Home » Articles » முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.

 
முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.


சுவாமிநாதன்.தி
Author:

மாறி வரும் உலகில் காலத்திற்கேற்ப நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அனைத்து தரப்பினருமே உள்ளோம். நிர்வாகத்தில் சீரமைப்புகள் செய்யப் படுகிறது. புதுமைகள் புகுத்தப்படுகின்றன. பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றல் அன்றாடத் தேவையாக உள்ளது.

நடைமுறை வாழ்வில் நமது துறையில் எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டியுள்ளது. சரிவுகளை சமாளித்து புதிய வியுகம் அமைத்து நம்பிக்கையோடு வெற்றிக்கு பாடுபட வேண்டியுள்ளது. ஆல்ரவுண்டராக இருக்க வேண்டியுள்ளது. உங்களால் முடியாது என்கிற நம் மீதான பிறரது மதிப்பீடுதான் நம்மை சவாலுக்கு அழைக்கிறது.

தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்படத் துறையினர், யாராக இருந்தாலும்  வெற்றிதான் பிரதானம். வீழ்ச்சியடைந்தவர்கள் அடங்கி போகிறார்கள், முழுமையான திறனை பயன்படுத்தியவர்கள் எழுச்சியடைகிறார்கள். ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதைத்தான் மாஸ்டர் ஸ்ட்ரோக்ஸ் என்பர். தலைமுறைகள் மாறுகின்றன. தனிக்காட்டு ராஜாவாக இருந்த தொழில் அதிபர்களை உலகமயமாக்கம் தள்ளாடச் செய்தது. பொருளாதார மந்தத்தால் 2008-ல் ஊதிய வெட்டுக்கள், வேலை நீக்கங்கள், பாதுகாப்பாற்ற சூழ்நிலை பணியாளர்களுக்கு ஏற்பட்டது. உலகில் ஓவ்வொருவருக்குமே இன்று சவாலான சூழல்தான். அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் பின்னடைவை தந்தது. இன்றைய  வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் சவாலானதாகவும், சிக்கலானதாகவும் உள்ளது. இதயத்தில் நம்பிக்கை, மூளையில் கனவுகளோடு ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

தொழிலதிபர்கள் என்றால் டாடா, பிர்லா என்றார்கள். தாராளமயமாக்கலுக்கு முன் வெல்லப்பட  முடியாதவர்களாக கருதப்பட்டவர்கள். இன்று தொழில் துறையில் அம்பானி, மிட்டல் என புதியவர்கள் வளர்ந்துள்ளார்கள். சர்வதேச முன்னனி பத்திரிக்கைகளின் அட்டைகளில் இடம் பிடிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டில் 50 ஓவர்கள் போய் இப்போது டி-20 என்றாகி விட்டது. சச்சின் காலம் போய், தோனி, விராட் கோலி வந்து விட்டனர்.

நேற்று வரை வெற்றியை குவித்தவர்கள் இன்று கேவலமான தோல்வியை தழுவுகிறார்கள். தோளோடு தோள் நின்றவர்கள்  வெல்லும் திறன் படைத்தவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தோல்விக்கு வழி வகுத்து விடுகிறார்கள். இள ரத்தத்திற்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது, புதிய திறமைக்கு வழி விடாத போது நிறுவனங்களில் தேக்கம் ஏற்படுகிறது. வெற்றி என்பது மின்னலைப் போல நழுவிச் செல்லக் கூடியது. வந்த வேகத்திலேயே மறைந்து விடக் கூடியது. களத்துக்குப் போனாலே வெற்றி நிச்சயமானதாகக் கருதிக் கொண்டால் அங்கு ஆணவம் கடின உழைப்பை வெளியேற்றி விடுகிறது. உச்சத்தை தொட்டவர்கள் கூட தள்ளாடத் தொடங்கும் நாள் வருகிறது. தோல்வி குறித்த அச்சமே நம்மை விழுங்கி விடுகிறது.

சில அமைப்புகள் வலிமையாகவே இருப்பதற்கு காரணம் மிகக் கடினமான கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவதுதான். திறமை மங்கியவர்களை  களையெடுக்க தயங்குவதில்லை. திறமையானவர்களுக்கு இடமளிக்கவும் தவறுவதில்லை. திறன் மங்கியவர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். தொழில் நுட்பங்கள் மாறுகிறது. மக்கள் தொகை மாறுகிறது. அரசின் கொள்கைகள் மாறுகிறது. வெற்றி சுழற்சி முறியலாம்.

நம்பிக்கைதான் வலிமை வாய்ந்த ஆயுதம்.  யாரும் வெல்ல முடியாதவர்கள் அல்ல. மிகப் பெரிய அணிக்கு எதிராக களம் இறங்குவதையே மிகப் பெரிய கௌரவமாக நினைக்கலாம். உடல்மொழி என்பது நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் மிக முக்கியமானது. நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதை எதிராளிக்குச் சொல்கிறது. நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாகச் சொல்லுவார். எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிப்பது என்ற வசனத்தை. உண்மைதான். கழுத்து வரை கடன்சுமை இருக்கும். வியாபாரம் மந்தமாக இருக்கும். மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் ஏதாவது தீய பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். பிள்ளைகள் காதல் விவகாரங்களில் சிக்கி சின்னாபின்னாமாகி இருப்பார்கள். மகன் படிப்பில் மந்தமாக இருப்பான். பாலியல் குற்றச்சாட்டில், பணமோசடிகளில் சிக்கி வீழ்ந்தவர்கள் உண்டு. பெருந்தொகையை வில்லங்கத்தில் இழந்து இருப்பர். அச்சுறுத்தும் உடல் நோய்கள் யாவற்றையும் நடைமுறை வாழ்வில் வெளிகாட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டியுள்ளது. நகர்த்த வேண்டியுள்ளது. மிகப் பெரிய அழுத்தங்களுக்கு இடையில் மன அமைதியுடன் இருப்பது கடினமானதாகும். காலம் மாறிக் கொண்டு இருக்கிறது. கடந்த கால பாணியிலேயே சிக்கிக் கொண்டு இருப்பவர்கள் வேகம், வலிமை நிறைந்த நிகழ்கால சூழலை எற்பதில்லை.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2017

கொழுப்பும் ஆயுளும்
சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்
நவம்பர் மாத உலக தினங்கள்
கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்
பாம்புக்கடி
நெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து !
பயமும் பணிவும்
உள்ளே பார் உன்னை தெரியும்..
விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்
சுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்
மனவயல்
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
நேசி; உபயோகி
முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.
வெற்றி உங்கள் கையில்- 47
வாழ நினைத்தால் வாழலாம் – 10
நீயின்றி அமையாது உலகு..!
தன்னம்பிக்கை மேடை
மொழியை நேசி…! முன்னேற்றத்தை சுவாசி..!!
உள்ளத்தோடு உள்ளம்