Home » Articles » சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்

 
சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்


தவ்பீக் அமீ ஹெச்
Author:

அமைதியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாலும், புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தாலும், குழந்தைகளின் ஆர்ப்பாட்டைத்தை ரசித்துக் கொண்டிருந்தாலும் அல்லது தொழில் மற்றும் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மனம் அதற்கு உள்ள வேலையான, பல வித சிந்தனைகளை உருவாக்கும் கடமையை தவறாமல் நிறைவேற்றுகிறது.

அவ்வாறான சிறு வயதிலிருந்து வளர்ந்த சிந்தனைகள், பள்ளி, கல்லூரி மற்றும் தொழிலில் பெற்ற வெற்றிகளின் தாக்கம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன.தற்போதுள்ள பல சிக்கல்களைத் தீர்க்க அவற்றின் தாக்கம் மிக அதிகமாக உதவுகின்றன. மனதை அமைதிப்படுத்தும் சிறந்த சிந்தனைகளை இவ்வாறான எண்ணங்கள் விதைக்கின்றன.

பயம் கலந்த சிந்தனைகள், நிகழ்ந்து கொண்டிருக்கும் மோசமான சூழ்நிலைகள்; மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கூறிய, அவர்களுக்கு ஏமாற்றமளித்த சம்பவங்கள் ஆகியவை அமைதியான மனதில் ஒரு புயலைக் கிளப்பி, சிந்தனைகளை மோசமாக்கி, அந்த நிமிடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு  ஏற்பட்டு, இதை இழந்தால் எண்ண செய்வது, இப்படி நடந்தால் என எதிர்மறையாக சிந்தித்து, பல மணித்துளிகளை அமைதியின்மையில் கழிக்க தூண்டுகின்றன. இதனால் பல மணி நேரங்கள் நிம்மதியில்லாமல் தவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகின்றன.

நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ உருவாகும் சில நிமிட எதிர்மறை மற்றும் நேர்மறை சிந்தனைகள, பல மணிநேர வாழ்வை அமைதியற்றதாகவோ அல்லது மகிழ்ச்சி நிறைந்ததாகவோ மாற்றுகின்றன. இந்தச் சிந்தனைகள் உருவாவதற்கான காரணங்களில் பயம், பொறாமை, மற்றும் போதுமென்ற மனம் இல்லாமை என பல்வேறு காரணங்களைக் கூறலாம்.

ஒருவரது மனதில் தோன்றும் பயம், அவரது வியாபாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தையும் சிரழித்து, அவற்றை நாசமாக்குகின்றன.

“மாபேரும் இத்தாலிய நடிகர் டூஸாவை, அவரின் மகள் ‘வாழ்க்கை என்றால் என்ன’ என்று வினவிய பொழுது, ‘துணிவைச் சோதித்துப் பார்ப்பது’ என்று பதில் கூறினார்.

இந்த மாதிரியான சோதனைதான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டால், பயத்தை எதிர் கொள்வதற்கான துணிவு தானாக மனதில் தோன்றி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள், சூழ்நிலைகள் தோற்றமளித்து சிந்தனையை அமைதியளித்து, தைரியமான சிந்தனையைக் கொண்ட மனநிலையை தோற்றுவிக்கின்றன.

அப்போது உருவாகும் தீர்விற்கான வழிமுறைகள் எதிர்மறை சிந்தனைகளை மாற்றி, தற்போது நடக்க வேண்டிய சிறந்த மற்றும் இயற்கைக்குப் பொருத்தமான முடிவுகளை எடுத்து, குழப்பம் தரக்கூடிய அந்த சூழ்நிலையில், அதை சிறப்பாக மாற்றுவதற்கான சிந்தனைகளை செலுத்தி மனதினை இலகுவாக வைத்திருக்கப் பழக்கினால், அப்பயத்திற்கான பிரச்சினைகளை சுலபமாக தீர்க்க முடியும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2017

கொழுப்பும் ஆயுளும்
சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்
நவம்பர் மாத உலக தினங்கள்
கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்
பாம்புக்கடி
நெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து !
பயமும் பணிவும்
உள்ளே பார் உன்னை தெரியும்..
விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்
சுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்
மனவயல்
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
நேசி; உபயோகி
முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.
வெற்றி உங்கள் கையில்- 47
வாழ நினைத்தால் வாழலாம் – 10
நீயின்றி அமையாது உலகு..!
தன்னம்பிக்கை மேடை
மொழியை நேசி…! முன்னேற்றத்தை சுவாசி..!!
உள்ளத்தோடு உள்ளம்