Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி

ஒரு தூய்மையான சமுதாயம் எப்படியிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் சமுதாயத்தின் வளர்ச்சி எவ்வாறு மாறும் என்பதையும் சொல்லுங்கள்?

வேதநாயகம்

இயற்கை நல ஆர்வலர்

மதுரை

‘தூய்மை இந்தியா’ என்ற அரசுத் திட்டம் அக்கரையோடு செயல்படுத்தப்படுகிறது. நாட்டை தூய்மைப்படுத்த ஒரு அரசுத்திட்டமே தேவைப்படுகிறது என்கிற போது, இங்கே தூய்மையின்மை ஒரு பிரச்சனை என்பதும் புலனாகிறது. அதை நாமும் ஒத்துக்கொள்வோம். அதாவது நாடும், வீடும், நீரும், காற்றும் மனிதர்களும் தூய்மையாக இல்லை என்று ஒப்புக்கொள்வோம்.

ஒரு தூய்மையற்ற சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நமது சமுதாயம் இன்று இருக்கிறது. இதைவிட தூய்மையற்ற சமுதாயங்கள் ஒரு வேளை சில ஆப்பிரிக்க நாடுகள் இருக்கக்கூடும். ஆனால் நான் அவற்றைப் பார்த்ததில்லை.

நாம் இன்று காணும் காட்சியைப் பார்ப்போம்.

 காட்சி. 1

ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு, அவை சிறிய ஓடைகளாகி அப்படியே சாக்கடையாகிவிட்டன. 1911  ம் ஆண்டு இராணுவ வீரர்கள் கைகளால் தண்ணீர் அள்ளி குடித்த கூவம் நதி இன்று சாக்கடையாகி துர்நாற்றம் வீசுகிறது. கூவம் என்ற வார்த்தைக்குக் கூட சாக்கடை என்று பொருள் ஆகிவிட்டது. அனைத்து நதிகளும் சாக்கடை அளவுக்கு வந்துவிட்டன. இந்த நதிகள் எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை மலைகள் கடலுக்குச் சென்று இன்று கடல் கூட ஒரு மினி குப்பை மேடாக இருக்கிறது. என்னை போன்ற கடல் நீச்சல் விளையாட்டு வீரர்கள் கடலுக்கு 10 கி.மீ தூரத்திற்கு அப்பால் தான் நீந்தவே முடியும். சென்னைக்கருகில் கடல்நீர் சாக்கடை அம்சமாக இருக்கிறது. அவ்வளவு துர்நாற்றம் கடலில்.!

காட்சி. 2

திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் தொடர்வதால் ஊர்களும், நகர்களும் தொடர்ந்து அசுத்தமாகவே உள்ளன. இதில் மிகப்பெரிய சுகாதாரக் கேடுகளும் உள்ளது. அமீபா, கொக்கிப்புழு, வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் பரவுவதும் கூட இதன் மூலம் தான். முன்காலங்களில் காலரா என்ற கொடிய நோயால் மனிதர்கள் இறந்தார்கள். குடிக்கும் நீரில் இருக்கும் பாக்டீரியாவால் தான் இந்த நோய் வருகிறது, இந்தப் பாக்டீரியா மனித மலத்தின் மூலமாகத்தான் பரவியிருக்கிறது. அதைக்கூட வெள்ளைக்காரன் சொல்லித்தான் நமக்கே தெரியும்! தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள், அதில் கிருமி செத்துவிடும் என்று சொன்னான் வெள்ளைக்கார டாக்டர். ஆனால் அதைக்கூட ஒத்துக்கொள்ள முடியாமல் சாமிக்கு கோபம் வந்துவிட்டதுதான் காரணம் என்று நம்பி அதற்கான பரிகாரம் செய்து கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள்! இன்று எல்லாம் புரிந்துவிட்டது. கழிப்பிடத்தில் மலம் கழித்து அந்தக் கழிவை நிலத்தடியில் எடுத்துச் சென்று சுத்தரிக்கப்படுகிறது. ஆனால் இன்றுவரை இந்தியாவில் 20 சதவீதம் மக்களுக்கு மட்டும் இந்த வசதி. 80 சதவீத மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் கடற்கரைகள், நதிக்கரைகள், சாலையோரங்கள் என்று எல்லா இடமும் மனிதக்கழிவு ஆகிவிட்டது. மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலமும் நம் நாட்டில்தான் நடந்திருக்கிறது. இன்னும் நடப்பதாக பலர் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2017

கல்லீரல் காப்போம்
துவிஜனாக ஆகுங்கள்
சமையல் அறையும் குப்பைக்கூடையும் ஸ்மார்ட் கிச்சன் தொடர்ச்சி
கல்வியைச் சர்க்கரையாய் தருவது…
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 8)
ஆசிரியர்ப்பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி.
உலகம் ஒரு சபை
செப்டம்பர் மாத உலக தினங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் – 8
நேற்று போல் இன்று இல்லை!
ஞாபகச்சுவடுகள்
அறிவு என்னும் வற்றா ஊற்றின் அதிபதிகள் ஆசிரியர்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வெற்றி உங்கள் கையில்
உச்சத்திற்கு இட்டுச் செல்லும் உத்திகள்
உங்களை அடக்கி ஆளுங்கள் !
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
புதியதோர் பாதையை உருவாக்கு புகழும் வெற்றியும் உனதாக்கு