– 2017 – September | தன்னம்பிக்கை

Home » 2017 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    ஞாபகச்சுவடுகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயிருக்கின்ற சதுரகிரி மலை மீது  சில மாதங்கள் முன்பு ஏறி இறங்கியது ஒரு பகிர்ந்து கொள்ள உகந்த அனுபவம். அதனால், மன அமைதி உருவாகிறது. யாருக்கு? என்று கேட்கிறீர்களா? எழுதியவருக்கும் படிப்பவர்களுக்கும்தான். அது சற்றே வறட்சியின் பாதிப்பை பார்க்கத் தொடங்கியிருந்த காலம். சில மாதங்கள் கழித்து நல்ல மழை பொழிந்து பசுமை திரும்ப வந்தததும், எழுத வேண்டிய செய்தியே ஆகும். நல்ல வெயில் காலத்தில் நடைபோடுவது சிறப்பான முயற்சியாக இருந்தது. ஒரு கால்பந்தாட்டத்திற்கு இணையான உடல் தகுதி முயற்சி என்று கருதலாம். ஆனால், ஒரு வித்தியாசமான அனுபவமாகக் கொள்ளலாம். மனம் நீண்ட வேளை இயற்கையான அமைதியைச் சுற்றி வந்தது.

    ஞாபகச் சுவடுகள் என்னும் இந்தக் கட்டுரையில் நாம் யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு ஒரு சிந்திக்க வேண்டிய கருத்துக்களை அறிமுகப்படுத்த உள்ளோம். அது அவர்களுக்கானது மட்டும் என்று ஒதுக்கிவிட இயலாது. பொதுப்படையாகப் படிக்கின்ற எல்லாத் திரைப்படச் செய்தி, கணினி திரைகள் OLED, தொடுதிரைகள் குறித்த அறிவியல், விளையாட்டு உட்கருத்து, உளவியல் தத்துவம், உலக வரலாறு ஆகியன கொஞ்சம் முன்னும் பின்னுமாக கலந்து இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

    அனுபவம் புதுமை:

    தேர்வு அறை அனுபவங்களையும் இப்படி ஒரு பரபரப்பான கால்பந்தாட்டமாகவோ அல்லது மலையேற்றமாகவோ ஒப்பிட்டுப் பார்க்கலாம். நன்றாகப் பயிற்சி செய்திருந்தால் களத்தில் ‘கலக்கலாக’ விளையாடுவது சாத்தியமாகும். அதுபோல, சிறப்பாக தயாராகி இருந்தால் தேர்வுக்களம் சுவாரஸ்யமாக அமையும். கடந்த 1999 முதல் 2002 வரை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து யு.பி.எஸ்.சி.,  தேர்வு எழுதிய அனுபவம் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தேர்வுக்காகத் தயாராகின்ற இளைஞர்களுக்கு வழிகாட்ட படிக்க வேண்டி இருக்கிறது. கிரிக்கெட் பயிற்சியாளர்களாக முன்னாள் விளையாட்டு வீரர்களாக இரவிசாஸ்திரி, அனில்கும்ளே ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து செய்திகளைப் படிக்கையில் தேர்வுகளில் கலந்து கொண்டு விளையாடிய அனுபவம் இருப்பவர்கள் இளைய தலைமுறையினருடன் கல்வியும் போட்டித்தேர்வுகள் குறித்து கலந்துரையாட ஒரு வாய்ப்பாக கல்விச்சோலை மாத இதழ் கட்டுரைகள் அமைந்துள்ளன.

    கடந்த 1998ல் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, க்ரானிக்கிள் பிரசுரத்தினரின் சிவில் சர்வீஸ் பிளானர் என்கின்ற புத்தகத்தை குறித்து தெரிந்து கொண்டது நினைவில் இருக்கிறது. இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுத விரும்பும் செல்வி S. கீர்த்தனா, அந்த புத்தகத்தை கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து புதிதாக வெளியிட்டுள்ளனர் என்று படிக்க கொடுத்த பொழுது… நம் ஞாபகச் சுவடுகள் இன்னும் பலனுள்ளதாகவும், தொடர்புள்ளதாகவும்தான் இருக்கின்றது என்று தோன்றியது.

    ஒரு முறை மலையேறினால், அடுத்த முறை செல்லும்போது நினைவில் நிற்பது போல நடந்து போன சுவடு இருக்கத்தானே செய்யும். உயரமான கட்டிடங்களில் மின்தூக்கிகளுக்குள் சக பயணிகளுடன் பயணிக்கின்ற வேகமும், அதே நேரத்தில் ஒவ்வொரு படியாக மேலேறும் பொழுது எதிர்ப்படும் நண்பர்களை நோக்கி புன்னகைத்த வண்ணம், சில சொற்கள் பேசியபடி, நகரும்… ஞாபகச்சுவடுகளும் வித்தியாசமானவையே. தலைமை செயலகம் போன்ற பெரிய கட்டிடங்களில் பல மாடிகள் மாறி, மாறி நடக்கையில் ஞாபகங்கள் மனதுள் நடைபோடுகின்றன. தினந்தோறும் ஒரே அலுவலகம் வந்து செல்லும் அனுபவத்தை ஞாபகச் சுவடுகள்தான் செழிப்புள்ளதாக்குகின்றன. ‘குமரகுருபரர்’… “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே”! என்று கூறி இருக்கின்றார். அதாவது, உள்ளத்தில்தான் செல்வந்தத்தன்மை இருக்கின்றது. வாழ்வின் மிக அழகான கண்கள் எதுவென்றால், மற்றவர்களிடம் இருக்கின்ற நல்ல பண்புகளை காணும் கண்களே, என்று ‘ஆர்டுரே ஹெர்ப்பன்’ என்னும் பிரிட்டிஷ் நடிகை கூறியிருக்கின்றார்.

    இந்த இதழை மேலும்

    அறிவு என்னும் வற்றா ஊற்றின் அதிபதிகள் ஆசிரியர்கள்

    ஆசிரியர்கள் அளக்க இயலாத உலகத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு

     வருவார்கள். வாழ்க்கை என்ற போர் களத்தில் நம்மை தயார்படுத்துபவர்கள்- கீதை

    என்ற கருத்தாழமிக்க வாசகங்கள் ஆசிரியர்களின் மகத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றன. மனிதன், உலகில் குழந்தையாய் பிறக்கின்றான் பின், வாலிபனாய் வளர்ந்து தனக்கிட்ட கடமையை நிறைவேற்ற வாழ்கின்றான். தன் கடமை முடிந்ததும் இறக்கின்றான். இத்தகைய வாழ்க்கைப் பயணத்தில் எண்ணற்ற மனிதர்களை அவன் சந்திக்கின்றான்.

    ஒரு தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் அவாவில் அவனிடம் கேள்விகளை எழுப்பினால் அவன் தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் பற்றி கூறிய பிறகு தான் தன் பெற்றோர், மனைவி, மக்கள், மூதாதையார்கள்,  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொது மக்கள் சம்மந்தப்பட்ட செய்திகளைக் கூறுவான்.

    அத்தகைய முதன்மையான இடத்தைப் பெற்ற ஆசிரியர்களின் ஆசி பெற்று அவர்களின் வழிகாட்டுதலால் இவ்வுலகில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சி மாமனிதர்களின் அனுபவங்களை இக்கட்டுரை விவரிக்கின்றது.

    காந்தியடிகள் :

    மோகன்தாஸ் கரம்சந்காந்தி என்றற மாணவன் மகாத்மா ஆக இன்றும் உலக மக்கள் அனைவர் இதயத்திலும் வாழ்வதற்கு வித்திட்டது, அவர் சிறு வயதில் தன் பள்ளியில் பயின்ற போது அவர் பெற்ற அனுபவங்கள் தான் Child is The father of man என்ற ஆங்கில கவிஞர் wordsworth ன் கருத்திற்கிணங்க ஹரிச்சந்திரன் மற்றும் சிரவணன் பற்றிய நாடகங்கள் அவருக்கு உண்மையின் வலிமை பற்றியும், தாய், தந்தையின் பெருமை பற்றியும் உணர வைத்தன. அவருடைய அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகúலேயின் வழிகாட்டுதலால் இந்தியாவின் மூலை முடுக்குளுக்கெல்லாம் பயணம் செய்து மக்களின் நிலைப்பற்றியும் நாட்டைப் பற்றியும் அறிந்து கொண்டு 1920 ம் ஆண்டு இந்தியாவின் சுந்திரப் போராட்டத் தலைவரானார். ஜைன மதத்தைச் சேர்ந்த ஸ்ரீ மத் ராமச்சந்திரா காந்தயடிகளின் ஆன்மீக குரு ஆவார். ஆத்மா, பரமாத்மா இயற்கையான நம்பிக்கைகளுக்கு பின் மறைந்துள்ள விஞ்ஞானம் மற்றும் ஆன்மீகம் பற்றிய ஞானத்தை தன் குருவிடமிருந்து கற்றுக்கொண்ட படியால் 1947 ம் ஆண்டு காந்தியடிகள் தன்னுடைய அஹிம்சை வழியிலேயே இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்று தந்தார்.

    டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

    திருத்தணியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து 1908 ஆண்டு மெட்ராஸ் பிரஸிடென்சி கல்லூரியில் எம். ஏ. தத்துவவியல் பட்டம் பெற்று பின் பல்வேறு கல்லூரியில் பேராசிரியராய் பணியாற்றி, தன்னுடைய விடாமுயற்சியால் துணைவேந்தராய் பணியாற்றும் வாய்ப்பினைக் பெற்றார் இராதாகிருஷ்ணன் அவர்கள். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஊக்குவிப்பால் வெளிநாட்டுத் தூதுவராகவும் பணியாற்றினார். 1952 ம் ஆண்டு இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும், 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்து திறம்பட பணியாற்றினார். மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் அவருக்கு மிகவும் ஈடுபாடு உண்டு. தன் வீட்டிற்கு வருகின்ற மாணவர்களுக்கு தேநீர் வழங்கி, பாடம் கற்பித்தபின் அவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பி வைப்பார். அவரிடம் பயின்ற மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு தம் நாட்டின் சிறந்த குடிமகனாக விளங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

    இந்த இதழை மேலும்

    எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்

    என்னை மன்னித்து விடுங்கள். உங்களை பற்றி உங்களுக்குத் தெரியாத சிலவற்றை நான் பட்டியல் போட்டுவைத்திருக்கிறேன். அவை உங்களைச் சற்று முகம் சுளிக்கவைக்கலாம்.

    “வேளைக்கு சோறு இல்லை, நாளைய சோற்றுக்கு வேலை இல்லை” என்ற புலம்பும் சாதாரண இந்திய பிரஜையின் மனநிலையில் இருந்துதான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்குத் தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

    டீ யா இது! இதெல்லாம் மனுஷன் குடிப்பான, நீயெல்லாம் எப்போ மாறப் போறானே தெரியல! என்று காலையில் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம் இரவில் அரசியல்வாதிகள் பங்கேற்கும் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்துவிட்டு “இந்த நாடு எப்போ மாறப்போகுதோ!” என்ற ஏக்கத்தோடு முடிகிறது ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நாளும்.

    மாற்றம் அன்றாட வாழ்வில் இந்தச் சொல்லை பல இடங்களிலும் பலதரப்பட்ட மக்களிடமும் நான் கேட்டிருக்கிறேன். ஒரு நாள் காற்றோடு கதை பேசவும், மண்ணையும் மனிதர்களையும் திரும்பிப் பார்க்கவும் என் கணினி உலகத்தை விட்டு வெளியே வந்தேன். மக்கள் கூடும் இடங்களில் ஒரு காட்சி, ஒரு குழு எம்மக்களிடம் “உங்கள் நாடு முன்னேற யாரிடம் மாற்றம் வேண்டும்?” என்ற கேள்வியைப் பலதரப்பட்ட மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் கவனித்தேன்.

    அவர்கள் பதில்களின் வந்திருந்த வார்த்தைகள் அரசியல்வாதிகளிடத்தில், அதிகாரிகளிடத்தில்,பொது நலவாதிகளிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், பண்பாடு மறந்த மாணவர்களிடத்தில், எழ மறுக்கும் இளைஞர்களிடத்தில் என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது.

    குழப்பமான மனதுடனும், சோர்ந்த உடலுடனும் வீட்டை அடைந்தேன்.” உதவாக்கரை, ஒரு வேலைய உருப்படியா செய்றதில்ல, உன்ன யாரு மாத்தப்போரான்னு தெரில..” என்ற தம்பியை நொந்துகொண்டிருந்தார் அப்பா.

    கொஞ்சம் சிரித்துக் கொண்டு, அதை மறைத்துக் கொண்டு என் அறையை அடைந்தேன். அறைக்கதவினைத் தாளிட்டு மனக்கதவினைத் திறந்தேன். எப்போதோ ஓய்வு பெற்ற என் நாட்குறிப்பைத் தேடி எடுத்தேன். இப்போதுதான் என் நாட்குறிப்பில் உள்ள வெள்ளை பக்கங்களுக்கு மறுமணம் நடந்தது, என் எழுத்தாணியின் மைத்துளிகளால்.அந்தப் பக்கங்களில் நான் எழுதியது இது தான்…

    “இந்த இந்தியாவில் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள் ஆனால், யாரும் மாற தயாராக இல்லை”. காந்தியும் பகத்சிங்க்கும் மீண்டும் பிறப்பார்களா என்று ஏங்குகிறார்கள் தம்முள் இருக்கும் காந்தியையும் பகத்சிங்கையும் மறந்து போய்.

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்

    வெற்றிபயணம்

    “வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் வாய்ப்பு” என்று சிலர் நம்புகிறார்கள்.

    “வெற்றி என்பது ஏதேனும் ஒருநாள் திடீரென வாழ்க்கையில் ஏற்படும் உயர்வு” என்பதுகூட சிலரின் எண்ணமாக இருக்கிறது. “வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்வதே வெற்றியின் மந்திரம்” என்றும் சிலர் நினைக்கிறார்கள்.

    யார் எப்படி வெற்றியைப் பற்றி விமர்சித்தாலும் ஒரு உண்மையை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.

    சரியான நேரத்தில், சரியான விதத்தில், சரியான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே வெற்றியின் சிகரங்களைத் தொட்டு நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்கள்.

    தனது உணவான மீனுக்காக நீரோடைக்கு அருகே காத்திருக்கும் கொக்கு கூட எல்லா மீன்களையும் உடனே பிடித்து உண்பதில்லை. சின்னச்சின்ன மீன்களெல்லாம் நெருங்கி வரும்போது அவற்றை கண்டும் காணாதது போல விட்டுவிட்டு, பெரிய மீன்கள் வரும் வரை காத்திருந்துதான் பெரிய மீன்களை கொக்கு உணவாக்கிக் கொள்ளும்.

    இதனை திருவள்ளுவர்

    கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்

     குத்துஓக்க சீர்த்த இடத்து

     – என்று குறிப்பிடுவார்.

    இதனையே ஔவையார்

    ஓடுமீனோட உறுமீன் வருமளவும்

     வாடி யிருக்குமாங் கொக்கு என்று குறிப்பிடுவார்.

    சரியான நேரத்திற்கு காத்திருக்கும் கொக்கைப்போல வெற்றியாளர்கள் தங்களுக்கு ஏற்ற சரியான நேரத்திற்காக காத்திருப்பார்கள். அந்த சரியான நேரத்தில் அவர்கள் செய்கின்ற பணிகள் அவர்களுக்கு சிறந்த வெற்றியை பெற்றுத் தந்துவிடுகிறது.

    நேரத்தை சரியான முறையில் திட்டமிடாதவர்கள் காலம் முழுவதும் கண்ணீர் விட்டு கதறுவதை நாம் இன்றும் காணலாம்.

    உலக அளவில் சாதனைகள் புரிந்த பலரும் நேரத்தைத் திட்டமிட்டு செலவிட்டுதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

    அது ஒரு பத்திரிக்கை அலுவலகம்.

    பெஞ்சமின் பிராங்கிளின் எழுதிய புத்தகங்கள் பல பத்திரிக்கை அலுவலகத்தின் ஒரு அறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    புத்தகம் வாங்க வந்த ஒருவர் பிராங்கிளின் எழுதிய பல புத்தகங்களை புரட்டிப் பார்த்தார். முடிவில் ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

    புத்தக விற்பனையாளரிடம் “இந்தப் புத்தகத்தின் விலை என்ன?” என்று கேட்டார்.

    “இந்தப் புத்தகத்தின் விலை ஒரு டாலர்” என புத்தக விற்பனையாளர் பதில் தந்தார்.

    “விலை சற்று அதிகமாக இருக்கிறதே. விலையைக் கொஞ்சம் குறைக்கக்கூடாதா?” என்று புத்தகம் வாங்க வந்தவர் கேட்டார்.

    இந்த இதழை மேலும்

    உச்சத்திற்கு இட்டுச் செல்லும் உத்திகள்

    “ Everyone has been made for some particular work and the desire

    for that work has been put in their hearts”,

    -RUMI

    அழிவதூஉம்  ஆவதூஉம்  ஆகி வழிபயக்கும்

    ஊதியமும் சூழ்ந்து செயல்.

    ஒரு செயலை செய்வதற்கு  முன்பாக அதனால் முதல் வரும் இழப்பையும், பின்னான வரக்கூடிய வருவாயையும்  இதனால் கிடைக்கும் நிகர இலாபத்தையும்  ஆராய்ந்த பின்னரே அந்தச் செயலைத் தொடங்க வேண்டும்,

    தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு

    அரும்பொருள் யாதொன்றும் இல்.

    தொழில் தெரிந்த நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து ஆராய்ந்த பின் அந்தத் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு அந்தத் தொழிலைத் தவிர  சிறந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை.

    செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

    செய்யாமை யானும் கெடும்.

    – குறள்

    செய்ய வேண்டாதவைகளை செய்தாலும் பொருள் கெடும்,  செய்ய வேண்டியவைகளை செய்யாவிட்டாலும் பொருள் கெடும்.

    கடந்த இதழில்  வாழ்க்கை முறை மாற்றத்தை ( Career Change) வளப்படுத்தும் மனநிலை மாற்றத்திற்கான (Emotional Changes)  மூன்று சூத்திரங்களை பார்த்தோம்.

    தற்போது  வாழ்க்கைமுறை மாற்றத்தை மேம்படுத்த உதவக்கூடிய  மூன்று செய்முறை உத்திகளை(Practical Tools) தெரிவோம்.

    1)     நிதி நிலையை அளவிடுதல்

    மக்கள் வாழ்க்கை முறை மாற்றத்திற்கு அஞ்சுகிறார்கள். காரணம் தற்போது வரும் வருமானத்தை விட  மாற்றத்தினால் வரும் வருமானம் குறைந்துவிடுமோ?  என்ற அச்சம் அவர்களுக்கு இயற்கையிலேயே  வருகிறது, மாற்றத்தினால் வருமானம் குறைந்து விடும் என்ற பயம்  அவசியமும் அல்ல, உண்மையும் அல்ல.

     இந்த பயத்தை முதலிலே விட வேண்டும். முதலில் உங்கள் நிதிநிலை எப்படி உள்ளது என்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள், மாத செலவினம் என்ன என்பதையும் கணக்கிடுங்கள், உங்களுடைய  சேமிப்பு  எவ்வளவு ?  முதலீடு  எவ்வளவு ?  என்பதை முடிவு செய்யுங்கள், தேவையில்லாத செலவுகளை குறையுங்கள்,  கையிருப்பு என்ன என்பதையும் கவனியுங்கள், தேவைப்பட்டால் நிதியுதவியும் பெற தயாராகுங்கள்,  பெறும் நிதி உதவியை  திருப்பிச் செலுத்தும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

    என்ன இருப்பு வைத்திருக்கிறீர்கள், எவ்வளவு தேவைப்படுகிறது. அது எங்கிருந்து பெற வேண்டும் என்பதையும் முடிவு செய்யுங்கள், இவைகளைளெல்லாம் ஆராய்ந்தால் நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பது புலப்படும், “நீங்கள் கரையில் நின்றிருந்தாலும், உங்கள் தூண்டில் நீருக்குள் இருக்கட்டும்”.

    இந்த இதழை மேலும்

    உங்களை அடக்கி ஆளுங்கள் !

    ஒருவன் தன்னுடைய பகைவனுடன் கடுமையாகப் போராடி அவனை வீழ்த்தி இறுதியில் வெற்றி பெறுகிறான். அவன் மிகக் சிறந்த வீரனாக மதிக்கப்படுகிறான். ஆனால் ஆசைகளுடன் போராடி அவைகளை வெல்ல முடியாமல் தோற்றுப் போய் விடுகிறான். “எவன் ஒருவன் ஆசைகளை வென்று வெற்றி வாகை சூடுகிறானோ அவனையே நான் மிகச் சிறந்த வீரனாகக் கருதுகிறேன்.”  என்று அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார். மனிதர்களையும், விலங்குகளையும், தோற்கடிப்பது உண்மையான வீரமல்ல, ஒருகூன் தன்னைத்தானே தோற்கடிக்க வேண்டும். இதுவே மிகச் சிறந்த வீரம் என்று போற்றப்படும்.

    ஒருவன் மற்றவர்களை வெல்வதை விடத்தன்னை வெல்வதே மிகச்சிறந்த வெற்றியாகும்.

    நீங்கள் உங்களை அடக்கி ஆள வேண்டும். மனம் போன போக்கெல்லாம் சென்றால் உங்களை அடக்கி ஆள முடியாது. உலகம் முழுவதையும் ஒருவன் அடக்கி ஆளக்கூடியவன் மிகச்சிறந்த வீரனாக மதிக்கிப்படுகின்றான். ஆனால் தன்னை அடக்கி ஆளத் தெரியாவிட்டால், அவன் வீரன் என்று போற்றப்பட மாட்டான். ஷேக்ஸ்பியரும் “நீ உன்னை உன்னுடைய கைப்பிடியில் வைத்திரு!” என்று அறிவுரை கூறியுள்ளார்.

    பிளேட்டோவும் “ஒருவன் மற்றவர்களை வெற்றி கொள்வதை விடத் தன்னையே தான் வெற்றி கொள்ள வேண்டும். அதுவே மிகச் சிறந்த வெற்றியாகும்”. “ஒருவன் தன்னிடமே தான் தோற்றுப் போவது மிகவும் மோசமான தோல்வியாகும். என்று எடுத்துரைத்தார். நீங்கள் உங்கள் எதிரிகளிடம் தோற்றுப் போகலாம். இதில் பிழையில்லை. ஆனால் உங்களிடம் நீங்கள் தோற்றுப் போனால் அதை விட இழிவு வேறொன்றுமில்லை.

    நீங்கள் உங்களை எப்படி வெற்றி கொள்ள முடியும்? உங்களுடைய உள்ளத்தில் தோன்றுகிற மோசமான ஆசைகளை அடக்கி ஆள வேண்டும். உங்கள் உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களை – கொடிய எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். உணர்ச்சி வசப்படுவதால் தோன்றும் கோபத்தை நீங்கள் அடக்கி ஆள வேண்டும். எவர் வந்து உங்களைக் கெடுக்க நினைத்தாலும் நீங்கள்கெட்டுப் போய்விடாமல் நன்னெறிக்குச் செல்ல வேண்டும். தேவையில்லாத நீய எண்ணங்களையும் பேராசைகளையும் அடியோடு, உங்கள் உள்ளத்திலிருந்து வெட்டியெறிந்து விட வேண்டும். மோசமாக எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்க வேண்டுமேயல்லாமல், மற்றவர்கள் தன்னுடைய ஆசைகளுக்குத் துணையாக இருப்பார்கள் என்று எண்ணக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணங்கள் எழுமானால் அவைகளை அடக்கி ஆள வேண்டும். சோதனைகள் வந்தால் அவைகளைக் கண்டு எதிர்த்து நிற்க வேண்டுமேயல்லாமல் அஞ்சி ஓடக்கூடாது.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி

    ஒரு தூய்மையான சமுதாயம் எப்படியிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் சமுதாயத்தின் வளர்ச்சி எவ்வாறு மாறும் என்பதையும் சொல்லுங்கள்?

    வேதநாயகம்

    இயற்கை நல ஆர்வலர்

    மதுரை

    ‘தூய்மை இந்தியா’ என்ற அரசுத் திட்டம் அக்கரையோடு செயல்படுத்தப்படுகிறது. நாட்டை தூய்மைப்படுத்த ஒரு அரசுத்திட்டமே தேவைப்படுகிறது என்கிற போது, இங்கே தூய்மையின்மை ஒரு பிரச்சனை என்பதும் புலனாகிறது. அதை நாமும் ஒத்துக்கொள்வோம். அதாவது நாடும், வீடும், நீரும், காற்றும் மனிதர்களும் தூய்மையாக இல்லை என்று ஒப்புக்கொள்வோம்.

    ஒரு தூய்மையற்ற சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நமது சமுதாயம் இன்று இருக்கிறது. இதைவிட தூய்மையற்ற சமுதாயங்கள் ஒரு வேளை சில ஆப்பிரிக்க நாடுகள் இருக்கக்கூடும். ஆனால் நான் அவற்றைப் பார்த்ததில்லை.

    நாம் இன்று காணும் காட்சியைப் பார்ப்போம்.

     காட்சி. 1

    ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு, அவை சிறிய ஓடைகளாகி அப்படியே சாக்கடையாகிவிட்டன. 1911  ம் ஆண்டு இராணுவ வீரர்கள் கைகளால் தண்ணீர் அள்ளி குடித்த கூவம் நதி இன்று சாக்கடையாகி துர்நாற்றம் வீசுகிறது. கூவம் என்ற வார்த்தைக்குக் கூட சாக்கடை என்று பொருள் ஆகிவிட்டது. அனைத்து நதிகளும் சாக்கடை அளவுக்கு வந்துவிட்டன. இந்த நதிகள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை மலைகள் கடலுக்குச் சென்று இன்று கடல் கூட ஒரு மினி குப்பை மேடாக இருக்கிறது. என்னை போன்ற கடல் நீச்சல் விளையாட்டு வீரர்கள் கடலுக்கு 10 கி.மீ தூரத்திற்கு அப்பால் தான் நீந்தவே முடியும். சென்னைக்கருகில் கடல்நீர் சாக்கடை அம்சமாக இருக்கிறது. அவ்வளவு துர்நாற்றம் கடலில்.!

    காட்சி. 2

    திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் தொடர்வதால் ஊர்களும், நகர்களும் தொடர்ந்து அசுத்தமாகவே உள்ளன. இதில் மிகப்பெரிய சுகாதாரக் கேடுகளும் உள்ளது. அமீபா, கொக்கிப்புழு, வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் பரவுவதும் கூட இதன் மூலம் தான். முன்காலங்களில் காலரா என்ற கொடிய நோயால் மனிதர்கள் இறந்தார்கள். குடிக்கும் நீரில் இருக்கும் பாக்டீரியாவால் தான் இந்த நோய் வருகிறது, இந்தப் பாக்டீரியா மனித மலத்தின் மூலமாகத்தான் பரவியிருக்கிறது. அதைக்கூட வெள்ளைக்காரன் சொல்லித்தான் நமக்கே தெரியும்! தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள், அதில் கிருமி செத்துவிடும் என்று சொன்னான் வெள்ளைக்கார டாக்டர். ஆனால் அதைக்கூட ஒத்துக்கொள்ள முடியாமல் சாமிக்கு கோபம் வந்துவிட்டதுதான் காரணம் என்று நம்பி அதற்கான பரிகாரம் செய்து கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள்! இன்று எல்லாம் புரிந்துவிட்டது. கழிப்பிடத்தில் மலம் கழித்து அந்தக் கழிவை நிலத்தடியில் எடுத்துச் சென்று சுத்தரிக்கப்படுகிறது. ஆனால் இன்றுவரை இந்தியாவில் 20 சதவீதம் மக்களுக்கு மட்டும் இந்த வசதி. 80 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் கடற்கரைகள், நதிக்கரைகள், சாலையோரங்கள் என்று எல்லா இடமும் மனிதக்கழிவு ஆகிவிட்டது. மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலமும் நம் நாட்டில்தான் நடந்திருக்கிறது. இன்னும் நடப்பதாக பலர் கவலை தெரிவிக்கின்றனர்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீடு புதுப்பிப்பதற்காக மரத்தினால் ஆன சுவற்றை பெயர்த்து எடுத்துக் கொண்டிருந்தார். ஜப்பானில் பெரும்பாலான வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு சுவற்றிக்கும் நன்கு இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

    வீட்டு சுவற்றைப் பெயர்தெடுக்கும் பொழுது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கியிருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கியிருக்கிறது என்று பல்லியை சுற்றிப் பார்த்தார் அவர் அப்போது தான் கவனித்தார்.

    வெளிபகுதியிலிருந்து அடித்த ஆணி உள்புறத்தில் இருந்த பல்லியின் காலில் இறங்கியிருக்கிறது.

    அவருக்கு ஆச்சரியமாக இருந்தது இந்த ஆணியை அடித்து எப்படியும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும். இப்படி இத்தனை ஆண்டுகள் இந்தப்பல்லி உயிருடன் இருந்தது இதை நாம் கண்டுபிடித்து ஆக வேண்டும், என்று மேற்கொண்ட எந்த வேலையும் செய்யாமல் அந்தப் பல்லியை மட்டுமே கண்காணித்துக் கொண்டிருந்தார்.

    சிறிது நேரத்தில் இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார். வந்த பல்லி தன் வயிலிருந்த உணவை எடுத்து, சுவற்றில் சிக்கிக் கொண்ட பல்லிக்கு ஊட்டுவதைப் பார்த்தார். பார்த்த கணம் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டார்.

    எதிர்பார்ப்பும் இல்லாமல் ள10 ஆண்டுகளாக இந்தப்பல்லி ஆணியில் சிக்கிக்கொண்ட தன்னுடைய சகப் பல்லிக்கு உணவை அளித்து வந்துள்ளது.

    ஒரு பல்லியால் முடிகிறது என்றால் மனிதர்களாகிய நம்மால் எதுவும் சாத்தியமே. முடியும் என்று முடிவெடுத்து விட்டால் இங்கு வாழ பல வழிகள் இருக்கிறது.

    எல்லாம் இழந்து விட்டேன் இனியும் என்ன செய்வேன் என்று வாழ்ந்தால் குட்டை நீர் கூட பெரிய குளமாகத் தான் தெரியும். இழந்தது எல்லாம் நீங்கள் சேகரித்த, சேமித்த பொருள் மட்டுமே தவிர உழைப்பும் தன்னம்பிக்கையும் இன்னும் உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது.

    உழையுங்கள் உயருங்கள்…

    புதியதோர் பாதையை உருவாக்கு புகழும் வெற்றியும் உனதாக்கு

    முனைவர் வே. புகழேந்தி

    வேளாண் பொருளாதார நிபுணர்

    மேலாண்மை இயக்குநர், அக்ஷயா மருத்துவமனை,வடவள்ளி

    அறங்காவலர், நொய்யல் பப்ளிக் ஸ்கூல், கிணத்துக்கடவு

    கோவை

    வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்களையும் தேவையான உத்வேகத்தையும் தரக்கூடியது என்னவென்றால் முயற்சி என்னும் ஒன்றைச் சொல் தான். இந்த குணத்தைச் சிறப்பாகப் பெற்று இன்று பொருளாதார உலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து ஒரு சாதனையாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்.

    தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்குத் தேவையானது என்பார் விவேகானந்தர். அவர் கூற்றை தன் வாழ்நாளில் மெய்பித்து வருபவர்.

    வாழ்க்கையில் எல்லாம் இன்பமாகவே அமையாது, அதே போல் துன்பமாகவும் அமையாது இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. அவ்வாறு தன் வாழ்நாளில் பல இன்ப துன்பங்கள் எதிர் கொண்டு சாதித்து வரும் பொருளாதார வல்லுநர்.

    திறமையைக் காட்ட வேண்டிய இடத்தில் தன் தகுதியைப் பயன்படுத்த வேண்டும் என்பது போல் தன்னுடைய திறமையால் இன்று தரணியெங்கும் தன் பெயரை நிலை நிறுத்தி வரும் வேளாண் பொருளாதார நிபுணர், உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவன ஆலோசகராகவும், அக்ஷயா மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநராகவும், நொய்யல் பப்ளிக் ஸ்கூலின் அறங்காவலர் என பல பொறுப்புக்களை தன் வசம் கொண்டு பன்முகத் திறமையாளராகவும் நல்ல பண்பாளராகவும் இருந்து வரும் முனைவர் வே. புகழேந்தி அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

    கே. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    அப்போது திருச்சி மாவட்டம் தற்போது பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர் என்னும் கிராமம். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அழகாகவும் தென்படும். விவசாயப் பின்னணியில் உடைய குடும்பம். எங்கள் குடும்பத்தைப் பற்றி அனைவரும் அறிந்து வைத்திருப்பர், காரணம் என் தந்தை புலவர் ப. வேணுகோபாலணார்  தமிழாசிரியர். அனைவரிடமும் அன்பாகப் பழகும் அரிதான குணம்  கொண்டவர். அதுமட்டுமின்றி விவசாயத்தில் அதிக பற்று கொண்டவர். ஆசிரியர் பணியும் பார்த்துக் கொண்டு விவசாயத்தையும் நேசித்து வந்தார்.  . அம்மா. திருமதி. சீத்தாலட்சுமி இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர் தங்கை திருமதி மணிமேகலை, தம்பிகள் திரு இளங்கோ, மற்றும் திருமாவளவன். அனைவரின் பெயரும் நல்ல தமிழ்ப்பெயரில் அமைந்திருக்கும்.

    நான் படித்தது என்று பார்த்தால் எங்கள் ஊரிலுள்ள அரசுப்பள்ளியல் தான். நன்றாகப் படிக்கும் மாணவன் என்று என்னைப் பற்றி ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய தந்தை ஆசிரியர் என்றாலும் வீட்டில் எவ்வித கண்டிப்பும் இருக்காது. இதனால் நன்றாகப் படிக்கும் குணம் இயற்கையிலேயே வந்து விட்டது. இதற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். பள்ளிப்படிப்பை அதிக மதிப் பெண்ணில் தேர்வானேன். அதன் பிறகு பி.எஸ்.சி வேளாண்படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றேன். பிறகு எம். எஸ்.சி மற்றும் முனைவர் பட்டப் படிப்பை கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் பயின்றேன். இது தான் என்னுடைய கல்வி பின்புலம்.

    கே. உங்களின் ஆசிரியர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்?

    முனைவர் பட்டப் படிப்பை முடித்தவுடன் வேளாண் பல்கலைக்கழத்திலேயே 6 ஆண்டுகள் வேளாண் பொருளாதாரவியல் துறையில் உதவிப்  பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். இது தான் என்னுடைய முதல் ஆசிரியர் பணி. இன்னும் என் மனதில் நீங்காத ஒரு ரீங்காரமாய் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.  ஒவ்வொரு இடத்திலும் பணியாற்றும் பொழுதும் என்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து என்னால் முடிந்த அளவுக்கு மாணவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறேன் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் மற்றவர்களுக்கு எளிதாக கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது என்ன வென்றால், ஆசிரியர் பணியிலிருந்து வங்கிப்பணிக்குச் சென்று 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியராகப் பணி செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 4 ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியில் இருந்து வந்தேன்.

    கே. ஆசிரியர் பணியிலிருந்து வங்கித்துறைக்குள் வந்தது குறித்துச் சொல்லுங்கள்?

    ஆசிரியர் பணியிலிருந்து வங்கித்துறைக்குள் பணி இடமாற்றம் பெற்று நபார்டு (சஅஆஅதஈ) வங்கியில் 30 ஆண்டுகள் இந்தியாவில் பல மாநிலங்களில் பணிபுரிந்தேன். இப்பணியில் சேர்ந்தவுடன் கிராமப்புறத்தில் உள்ள சுயத்தொழில் செய்பவர்களுக்கு பயன் பெறக்கூடிய வகையில் நல்ல வளர்ச்சியைக் கொடுக்க  வேண்டும் என்பது மட்டும் முதன்மை நோக்கமாக இருந்தது.

    ஆரம்பத்தில் கிராமப்புற பகுதியில் சுயத் தொழில் புரிபவர்களுக்கு கடன் உதவி அவ்வளவாக கிடைக்க பெறாது என்ற கருத்து நிலவி வந்தது. இதை மாற்ற வேண்டும் என்று உறுதியெடுத்து சுயத் தொழில் புரிய நினைக்கும் அனைவருக்கும் குறுகிய கடன் உதவி வாங்கிகொடுத்து வழிவகைச் செய்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது ஒன்று.

    முதலில் பெங்களூரில் சுய உதவிக்குழு என்ற அமைப்புக்கு அடித்தளம் போட்டது நான் தான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய ஆய்வு முழுவதும் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சார்ந்ததாகவே இருந்தது.

    கே. இந்த அமைப்பின் மூலம் சுய உதவிக்குழு பெரும் நன்மைகள் என்ன?

    நான் எதைச் செய்தாலும் ஏழை எளிய மக்களுக்கு நன்மைத் தரும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு நன்மை ஏற்பட்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் தானாக உயர்ந்து விடும்  என்பது மட்டும் நான் சிந்தித்தது.

    நான் அமைப்பைத் தொடங்கும் பொழுது நான் நினைத்தது என்னவென்றால் மக்களுக்கு அவர்களின் மீதே ஒரு தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த வாக்கின் படி ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறிய நிதி உதவி கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மறுமலர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பது தான்.

    சுய உதவிக்குழு மூலம் பல பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள். உதவிக்குழுவில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வேலை செய்து வருகிறார்கள்.

    பெண்களின் வளர்ச்சி தான் குடும்பத்தின் வளர்ச்சி. குடும்பத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி. இப்படி நிறைய நன்மைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து தான் இத்திட்டத்தை பெரிய அளவிற்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

    கே. 2020 நாடு வளர்ச்சி அடைந்து விடும் என்று அப்துல்கலாம் அவர்கள் சொல்லியிருந்தார் தற்போது சில பொருளாதார மாற்றம்  நடைபெற்று வருகிறது. அது பற்றி உங்களின் கருத்து?

    வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அனைத்து துறைகளிலும் நாடு தற்போது வளர்ந்து  கொண்டு தான் இருக்கிறது. மற்ற உலக நாடுகளே போற்றும் வகையில் பல அதிரடித் திட்டங்கள், கண்டுபிடிப்புகள் என வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் செயல் படுத்திக் கொண்டு தான் வருகிறோம்.

    சரியாக 2020 யில் நாடு வளர்ச்சி பெறும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள வில்லை. அதற்கான மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் கூட ஆகலாம். அதன் பிறகு நாமும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    கே.  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பல நாடுகள் சென்று பணியாற்றி இருக்கிறீர்கள் இந்த வளர்ச்சியைப் பற்றி நீங்கள் நினைப்பது?

    நிச்சயம், இது ஒரு பெரிய அங்கீகாரமாக தான் நினைக்கிறேன். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன் நான் என்ற வகையில் என்னுடைய வாழ்க்கை சிறப்பானது. நான் எந்த வேலையைச் செய்தாலும் நன்கு யோசித்து திட்டமிட்டு தான் செய்வேன். அது மட்டுமின்றி புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு அதிகம். எங்கு எது தேவை என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் என்னை மாற்றிக் கொள்வேன்.

    உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று கல்வி ஆலோசகராகப் பணியாற்றி இருக்கிறேன். நான் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டின் பழக்க வழக்கத்திற்கு என்னை இணைத்து கொள்வேன். அதுமட்டுமின்றி என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம், தன்னம்பிக்கையை நான் ஒரு போதும் இழந்ததில்லை.

    என்னை எங்கும் நான் அடையாளப்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டது கிடையாது. நாம் எங்கு பிறக்கிறோம், எங்கு வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல என்ன சாதிக்க இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இதை முறையாக கடைபிடித்து வந்தாலே சாதிப்பு நமக்கு சாதகமாகி விடும்.

    இந்த இதழை மேலும்