Home » Articles » இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பாதுகாப்பானது…

 
இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பாதுகாப்பானது…


செல்வராஜ் P.S.K
Author:

வளங்களைக் காப்போம்

வளமுடன் வாழ்வோம்

இயற்கையைப் போற்றுவோம்

இதமாய் வாழ்வோம்

சுற்றுச்சூழலைக் காப்போம்

சுகமாய் இருப்போம்

மரங்களை வளர்ப்போம்

மானிடம் காப்போம்.

வனங்களை வளமாக்குவோம்

மனங்களை நலமாக்குவோம்

காடுகளை வளப்படுத்துவோம்

நாடுகளை பலப்படுத்துவோம்

வனங்களை வளமுடன் வைப்போம்

வாழ்வை நலமுடன் வாழ்வோம்

வனத்தை வளமாக்கு

வாழ்வை நலமாக்கு

இயற்கையை சேமியுங்கள்

இன்பத்தை செலவளியுங்கள்

இயற்கையைப் பாதுகாப்போம்…!

இந்திய தேசத்தை வளர்ப்போம்…!!

மரங்களின் மூச்சு வெளிக்காற்று

மனிதனின் உயிர்க்காற்று…

மக்கள் தொகையோ பெருகுகிறது

மரத் தொகையோ சிறுகுகிறது

சுற்றுச்சூழலோ கெடுகிறது

மானிடமோ அழிகிறது

மானிடா – மரத்தை வெட்டியது தான்

இப்பூவுலகில் மனிதன் செய்த

மகத்தான சாதனை

இதுவே நம் நாட்டிற்கு பெரும் சோதனை.

இதை நினைத்தால் மனதிற்கு வேதனை

இனியாரும் மரம் வெட்டக் கூடாது என்று

நாம் செய்வோம் போதனை

மண் மலடாகிவிட்டது

மழை மாய்த்து விட்டது

நல்ல காற்று காணாமல் போய்விட்டது.

காற்றுக்கருகி விட்டது.

கொஞ்ச நீரும் மஞ்ச நீரானது

அட அந்த கொஞ்ச நீருக்கும்

கெஞ்ச வேண்டியுள்ளது.

துப்பாக்கிதான் மனிதனை சுடும்.

ஆனால், இன்று சூரியனோ

மனிதனைச் சுடுகிறது.

துப்பாக்கிக்கு மட்டுமா சுடத்தெரியும்.

சூரியனுக்கும் சுடத்தெரியும்.

மரம் நடுவோம்

மானுடம் காப்போம்

மரம் வளர்ப்போம்

மனிதனைக் காப்போம்

மரத்தைக் காப்போம்

தேசத்தை வளர்ப்போம்

தேசத்தை காப்போம்

வளமுடன் வாழ்வோம்

இயற்கையை நேசிப்போம்

இன்பமுடன் வாழ்வோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2017

இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பாதுகாப்பானது…
மனதில் உறுதி வேண்டும்.
கன்னியரும் காளையரும்
உணவு முறைகள்
கொங்கு நாட்டுத் தங்கம்
சங்கிலித்தொடர்….
பணியாளர்களுக்கான பண்பு நலன்கள்
சாதாரணமானவன் எப்படி சாதனையாளனாகிறான்?…
திசை மாறிய பயணம்
வாழ நினைத்தால் வாழலாம்-2
ஸ்ரீலங்கா சுற்றுலா (3)
சிகரமே சிம்மாசனம் வெள்ளப்பெருக்கா? நம்பிக்கை துடுப்பா?
விரும்பிய தருணங்களைத் திரும்பிப்பார்க்கிறேன்
தனிமையிலே இனிமை?
வெற்றி உங்கள் கையில் 38
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 1)
தன்னம்பிக்கை மேடை
புதுமையைப் புகுத்திடு! புகழாய் உன் பெயரை நிலைத்திடு!!
உள்ளத்தோடு உள்ளம்