Home » Articles » விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்

 
விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்


ஆசிரியர் குழு
Author:

முனைவர் ப. சுந்தரராஜ்

உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை

பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

“பயிற்று பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்றார் பாரதி. அவரின் வாக்கிற்கிணங்க தான் கற்ற கல்வியின் மூலம் இன்று அறிவியல் துறையில் தனக்கென்று ஒரு களம் அமைத்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வையகம் போற்றும் ஒரு அறிவியல் விஞ்ஞானியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டியிருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரிராகப் பணியாற்றி வரும் முனைவர் ப. சுந்தரராஜ் அவர்களின் அழகிய தருணங்கள் இனி நம்மோடு…

கோவை மாவட்டம், மதுக்கரை அருகிலுள்ள கருஞ்சாமிக் கவுண்டன்பாளையம் என்ற குக்கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர்கள்அப்பா பழனிச்சாமி அம்மா மயிலாத்தாள். இரண்டு சகோதிரிகள் மற்றும் ஒரு தம்பி. நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் பள்ளிப் படிப்புக்காக வேறு நகரங்களுக்குச் செல்ல இயலாத நிலையால் எங்கள் ஊரின் அருகில் உள்ள குமாரபாளைத்தில் தொடக்கப்பள்ளி படிப்பு ஆரம்பமாயிற்று. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாலத்துறை நடுநிலைப்பள்ளியிலும் பின்னர் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை மதுக்கரை மேல் நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது.

என்னுடைய வற்புறுத்தாலும் பெற்றோர்களின் விடாமுயற்சியாலும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 1977 ஆம் ஆண்டு புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். என்னுடைய கல்விக்குப் பெரியதோர் வித்திட்டது இக்கல்லூரியாகும். இதற்கு உதாரணம் நான் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பில் சேர்ந்தது முதல் அத்துறையில் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றதே தனிச்சிறப்பாகும்.

அதன் பின் கோவை அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து அதிலும் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றேன். இது என் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன். அப்போது பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றுவித்த முதல் ஆண்டில் விலங்கியல் துறையில் இளம் முனைவர் பட்டத்தைப் பெற்று பின்னர் முனைவர் பட்டத்தை இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகத்தின் உறுப்பு நிறுவனமான இரும்பு நிறுவனத்தில் நூற்புழு விஞ்ஞானியான டாக்டர் உஷா மேத்தா அவர்களின் கீழ் ஆராய்ச்சி செய்து பெற்றேன்.

எனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் டாக்டர் உஷா மேத்தா அவர்கள் ஒரு அரிதான மானுடப்பிறவி. அவருடைய கொடைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு இன்று அவர் பெயரில் அமைந்த அரங்கம். தனி ஒருவராக முயற்சி செய்து தன் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்த ஒரு வள்ளல் பெருந்தகை. ஒவ்வொரு முறையும் அந்தக் கட்டிடத்தைக் கடந்து செல்லும் போதும் அவருடன்  நான் ஆராய்ச்சி செய்த நாட்கள் பசுமையாய் மனதில் பதிந்து போகும். முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் மேற்கொண்ட ஆராய்ச்சி இந்திய வேளாண் நிறுவனத்தின் மிகச் சிறந்த விருதான ஜவஹர்லால் விருது நான் பெற்ற போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

முனைவர் பட்டம் பெற்ற பின்பு கோழிக்கோட்டில் உள்ள வாசனை திரவிய ஆராய்ச்சி மையத்தில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து பின்னர் 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஐடகோ பல்கலைக்கழகத்தில் நூற்ப்புழு விஞ்ஞானியாக பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. அதே பல்கலைக்கழகத்தில் 1998 ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 12 வருடங்கள் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம். கடந்த 2011 ஆண்டு முதல் இதுவரை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். கடந்த 2001 ஆம் ஆண்டு விலங்கியில் துறையில் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றது மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

ஐடகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது உருளைக்கிழங்கில் நூற்புழு தாக்குதல் பற்றி ஆராய்ச்சி மேற் கொண்ட போது  புதிதாக ஒரு வித நூற்புழுவை முதன் முறையாக எங்கள் குழுவினர் கண்டுபிடித்தோம். அந்தக்கண்டுபிடிப்பு மிகப் பெரிய தாக்கத்தை அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இக்கண்டுபிடிப்பு மூலம் உருளைக்கிழங்கிற்கு நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பை முன் கூட்டியே கண்டுபிடித்து அது மேலும் பரவாமல் இருக்க தடுப்பு முறைகளை மேற் கொண்டோம்.. இப்புழு பற்றிய ஆராய்ச்சியை மேலும் தொடர அமெரிக்க அரசாங்கம் 65 மில்லயன் டாலர்களை ஒதுக்கியது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2017

கொழுப்பும் ஆயுளும்
சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்
நவம்பர் மாத உலக தினங்கள்
கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்
பாம்புக்கடி
நெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து !
பயமும் பணிவும்
உள்ளே பார் உன்னை தெரியும்..
விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்
சுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்
மனவயல்
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
நேசி; உபயோகி
முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.
வெற்றி உங்கள் கையில்- 47
வாழ நினைத்தால் வாழலாம் – 10
நீயின்றி அமையாது உலகு..!
தன்னம்பிக்கை மேடை
மொழியை நேசி…! முன்னேற்றத்தை சுவாசி..!!
உள்ளத்தோடு உள்ளம்