– 2017 – October | தன்னம்பிக்கை

Home » 2017 » October

 
 • Categories


 • Archives


  Follow us on

  இரணமும் இதமும்

  அன்பு நண்பர்களே! உயிர்ப்புள்ள காய்கறிகள் விரைவாகக் கெடவேண்டுமாயின் அதனை வெப்பச் சூழலில் வைத்தால் போதும். அதுவே, அதைப் பாதுகாக்க வேண்டுமாயின் குளிர்ச்சியான சூழலில் வைத்தால் போதும். அதே சமயம் அதனை குளிர் உறையும் தன்மையில் வைத்தாலும் அதன் உயிர்ப்புத் தன்மை குறைந்துவிடும். அவ்வண்ணமே நம் உடலும் உடல் உள்ளுறுப்புகளும் இயல்பு வெப்ப நிலைக்கு (36o Celcious) மேல் அதிகமாகும் போது அவை இரணப்பட ஆரம்பித்து பின் வெந்து நொந்துபோக ஆரம்பிக்கின்றன. அதுவே, உறை குளிர் தன்மைக்கு ஆளாகும்போது அதன் உயிர்ப்புச் சுவாசம் குறைந்துவிடுகிறது.

  இதே நிலைதான் நம் கல்லீரல் செயல்பாட்டிற்கும் பொருந்தும். நம் கல்லீரல் அதிக உடல் வெப்ப நிலைக்கு ஆளாகும்போது அது இரணப்பட ஆரம்பிக்கிறது. இரசாயன மருந்துகள் எடுத்துக் கொண்டால் வயிற்றில் வெப்பம் அதிகமாகும். இந்த அதிக வெப்பத்தில் கல்லீரல் சுரக்கும் பித்த நொதிகள் கரைந்து வீணாகிவிடும். இப்படி வீணாவதால் மூளையானது உணவினை செரிக்கக் கல்லீரலை மீண்டும் மீண்டும் தூண்டி பித்த நீரை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. காலப்போக்கில் கல்லீரல் சோர்வடைகிறது. அதிக பித்தம் சுரக்க அதிக கால்சியம் தேவைப்படுவதால், எலும்பு கரைகிறது. கரைதல் ஆயுளைக் குறைக்கிறது. காலப்போக்கில் கல்லீரல் சோர்வடைகிறது. அதிகப் பித்தச் சுரப்பானது உஷ்ண வியாதிக் கிருமிகள் (மஞ்சள் காமாலை, டைபாய்டு, அல்சர் முதலியன) பெருக அற்புதக் களமாகிறது. அதிகப்படியான பித்தத்தை சிறுநீரகங்கள் வெளியேற்றத் தவறும் போது பித்தப்பை கற்கள் உருவாகின்றன. நரை ஏற்படுகின்றன.

  கல்லீரல் இரணத்தால் நமது உள் உறுப்புகள்  இரணவீக்கம் (Inflamation) ஆகின்றன. அவற்றுள், வயிற்று இரணம் அல்சரையும்; சிறுகுடல் இரணம் அம்மையையும்; பெருங்குடல் இரணம் மூலத்தையும்;  இருதய இரணம் இரத்த அழுத்தம் (B.P.) மற்றும் மாரடைப்பையும்; நுரையீரல் இரணம் நெஞ்செரிச்சல் மற்றும் சளியையும்; மூளை இரணம் மன உளைச்சலையும்; கணைய இரணம் நீரழிவு நோயையும்; சிறுநீரக இரணம் சிறுநீரக செயலிழப்பையும்; சிறுநீர்ப்பை இரணம் சிறுநீரகத் தொற்றையும்; கருப்பை இரணம் எரிச்சலான மாதவிடாய், அதிக உதிரப் போக்கு மற்றும் கருப்பை புற்று ஆகியவற்றையும்  உண்டாக்குகின்றன.

  இந்த இதழை மேலும்

  காலங்கள் மாறுமோ

  உலகத்தில் எந்த இடத்திலும் கடிதத்திற்கான காத்திருப்பு ஒன்றுபோலத் தான். கிராமப்புறங்களில் ஒரு ஒற்றை அறை வீட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்தது போஸ்டாபீஸ். ஒரு ஆள் மட்டும் பிரபலமாக இருந்தார் எல்லா இடத்திலும். எல்லா வீடுகளிலும் வரவேற்கப்பட்ட மனிதனாக இருந்தார் போஸ்ட்மேன். கடிதங்கள் எல்லா இடங்களுக்கும் வந்தன.

  ஊரைவிட்டு சென்றவர்களில் வெளிநாட்டுக்கு போனவர்களும், பட்டாலத்துக்கு போனவர்களும் இருந்தார்கள். பட்டாலத்துக்கு போனவர்கள் இருந்த வீடுகளில் தினம் ஏராளமான கண்கள் தெவில் போஸ்ட்மேன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தன. கடிதங்களும், மணியார்டகளுமாக காக்கிநிற உடையில் போஸ்ட்மேன் படிகள் ஏறிவந்தது. கொங்சநாள் கழித்து, சைக்கிளில் போஸ்ட்மேனுடைய வரவு… சைக்கிள் மணியின் ஒலி வரப்போகும் கடிதங்களின் வரவை அறிவித்தன. ஒரு பிளாஸ்டிக் பையிலும், மிச்சமீதி அளவிலும் இடுக்கிக்கொண்டு சஞ்சரித்தார் போஸ்ட்மேன். மேற்பக்கத்திலும், கீழ்பக்கத்திலும் கிழிந்த இடங்களில் ஒட்டுப்போட்டது நன்றாகத் தெரியும் அந்த காக்கி சட்டையில். சட்டையின் கீழ் இருந்த பாக்கெட்டில் தான் மணியார்டகளுக்கான பணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். பெரிய ஒரு கறுப்பு குடை எப்போதும் காவல் தெய்வம் போல கூடவே வந்தது. காக்கித் துணியால் தைக்கப்பட்ட ஒரு துணிப்பையும் கூட வரும். விடுவிடுவென்று ஒரு வேகமான நடப்பு. எப்படியிருந்தாலும், பழைய அஞ்சலோட்டக்காரனாகதானே இருந்தான் போஸ்ட்மேன். ஒவ்வொரு வீட்டின் படிகளுக்கருகில் வரும்போதும், வெறும் இரண்டொரு வார்த்தைகளில் மட்டும் தான் கடிதம் என்றால் சற்று உரத்த குரலில் சத்தம் வரும். ‘மாணிக்கம் பயல் வரான்’.

  மாதத்தில் ஒரு தடவை படிகளில் ஏறி உள்ளே முற்றத்துக்கு வரும்போது தான் இரு தரப்பாருக்கும் சந்தோசம் அதிகமாவது. பணத்தை எண்ணிக்கொடுக்கும் போது, ஒரு சிறிய தொகை போஸ்ட்மேனுக்கு சந்தோசத்தின் அச்சாரமாக தரப்படும். அது லஞ்சம் இல்லை. மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் போஸ்ட்மேனுக்குத் திரும்பத்தரப்படும் நேசம். மொபைலும், இன்டர்நெட்டும், பேக்சும் எதுவும் இல்லாதிருந்த அந்த காலம் கடிதங்களுக்கு இடையேயானதாக இருந்தது. தூரதேசத்தில் இருக்கும் மகனிடம் இருந்தோ, கணவனிடம் இருந்தோ கடிதம் வந்துவிட்டால் அவ்வளவு தான். கடிதத்தில் எழுத்துக்களின் வழியாக ப்ரியமானவரின் சந்தோசத்தில் பிரகாசிக்கும். யுத்தமோ மற்ற ஏதாவது நடக்கும் சமயம் என்றால் கடிதங்கள் வந்துசேர வாரங்களும், மாதங்களும் பிடிக்கும். மனதில் ஒரு ஆயிரம் எண்ணங்களும், வேதனைகளுமான எழுத்துக்களாக காத்திருக்கும் ஒரு நீண்ட நெடிய தவம். ஒவ்வொரு நாளும் கிலோமீட்டர் கணக்காக நடந்து வெய்யில் என்றும், மழை என்றும் பார்க்காமல் சந்தோசத்துக்குரியதோ, துக்கத்துக்குரியதோ தூதனாக வரும் ஊரில் எல்லோருக்கும் பிரியமானவன் ஆவான்.

  இந்த இதழை மேலும்

  அவசர சிகிச்சைப் பிரிவை அணுக வேண்டிய சூழ்நிலைகள்

  நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உடனடி அவசர

  மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அறிகுறிகள் –

  குழந்தைகளுக்கான அபாய முக்கோணம்

  1. வெளித்தோற்றம் : சரியாக விழித்துப் பார்க்காமல் இருத்தல். பேசாமல் இருத்தல். சமாதானமடையாமல் தொடர்ந்து அழுதல்.
  2. சுவாசம் : சுவாசிப்பதில் சிரமம் (நெஞ்சு உள்ளிழுத்தல், மூக்கு விரிதல்), குறைந்த அளவு மூச்சு விடுதல். மூச்சு விடும்பொழுது முக்குதல், இழுத்தல், மூச்சடைப்பு ஆகியவற்றுக்கான சத்தம் கேட்டல்.
  3. இரத்த ஓட்டம் : வித்தியாசமான தோல் நிறம் (வெளுத்துக் காணப்படுதல், நீலமாகக் காணப்படுதல்), இரத்தம் வடிதல்.

  ஒவ்வாமை (Anaphylaxis)

  ஒவ்வாமை என்பது உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு மிகவும் ஆபத்தானது. முக்கியமாக இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மூச்சு திணறலை ஏற்படுத்தும். அலர்ஜி தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளால் ஒவ்வாமை பாதிப்பு அடைய வாய்ப்பு அதிகம். ஒருசில நபர்களுக்கு மிகவும் மெதுவாகவும் ஏற்படலாம்.

  ஒவ்வாமையின் அறிகுறிகள்

  • தோலில் அரிப்பு மற்றும் தோல் வெளுத்துக் காணப்படும்.
  • முகம், கண், உதட்டில் வீக்கம் ஏற்படும்.
  • மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும்.
  • நாடித்துடிப்பில் மாற்றம் ஏற்படும்.
  • அருவருப்பு, வாந்தி, வயிற்றுப்போக்கு
  • தலைசுற்றல், தலைவலி, மயக்கம் ஏற்படுதல்
  • ஒருசில மருந்துப் பொருள்கள்
  • உணவுப் பொருள்கள் முதலியன. கடலைபருப்பு, கொட்டை வகைகள், சிலவகை மீன்கள்
  • குளவி, எரிப்பூச்சி மற்றும் சில பூச்சி வகைகள் ஒவ்வாமையின் அறிகுறிகள் இருக்கும் பொழுது செய்ய வேண்டியவை
  • உடனடியாக மருத்துவரை அணுகவும் அல்லது அவசர உதவியைக் கூப்பிடவும்.
  • ஏதாவது மருந்து ஊசியினை ஆபத்து நேரத்தில் எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளார்களா என்று கேட்க வேண்டும்.
  • அவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருப்பின் மருந்தினை ஊசி மூலம் உடனடியாக கொடுப்பதற்கு உதவ வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குழந்தையை நேராகப் படுக்கச் செய்ய வேண்டும்.
  • இறுக்கமான உடை அணிந்திருந்தால் தளர்த்தி விடவேண்டும். துணியால் மூட வேண்டும். அருந்த எதுவும் கொடுக்க கூடாது.
  • ஏதாவது வாந்தி அல்லது இரத்தக் கசிதல் வாயில் இருந்தால் குழந்தையை ஒருபக்கமாக திருப்பி மூச்சுத்திணறல் இல்லாமலும் தடுக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவரிடம் மூச்சுவிடுதலோ, அசைவோ இல்லாமல் இருந்தால் அவசர உதவி கொடுக்க வேண்டும் (இடத). அறிகுறி அதிகமாக இருந்தால் அவசர உதவியை உடனடியாக அணுக வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  முயற்றேன் வென்றேன்

  ச. சரவணன்

  சன்லக்ஷ் கார் ஒர்க்ஸ் ஷாப்

  வடவள்ளி

  பயணிக்கும் பாதையை மட்டும் விரும்புங்கள் வெற்றி என்னும் சிம்மாசனத்தை அடைந்து விடலாம் என்பது பொன் மொழி. அந்த பொன் மொழியை தன் வாழ்க்கையில் கடைபிடித்து இன்று மெக்கானிக் துறையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து வசித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த

  நான் பிறந்தது கோவை மாவட்டத்திலுள்ள சீரநாயக்கன் பாளையம் என்னும் ஊரில் தான் பிறந்தேன். அப்பா சண்முகம், அம்மா லட்சுமி அம்மாள் இவர்களுக்கு நடு மகனாகப் பிறந்தேன் நெசவுத் தொழில் செய்யும் குடும்பம் எங்கள் குடும்பம். வீட்டிலேயே நெசவு செய்து வந்தனர். அண்ணன் தண்டபாணி, தம்பி. தனபால். மனைவி கல்பனா எனக்கு இரண்டு மகள் பூமிகா, கவிநயா.

  நான் சீரநாயக்கன் பாளையத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தான் படித்தேன். பள்ளி நாட்கள் யாருக்கும் அவ்வளவு எளிமையாக மறந்து விடாது. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள், வகுப்பறையில்லாமல் மரத்தடியில் அமர்ந்த படிந்த ஞாபகம், மதிய சத்துணவு, பழகிய நண்பர்கள் என அனைத்தும் ஒரு பொக்கிஷம் போல் இன்றும் மனக்கதவைத் திறந்து பார்த்தால் பல நினைவுக் குவியல்கள் இன்றும்  தென்படுகிறது.

  அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தேன். என்னுடைய உறவினர் ஒருவர் பள்ளிக்கு வந்தார். வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். என் வீட்டின் முன் நிறைய பேர் கூடியிருந்தார்கள். அனைவர் முகத்திலும் சோகம் அழுகையுடன் காணப்பட்டனர். நானும் உள்ளே சென்று பார்க்கும் போது என் தந்தை இறந்ததை அப்போது தான் உணர்ந்திருந்தேன். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்பா இறந்து பல நாட்கள் ஆகியும் எங்கள் வீட்டில் சற்றும் சோகம் மாறவில்லை.

  நானும் பள்ளிக்குச் சொல்லமால் வீட்டிலேயே தான் இருந்தேன். அதன் பிறகு எனக்குப் பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. என்னுடன் பிறந்தவர்கள் 2 பேர் அண்ணன் அப்போது லேத் ஒர்க்ஸ் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். எனக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. வீட்டில் நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் போடவில்லை. அவர்கள் பள்ளிக்குத் தான் செல்ல சொன்னார்கள் ஆனால் நான் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.

  9 வயதிருக்கும், நான் முதன் முதலில் வேலைக்கு சேரும் போது. என் அண்ணன் தான் அருகிலிருந்த ஒர்க்ஷாப் ஒன்றில் வேலைக்குச் சேர்த்து விட்டார். காலை 8 மணிக்கு அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவு பையோடு சென்றால் மாலை 5  மணி ஆகி விடும். பள்ளிப்பருவம் சற்றும் மாறாத வயதில் வேலைக்குச் செல்வது ஆரம்பத்தில் சற்று கடினமாகத் தான் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல வேலையோடு பயணிக்கத் தொடங்கி விட்டேன். இப்படியே நாட்கள் நகர்ந்தது.

  இந்த இதழை மேலும்

  கண்ணுக்குத் தெரியாத புனிதம்

  பல   அலுவல்கள்  இருந்த போதும் கூட  அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, எனது மனைவியையும் மகளையும்  அழைத்துக்  கொண்டு  ஒரு புனிதப்பயணம் போய் வந்தேன், பொள்ளாச்சியை  தலைமையிடமாகக்   கொண்டுள்ள “CROSSWOOD HOLIDAYS”  நிறுவனத்தார்கள் இந்த  காசிப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்,  அதில் கலந்து கொண்டு நான் பெற்ற அனுபவங்களையும், ஆனந்தத்தையும் ,மகிழ்ச்சியையும் அதனால் உண்டான மலர்ச்சியையும் பதிவு செய்வதில்  ஒரு இனம்புரியாத பெருமிதம் அடைகிறேன்.

  கடந்த ஆகஸ்ட் மாதம் 28ந் தேதியன்று காலை 6. 30 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வந்தோம்,  பயணத்திற்கான ஆயத்தப்பணிகள் முடிந்த பிறகு  விமானத்தில் ஏறி அமர்ந்தோம்,  மும்பை செல்கின்ற   “INDIGO   விமானம் “சரியாக  7. 55 மணிக்கு புறப்பட்டது, அந்த விமானம் மும்பை விமான நிலையத்திற்கு 9. 55 க்கு வந்து சேர்ந்தது, இரண்டு மணிநேரத்திற்குப்பின்பு சுமார் 12. 00 மணியளவில் மும்பையிலிருந்து வாரணாசி செல்லும் விமானத்தில் 12.05 மணிக்கு பயணம் தொடங்கியது.

  அந்த விமானம் 2.00 மணியளவில் வாரணாசி விமான நிலையத்தை  வந்தடைந்தது, வாரணாசி விமான நிலையத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  AC Tempo Traveller மூலமாக வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில்நிலையத்திற்கு எதிரில் உள்ள 3 நட்சத்திர ஹோட்டலர்   ‘Hotel City” யை 3. 00 மணியளவில் வந்தடைந்தோம்,  நல்ல வசதியான, தங்குவதற்கு சுகமான  ஹோட்டல் அது.

  ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று குளித்து விட்டு 4.30 மணியளவில், காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் புறப்படத்  தயாரானோம், ஆட்டோவில்தான் போக முடியும்.  ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஆட்டோக்கள் போக முடியாது.  மிகக் குறுகலான சந்துக்கள் போன்ற வீதி அது. 3 போன மட்டுமே செல்ல முடியும், இடையிடையே மாடும் வரும், மோட்டார் சைக்கிள்கள் வரும், போகிறவர்கள் வரிசையாக ஒதுங்கித்தான் போக வேண்டும், வளைந்து,நெளிந்து ஒரு 15 நிமிட நடைக்குப்பின், காவல்துறையின்  கடும் பாதுகாப்புகள், பரிசோதனைகள்   அனைத்தையும்  முடித்து கோவிலுக்குள் சென்றோம்.

  சக்தி மிகுந்த  கோவில்!  நான்கு புற வாயில், உள்ளே சென்று மண்டியிட்டு இறைவனைத் தொட்டு வணங்கலாம். அருமையான தரிசனம், ஆனந்த மோன நிலை  அருள்; பெருக நெஞ்சுருக  வேண்டி  வணங்கினோம், கானப்பகிரகத்தை விட்டு வெளியே வந்துதங்கத் தகடுகளால் வேயப்பட்ட கோபுரத்தை தரிசித்தோம்,  வெளியே உள்ள லிங்கத்தையும் தரிசித்தோம்,  வெளியே வந்து,  சற்று  தூரத்தில் உள்ள விசாலாட்சியம்மன் கோயிலில் தரிசனமும், அதனையடுத்து வேறு ஒரு இடத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் தரிசனமும் முடித்தோம்.

  இந்த இதழை மேலும்

  ஆசையும் இயக்கமும்

  வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமா? தன்னிறைவு வேண்டுமா? இன்பம் வேண்டுமா? மகிழ்ச்சி வேண்டுமா? வேண்டுமெனில் நான் சொல்வதை மாட்டேன் என்று சொல்லாமல் அதைச் செய்தால் ஆயுள் முழுக்க என்றும் நிம்மதி கிடைக்கும்.

  இதோ நீ ஒரு கொலை செய்ய வேண்டும். ஐய்யோ இதுவா முடியாது என்று பதில் சொல்லி விடாதீர்கள். கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும். இக்கொலை செய்வது கடினமாகக் கூட இருக்கலாம். வாழ்க்கையை வென்று முடிக்க ஆசையைக் கொன்று முடிக்க வேண்டும். வாழ்வில் வெல்ல ஆசை, காமம் போன்றவற்றை கொல்ல வேண்டும், கொன்றால் வெல்லலாம்.

  எதைக் கொடுத்தாலும் ஒருவனிடமிருந்து வருகிற பதில் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நிம்மதியைக் கொடுத்துப் பாருங்கள். என்ன பதில் வேண்டுமானாலும் வரும். வேண்டாம் என்கிற பதில் மட்டும் வாயிலிருந்து வராது.

  இயக்குவது வேண்டுமானால் நீயாக இருக்கலாம். ஆனால் இயக்குவதும் நீயாகத்தான் இருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் உனக்கு அது நல்லது. இயக்குவதும், இயக்குவதை இயக்குவதும் நீயாகத்தான் இருக்க வேண்டும். இயக்கினால் மட்டும் போதாது. இயக்கியதும் இயக்கியதை இயக்கியபடி இயக்குவதும் நீயாகவும் இருக்க வேண்டும், அது சரியாகவும், முறையாகவும் இருக்க வேண்டும்.

  எதையும் உன் அறிவில் சுயமாக சிந்தித்து சுயமாக என்றும் முடிவெடுக்க வேண்டும். சுய இயக்கம் வலிமையானதாக இருந்தால் நீ வலிமையானவனாய் என்றும் இருப்பாய். அப்பொழுது செயலில் உன் புறத்தாக்கமும் வலிமையானதாக இருக்கும்.

  சுய இயக்கம் ஒருவனது ஆற்றலை அதிகரிக்கும். மேன்மையைக் கொடுக்கும். ஜோசியம், ஜாதகம், கைரேகை போன்றவைகள் உன்னை இயக்குவதாக இருக்கக் கூடாது. இயக்கினாலும், அதன் வழி இயக்கினாலும் உன் வாழ்க்கை வீண்; இளமை வீண், காலம் வீண்;வெற்றியும் வீண்; அனைத்தும் வீண்.

  குரு பெயர்ச்சியை நம்பாதே. உன் முயற்சியை நம்பு, குருபெயர்ச்சியை நம்பினால் அது தான் இடம் மாறும், நீ இடம் மாற மாட்டாய். இருந்த இடத்திலேயே தான் இருப்பாய்.

  நேரம் நல்ல நேரம்

  எல்லா நேரமும் நல்ல நேரம் தான். நேரம் என்றாலே நல்ல நேரம் என்று தான் அர்த்தம். நேரத்தில் கெட்ட நேரம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை.

  நேரம் நேரமாக இருந்தாலும், அதை நல்ல நேரம் ஆக்குவதும் கெட்ட நேரம் ஆக்குவதும் உன் கையில் தான் உள்ளது.

  இந்த இதழை மேலும்

  மன்னிப்புக் கேட்கிறேன் மனசாட்சியே…

  மனிதம், இறைமை, மிருகம் ஆகிய மூன்று நிலைகளுக்கு இடையில் இருந்து நான் எழுதுகிறேன். இந்த அகிலத்தில் பலருக்கும் வாழப்பிடிக்கிறது, ஆனால் சிலருக்கு மட்டுமே நல்வாழ்வு அமைகிறது.

  வாழ்வின் இலையுதிர்காலத்தையும், வசந்தகாலத்தையும் சம அளவில் அனுபவிக்கும் நவீன சமுதாய மனிதர்களே, கண்ணனுக்குத் தெரியாத சில மனிதர்களின் வாழ்வியல் பற்றி உங்களோடு கொஞ்ச நேரம் பேசிடவே என் எழுத்துக்கள் இங்கே பிரசவிக்கிறேன்.

  நவீன மானுடக் கடலில் உங்களுள் நானும் ஒரு துளி என்பதை இப்போதே உறுதி படுத்திக்கொள்கிறேன். பல இரவுகள் என் தலையணையை நான் காலங்கப்படுத்தி இருக்கிறேன், அவையனைத்தும் என் மீது நான் கொண்ட எண்ணங்களின் தாக்கம். இப்போது, மனிதர்களின் வார்த்தைகள் மௌன்னித்து போய் இருக்கின்ற இந்த நீள இரவில் என் கண்ணீர் மொழிக்கு காரணம் அவர்கள் தான்.

  இப்போதும் கூட நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி பொழுதில் கூட எங்கோ ஒரு மூலையில் சில இதயங்கள் அழுது கொண்டிருக்கும், பேருந்து நிலையங்களில் சில கண்கள் கதறி அழுது கொண்டிருக்கும், சில வயிறுகளை உணவுகள் நிராகரித்திருக்கும், சிலரின் உணர்வுகள் காலம் தன் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும், வறுமையின் பிடியில் சிக்கி தவிப்போர் பலருண்டு, அவர்களுக்காக தான் என் இதயமும் கண்களும் ஒருசேர கலங்குகிறது!

  பிரியத்திற்குரியவர்களே! நீங்கள் வீட்டை விட்டு வந்த பின்பு ,வீடில்லாமல் தெருவில் கிடைக்கும் முதியவர்களை என்றாவது ஒருநாள் உங்கள் கவனத்தை ஈர்த்ததுண்டா?பிஞ்சு கைகள் உங்கள் கைகளை நோக்கும் போது உங்கள் இதயத்தின் சில நரம்புகள் அருந்ததை உணர்ந்ததுண்டா?

  உங்கள் வாழ்வின் ஒருமுறையாவது அவர்கள் வாழ்க்கை பின்னோட்டத்தை அறிய முற்பட்டதுண்டா?என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே! இந்த உலகில் நீங்களும் நானும் கைதேர்ந்த நடிகர்களாக துடிக்கிறோம், மனிதனாகும் முயற்சியை மறுதலித்துவிட்டு…!

  இந்த இதழை மேலும்

  மதுரை வேளாண் கல்லூரியின் திட்ட இயக்குனருக்கு 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் விஞ்ஞானி விருது

  தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வேளாண் விஞ்ஞானிகளுக்கான விருதுகள் அறிவித்து கௌரவப் படுத்தப்படுகிறது. தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த வேளாண் விஞ்ஞானிக்கான விருது டாக்டர் செந்தில் நடேசன், திட்ட இயக்குனர், புத்தக்க மையம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை அவர்களுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்களால் 25.09.2017 அன்று வழங்கப்பட்டது.

  தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக சோளம், கோதுமை, பார்லி, கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானிய வகைகளில் பல உயர் விளைச்சல் ரகங்களை கண்டுபிடித்ததற்கும் தானியங்களின் மணிகள் உதிராத்தன்மைக்கான  மரபுக்கூறு ஜப்பானிய விஞ்ஞானி டாக்டர் குமாட்சா உடன் இனைந்து கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார். அதுமட்டுமின்றி அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவானது 2014 ஆண்டு CELL (செல்) என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் வெளிவந்துள்ளனர்.

  ஆரம்ப காலத்தில் அதிகளவு பயன்படுத்தி வந்த சிறுதானியங்கள் தேவை சில ஆண்டுகளுக்கு முன் குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் வளர்ச்சி பெற்று மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இதனால்  சிறுதானிய உணவுகள் அதிக அளவில் பேசப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக சிறுதானிய துறையில் உருவாக்கிய சாமை, தினை, குதிரைவாலி ரகங்களின் உற்பத்தியில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சிறுதானியங்களின் உயர் விளைச்சல் இரகங்கள் அதிக அளவில் விவசாயிகள் உற்பத்தி செய்ய ஆரம்பித்து உள்ளார்கள்.

  இப்போது மக்களிடையே பரவலாகப் பேசப்படும் சிறுதானிய உணவுப் பழகத்தில் வருவதற்கும், மக்காசோளத்தில் மரபணு குறியீடு முலமாக அதிக விட்டமீன் கொண்ட பீட்டா கரோட்டின் உருவாக்கம் செய்வது வருவதற்கும், தமிழகத்தின் பருவ நிலை ஏற்ப ரொட்டி கோதுமை ரகங்கள், சம்பா கோதுமை ரகங்கள் உருவாக்குவதில் வெல்லிங்டன் மத்திய கோதுமை ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து பணியாற்றிதாகவும், உதிரும் தன்மை உடைய தாவரம் உதிர்வதற்கு காரணமான மரபுக்கூற்றை ஜப்பானிய ஆராய்ச்சியாளருடன் இணைந்து பார்லி தாவரத்தின் உண்மையை உலகிற்கு உணர்த்தியதற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.

  இவர் தற்போது குதிரைவாலியில் அதிக இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச்சத்து உருவாவதற்கான மரபுக்கூறுகளைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி மத்திய அரசு நிதியுதவியுடன் மக்காசோளச் அதிக விட்டமீனுடைய ரகங்களை உருவாக்கியும் வருகிறார்.

  தற்போது வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2015 முதல் 2017 வரையிலான வேளாண் அறிவியல் புதுமைகள் கண்டுபிடிப்பின் மகத்துவ மையத்தில் சுமார் 6 கோடி செலவில் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் தேசிய வேளாண்மை அபவிருத்தி திட்டமும் ஆராய்ச்சிகான நிதியுதவி உடன் உட்கட்டமைப்புகளை நிறுவும் முயற்சியில்  ஈடுபடுத்தி வருகிறேன்

  மக்காச்சோளத்தில் அதிக விட்டமின் ஏ கொடுக்க கூடிய புதிய வீரிய ஒட்டுக்கள் மரபுக்கூறு மாற்றத்தின் உதவியுடன் உருவாக்கும் பெரும் முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறார். குதிரைவாலியில் அதிக இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து வருவதற்கு காரணமாக மரப்புக்கூறு கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ 6 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரும் புதுமைகள் மகத்துவ மையத்தின் திட்ட இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரின் வேளாண் அறிவியல் ஆய்வு சிறக்க வாழ்த்துகிறோம்.

  அக்டோபர் மாத உலக தினங்கள்

  1. சர்வதேச முதியோர் தினம் (International Day for the Elderly) அக் -1

  முதியோர்களைப் பாதுகாப்பது பற்றி உணர்த்தும் விதமாக ஐ,நா, அமைப்பால் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது,

  உலகெங்கும் உள்ள மூத்த குடிமக்களை மதித்து, மரியாதை செலுத்திக் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளிது,  இந்த தினத்தில்  அனைத்து வகையிலும் குடும்பம், சமூகம் மற்றும் தேசத்துக்குச் சேவை ஆற்றிய முதியோர்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டும்.  அவர்களது அனுபவ அறிவு, ஆற்றல், சாதனைகள் ஆகியவற்றைப் புரட்டிப் பார்த்து ஊக்கம் கொள்ள வேண்டும்,

  உலகம் முழுவதும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்கள் மீதான கவனிப்பு குறைந்து வருகிறது,  முதியவர்கள் நலனில் அக்கறை கொண்டு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்களின் சீரிய பண்பு, தளராத உழைப்பு, தேசப்பற்று ஆகியவற்றைத் தொடர்ந்து காக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  இந்தியாவின் பாரம்பரிய குடும்ப அமைப்பான கூட்டுக் குடும்பம், முதியோர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்தது.  இந்த அமைப்பில் அவர்களுக்கு உரிய அன்பும், அரவணைப்பும் மரியாதையும் கிடைத்து வந்தது,  இன்று உலகம் சுருங்கி வந்தாலும் உறவுகளுக்கு இடையே உள்ள தூரம் அதிகரித்துள்ளது. தனிக்குடித்தனங்கள் பெருகி வருவதால் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன.

  முன்பெல்லாம் முதியோர் இல்லங்கள் என்பவை கைவிடப்பட்ட, ஆதரவற்ற முதியவர்களை வைத்துப் பராமரிக்கும் மையங்களாக இருந்தன,  இன்று வேறு மாதிரியான  முதியோர் இல்லங்கள், வசதிகள் மிக்க ‘ஹைடெக்’ இல்லங்கள் வரத் தொடங்கி விட்டன.

  இன்றைய அவசர யுகத்தில்  தேவைகள் அதிகரித்து வருவதால் அதிக வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இளைய சமுதாயம் உள்ளது,  இதன் காரணமாக இளைய தலைமுறைக்கும், மூத்த குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது,  முதியவர்களின் தேவையை அறிந்து உதவும் மனப்போக்கு குறைந்து வருகிறது,  உடல் உபாதைகளால் அவர்கள் அவதிப்படும்போது அதை அவ்வளவாக மற்றவர்கள் பொருட்படுத்தாத போக்கு பெருகி வருகிறது,  மூப்புக்கே உரிய சில குணங்களால் மற்றவர்களுடன் ஒத்துப் போக இயலாததால் எங்கும் அடைக்கலம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

  உங்களது குடும்பத்தில் இருக்கும் முதியோரை இதுவரை கவனிக்க மறந்து விட்டாலும் கூட, இன்று முதல் கவனிக்க உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்,  இதற்கு இத்தினத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்;கள்,  நாமும் ஒருநாள் முதியவராவோம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

  இந்த இதழை மேலும்

  சோதனையை சிந்தித்து சாதனையை வெற்றிடு

  வெற்றியோ, தோல்வியோ, முழு கவனம் செலுத்தி காரணங்களை ஆராய்ந்து, கவனம் செலுத்தினால்தான், தொடர் தோல்வியும் தொடராது. தொடர் வெற்றியும் தடையாகாது.

  வெற்றிக்கு முயற்சி எடுப்பதோடு, தோல்விகளில் கற்றுக் கொள்ளும் பயிற்சியும் கட்டாயம் வேண்டும்.

  மனஓட்டமும், கண்ணோட்டமும் :

  தோல்வியை வெற்றியாக மாற மாற்ற நமது மன ஓட்டமும் கண்ணோட்டமும் மாற வேண்டும். முதலில் கண்ணோட்டம் என்ற வகையில் பார்த்தால்,

  தோல்வி அடங்கியுள்ள வெற்றியை பார்க்க தெரியாமை. அதாவது ஒரு தோல்வியையே முடிவாக நினைத்து, வாழ்க்கையை முடிவுகட்டி கொண்டு, கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தன்னையே ஏமாற்றிக் கொண்டு வாழாமல் செத்து, செத்து, வாழ்பவர்கள், தோல்வியை நன்மையாக பார்க்கும் கண்ணோட்டத்திற்கு மாற வேண்டும்.

  உதாரணமாக,

  தான் படிக்க ஆசைப்பட்ட ஒரு பட்டபடிப்பை, குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் போனதற்காக கவலைப்பட்டான் ஒரு இளைஞன். இதனால் குடும்பத்தார் மீதும், தன் பிறப்பின் மீதும் வெறுப்பாய் நொந்து கொண்டிருந்தான். தந்தையின் சுய தொழிலே செய்ய வேண்டிய கட்டாயம் வந்தபோது, குடும்ப சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு, தினமும் அதை பெரும் தோல்வியாகவே நினைத்து, நினைத்து, தவித்தான்.

  அந்த நிலையில், ஏதேச்சையாக தன்னுடன் முன்பு படித்த நண்பனை சந்திக்கிறான். அவன் பட்ட படிப்பை முடித்தும், நல்ல வேலையின்றி, நிம்மதியின்றி, கஷ்டப்படுவதையும் சுய தொழிலை செய்ய வாய்ப்பு இல்லாமை குறித்தும், சொல்ல கேட்ட இளைஞன், மனம் மாறினான்.

  தனக்கு நண்பனைப் போல வேதனை இல்லை. தனக்கு கிடைத்த வெற்றியை, தோல்வியாக நினைத்ததுதான் தவறு என்று உணர்ந்து மனஓட்டத்தையும், கண்ணோட்டத்தையும் மாற்றிக் கொண்டான் வாழ்க்கையும், ஏற்று கொண்ட தொழிலும் சந்தோஷமாக மாறியது.

  இந்த இதழை மேலும்