Home » Articles » நீயின்றி அமையாது உலகு..!

 
நீயின்றி அமையாது உலகு..!


சரவண பிரகாஷ் கோவை
Author:

இந்த உலகத்திலேயே மிக அற்புதமான மனிதரை உங்களுக்கு இப்போது அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன். நீங்கள் என் எழுத்துக்களை படித்து கொண்டிருக்கக்கூடிய இந்த நொடி அந்த மனிதர் உங்கள் வீட்டில் தான் இருக்கிறார்.

அந்த சிறந்த மனிதரை காணவேண்டுமா ?

எழுந்து சென்று கண்ணாடி முன் நில்லுங்கள்!

ஆம். இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர் நீங்கள் தான். நீங்கள் நினைப்பதையும் காட்டிலும் நீங்கள் பலசாலி, நீங்கள் நினைப்பதை காட்டிலும் நீங்கள் புத்திசாலி .இந்த உலகம் உங்கள் நம்பிக்கை சிறகுகளை மறக்க வைத்திருக்கலாம, அதனால் பருந்து நீங்கள் ஊர்க்குருவி ஆகிவிட முடியுமா?

இந்த கட்டுரையின் தலைப்பைப் பார்த்த உங்கள் கண்கள் அண்ணார்ந்து பார்த்திருக்கும், என் எழுத்தின் மையம்  காதலாக இருக்கும் உங்கள் இதய துடிப்பு உங்களுக்கு உணர்ந்திருக்கலாம். சரி தான்! உங்கள் மீது நீங்கள் கொள்ள வேண்டிய காதலை புதுப்பிக்க தான் என் எழுத்தாணி இங்கே தலைகுனிகிறது!

மனிதா !உன்னை பற்றி உனக்குத் தெரியாத சில உண்மைகளை எடுத்துரைக்க போகிறேன். அதை நீ பார்க்கும் விளையாட்டு போட்டி போல் உன்னிப்பாக கவனித்திடு! விவசாயிகள் பிரச்னை போல விளையாட்டை எடுத்துவிடாதே..!

இயற்கையின் படைப்பில் நீ ஒரு அதிசயம்!உன்னை தவிர இங்கு எல்லாமே அஃறிணைகள் தான். உன்னைத்தவிர பேரறிவு  படைத்த ஜீவராசிகளின் பெயர் பட்டியலை தேடிக்கொண்டிருக்கிறேன். இறைவனின் அம்சம் நீ! புதிய உலகத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தவன் நீ!

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2017

கொழுப்பும் ஆயுளும்
சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்
நவம்பர் மாத உலக தினங்கள்
கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்
பாம்புக்கடி
நெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து !
பயமும் பணிவும்
உள்ளே பார் உன்னை தெரியும்..
விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்
சுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்
மனவயல்
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
நேசி; உபயோகி
முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.
வெற்றி உங்கள் கையில்- 47
வாழ நினைத்தால் வாழலாம் – 10
நீயின்றி அமையாது உலகு..!
தன்னம்பிக்கை மேடை
மொழியை நேசி…! முன்னேற்றத்தை சுவாசி..!!
உள்ளத்தோடு உள்ளம்