Home » Articles » திசைமாறிய பயணம்

 
திசைமாறிய பயணம்


பொன். ஆனந்த்
Author:

கொடுங்கலாச்சாரம் அண்மையில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி கொலையும், அதைத்தொடர்ந்து கரூர் கல்லூரி மாணவி சோனாலி, தனியார் பள்ளி ஆசிரியர் பிரான்ஸினா மற்றும் விழுப்புரம் பள்ளி மாணவி நவீனா போன்றஇளம் பெண்களின் தொடர் படுகொலைகளும், தமிழ்நாட்டையே உலுக்கின. இக்கொலைகளின் தாக்கம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்தது. இந்தப் பெண்களோடு நம் வீட்டுப் பெண் குழந்தைகளை நாம் ஒப்பிட்டுப் பார்க்கவும் தவறவில்லை. இதனை ஏதோ ஒருதலைக்காதலால் நடந்த கொலைகள் என்று மட்டும் பார்க்கக் கூடாது. அதனையும் தாண்டி வேறு ஏதோ ஒரு சிக்கலும், கவனக்குறைவும் நமக்கு இருப்பது தெளிவாக தெரிகிறது.

தற்போதைய சூழலில், இதுபோன்ற கொலைகளை சர்வ சாதாரணமாக நடத்துவதற்கு, தைரியம் எப்படி வந்தது? இந்தக் கொடுங் கலாச்சாரம் எப்படி வந்தது? சற்றேயோசிக்க வேண்டிய தருணம் இது.

என்ன காரணம்?

  • முந்தைய தலைமுறைக்கும், இந்த புதிய தலைமுறைக்குமான அதிக இடைவெளியும், புதிய நாகரீகத்தின் தாக்கமும், இளைய தலைமுறையினரை வெகுவாக பாதித்தது. அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்களைத் தூண்டுகிறது.
  • அன்றாடம் பொருளாதார தேவைகளுக்காக அவசர அவசரமாக ஓடும் இந்த இயந்திரத்தனமாக வாழ்க்கையில், சரியான மனித மாண்புகளை, பெற்றோராகிய நாம் குழந்தைகளுக்குச் கற்றுத்தருகிறோமா? இல்லையே! அந்தத் தவறுகளை மறைப்பதற்காக நேரமில்லை என்று சொல்லி நேரத்தையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறோம்.
  • ஆண் பெண் உறவுகள் பற்றிய தவறான புரிதல்கள், பெற்றோரின் கருத்து வேறுபாடுகள், குடும்ப உறவுகளில் சிதைவுகள், தவறான நட்பு போன்றவையும், இளைய தலைமுறையினரை வெகுவாக பாதிக்கிறது.
  • தற்போதைய புதிய கல்விமுறையில் மேலை நாடுகளில் போதிக்கப்படும் பாலியல் கல்விமுறையோ அல்லது சென்றதலை முறை பயின்றவாழ்க்கைக் கல்வியோ போதிக்கப்படுவதில்லை. அதனால் மனிதப் பண்புகள் மறக்கப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டன.
  • ஊடகங்களில் மற்றும் திரைப்படங்களில் புதுமை எனும் பெயரில் வரும் வன்முறைக் காட்சிகளும், ஆபாசக்காட்சிகளும், தவறுகளைத் தூண்டும் விதமாகவும் தவறுகளை நியாயப்படுத்தும் விதமாகவும் உள்ளன.

இவையெல்லாம் பொதுவானவை என்றாலும், சில குறிப்பிட்ட முக்கியமான காரணங்களைக் காண்போம்.

சகிப்புத் தன்மை இல்லை

  • இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில், வளரும் குழந்தைகள், உடன் பிறந்தவர்கள் இல்லாமல் ஒன்றையாகவே வளர்கின்றனர். இதானல், விட்டுக்கொடுத்தல், தோல்வியைத் தாங்குதல் மன்னித்தல் போன்றஅனுபவங்களைப் பெறாமலேயே வளர்கின்றனர். இதனால், அவர்களிடம் சகிப்புத்தன்மை எனும் பண்பு இல்லாமலேயே போகிறது.
  • தனக்குத் தேவையான அனைத்தும் நம் பெற்றோர் மூலம் கிடைக்கப்பெற்று வளர்ந்த ஒரு குழந்தைக்குத்தான் ஆசைப்பட்ட பொருள் கிடைக்காதபோது அந்த சிறு தோல்வியைக் கூட ஏற்றுக் கொள்ள முடிவதில்லை அதுமட்டுமல்லாமல், அந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், மனரீதியாக மிகவும் பாதிப்படைந்து, தோல்விக்குக் காரணமானவர்களை பழி வாங்கும் எண்ணம் தோன்றுகிறது. அந்த எண்ணம் கொலை செய்யக் கூட தூண்டுகிறது.
  • கூட்டுக்குடும்ப அமைப்புகள் சிதைந்து எல்லாம் தனிக்குடும்பமாக மாறி விட்ட நிலையில், இன்றைய தலைமுறையினருக்கு அறிவுரை சொல்லவோ, நீதிக்கதைகளை போதிக்கவோ, அனுபவத்தைக் கூறவோ, பெரியோர்கள் இல்லை. பிறவாய்ப்புகளும் இல்லை. ஆகவே இன்றைய தலைமுறையினர் மன அழுத்தத்திற்கு உட்பட்டு, அதற்கு ஒரு வடிகால் இல்லாமல் தனிமை உணர்வுவோடு வாழ்கின்றனர். அதுவே, இறுதியில் அவர்களைக் குற்றவாளிகளாக மாற்றி விடுகிறது.

உடனடித்தீர்வைத் தேடி…

     இன்றைய தலைமுறையினர் வாழும் உலகம், மிக மிக வேகமானது அவர்கள் சந்திக்கும் மன ரீதியான பிரச்சனைகளும் அதிகம். அந்தப் பிரச்சனைகளுக்கு ‘உடனடித்தீர்வு’ வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். தீர்வுக்கு காத்திருக்க நேரமோ, பொறுமையோ இல்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன், நீயும் என்னைக் காதலிக்க வேண்டும். இதை மறுக்க உனக்கு உரிமையில்லை. என் காதலை மறுத்தாலோ அல்லது வேறு யாரையாவது மணந்தாலே உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்கிறசர்வாதிகார மனநிலைக்கு அளாகிப் போகிறார்கள். இது மிக மிக ஆபத்தானது. இது பெண்ணடிமைத்தனத்தை அவர்கள் மனதில் சேர்த்து விடுகிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்