Home » Articles » ராசியான வாழ்க்கைக்கு எட்டு

 
ராசியான வாழ்க்கைக்கு எட்டு


துளசிமணி
Author:

‘வாழுங்கள் அல்லது வாழ்வதற்கு வழிவிடுங்கள்’ எத்தனை அர்த்தமுள்ள வரிகள்! இவ்வரிகளுக்கும் தற்போதைய வாழ்க்கை நடைமுறைக்கும் ஒரு சமரசம் உண்டு. அதாவது, நாம் வாழ வேண்டும் அல்லது பிறரையாவது வாழ வைக்க வேண்டும். ஆனால், இன்றைய மனித நாகரிகமானது முதலாவது கோட்பாட்டினை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இரண்டாம் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்வதில்லை. அதனை மாற்றும் பொருட்டு, தற்போது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், இயற்கை மருத்துவமானது எங்கும் எவரிடத்திலும் ஆட்கொண்டு அரங்கேறி வருகிறது என்பதற்கு காலமே சாட்சி.

அவ்வழித்தோன்றல் மூலம் உருவானது தான் எட்டுவடிவ நடைப்பயிற்சி அமெரிக்காவில் எட்டுவடிவ நடைப்பயிற்சியை Infinity Walk எனக் கூறுகிறார்கள். எட்டு என்ற எண் படுத்த வடிவில்Infinity என்பதைக் குறிக்கும். இதற்கு இப்பெயரை அளித்தவர் டாக். டெபோரா சன்பெக் என்னும் ஒரு பெண் மருத்துவர். நியூயார்க் நகரில் (NORTH EAST CENTRE FOR SPECIAL CARE) என்ற மருத்துவமனையில் உள்ள மூளைபாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் மூலம் மாற்றம் கண்ட டெபோரா அவர்கள் அதற்கென்று வழிமுறைகளையும் வகைப்படுத்தியுள்ளார்.

அவைகள்

 • சாக்பீஸ் எடுத்து முதலில் தரையில் கிழக்கு மேற்காக எட்டு வரையவும்.
 • தெற்கிலிருந்தோ வடக்கிலிருந்தோ தொடங்கி, கிழக்கு மேற்காக வரையப்பட்ட வடிவத்தின் மீது மெதுவாக நடக்கவேண்டும்.
 • தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்.
 • கண்களை மூடக்கூடாது.
 • 15 நிமிடத்திற்குப் பிறகு இடைவெளி விட வேண்டும்.
 • சரியான காலணி அணிய வேண்டும்.
 • கைகளில் எதையும் வைத்திருக்கக் கூடாது.
 • மூட்டுவலி உள்ளவர்கள் அரைமணிநேரமும், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முக்கால் மணி நேரமும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு மணி நேரமும் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

பயிற்சியின் நன்மைகள்

 • எட்டுவடிவில் நடப்பதால் மூளை, நரம்பு மண்டலம் ஆகியவை சக்தி பெறுகிறது.
 • பேச்சை இழந்து வாய் குழறுபவர்கள் கூட இப்பயிற்சியின் மூலம் குணம் அடையலாம்.
 • இந்த நடைப்பயிற்சியில் பிராணவாயு அதிக அளவில் உள்ளிழுக்கப்படுவதால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பயன் அடையலாம்.
 • சைனஸ், தலைவலித் தொல்லைகள் நீங்கும், கண்பார்வை தெளிவடையும், காது கேட்கும் திறன் அதிகரிக்கும்.
 • மார்பில் சளி நீங்கும், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, உயர் அழுத்தம் குறையும், கணையம் பயிற்சிடைந்து இன்சுலின் சுரப்பதால் சர்க்கரை நோய் குறையும். மேலும் உடலிலுள்ள ஊளைச் சதை குறையும்.
 • சிறுநீரகம் நன்றாக இயங்கும். மலச்சிக்கல் தீரும், குடலிறக்கம் இருந்தால் சீராகும்.

இப்படி எத்தனையோ நன்மைகள் இதற்கு உண்டு. இந்தியாவில் சித்தர்கள்  காலத்தில் தொடக்கப்பட்ட இப்பயிற்சி. சீனா நாட்டில் தெய்வீகமான நடையாகக் கருதப்படுகிறது.. எட்டு வடிவில் நடக்கும் போது, தீய சக்தி வெளியேறி நல்ல சக்தி உள்ளே புகுவதாகக் கருதப்படுகிறது. மேலும் அந்த நல்ல சக்தியைத் தக்க வைத்துக் கொள்ள, இந்த நடைப்பயிற்சி செய்து முடித்ததும், எட்டு வடிவின் நடுவே அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். இதனின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதனை அறிமுகப்படுத்தியது நமது தமிழினம் தான்.

இது போலத் தான் நம்மிடம் உள்ளத் தோப்புக்கரணத்தையும் சீனாக்காரன் மிகப்பெரிய யோகக் கலையாகக் கருதி பள்ளி மாணவர்களுக்குப் போதிக்கிறான். ஆனால், நாமோ அதை மறந்து ஞாபகசக்திக்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே நமது பாரம்பரியம் மகத்தானது. அதனை கட்டிக்காப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2017

வெற்றிக்குரிய சிறந்த வழி!
சக்தியும் இளமையும்
“கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்”
ஸ்ரீ லங்கா- சுற்றுலா
இங்கு இவர் இப்படி
வெற்றி உங்கள் கையில் – 40
தேர்ந்து விடு உயர்ந்து விடு
இளமை மாறாத இளமையுடன்….
இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி…?
ஹெப்படைட்டிஸ் ஏ (Hepatitis A)
வாழ நினைத்தால் வாழலாம் – 4
ராஜா வீட்டுத் திருமணம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 3)
ராசியான வாழ்க்கைக்கு எட்டு
தொப்புள் கொடி!
திரையரங்குகள் தினம் – ஏப்ரல் 18
எதிர்மறை எண்ணத்தை எடுத்தெறி
தன்னம்பிக்கை மேடை
வேளாண்மையின் வளம்! வெற்றியின் பலம்!!
உள்ளத்தோடு உள்ளம்
ஏப்ரல் – 6 டாக்டர் இல.செ. க அவர்களின் நினைவு தினம்