Home » Articles » நவம்பர் மாத உலக தினங்கள்

 
நவம்பர் மாத உலக தினங்கள்


மனோகரன் பி.கே
Author:

1. உலக கழிப்பறை தினம் (World Toilet Day) நவம்பர் – 19

ஆண்டுதோறும் பல்வேறு நாட்கள் உலக தினங்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.  ஆனால் கழிப்பறைக்காகவும் ஒரு உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது வியப்பாக இருக்கும். கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமானதா? என்று நினைக்கலாம்.  ஆம், கழிப்பறைப் பிரச்சனை சர்வதேச அளவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது,  உலகம் முழுவதும் சுமார் 260 கோடி மக்கள் இந்த நெருக்கடியை நாள்தோறும் சந்தித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது,

கழிப்பறைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் (World Toilet Organisation) என்ற சர்வதேச அமைப்பு,  சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.  இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர்  19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் ‘உலக கழிப்பறை தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது,  கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்,

கழிப்பறை வசதி என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை.  இயற்கையின் அழைப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது,  விழித்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை, ஏன்? தூக்கத்திற்கு இடையிலும் கூட இயற்கை உபாதைகளுக்குப் பதில் சொல்லியே ஆக  வேண்டும்.  வீடு, அலுவலகம், பயணம் என்று எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இயற்கையின் அழைப்பு வரலாம்.  இன்று முடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட முடியாது,  ஆனால் இதைப்பற்றிப் பேசுவதற்குக் கூட யோசிக்கிறோம். அது ஏதோ கூடாத செயல் போல எண்ணுகிறோம்,  இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், வெளிப்படையாகச் சொல்ல பலர் கூச்சப்படுகிறார்கள்.

வீதிக்கு வீதி வகை வகையான உணவகங்கள், கடைகள் எல்லாம்  இருக்கின்றன.  ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு புறப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. பல நேரங்களில் அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படுகின்றனர்,  அன்றாடம் கோடிக்கணக்கான  மக்களின் வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது.

உலக அளவில் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத 260 கோடி மக்களில் 180 கோடி மக்கள் தெற்காசிய நாடுகளில் வசிக்கிறார்கள்.  இந்தியாவைப் பொறுத்தவரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.  ஆப்பரிக்காவில் உள்ள காங்கோ, உகாண்டா,தான்சானியா போன்ற நாடுகள் இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது,

போதிய கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் ஏரிகள், குளங்கள், சாலை ஓரங்கள், வயல்வெளிகள், கண்மாய்கள் போன்ற இடங்களில் காலைக்கடன்களை முடித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது.  அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது,  இருள் பிரியாத அதிகாலை நேரத்தையும், இருள் கவியும் மாலை நேரத்தையும் மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது.  இதனால் அவர்கள் தொற்றுநோய், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன,  குறிப்பாகப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பைத் தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2017

கொழுப்பும் ஆயுளும்
சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்
நவம்பர் மாத உலக தினங்கள்
கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்
பாம்புக்கடி
நெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து !
பயமும் பணிவும்
உள்ளே பார் உன்னை தெரியும்..
விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்
சுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்
மனவயல்
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
நேசி; உபயோகி
முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.
வெற்றி உங்கள் கையில்- 47
வாழ நினைத்தால் வாழலாம் – 10
நீயின்றி அமையாது உலகு..!
தன்னம்பிக்கை மேடை
மொழியை நேசி…! முன்னேற்றத்தை சுவாசி..!!
உள்ளத்தோடு உள்ளம்