு தன் நாட்டியிலிருந்து தொலைவு என்ற காரணத்தால் அவரை நேரில் சந்திக்க  இயலவில்லை. மன்னன் கோப்பெருச்சோழன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம்  நட்பிற்கு கிடையாது என்ற கூற்றிற்கிணங்க பிசிராந்தையார் மீது நட்பு கொண்டிருந்தார். அவரும் தன்னுடைய அரசுப் பணி காரணமாக நேரில் சென்று பார்க்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவர்கள் நட்பு வளர்த்து கொண்ட நட்பு எப்படி வரலாற்று சிறப்பு என்ற நிகழ்வு அனைவதையும் அதிசியதக்க வகையில் நடந்தது. கோப் பெரும் சோழனின் மகன்கள் இருவரும் தந்தையின் மீது போர் புரிய முடிவெடுத்தனர். இந்த அவமானத்தை தாங்க இயலாமல் மன்னன் நாட்டின் எல்லையில் வடக்கிலிருந்து உயிர்நீக்க முடிவெடுத்தனர்.

அதற்காக அந்த நீர் நிலையை அடைந்து அதில் மணல் மேடை அமைக்க உத்தரவிட்டான். தனக்கு அருகிலும் ஒரு மணல் மேடை அமைக்க சொன்னான். அவர்கள் யோசிக்கும் நேரத்தில் பிசிராந்தையார் அங்கு வந்தார். தன் நண்பனின் அவமானத்தை, தன் அவமானமாகக் கருதி தன் உயிரையும் கொடுக்க முடிவு செய்தார். இருவரும் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா விரதமிருந்து உயிர் நீத்தனர். இந்த நிகழ்வை நேரில் பார்த்த புலவர்  பொத்தியார் இவர்கள் இருவர் நட்பு பற்றி..

இசை மரபு ஆக நட்பு கந்தாக

இனியதோர் காலை ஈங்கு வருதல்

என்று பாடியுள்ளார். நண்பன் என்பவன் நல்லதொரு வழிகாட்டி, உயிர்காப்பவன், உயிரையும் கொடுப்பவன் மற்றும் தாயின் மடிக்கு அடுத்த படியாக தன் தோளை தன் நண்பனின் துயரத்தை குறைக்க கொடுப்பவன் ஆவான். நாமும்  நல்ல நண்பர்களின் நட்பை இந்த இனிய ஆங்கில புத்தாண்டில்  நினைவில் கொண்டு புத்துணர்ச்சி பெறுவோமாக

தொடரும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!