October, 2017 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2017 » October (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  ஏன் இப்படி?… இப்படித்தான்

  நம் வாழ்க்கை மற்றவர்களோடு இணைந்து வாழ்வது தான். தனித்து வாழ்வது சிரமம் இதுவரையான நம் வாழ்க்கையில் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம்.

  இந்த அனுபவங்களில் அடிப்படையில் யோசித்தால் பல எண்ணங்கள் உருவாகும். ஒன்று நம்மைப் பற்றியது. மற்றது மற்றவர்களைப் பற்றியது.

  நம்மைப் பற்றியது என்றால், விழிப்பு நிலையில் பேசிய பேச்சுக்களோ, செய்த செயல்களோ வராது. உணர்ச்சி வயப்பட்ட நிலையில் பேசியவை, செய்தவை நானா இப்படி? என்ற ஒரு கேள்வியை உண்டாக்கும்.

  இதேபோல் ஆர்வ மிகுதியால் நம்மால் முடியாத சிலவற்றைக் கூடச் செய்திருப்போம் அப்போதும் நானா இப்படி? என்ற வினா தோன்றும்.

  ஏனென்றால், நமது இயல்பான தன்மையிலிருந்து, வேறுபட்டதால் இந்த வினா வந்தது. இதே போல,  மற்றவர்களைப் பற்றிய நமது கணிப்புக்கு, எதிர்பார்ப்புக்கு மாறாக அவர்களது பேச்சோ, செயல்பாடுகளோ அமைந்தால், அவர்களா இப்படி? என்ற வினா எழும்.

  விடை ஆம்; அவர்கள் தான், இப்படித்தான் நமது இனிமையான வாழ்க்கைக்கு இந்த ஏற்புத்தன்மை அவசியமானதாகும்.

  உதரணத்துக்கு ஒன்றைப் பார்ப்போம். மரத்திலிருந்து விதை வருவதால், மரத்துக்குள் விதை என்று சொல்லலாம். இதே போல, இந்த விதை முளைத்து வளர்ந்து மரமாகிறது. இதை விதைக்குள் மரம் என்று சொல்லலாம்.

  இது போன்றது தான் நம் வாழ்க்கையும் நானா இப்படி? இவர்களா இப்படி? என்று ஆச்சரியப்படாமல், சூழ்நிலைகளின் அடிப்படையில் அவர்களும் இப்படித்தான், நானும் இப்படித்தான் என்று ஏற்றுக் கொண்டால் வாழும் வாழ்க்கையை நம் வசமாக்கி நிறைவாய் வாழ முடியும்.

  பொதுவாக இன்று தமிழ்நாட்டில் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது  என்பதை எல்லோரும் நன்கு அறிவோம்.

  மாஸ் தியரி (Mass Theory) என்ற சொல் ஒன்று உள்ளது , இதைப் புரிந்து கொள்ள உண்மைச் சம்பவம் ஒன்றை நாம் பார்ப்போம்.

  பரிணாம வளர்ச்சியில் பூமியின் பல பகுதிகளில் குரங்குகள் வசித்தன. ஒரு பகுதியில் வசித்த குரங்குகள் எப்போதும் நிலத்திலிருந்து கிழங்குகளைப் பிடுங்கி, மண்ணுடனேயே சாப்பிட்டு வந்தன.

  ஒரு நாள், மண்ணிலிருந்து தோண்டி எடுத்த கிழங்கைக் கையில் வைத்துக் கொண்டு சிறு ஓடையை ஒரு குரங்கு தாவிய போது, அக்கிழங்கு ஓடும் நீரில் விழுந்த அக்கிழங்கை எடுத்துச் சாப்பிட்டது.

  சுவையிலே வேறுபாட்டை உணர்ந்து அதன் பின் சில நாட்கள் தொடர்ந்து, அக்குரங்கு கிழங்குகளைப் பிடுங்கி, நீரில் போட்டு, எடுத்து சாப்பிட்டது. இதை அருகில் செய்தன. மண் இல்லாத கிழங்குகள் அக்குரங்குகளுக்குப் புதிய சுவையைத் தந்தன. இதுவரை சரிதான்.

  ஆனால், ஓராண்டுக்குப் பின் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் வாழ்ந்த குரங்குகள் அனைத்துமே, பூமிக்குள்ளிருந்து தோண்டி எடுத்த கிழங்குகளை நீரில் கழுவி சாப்பிட ஆரம்பித்தன.

  இந்த இதழை மேலும்

  என் பள்ளி

  திரு. சித்ரவேல்

  சென்னை

  மாற்றம் செய், மனிதனை மேன்மை செய் என்ற கோட்பாட்டில் சமூக மாற்றத்திற்காக குரல் கொடுக்க வைத்ததும், புதியதலைமுறை தொலைக்காட்சியில் நம்மால் முடியும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் என் பணி சிறக்கவும் முக்கிய காரணம் என் பள்ளி வாழ்க்கைதான்.

  அப்பா தங்கராஜ் சின்னத்துரை, அம்மா அங்கம்மாள் ஆகியோருக்கு முதல் பிள்ளையாய் பிறந்தேன் விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில். ஆரம்பக் கல்வியை அனா ஆவானாவில் இருந்து எனக்கு கற்றுக் கொடுத்தது அப்பாவும் சங்கரலிங்கபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் தான். தொழிலும் தொழில் சார்ந்த இடத்தில் அப்பாவின் பருத்தி வியாபாரமும் அவரின் உழைப்பையும் பார்த்து உழைப்பின் மேல் அதிக பற்றும் அளவற்ற ஈடுபாடும் வந்தது.

  தொழில் மாற்றத்திற்காக விருதுநகரில் இருந்து காஞ்சிபுரம் வந்து குடும்பத்தோடு குடியேறும் போது கல்விக் கூடமும் புதிதாக இருந்தது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளி (தற்போது உயர்நிலைப் பள்ளியாக உள்ளது) எனக்கு பிடித்தமான பள்ளியாக மாறியது. அங்குதான் எனது பட்டறையாக மாறும் என்று அறியாமலே அந்த பள்ளியில் சேர ஆசைப்பட்டேன், அப்பாவும் சேர்த்து விட்டார்கள். தென்மாவட்டத்தில் இருந்து வந்த எனது வட்டார வழக்கு பள்ளி தோழர்களுக்கு பொழுதுபோக்கு ஆகிவிட்டது. அப்பவே என்னிடம் விளக்கமாறு, அங்குட்டு , இங்குட்டு என்று பேசுவதை வேடிக்கையாக உள்ளது என்று பேச சொல்லி சொல்லி பேச்சுப் போட்டியில் பெயர் கொடுத்து பரிசும் வாங்க வைத்தது.

  தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் எனது முதல் ஊடக குரு என்றே சொல்லலாம். 1995ம் ஆண்டே சென்னை வானொலி நிலையம் அதன் பின்பு 1998ல் பொதிகை தொலைக்காட்சி என்று நாடகங்கள் அரங்கேற்ற கைபிடித்து அழைத்துச் சென்றவர்.  பள்ளி விழாக்கள் மட்டும் அல்லாது வீதி நாடகங்கள் மேடை நாடகங்கள் கூத்து போன்றவற்றை ரசித்து அதிலும் ஈடுபாட்டை வளர்த்து கலந்துகொண்டேன்.

  நான் கல்லூரி படிப்பிற்கு பிறகு தற்காலிகமாக சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றிய போது நான் பள்ளி நாட்களில் வந்த இடங்கள் ஸ்டுடியோ மறக்க முடியாத நினைவுகளையும் ஆனந்தத்தையும் கொடுத்தது. ஏனெனில் நான் அன்று மாணவனாக வந்த போது ஆயிரத்தெட்டு கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தேன். அதற்கு விடை தேடி நானே இங்கு பணியாற்றுவேன் என்று அறியாமலே.

  அஞ்சலிதேவி, பத்மாவதி, புவனேஷ்வரி, கன்னிகாபரமேஸ்வரி, ஆதிலட்சுமி என்று ஆசிரியர்களின் பட்டாளமே என்னை மென்மேலும் ஊக்கப்படுத்தி படிப்பிலும் சரி மற்ற துறையிலும் சரி ஆழமாக சிந்தனையை பெற வைத்ததால் தான் அப்போது பள்ளியின் மாணவர் தலைவனாக இருக்க முடிந்தது. அதில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால் மாணவர்கள் ஓட்டுபோட்டுதான் தலைவனாகத் தேர்வு செய்ய முடியும். அதிக அளவில் மாணவர்கள் என்னைத் தேர்வு செய்ய காரணம் என் மதிப்பெண்ணை மட்டுமே நம்பி. ஒரு சிறந்த தலைமைப் பண்புள்ளவனாக மாற்றிய பள்ளி இந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி.

  இந்த இதழை மேலும்

  மனவயல்

  என்ன சத்தம்  இந்த நேரம்?

  ஏதோபூனைஉருட்டுகிறது!

  கதவுதட்டப்பட்டுக்கொண்டு இருந்தது . . . .

  யாரோசாமான்களை நகர்த்துகிறார்கள்அதனால்சத்தம்வருகின்றது . . . .

  இல்லை சுவரையாராவதுஇடிக்கிறார்களா? . . . .

  டொக்டொக் . . .டொக் . . . டொக் . . .

  சீராக . . . சத்தம் கேட்கிறது . . .

  குடியிருந்த கோவில் எம்ஜிஆர் படம் . . அந்தமாணவனுக்கு மிகவும் பிடித்ததலைவர்படம் . “துள்ளுவதோஇளமை” என்று L.R.ஈஸ்வரி உச்சஸ்தாயியில் பாட அன்று இரவுதான் இரசித்துவிட்டு . . . அசந்து உறங்கிக்கொண்டு இருந்த இளைஞனுக்கு . . . எதுவும் சரியாக பிடிபடவில்லை . . .

  டொக் . . . டொக். . . பிளக் . . . .கிறீச் . . . .

  அது சரி இதுபூனை சமாச்சாரம் இல்லை இந்த அதிகாலை  (ஒருவேளைநள்ளிரவோ?) நேரத்திலேயே நம்வீட்டுக் கதவையாரோ தட்டியிருக்கிறார்களே!எவ்வளவுநேரம்எனதெரியவில்லை.

  வாலியின் பாடல்கள் இன்னும் பின்னந்தலைக்குள் சுழன்று கொண்டிருக்க கண்விழித்தார் கொஞ்சம் தெளிவின்றி திரு… திரு எனவும் விழித்தார் அதற்குள் அப்பாபோய் தேவை திறந்திருக்க. அப்பாவின் பால்ய நண்பர் சந்திரன் அந்த நேரத்திற்கே மூன்று கிலோமீட்டர் நடந்து நாலரை மணிக்கெல்லாம் நண்பன் வீட்டுக்கதவை பலமகத்தட்டி இந்நேரம் வீட்டில் இருந்த நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உட்பட அம்மா . . எல்லோரும் தூக்கம் கலைந்திருந்தனர் எழுந்துவரவேற்க தயாராகினர். அது,  மதுரை….  திரு.கிருஷ்ணமாச்சாரி ஐயாவின் வீடு… வருடம்கி.பி 1968…

  குடியிருந்த கோவில் கதவு:-

  அப்பாவின் நண்பரையும்! அப்படி அந்நேரத்திற்கு அவரை வரவழைத்த சேதியையும் நல்ல செய்தியாக இருக்குமோ? பெரியகாரியம் ஏதுமாக இருக்குமோ? எதுவாக இருந்தாலும் சந்திரன் மாமா சற்று பொறுத்திருந்தால் ஐந்து மணிக்கு வழக்கம் போல நாம் எழுந்திருத்திருப்போமே! அடடா இப்படி தூக்கக்கலக்கத்தில் வரவேற்க வேண்டியதாய் போனதே! செய்தி என்னவோ?.சந்திரன் மாமா மகன் மதுரைபல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கின்றார்அங்கே பி.யூ.சி தேர்வு நடத்தும் துறையில் அவருக்குமானே ஜர் உத்தியோகம். காலச்சக்கரம் சுற்றுதே சுற்றுதே!

  அந்தவருடம் 1968 இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிற அடியேன் பிறக்கவே இன்னும் ஏழுவருடம் சுத்தமாக இருக்கிறது.  அதன்பிறகு பிறந்து தவழ்ந்து வளர்ந்து, படித்து தேர்வெழுதி படித்து, தேர்வெழுதி எழுதி எழுதி என இதையே பலமுறை எழுதினால் நீங்கள் அடிக்கவரும்அபாயமிருப்பதால் நிறுத்திக்கொள்கிறேன். ஆனால்  நடந்ததென்னவோ அதுதான்.  இடையிடையேதேனே! மானே! போல அவ்வப்போது கொஞ்சம் கிரிக்கெட்டும் கால்பந்தும் சேர்த்துக்கொள்ளலாம்.1969ல் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறந்த நடிகருக்கான மாநிலவிருது பெற்றதாக விக்கிபிடியா விவரங்கள் தெரிவித்தன . . .  இப்படி அறுவத் தொன்பதில் பி.யு.சி படித்த திரு.டாக்டர். மகாதேவன் அவர்கள். . . நீண்டகாலம் அரசுமருத்துவராக சிவகங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்று 14.08.17 அன்று திருப்பதிபோய்விட்டு திரும்ப ஊர்செல்லும்வழியில் .  . . அடியேனின், “படித்தாலே இனிக்கும்” புத்தகத்தினை பெற்ற வேகத்தில்தனது அறுபத்து ஆறாவது வயதில் விறுவென படித்துவிட்டுமுதல்… அத்தியாயத்தையே அற்புதமாக தொடங்கியிருக்கின்றீர்கள் மாப்ளே!.. இதைப்பார்க்கும் பொழுது, எனக்கு நான், PUC படிச்சிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த பொழுது… இதேமாதிரி எதிர்பாராம வந்தநல்ல செய்திதான், ஞாபகம்வருது. படிக்கிற எல்லோருக்கும் இப்படித்தான் அவங்கவங்களோட மறக்கமுடியாத பழையஞாபகம் மலரும் நினைவுகளாக, மனவயலை, மீண்டும் உழுது பண்படுத்துகிற புதுக்கலப்பையாக உங்கபுத்தகம்இருக்கு” என்றார்.

  இந்த இதழை மேலும்

  கனவை நனவாக்குவது திறமையா? கடின உழைப்பா?

  சாதனையாளர்கள் செய்து முடித்த அருங்காரியத்தைப் பார்க்கும்  போது, நாமும் இது போல செய்து முடிக்க வேண்டும்  என்று முடிவெடுத்து முயற்சியை தொடங்குபவர்கள் உண்டு. அவரைப் போல நாமும் மருத்துவராக வேண்டும். இவரைப் போல பேச்சாளராக வேண்டும் என்றெல்லாம் அசைப்படுகிறோம். முயற்சி செய்கிறோம்.

  வெற்றி என்பது மந்திர வித்தையல்ல. அது எளிதற்ற இடர்பாடுமிக்க கடின உழைப்பு சார்ந்த ஒன்று. ஒருவர் பெற்ற பட்டம், கௌரவமான வேலை,  கட்டிய அழகான வீடடு, ஆசைப்பட்டு வாங்கிய கார், சேர்த்து வைத்திருக்கும் மதிப்புமிக்க நகைகள், சமூகத்தில் இன்று அடைந்திருக்கும் பெயர் புகழ்,; எதுவுமே எளிதாக சுலபமான வழியில் யாருக்கும் வந்ததல்ல. அதனால்தான் கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை என்கிறோம்.

  பலர் வெற்றிக்காக கனவு கண்டு கொண்டிருக்கும் போது, சாதனையாளர்கள், வெற்றியாளர்கள் விழித்தெழுந்து அதை அடைவதற்க்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். போதுமான கடின உழைப்பால் நாம் எதையுமே அடைந்து விட முடியும். கடின உழைப்பிற்கான விலை, நற்பலன், வெகுமதி, சம்பளம் எல்லாம் தாமதமாக கிடைக்கிறது. சோம்பேறித்தனத்திற்கான விலையோ உடனடியாக கிடைக்கிறது.

  நம்மால் சிறப்பாக செய்ய முடியும் என நமக்கு தெரிந்திருந்தால் சிறப்பாக செய்யலாம். நாம் போராடாமல், கடும் முயற்சி செய்யாமல் உழைக்காமல் வெற்றி பெற முயற்சி செய்வது என்பது விதை விதைக்காமல், தண்ணீர் பாய்ச்சாமல், களை எடுக்காமல், அறுவடை செய்ய செல்வது போன்றது.

  கடின உழைப்பும், கட்டுப்பாடும் இல்லாமல் மிக உயர்ந்த நிலைக்கு, உயர் பதவிக்கு, நாம் மேற்கொள்ளும் தொழிலின் உச்சிக்கு செல்வது மிகவும் கடினம்.

  நாம் முயற்சி மேற்கொள்ளாமல்,  நம் கனவுகள் மட்டும் காரியங்களை ஒரு போதும் முடிப்பதில்லை.    நம் வாழ்வில் சிறப்பான ஒரு இலக்கை அடைய வேண்டும் என்கிற கட்டுக்கடங்காத உணர்வு, தீ  மனதிற்க்குள் இருக்கும் போது, நாம் அதை செய்ய முடியுமா முடியாதா என்கிற நம்பிக்கையும் தெளிவும் இருக்கும். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் தொடர்ந்து தமது இலக்கில் ஒட்டிக் கொண்டு இருப்போம்.

  வெற்றியாளர்கள் கடினமாக உழைப்பதோடு தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு விரும்பத்தக்கவராக இருப்பார்கள். காரியத்தை தள்ளிப் போடுபவர்களுக்கும், கால தாமதம் செய்பவர்களுக்கும்  பலன் உடனே தெரிந்து விடும். கடின உழைப்பாளிகளுக்கு பலன் நீண்ட காலத்தில்தான் தெரியும்.

  இந்த இதழை மேலும்

  வாழ நினைத்தால் வாழலாம் – 9

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  பனி படர்ந்த நேரங்களில் பாதைகள் தெரிவதில்லை.

  வாழ்க்கை பயணத்திலும், பல சூழலில் உங்கள் பாதை பனி படர்ந்த போலே தான் பார்வைக்குத் தெரிகின்றது.

  குழந்தை பருவத்தில், மற்றவர் கொஞ்சிவிளையாட அழைத்த போதும், அணைத்த போதும் – அந்நியனாக அந்தக் குழந்தை உணர்ந்ததாலேயே பல குழந்தைகள் தன் தாயின் அணைப்பில் இருந்து தாவி வருவதில்லை.

  கூச்ச சுபாவம் உள்ள குழந்தை என்ற பட்டப்பெயரையும் பெற்றுவிடுகிறது. அஃரிணைப்பொருள்களுடன் ஆனந்தமாக விளையாடும் குழந்தைக்கு – தன்னை கொஞ்சிட அழைப்பது ஆறறிவு உள்ள ஜீவன் என்று அறிவதில்லை.

  பள்ளியில் நல்லதொரு நட்பு வட்டத்தை எர்ப்படுத்திக்கொள்ளத்தெரியாத சிறார்கள் – தாழ்வு மனப்பான்மையை கொண்டு தவிக்க நேரிடுகிறது.

  கல்லூரி காலத்தே இன்னொரு பெரும் விபரீதம் இளைய நெஞ்சங்களுக்குள் ஏற்ப்பட்டு விடுகிறது.

  பல சமயங்களில் கூடா நட்பு கேடாய் முடிகிறது.

  சரியான பாதையில் எப்போதுமே சந்தொஷப்பயணம் தான்

  பாதையை புலப்படுத்தும் பொறுப்பும் கடமையும் – பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே அதிகம் உண்டு.

  அன்பினால் நனைக்கப்படும் குழந்தைகள் கொஞ்சம் அறிவினாலும் நனைக்கப்பட வேண்டும்.

  நாத்திக வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை தடுக்கும் நங்கூரமாக “பக்தி” சங்கிலிகள் பயன்படட்டும்.

  “பக்தி”யின் மீதும் அந்தக் குழந்தை தன் பிஞ்சு கால்களை அழுத்தமாக வைக்கட்டும்.

  மனித சக்திக்கும் பெரிதான சக்தி ஒன்று “பிரபஞ்சம்” என்ற பெயர் சூட்டப்பட்டு “இயற்கையாக” செயல்பட்டுக்கொண்டிருக்கிறது – என்பதை குழந்தைகளின் புத்திக்குள் புகுத்தட்டும் பெற்றோர்.

  “அறிவு” என்றால் என்ன?

  “அறிவது” என்றால் என்ன?

  “கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு” – என்பதன் உண்மையான உரை என்ன?

  குழப்பமான சூழ்நிலைகளில் ஒரு தெளிவை ஏற்படுத்தும் ஞானமே – அறிவு.

  தெளிவான குறிக்கோள் கொண்டு, வாழ்வை முறையாக நடத்திச்செல்ல, வெற்றிக்கு வேண்டுவதை சேர்க்க தேவையானவற்றை அடையும் கல்வியே – அறிவு.

  இடர் மிகுந்த வாழ்க்கையில் இடறி விழாமல் இருக்க உங்கள் புத்திக்குத் தேவைப்படும் பிடிமானமே – அறிவு.

  சூதும், வஞ்சமும், பொறாமையும் கொண்ட புவிவேந்தர்கள் மத்தியிலும் – நிம்மதியாக ஜீவிக்க உதவும் புவியீர்ப்பு மையமே – அறிவு.

  சொல்புதிக்கும், சுய புத்திக்கும் இடையே – சமன்பட்ட மனநிலையில், சரியான வாழ்வைக்காட்டும் துலாபாரமே – அறிவு.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில் – 46

  பாராட்டு தந்த வாழ்க்கை

  என்னால் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

   என் வாழ்க்கை மட்டும் இப்படி அமைந்துவிட்டதே என்று எண்ணி மகிழ்ச்சியை தொலைத்தவர்களும் உண்டு.

  அவரைப்போல் நான் நன்றாக வாழ முடியவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சோடு நாட்களை நகர்த்தி, நரக வேதனை அனுபவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

  எப்போது பார்த்தாலும் என்னை எல்லோரும் குறைசொல்கிறார்கள். நான் இந்த உலகில் வாழ தகுதியற்றவன் என்று தனது குறையை மட்டுமே பூதக்கண்ணாடி போட்டுப்பார்த்து வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மனங்கள் இன்றும் உலவுகின்றன.

  வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 

   வாசல்தோறும் வேதனை இருக்கும்

   வந்த துன்பம் எதுவென்றாலும்

   வாடி நின்றால் ஓடுவதில்லை

   எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

   இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

   – என்பது கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் ஆகும்.

  வாழ்க்கையில் சோதனைகளும், வேதனைகளும் நிறைந்து வரும்போது, அவற்றை சாதனைகளாக மாற்றுவதற்கு சிந்திப்பது நல்லது.

  வருத்தங்களும், கோபங்களும் வாகை சூடி நின்றாலும் அர்த்தமுடன் சிந்தித்தால் அத்தனையும் மறைந்துவிடும். இதனால்தான், குறைகள் சொல்லுபவர்களை அருகில் வைத்துக்கொண்டு, குலவிக் கொண்டாடுவதைவிட, நம்மைப் பாராட்டும் நல்ல இதயங்களோடு பழகவும், நேசிக்கவும் கற்றுக்கொள்வது நல்லது.

  எல்லோரும், எப்போதும் அனைவரையும் பாராட்டிவிட மாட்டார்கள். இருந்தபோதும், நம்மிடம் இருக்கும் நல்லவற்றை இனம்கண்டு பாராட்ட முன்வருபவர்களை நாம் நண்பர்களாகக் கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல், நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை யாராவது குறிப்பிட்டுப் பாராட்டினால் அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டு அந்தக் குணங்களை மேலும் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்வது சிறந்தது.

  குறைகள் கூறினாலும், அந்தக் குறைகளை நிறைகளாக மாற்ற தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதன்மூலம், எந்தக் குறையையும் சிறப்பான நல்ல குணமாக மாற்றிவிடலாம்.

  பாராட்டுக்கள் கிடைத்தால், அந்தப் பாராட்டை மனதில் நினைத்து பண்போடு செயல்பட ஆரம்பிக்கும்போது வெற்றி நமது வாழ்க்கையில் நிறையும்.

  ஒரு ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்.

  வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவ – மாணவர்களிடமும் ஒரு வெள்ளைத்தாளைக் கொடுத்தார்.

  “இந்த வெள்ளைத்தாளில் நீங்கள் உங்கள் வகுப்பிலுள்ள ஒவ்வொருவருடைய பெயரையும் வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதுங்கள்” என்றார்.

  மாணவர்கள் வெள்ளைத்தாளில் வகுப்பிலுள்ள மாணவ – மாணவிகளின் பெயர்களை எழுதினார்கள்.

  இந்த இதழை மேலும்

  உண்மை என்னும் வற்றாப் புகழ்

  மகிழ்ச்சியும் துன்பமும் கலந்ததுதான் இவ்வுலக மனித வாழ்க்கை. ஆனால் மகிழ்ச்சியின் உறைவிடம் தான் உண்மை.

  வாய்மை வெல்லும் என்ற கருத்திற்கு மாற்றில்லை உண்மைக்கு ஒளியுண்டு. உண்மையின் வெளிச்சம் இருளை அகற்றும் ஆற்றல் பெற்றது. உண்மையாய் இருப்பவர்கள் வாழ்க்கையின் வெளிச்சத்தில் தடுமாற்றம் ஏதுமின்றி சிறப்பாக வாழ்கின்றனர்.

  உண்மை என்பது புனிதமானது. இனிமையும் அன்பும்,நட்பும் அதற்கு சொந்தமானது. துயரமும் துக்கமும் வேதனையும் வெறுப்பும் பகையும் பொறமையும் உண்மையாய் வாழ்பவர்களிடம் குடி கொள்ளாது.

  உண்மை உள்ளவர்களிடம் எப்பொதும் உறுதி இருக்கும். அந்த உறுதியைக் கொண்டு அவர்களால் எதையும் சாதிக்க முடியும். உண்மையை முறையாக உணர்ந்தவர்கள் உயர்ந்தவர்கள், அவர்களே பலசாலிகள்,நேர்மையானவர்கள், தன்னலமற்றவர்கள், இவர்களை இந்த உலகம் உத்தமர்கள் என்று அழைப்பர்.

  அதுபோல உண்மைக்கு என்றுமே தோல்விகள் கிடையாது, அவர்கள் தோற்றதாகச் சரித்திரம் கிடையாது. உண்மை அன்றும் வெற்றி கண்டது, இன்றும் வெற்றி காண்கிறது. அன்று இன்று இல்லாமல் என்றும் வெற்றி காணும் ஓரே அற்றல் உண்மைக்கு மட்டும் தான் இருக்கிறது.

  உண்மை உணரும் போது வேதனை தோல்வி துன்பம் போன்றவற்றின் பயணங்கள் முடிந்து விடுகிறது. உண்மை புகழ் மிக்கது அதை நீங்கள் நேசித்தால் நீங்களும் புகழ் பெறலாம்.

  உண்மை உணர்வோடு இருந்தால் எல்லோர் மனதிலும் நிறைவானவர்கள் என்று போற்றபடுவீர்கள்.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி?

  பெண்கல்வி ஒரு சமுதாய உயர்வுக்கு எந்தளவிற்குத் தேவைப்படுகிறது?    

  – அருள்நிதி ரேணுகாதேவி, ஆசிரியர் 

  ஆங்கில அதிகாரிகளும், ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், சுப்பிரமணிய பாரதி, தந்தை பெரியார் போன்ற பெரியவர்களும் பெண் கல்விக்காக வாதாடினார்கள். அதனால் பல கோடி பெண்கள் எழுச்சி பெற்றனர். இருப்பினும் இன்னும் இந்தியாவில் பல கோடி பெண்கள் கல்வி இல்லாத நிலை இருப்பதால் உங்கள் கேள்விக்கு முக்கியத்துவம் உண்டு.  எனவே கேள்விக்கு பதில் காண முயற்சி செய்கின்றேன். 

  சரித்திரம்: 

  உலகம் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆனது என்றும், அதில் உயிர்கள் தோன்றி 360 கோடி ஆண்டுகள் ஆனது என்றும் இன்றைய மனிதன் தோன்றி 15 லட்சம் ஆண்டுகள் ஆயிற்று என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதில் மனித நாகரீகம் தோன்றி 4000 ஆண்டுகளாகிவிட்டன எனலாம். அப்படி இருக்கையில், நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களைப் பார்த்தால், ஆண் சமுதாயம் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள் எனத் தெரிகிறது. பெண்களுக்கு அவசியம் கற்பு மட்டும்தான், அவர்களுக்கு கல்வியோ சுதந்திரமோ அவசியமில்லை என்பதுதான் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. இந்த 100 ஆண்டுகளாகத்தான் பெண்களுக்கு ஓரளவிற்கு விமோசனம் பிறந்திருக்கிறது.

  கன்பியூசியஸ்

  3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  சீனத் தத்துவ ஞானி கன்பியூசியஸ் சொன்னது இது: பெண் குழந்தை தந்தையின் கட்டுப்பாட்டிலும், மனைவி கணவனின் கட்டுப்பாட்டிலும், வயது முதிர்ந்த ஒரு பெண் மகனின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். இதை நம்ப உங்களுக்கு சிரமம் இருக்காது. ஏனெனில், இந்த முறை இன்றும் நமது சமுதாயத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும், அநீதிக்கும் பெண்கள் ஆளாகி இருப்பதற்கான மூல காரணம் அவர்களுக்கு கல்வி இல்லை என்ற ஒரே காரணத்தால் தான்.

  இந்த இதழை மேலும்

  எண்ணங்களைதூய்மைப்படுத்து! ஏற்றங்களை மேன்மைப்படுத்து!!

  டாக்டர். G.பாலசுப்ரமணியன்

  எலும்பு மூட்டுஅறுவை சிகிச்சை நிபுணர்

  பிரகதி மருத்துவமனை

  சித்தாப்புதூர், கோவை

  தன்னை நம்பி வருபவர்களின் தேவையை அறிந்து, தேவைக்கு அதிகமான செயல்களைப் புகுத்தி, எல்லோரிடமும் புன்னகைத்த மலர் முகத்தோடு பழகும் மருத்துவர்.

  முதலில் விழிப்புணர்வு, அன்பான பேச்சு, அடுத்தே சிகிச்சை என்று மாறுபட்ட சிந்தனையுடைய நல்ல மனிதர்.

  மருத்துவர் என்பவர் தன் வாழ்நாளில் ஒரு கல்வி கற்கும் மாணவனைப் போல தினந்தினம் ஏதேனும் ஒன்றைப் புதிது புதிதாகக் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்று பல சாதனைகள் புரிந்திருந்தாலும் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் வாழ்ந்து வருபவர்.

  என்னை மருத்துவராக்கிய நாட்டுக்கே தன்னுடைய தேவையும் சேவையும் இருக்க வேண்டும் என்று எண்ணி வாய்ப்புகள் பல வந்தும் தான் பிறந்த கோவைப் பகுதிக்கு தன்னுடைய  மருத்துவ சேவையைப் புரிந்து வருபவர்.

  இத்தகு பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பிரகதி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பாலசுப்ரமணியம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

  கே. உங்களின் இளமைக்காலம், கல்லூரிக் காலம் பற்றிச் சொல்லுங்கள்?

  கொங்கு மண்டலத்தின் தலைமை இடமாகத் திகழும் கோவை மாவட்டம்  சோமனுருக்கு அருகிலுள்ள சாமளாபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தேன். விவசாயம் பின்னணியைக் கொண்ட குடும்பம். எங்கள் ஊரில் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் என் பெற்றோர் விவசாயம் பார்த்து வந்தார்கள்.

  எல்லாப் பள்ளியிலும் ஆசிரியர் கேட்பதைப் போல என்னுடைய பள்ளியிலும் கேட்டார்கள் உன்னுடைய எதிர்காலத்தில் என்னவாக போகிறாய் என்று, அப்போது என் மனதில் எழுந்த உதயம் தான் இந்த மருத்துவர் என்னும் கனவு.

  டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் சொன்னது போல தூக்கத்தில் வருவதல்ல கனவு, எது உன்னை தூங்கவிடாமல் செய்கிறதோ அது தான் உன்னுடைய கனவு இலட்சியம் என்பதெல்லாம்.

  அதுபோல என்னுடைய மருத்துவர் கனவும் நனவானது கோவை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவர் படிப்பதற்கான இடம் கிடைத்தது. இங்கு தான் எம்.பி.பி.எஸ் படித்தேன். அதன் பிறகு பெங்களூரில் எம். எஸ் (M.S) முடித்தேன். எம். எஸ் முடித்தவுடன் இங்கிலாந்தில் எலும்பு மூட்டு சம்மந்தமான படிப்பு மற்றும் பயிற்சியை 10 ஆண்டுகள் அங்கேயே தங்கி என்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டேன். FRCS பட்டத்தை எடின்பவோ கல்லூரியில் பெற்றேன். இங்கிலாந்தில் எலும்பு மூட்டு சிகிச்சைக்குப் பெயர் பெற்ற ஆஸ்வெஸ்ட்ரி மற்றும் பர்மிங்காம் மருத்துவமனையில் பணியாற்றினேன்.

  கே: இங்கிலாந்தில் மருத்துவராக இருந்த நீங்கள் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தீர்கள்?

  10 ஆண்டுகளாக எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைச் சார்ந்த அத்துனை பயிற்ச்சிகளையும் முறையாகக் கற்று அங்கேயே ஒரு மருத்துவமனையில் மருத்துவராகவும் பணியாற்றினேன். இனி என்னுடைய சேவை என் நாட்டு மக்களுக்கு மட்டுமே தேவையாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் சொந்த ஊருக்கே வந்தேன்.

  வந்தவுடன் கோவையில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்ந்தேன். நான் வெளிநாடுகளில் கற்றும் பெற்றதும் இந்த மருத்துவமனையில் முழுமையாக செய்தேன். 15 ஆண்டுகள் என்னுடைய மருத்துவர் பணியை முழுவதுமாக செய்த மன நிம்மதி எனக்குள் இருக்கிறது.

  கே: ஒரு மருத்துவமனையில் மருத்துவராய் வேலைபார்த்ததற்கும் தனியாய் ஒரு மருத்துவமனையை நிர்வகிப்பதற்கும் உள்ள மாறுதல்கள் என்னென்ன?

  வேலை செய்வதாக இருந்தாலும், ஒரு தனி மருத்துவமனையை நிர்வகிப்பதாக இருந்தாலும் அவருக்கு ஒரே பெயர் தான். அது தான் மருத்துவர் என்னும் பெயர்.

  நான் மருத்துவர் என்னும் மகத்துவத்தை உணர்ந்தவன், நேசித்தவன், இன்றும் நேசித்துக் கொண்டே இருப்பவன் என்ற முறையில் எங்கு வேலை செய்தாலும் அதில் ஒரு உண்மைத்தன்மை இருத்தல் வேண்டும்.

  ஒரு மருத்துவமனையில் வேலை செய்யும் பொழுது அந்த மருத்துவமனையின் சட்டத்திட்டங்கள், வரையறைகள் இருக்கும் அதை நாம் பின்பற்றி தான் ஆக வேண்டும்.

  ஆனால் சொந்தமாக ஒரு மருத்துவனையைத் தொடங்கினால் இலவசமாகக் கூட சிகிச்சை செய்து கொள்ள முடியும், எங்கள் மருத்துவமனை தொடங்கிய இந்த 2 ஆண்டுகளில் நிறையப் பேருக்கு இலவச சிகிச்சை செய்துள்ளேன். இது தான் வேறுபாடு வேறு எதுவுமில்லை.

  கே: உங்கள் மருத்துவர் வாழ்வில்  நீங்கள் எதிர்கொண்ட சிகிக்சையில் உங்களால் மறக்க முடியாத சிகிச்சை எது?

  ஒரு மருத்துவருக்கு தன் வாழ்நாளில் ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு மறக்க முடியாத நிகழ்வு தான். அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சில நிகழ்வுகள் மற்றும் என் கண் முன்னே தோன்றும்.

  என்னிடம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி இன்னும் பல வெளிநாட்டிலிருந்து வந்து மூட்டு மாற்று  அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

  இதுவரை 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்கள் என்னிடம் சிகிச்சை பெற்றுயிருக்கிறார்கள்.

  பணம் படைத்தர்களும், பெரிய அதிகாரிகளும் சிகிச்சைகாக வெளிநாடு செல்வதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் சற்று மாறுதலாக என்னிடம் நிறைய பேர் வெளிநாட்டிலிருந்து வருவது என்னால் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கிறது.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  உண்மையே கடவுள் என்று சொன்னார் மகாத்மா காந்தியடிகள். சின்ன வயதிலிருந்தே உண்மை பேச வேண்டும் என்று அவர் முடிவுக்கு வரக் காரணம் அவர் அரிச்சந்திரன் என்ற நாடகத்தைப் பார்த்தது தான் என்பது அனைவரும் அறிந்துதான்.

  ஒரு காலத்தில்  அரிச்சந்திரன் என்ற ராஜா இருந்தார். அவர் எப்பவும் உண்மை தான் பேசுவான் நேர்மையான அரசன்.

  அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு நகர் இழந்தான் கடைசியில் இடுகாட்டில் வேலை செய்தான் வறுமை தாண்டவம் ஆடியது, எனினும் உண்மையே பேசி வந்தான்.

  அவன் பெற்ற செல்ல மகன் இறந்து விட்டான். புதைக்க வேறு யாரும் இல்லாததால் தாயே அதாவது அரிச்சந்திரனின் மனைவியே பிணமான தன் மகனைத் தூக்கிக் கொண்டு இடுகாட்டிற்கு வருகின்றாள்.

  அப்பொழுதும்  அரிச்சந்திரன் நேர்மை தவறாமல் தன் மனைவியிடம் தன் மகனை அந்த இடுகாட்டில் புதைப்பதற்கு பணம் கேட்டான்.

  வறுமையால் வாடிய அவனது மனைவியோ பணம் கொடுக்க முடியாமல் பரிதவிக்கிறான். அரிச்சந்திரனும், பிணத்தைப் புதைக்க அனுமதி மறுத்து விடுகிறான். நேர்மை குற்றாமல் வாழ்ந்தான். உண்மை நெறிகளில் திகழ்ந்தான்.

  இந்தக் கதை காந்தியடிகளின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டதால் தான் அவர் கடைசி வரைக்கும் உண்மையே பேசினார்.

  அப்படி காந்தியடிகள் வாழ்நாள் முழுவதும் உண்மையாக நடந்து கொண்டதால் தான் உத்தமர் மகாத்மா காந்தியடிகள்.

  இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்வது உண்மையானவர்களை உலகம் இனங் கொண்டு வணங்கும் என்பதில் எவ்வித மாற்றும் இல்லை.