![]() |
Author: ராமசாமி R.K
|
உலகமைந்தன சூரியக் கதிர்கள் !
உயிரமைந்தன இறை தரும் வரங்கள் !
கடலமைந்தன வெண்ணிற முத்துகள் !
கதிரமைந்தன நெல்மணி வித்துகள் !
நாவமைந்தன ஆயிரம் பாடல்கள் !
நமக்கமைந்தன இரு பெண்மையின் ஜோதிகள் !
ஒன்று இன்று மலர்ந்த திருவளர் செல்வி ஸ்ரீஷா மீனா
பின்னொன்று அன்றலர்ந்த தாமரைச் செல்வி ஸ்ரீ வர்ஷா
அலைமகள் வடிவே ஸ்ரீஷா மீனா!
அழகின் அழகே ஸ்ரீஷா மீனா!
அன்பின் உருவே ஸ்ரீஷா மீனா!
அறிவின் தெளிவே ஸ்ரீஷா மீனா!
சித்திரைப் பௌர்ணமி நிலவே! வாழ்க!
பத்திரைமாற்றுப் பொன்னே வாழ்க!
வார்த்த தங்கச்சிலையே ! வாழ்க!
வடித்த சந்தன உருவே ! வாழ்க!
கவிகள் எழுதாத காவியமே! வாழ்க!
கலைகள் வரையாத ஓவியமே! வாழ்க!
இந்த இதழை மேலும்
Share

November 2017




















No comments
Be the first one to leave a comment.