Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி

என் கண்முன்னே நடக்கும் சில தவறான நடத்தைகள் என்னைப் பெரிதும் பாதிக்கிறது. அச்சமயத்தில் மட்டும் கோபம் அதிகளவு தோன்றுகிறது. இத்தருணத்தில் நான் என்ன செய்வது?

பிரபாகரன்

எழுத்தாளர், சேலம்

உங்கள் கண்முன்னே நடக்கும் சில தவறான நிகழ்வுகள் உங்களைப் பெரிதும் பாதிக்கிறதா? அந்த சமயத்தில் இவற்றைக் கண்டு உங்களுக்கு கோபம் அதிகம் தோன்றுகிறதா? அப்படி  என்றால் நீங்கள் ஒரு நல்ல மனிதன், உணர்ச்சி உள்ள மனிதன், தேசபக்தன் என்று பொருள். உங்களுக்குப் பாராட்டுகள்.

ஆனால் நீங்கள் இத்தருணத்தில் என்ன செய்வது என்று ஆலோசனை கேட்டுள்ளீர்கள். இதில் ஒரு சிக்கல் இருக்கவே இருக்கிறது. அது என்னவென்றால் உங்கள் கண்முன்னே நடக்கும் தவறான நடத்தைகள் என்னென்ன என்று நீங்கள் குறிப்பிடவில்லை. தவறுகளைப் பட்டியலிட்டு விரிவாக இருவரிக் கேள்வியில் உங்களால் கூறமுடியவில்லை என்று எனக்குப் புரிகிறது. எனவே அந்தத் தவறுகள் இவையாக இருக்குமோ என்று நான் கற்பனை செய்கிறேன்.

நிகழ்வுகள்:

 1. உழுவதற்குச் சொந்த நிலமில்லாத நமது விவசாயிகளின் பரிதாப நிலை.
 2. விவசாயம் செய்தவர்கள் தற்கொலை செய்த கொடுமை.
 3. சொந்தமாக வீடு இல்லாத பல குடும்பங்களின் பரிதவிப்பு.
 4. ஆரோக்கியமான உடல் இருந்தும் பிச்சை எடுக்கும் சோம்பேறிகள்.
 5. சத்தான உணவும், மருத்துவ வசதியும் கிடைக்காத கர்ப்பிணிப் பெண்கள்.
 6. ஏழைகளை ஏய்த்து வாழும் முதலாளிகள்.
 7. வேலை வாங்கித்தருகிறேன் என்று பணத்தை வாங்கி ஏமாற்றியவன்.
 8. வாடகைக்கு வந்து விட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வாடகைக்குக் குடியிருப்பவன்.
 9. காலிமனையைப் பத்திரம் போட்டு மோசடி செய்த அயோக்கியன்.
 10. ரோட்டை மறித்து ஆலயம் கட்டிய சுயநல பக்திமான்.
 11. பிள்ளைகளின் பொதுத் தேர்வு நேரத்தில் ஒலிப்பெருக்கி வைத்து தொல்லை தரும் ஆலய நிர்வாகி.
 12. ஆற்றில் இரசாயனம் சாயம் கலந்த தொழிற்சாலை முதலாளி.
 13. பள்ளிக்குப் போகும் பெண் பிள்ளையைத் திருமணம் செய்து வைத்தவர்கள்.
 14. ஒரு 300 சதுர அடி வீடு கூட கட்ட இயலாத பல ஆயிரம் பேர் இருக்கும் போது ஒரு சிலர் பத்தாயிரம் சதுர அடிக்கு வீடு கட்டுவது.
 15. உணவு இல்லாமல் உழைப்பாளிகள் இருக்கும் போது ஒரு கோடி ரூபாய்க்கு திருமண செலவு செய்து உணவை வீணாக்கும் பொறுப்பில்லாத பணக்காரர்கள்.
 16. கல்லூரியில் சேர்ந்தும், எந்த கவலையும் இன்றி ஊர் சுற்றித் திரியும் மகன்.
 17. கல்லூரியில் படிக்கப் போன மகள் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்ட சோகம்.
 18. பள்ளிக்கல்வி முடித்தப் பிள்ளையைக் கல்லூரியில் சேர்க்க முடியாமல் பரிதவிக்கும் தந்தை.
 19. சென்ற ஆண்டு ரோடு போட்டது, இந்த ஆண்டு மழையில் காணாமல் போனது.
 20. ஊரெங்கும் சாக்கடை, குப்பை மேடு, துர்நாற்றம்.
 21. எதுக்கெடுத்தாலும் லஞ்சம், ஒரு சான்றிதழ் வாங்க லஞ்சம், வீடுகட்ட அனுமதி வாங்க லஞ்சம், வேலை இடமாற்றம் கேட்டால் லஞ்சம்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2017

கொழுப்பும் ஆயுளும்
சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்
நவம்பர் மாத உலக தினங்கள்
கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்
பாம்புக்கடி
நெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து !
பயமும் பணிவும்
உள்ளே பார் உன்னை தெரியும்..
விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்
சுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்
மனவயல்
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
நேசி; உபயோகி
முதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.
வெற்றி உங்கள் கையில்- 47
வாழ நினைத்தால் வாழலாம் – 10
நீயின்றி அமையாது உலகு..!
தன்னம்பிக்கை மேடை
மொழியை நேசி…! முன்னேற்றத்தை சுவாசி..!!
உள்ளத்தோடு உள்ளம்