Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

ஒரு கிராமத்தில் மகா கருமி(கஞ்சன்) வசித்து வந்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் பணம் சேர்ப்பதிலேயே தீவிரமாக இருந்தான். இதற்காக அவன் நன்றாக சாப்பிடாமல், நல்ல ஆடைகள் அணியாமல், எந்த ஒரு இன்பத்தையும் அனுபவிக்காமல் மிகவும் கஞ்சத்தனமாக இருந்தான்.

இப்படியாக அவன் தனது வாழ்நாளில் 10 கோடி ரூபாய் சேர்த்து விட்டான். இனி இந்தப் பணத்தைக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் சுகமாகவும் வாழலாம் என்று நினைத்திருந்தான்.

அப்பொழுது அவனது உயிரைப் பறிக்க எமன் வந்ததைக் கண்டான். கண்டவுடன் அந்தக்கருமி திகைத்து அலறினான். ஐயா இத்தனை நாளும் என் வாழ்க்கையை சற்றும் அனுபவிக்கவில்லை. இன்று முதல் தான் நான் இன்பமான வாழ்க்கையை அனுபவித்து வாழலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள்  என்னை அழைத்துப் போக வந்து விட்டீர்களே. எனக்கு சில மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சினான் கருமி.

ஆனால் எமன் அவன் கெஞ்சுவதை சற்றும் பொருட்படுத்தமால் மறுத்தவிட்டார். ஐயா, மாதக் கணக்கில் கொடுக்கவில்லை என்றாலும், ஒரு வாரமாவது அவகாசம் கொடுங்கள், அதற்குப் பதிலாக நான் சம்பாதித்தப் பணத்தில் பாதியை உங்களுக்குக் கொடுத்து விடுகிறேன் என்றான் அந்தக் கஞ்சன்.

அதற்கும் எமன் செவிசாய்க்கவில்லை. வேறுவழியின்றி ஐயா, இன்று ஒருநாளாவது வாழ அனுமதியுங்கள். அதற்குள் நான் முடிந்தளவு நினைத்த வாழ்க்கையை அனுபவித்துக் கொள்கிறேன். இதற்குப் பதிலாக என் வாழ்நாளில் முழுவதும் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் தருகிறேன் என்றான் அவன்.

எமன் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. இனி எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் எமனிடம் ஐயா எனக்கு ஒருசில நிமிடங்கள் மட்டும் உயிர்ப்பிச்சைக் கொடுங்கள். அதற்குள் சிலவற்றை நான் எழுத விரும்புகிறேன் என்றான்.

எமனும் சம்மதித்தார். அந்தக் கருமி அவசரமாக ஒரு தாளில் எழுதினான். அதில் இந்தக்கடிதத்தை யார் படிக்க நேர்ந்தாலும் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால். வாழ்க்கை என்பது நிரந்தரம் இல்லை.

அது எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது. எனவே உங்கள் வாழ்க்கையில் பணம் தேடுவதில் மட்டுமே செலவழிக்க வேண்டாம். வாழும் வரை வாழ்க்கையை அனுபவித்து வாழங்கள். என்னிடம் 10 கோடி ரூபாய் இருந்தாலும், ஒரு வினாடி நேரத்தைக் கூட வாங்க முடியவில்லை. இதனால் இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ முன் வர வேண்டும் என்று எழுதி முடித்தான்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2017

வாழ நினைத்தால் வாழலாம் – 6
இளமை மாறாத இளமையுடன்….
முதுமை – இறைவன் தந்த வரம்!
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி-6)
தோல்வியும்… வெற்றியும்…
உயர்ந்த குடிப்பிறப்பும் சிறந்த இல்லறமும் சமுதாய வளர்ச்சிக்கான இரண்டு வெற்றிப்படிகள்…
மனத்தடையை தகர்த்தால் மாற்றங்கள் மலரும்
ஜீனுக்கு தீனி…!
இரத்தசோகை
வீழ்வேனென்று நினைத்தாயோ?
சிகரமே சிம்மாசனம்
வெற்றி உங்கள் கையில் 43
எதார்த்தம்
நீள் ஆயுள் அவசியமா?
தன்னம்பிக்கை மேடை
மருத்துவத்தில் மகத்துவம் மகப்பேறில் தனித்துவம்
உள்ளத்தோடு உள்ளம்