Home » Articles » வாழ நினைத்தால் வாழலாம் – 9

 
வாழ நினைத்தால் வாழலாம் – 9


மித்ரன் ஸ்ரீராம்
Author:

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

பனி படர்ந்த நேரங்களில் பாதைகள் தெரிவதில்லை.

வாழ்க்கை பயணத்திலும், பல சூழலில் உங்கள் பாதை பனி படர்ந்த போலே தான் பார்வைக்குத் தெரிகின்றது.

குழந்தை பருவத்தில், மற்றவர் கொஞ்சிவிளையாட அழைத்த போதும், அணைத்த போதும் – அந்நியனாக அந்தக் குழந்தை உணர்ந்ததாலேயே பல குழந்தைகள் தன் தாயின் அணைப்பில் இருந்து தாவி வருவதில்லை.

கூச்ச சுபாவம் உள்ள குழந்தை என்ற பட்டப்பெயரையும் பெற்றுவிடுகிறது. அஃரிணைப்பொருள்களுடன் ஆனந்தமாக விளையாடும் குழந்தைக்கு – தன்னை கொஞ்சிட அழைப்பது ஆறறிவு உள்ள ஜீவன் என்று அறிவதில்லை.

பள்ளியில் நல்லதொரு நட்பு வட்டத்தை எர்ப்படுத்திக்கொள்ளத்தெரியாத சிறார்கள் – தாழ்வு மனப்பான்மையை கொண்டு தவிக்க நேரிடுகிறது.

கல்லூரி காலத்தே இன்னொரு பெரும் விபரீதம் இளைய நெஞ்சங்களுக்குள் ஏற்ப்பட்டு விடுகிறது.

பல சமயங்களில் கூடா நட்பு கேடாய் முடிகிறது.

சரியான பாதையில் எப்போதுமே சந்தொஷப்பயணம் தான்

பாதையை புலப்படுத்தும் பொறுப்பும் கடமையும் – பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே அதிகம் உண்டு.

அன்பினால் நனைக்கப்படும் குழந்தைகள் கொஞ்சம் அறிவினாலும் நனைக்கப்பட வேண்டும்.

நாத்திக வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை தடுக்கும் நங்கூரமாக “பக்தி” சங்கிலிகள் பயன்படட்டும்.

“பக்தி”யின் மீதும் அந்தக் குழந்தை தன் பிஞ்சு கால்களை அழுத்தமாக வைக்கட்டும்.

மனித சக்திக்கும் பெரிதான சக்தி ஒன்று “பிரபஞ்சம்” என்ற பெயர் சூட்டப்பட்டு “இயற்கையாக” செயல்பட்டுக்கொண்டிருக்கிறது – என்பதை குழந்தைகளின் புத்திக்குள் புகுத்தட்டும் பெற்றோர்.

“அறிவு” என்றால் என்ன?

“அறிவது” என்றால் என்ன?

“கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு” – என்பதன் உண்மையான உரை என்ன?

குழப்பமான சூழ்நிலைகளில் ஒரு தெளிவை ஏற்படுத்தும் ஞானமே – அறிவு.

தெளிவான குறிக்கோள் கொண்டு, வாழ்வை முறையாக நடத்திச்செல்ல, வெற்றிக்கு வேண்டுவதை சேர்க்க தேவையானவற்றை அடையும் கல்வியே – அறிவு.

இடர் மிகுந்த வாழ்க்கையில் இடறி விழாமல் இருக்க உங்கள் புத்திக்குத் தேவைப்படும் பிடிமானமே – அறிவு.

சூதும், வஞ்சமும், பொறாமையும் கொண்ட புவிவேந்தர்கள் மத்தியிலும் – நிம்மதியாக ஜீவிக்க உதவும் புவியீர்ப்பு மையமே – அறிவு.

சொல்புதிக்கும், சுய புத்திக்கும் இடையே – சமன்பட்ட மனநிலையில், சரியான வாழ்வைக்காட்டும் துலாபாரமே – அறிவு.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2017

இரணமும் இதமும்
காலங்கள் மாறுமோ
அவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்
முயற்றேன் வென்றேன்
கண்ணுக்குத் தெரியாத புனிதம்
ஆசையும் இயக்கமும்
மன்னிப்புக் கேட்கிறேன் மனசாட்சியே…
மதுரை வேளாண் கல்லூரியின் திட்ட இயக்குனருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் விஞ்ஞானி விருது
அக்டோபர் மாத உலக தினங்கள்
சோதனையை சிந்தித்து சாதனையை வெற்றிடு
ஏன் இப்படி?… இப்படித்தான்
என் பள்ளி
மனவயல்
கனவை நனவாக்குவது திறமையா? கடின உழைப்பா?
வாழ நினைத்தால் வாழலாம் – 9
வெற்றி உங்கள் கையில் – 46
உண்மை என்னும் வற்றாப் புகழ்
தன்னம்பிக்கை மேடை
எண்ணங்களைதூய்மைப்படுத்து! ஏற்றங்களை மேன்மைப்படுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்