Home » Articles » பல் பராமரிப்பு

 
பல் பராமரிப்பு


இராஜேந்திரன் க
Author:

பல் போனால் சொல் போகும் என்பார்கள். அப்படிப்பட்ட பற்களைக் குழந்தை பருவத்தில் இருந்தே  முறையாகப் பராமரிக்க வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன், ஆறு மாதங்கள் கழிந்த நிலையில், பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (Milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரை யிலிருந்து மூன்று வயதிற்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில் தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப்பால் கொடுக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலைக் குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்து விடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோகாகாஸ் (Streptococcus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினைபுரிந்து கேரிஸ் (Caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை நர்சிங் பாட்டில் கேரீஸ் (Nursing bottle caries) என்று அழைக்கிறோம்.

குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.

பால் பற்களின் முக்கியத்துவம்

  • நிரந்தரப் பற்கள் முறையாக முளைக்க பால் பற்கள் முன்னோடியாக திகழ்கின்றன.

ஆரோக்கியமான பால் பற்களைக் கொண்ட குழந்தைகள் முறையாக உணவு உட்கொள்ளவும், வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கவும் செய்கின்றனர்.

ஆரோக்கியமான பற்களை உடைய முகம் மற்றும் வாய் குழந்தைகளுக்கு உத்வேகம் கொடுக்கும்.

முறையான தடுப்பு முறைகளினால், பற்களின் பராமரிப்புக்கான மருத்துவ செலவுகள் குறையும்.

பற்கள் முளைப்பதனால் வரும் பிரச்சனைகள்

6000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறப்பின் போதே பற்கள் இருக்க வாய்ப்புண்டு. இவற்றை (Natal tooth) என்று அழைக்கின்றனர். இவை உறுதியாக இல்லையென்றாலோ அல்லது தாய்ப்பால் ஊட்டுவதற்கு தொந்தரவாக இருந்தாலோ அவற்றை நீக்கி விடலாம்.

தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் (மந்த புத்தி நோய்) ஆகியவற்றில் பற்கள் முளைக்கக் கூடுதல் தாமதமாகலாம்.

பிறவிக் குறைபாட்டின் காரணமாக ஒரு சில பற்கள் முழுமையாக முளைக்காமல் போகலாம். இந்த வகையில் குடும்பத்தில் பலருக்கும் இப்பிரச்சனை இருக்கக் கூடும்.

பற்சிதைவு ஏற்பட காரணம்

ஸ்ட்ரொப்டோகாகெஸ் மியுட்டன்ஸ் எனப்படும் கிருமிதொற்று நோய்

பற்சிதைவு ஏற்படுத்தும் உணவு பொருட்கள் – சர்க்கரையால் தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் குளிர் பானங்கள்

தாதுப் பொருட்களின் அளவு வேகமாகக் குறைவ தாலும், மற்றும் எனாமல் எனப்படும் பற்களின் மேற்பரப்பில் துளை விழுவதாலும் பற்சிதைவு ஏற்படலாம்.

பற்சிதைவைத் தடுக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகளைப் பால் புட்டியை சப்பிக் கொண்டபடி தூங்க வைத்தல் கூடாது.

குழந்தையின் ஒரு வயது முடிவதற்குள் டம்ளர் அல்லது உறிஞ்சான் (நண்ல்ல்ங்ழ்) மூலம் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.

பால் கொடுத்தவுடன் குழந்தையின் ஈறுகளைத் துடைத்து விட வேண்டும்.

முதற் பால் பல் முளைத்தவுடன் குழந்தைக்கு பல் துலக்க ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தைகளின் பற்களின் நலனை கண்காணிக்க வேண்டும்.

இளம் குழந்தைகளுக்கு

பற்கள் முளைக்கும் முன்பே தாய்ப்பால் கொடுத்த பின்பு ஈறுகளைத் துடைத்து விடவேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2017

இளமையும் இனிமையும்
கோடிகளை குவிக்கும் புரோ கபடி வீரர்கள்
பயிற்சி+முயற்சி=வெற்றி
வாழ நினைத்தால் வாழலாம் – 5
வளமான வாழ்வுக்கு யோகா! ஆரோக்கியம் தரும் ஆசனங்கள்!!
ஊக்கமும் – உற்சாகமும் வெற்றிக்கான ஆயுதங்கள்
இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி?
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
கடவுளே
கண்ணில் மின்னல்
முயன்றேன் வென்றேன்
ஆரோக்கியச் சிக்கனம்
நவீன ஜீனோமிக்ஸ் பகுதி – 5
கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்
வெற்றி உங்கள் கையில் – 42
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்