![]() |
Author: சைலேந்திர பாபு செ
|
நேயர் கேள்வி…?
பெண்கல்வி ஒரு சமுதாய உயர்வுக்கு எந்தளவிற்குத் தேவைப்படுகிறது?
– அருள்நிதி ரேணுகாதேவி, ஆசிரியர்
ஆங்கில அதிகாரிகளும், ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், சுப்பிரமணிய பாரதி, தந்தை பெரியார் போன்ற பெரியவர்களும் பெண் கல்விக்காக வாதாடினார்கள். அதனால் பல கோடி பெண்கள் எழுச்சி பெற்றனர். இருப்பினும் இன்னும் இந்தியாவில் பல கோடி பெண்கள் கல்வி இல்லாத நிலை இருப்பதால் உங்கள் கேள்விக்கு முக்கியத்துவம் உண்டு. எனவே கேள்விக்கு பதில் காண முயற்சி செய்கின்றேன்.
சரித்திரம்:
உலகம் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆனது என்றும், அதில் உயிர்கள் தோன்றி 360 கோடி ஆண்டுகள் ஆனது என்றும் இன்றைய மனிதன் தோன்றி 15 லட்சம் ஆண்டுகள் ஆயிற்று என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதில் மனித நாகரீகம் தோன்றி 4000 ஆண்டுகளாகிவிட்டன எனலாம். அப்படி இருக்கையில், நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களைப் பார்த்தால், ஆண் சமுதாயம் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தார்கள் எனத் தெரிகிறது. பெண்களுக்கு அவசியம் கற்பு மட்டும்தான், அவர்களுக்கு கல்வியோ சுதந்திரமோ அவசியமில்லை என்பதுதான் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. இந்த 100 ஆண்டுகளாகத்தான் பெண்களுக்கு ஓரளவிற்கு விமோசனம் பிறந்திருக்கிறது.
கன்பியூசியஸ்
3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனத் தத்துவ ஞானி கன்பியூசியஸ் சொன்னது இது: பெண் குழந்தை தந்தையின் கட்டுப்பாட்டிலும், மனைவி கணவனின் கட்டுப்பாட்டிலும், வயது முதிர்ந்த ஒரு பெண் மகனின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். இதை நம்ப உங்களுக்கு சிரமம் இருக்காது. ஏனெனில், இந்த முறை இன்றும் நமது சமுதாயத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆதிக்கத்திற்கும், அடக்குமுறைக்கும், அநீதிக்கும் பெண்கள் ஆளாகி இருப்பதற்கான மூல காரணம் அவர்களுக்கு கல்வி இல்லை என்ற ஒரே காரணத்தால் தான்.
இந்த இதழை மேலும்

October 2017




















No comments
Be the first one to leave a comment.