Home » Articles » வெற்றி உங்கள் கையில் – 46

 
வெற்றி உங்கள் கையில் – 46


கவிநேசன் நெல்லை
Author:

பாராட்டு தந்த வாழ்க்கை

என்னால் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது.

 என் வாழ்க்கை மட்டும் இப்படி அமைந்துவிட்டதே என்று எண்ணி மகிழ்ச்சியை தொலைத்தவர்களும் உண்டு.

அவரைப்போல் நான் நன்றாக வாழ முடியவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சோடு நாட்களை நகர்த்தி, நரக வேதனை அனுபவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

எப்போது பார்த்தாலும் என்னை எல்லோரும் குறைசொல்கிறார்கள். நான் இந்த உலகில் வாழ தகுதியற்றவன் என்று தனது குறையை மட்டுமே பூதக்கண்ணாடி போட்டுப்பார்த்து வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மனங்கள் இன்றும் உலவுகின்றன.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் 

 வாசல்தோறும் வேதனை இருக்கும்

 வந்த துன்பம் எதுவென்றாலும்

 வாடி நின்றால் ஓடுவதில்லை

 எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

 இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

 – என்பது கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகள் ஆகும்.

வாழ்க்கையில் சோதனைகளும், வேதனைகளும் நிறைந்து வரும்போது, அவற்றை சாதனைகளாக மாற்றுவதற்கு சிந்திப்பது நல்லது.

வருத்தங்களும், கோபங்களும் வாகை சூடி நின்றாலும் அர்த்தமுடன் சிந்தித்தால் அத்தனையும் மறைந்துவிடும். இதனால்தான், குறைகள் சொல்லுபவர்களை அருகில் வைத்துக்கொண்டு, குலவிக் கொண்டாடுவதைவிட, நம்மைப் பாராட்டும் நல்ல இதயங்களோடு பழகவும், நேசிக்கவும் கற்றுக்கொள்வது நல்லது.

எல்லோரும், எப்போதும் அனைவரையும் பாராட்டிவிட மாட்டார்கள். இருந்தபோதும், நம்மிடம் இருக்கும் நல்லவற்றை இனம்கண்டு பாராட்ட முன்வருபவர்களை நாம் நண்பர்களாகக் கொள்வது நல்லது. அதுமட்டுமல்லாமல், நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை யாராவது குறிப்பிட்டுப் பாராட்டினால் அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டு அந்தக் குணங்களை மேலும் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்வது சிறந்தது.

குறைகள் கூறினாலும், அந்தக் குறைகளை நிறைகளாக மாற்ற தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதன்மூலம், எந்தக் குறையையும் சிறப்பான நல்ல குணமாக மாற்றிவிடலாம்.

பாராட்டுக்கள் கிடைத்தால், அந்தப் பாராட்டை மனதில் நினைத்து பண்போடு செயல்பட ஆரம்பிக்கும்போது வெற்றி நமது வாழ்க்கையில் நிறையும்.

ஒரு ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்.

வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவ – மாணவர்களிடமும் ஒரு வெள்ளைத்தாளைக் கொடுத்தார்.

“இந்த வெள்ளைத்தாளில் நீங்கள் உங்கள் வகுப்பிலுள்ள ஒவ்வொருவருடைய பெயரையும் வரிசையாக ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதுங்கள்” என்றார்.

மாணவர்கள் வெள்ளைத்தாளில் வகுப்பிலுள்ள மாணவ – மாணவிகளின் பெயர்களை எழுதினார்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2017

இரணமும் இதமும்
காலங்கள் மாறுமோ
அவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்
முயற்றேன் வென்றேன்
கண்ணுக்குத் தெரியாத புனிதம்
ஆசையும் இயக்கமும்
மன்னிப்புக் கேட்கிறேன் மனசாட்சியே…
மதுரை வேளாண் கல்லூரியின் திட்ட இயக்குனருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் விஞ்ஞானி விருது
அக்டோபர் மாத உலக தினங்கள்
சோதனையை சிந்தித்து சாதனையை வெற்றிடு
ஏன் இப்படி?… இப்படித்தான்
என் பள்ளி
மனவயல்
கனவை நனவாக்குவது திறமையா? கடின உழைப்பா?
வாழ நினைத்தால் வாழலாம் – 9
வெற்றி உங்கள் கையில் – 46
உண்மை என்னும் வற்றாப் புகழ்
தன்னம்பிக்கை மேடை
எண்ணங்களைதூய்மைப்படுத்து! ஏற்றங்களை மேன்மைப்படுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்