Home » Articles » கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்

 
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்


மனோகரன் பி.கே
Author:

(அகில இந்திய வானொலியின் சென்னை ரெயின்போ பண்பலையில் 16.11.2016 பிற்பகல் 5 முதல் 6 மணி வரை ஒலிப்பரப்பான(லைவ்) நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை.) இது முற்றிலும் ஆசிரியரின் கருத்துக்கள்.

நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பண முதலைகளைக் குறி வைத்து, இந்த துல்லியமான தாக்குதல் அறிவிப்பை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தவுடன், அத்தகையோர் செய்வதறியாது உறைந்து போனார்கள்.

முந்தைய நடவடிக்கைகள்

இந்தியா வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின் எடுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது துணிச்சலான நடவடிக்கை இது.

  • முதல் இரண்டு நடவடிக்கைக்கள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பும், வங்கிகள் தேசியமயமாக்கலும் (Bank Nationalisation) ஆகும்.
  • முன்றாவது நடவடிக்கை தேசம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது, பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டு தாராளமயமாக்கள் (Globalisation) கொள்கையை நடைமுறைப்படுத்தியது.
  • நான்கவாது நடவடிக்கை எதுவென்றால், உலக அரங்கில் இந்தியாவை அணு ஆயுத பலம் பொருந்திய நாடாக அறிவிக்கும் வகையில், பிரதமர் வாஜ்பாய் அரசு 1998ல் பொக்ரானில் நடத்திய அணு ஆயுத சோதனையாகும்.
  • ஐந்தாவது நடவடிக்கைதான் இப்போது கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம் போடும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் எடுத்துள்ள ரூ. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற இந்த முடிவாகும்.

தேசப் பொருளாதாரத்தில் புழங்கும் அதிகப்படியான கறுப்புப் பணத்தின் அபாய அளவு குறித்து, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்கள் ‘இந்தியாவில் சட்டப்படி புழங்கும் பணத்தின் அளவை விட, அதிக அளவிலான பணம், அரசு வங்கிகள் அல்லாமல், வேறு வழிகளில் புழங்கி வருகிறது’ என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். அதாவது கணக்கில் காட்டப்பட்ட வெள்ளைப் பணத்தை விட, கணக்கில் காட்டாத கறுப்புப்பணம் அதிகம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

‘Black Money’ என்று சொல்லப்படும் கறுப்புப் பணம் என்பது குறுக்கு வழியில் சம்பாதித்த, கணக்கில், காட்டப்படாத பணம். அதாவது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய வணிக வரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, முத்திரைத்தாள் கட்டணம் போன்ற வரிகளை முறைப்படி வைத்திருக்கும் பணம் என்று சொல்லலாம். கறுப்புப் பணத்தின் அஸ்திவாரம் ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, ஏமாற்றுதல் போன்றவையாகும்.

கறுப்புப் பணத்தின் தீமைகள்

உலக முன்னணி நாடுகளில் அதிக அளவு பணப்புழக்கம் இருக்கும் நாடு இந்தியா. கடந்த 6 ஆண்டுகளில் வங்கிகளின் புழக்கத்தில் இருந்த தொகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 500 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் 76 சதவீதமும், 1000 ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் 106 சதவீதமும் அதிகரித்துள்ளது. புழக்கத்தில் உள்ள நோட்டுக்களில் 85 சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்புப் பணம் ஒரு பக்கம் சிக்கல் என்றால், மறுபக்கம் கள்ள நோட்டுகள் பெருஞ்சிக்கல். 500, 1000 ரூபாய் நோட்டுக்களில் 10 சதவீதம் கள்ள நோட்டுக்கள். தீவிரவாதக் கும்பலும், மாபியாக்களும் தங்களுடைய பரிவர்த்தனைகளுக்கு கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் பயன்படுத்துகிறார்கள்.

கறுப்புப் பணத்தினால் ஒரு நாட்டின் வளர்ச்சி குறைந்து, வறுமை மிகுந்து விலைவாசியும், பணவீக்கமும், வரி விதிப்பும் உயர்கிறது. பொருளாதாரத்தை பீடித்துள்ள இந்தக் கொடிய நோயை அகற்ற மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைதான் இந்த அறிவிப்பு.

இது அதிரடி நடவடிக்கை என்றாலும் அவசர நடவடிக்கை அல்ல. படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இதில் ஏறத்தாழ இரண்டு காலத்திட்டமிடல் இருந்திருக்கிறது. யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம், மிகவும் ரகசியமாகவும், சாதுர்யமாகவும் நகர்த்திக் கொண்டு வரப்பட்ட நடவடிக்கை இது.

நமது அரசு 2015ல் ‘வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை வரி மற்றும் அபராதம் செலுத்தி சரி செய்து கொள்ளலாம்’, என்ற திட்டத்தை அறிவித்தது. 2016ல் ஜூலை முதல் செப்டம்பர் வரை, ‘உள்நாட்டுக் கறுப்புப் பணத்தை வரி மற்றம் அபராதத் தொகைகளாக 45 சதவீதம் செலுத்தி சரி செய்து கொள்ளலாம்’, என்று அறிவித்தது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்