Home » Articles » சிகரமே சிம்மாசனம்

 
சிகரமே சிம்மாசனம்


சொக்கலிங்கம் சிவ
Author:

வரலாற்று வகுப்பெடுக்க வைத்திருக்கிறது

கடல் கொண்ட கவிஞன்

வாழ்க்கையில் எண்ணங்களின் வனப்பைக் கூட்டும், வசியப்படுத்தும் மலர்காட்டைப் பார்க்கும் போது மனசுக்குள் மலர்ச் செண்டு பொழியும். கோளங்கள் வேறாகவும், திசைகள் பலவாகவும் தெரிந்தாலும் வானத்தின் கூரையில் ஏறி நின்று அது வணக்கம் சொல்லும். ஆக! வாழ்க்கை… எத்தனை வடிவங்கள்! எத்தனை படிமங்கள்!  கவிதைகளில் கரைந்து, பலரின் இதயங்களில் நிறைந்து வழிந்தவன் ஷெல்லி. கற்பனையோடு கவிதையில் ஆழம் கண்டு, கருத்துக்குள் கவிதைகளைக் கொண்டு வந்த ஷெல்லி, பெண் சாயலோடு பேரழகு கொண்டவன். இவனை அன்று இங்கிலாந்து மட்டுமா கொண்டாடியது? உலக நாடுகளின் உற்சாகப் புள்ளியாக கவிதைகளின் தலைமகனாக மின்னி மிளிர்ந்தவனை, உலகமே தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடியது.

உயர் குடும்பத்தில் செல்வச் செழிப்போடு பிறந்த ஷெல்லி, 1822ல் மகிழ்ச்சி ததும்ப தனது சொந்த கப்பலில் கடற்பயணம் மேற்கொண்டபோது, புயல் வந்து, கடலுக்குள் கடத்திச்சென்றது.

அழகே ஆச்சரியப்படும் அந்த ஷெல்லியின் உடலை, கரையோரம் அலைமகள் ஒதுக்கி வைத்திருந்தாள். கவிஞர்கள் சிலரை காலமகள் இளம் வயதிலேயே முத்தமழை பொழிந்து வாரி அணைத்துக் கொள்வாள். அப்படித்தான் ஷெல்லியையும் முப்பது வயது முடிக்காத பொழுதில், மரணத்தின் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள்.

இன்றளவும், இயற்கையோடும், நம்பிக்கைத் துடுப்போடும், சாகாவரம் பெற்றகவிதைத் திருமகனான, ஷெல்லி கவிதையாய்க் கரைந்திருக்கிறான்,. கடலோடே புதைந்திருக்கிறான்; அப்போதும், இப்போதும், இனி எப்போதும் சாகா வரம் பெற்றவிடியலாய் விடிந்திருக்கிறான் என்பதை சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைப்போம்; ஷெல்லியின் கவிதையைப் படித்து வைப்போம்.

வரலாறு வகுப்பெடுத்து வைத்திருக்கிறது.

மனிதனுக்கு மட்டுமல்ல மன்னனுக்குள்ளும் ஏதோ, ஒன்று, உள்ளுக்குள்ளே உணர்வுக் கடத்தியாய் இருந்திருக்கிறது. அது ஊனையும் உருக்கும்; உயிரையும் வதைக்கும். காலங்காலமாய் உயிருக்குள் உணர்வலைகளை தன் வசீகர வாசிப்பில் வரித்துக் கொண்டுதான் ஈரம் கசிந்தே இனிதாய் விடிந்திருக்கிறது.

மனித மனங்களுக்குள் இது ஒரு வரமாய் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது. வாழும் மண்ணை வரமாய் கரம் பிடித்தவர்களுக்கும், உலக நாடுகளை தன் உதட்டோரம் உச்சரிப்பில் ஏற்றவைத்தவர்களுக்கும், நேசிப்பிற்கும் நினைவுக்குமாய் அது நீச்சலடிக்க வைத்திருக்கிறது.

ஹிட்லர்… அறுபது லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக்கொன்று குவித்த கொடுங்கோலன். மூன்றரை  கோடி மக்களை மரணக்குழிக்குள் பிணமாக்கிய மகாபாதகன். கொலை செய்யப்பட்டவர்களின் தங்கப்பல்லைக் கூட இவன் விட்டு வைக்கவில்லை என்று எழுதும் போதே என் பேனாவில் ரத்தம் கசிகிறது.

திருமணப்பரிசான மோதிரத்தையும் பறித்து, அவர் உடல்களை சோப்புத் தயாரிக்கப் பயன்படுத்திய இவன், இரும்புக் கதவுக்குள் தன் இதயத்தை பூட்டி வைத்தவன்.

இறப்பதற்கு 42 மணி நேரத்திற்கு முன்பு, காதலியை திருமணம் செய்து கொண்டவன், ஹிட்லர் 50 வயதைத் தொடும்போது, காதலி ஈவா பிரான் இளமை கொஞ்சும் பதுமையாய் இருந்தாள். வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்; என்று கேட்டுக்கொண்டான். ஹிட்லரும், ஈவா பிரானும் முட்டி மோதிக்கொண்ட மகிழ்ச்சியின் அடி ஆழம் இது. சர்வாதிகாரிக்கு சாவு மணி அடிக்கும் வேளை வந்தது

இரண்டாம் உலகப்போரில் ரஷியப்படைகள் அவனைக் கைது செய்வதற்கு பெர்லினில் நுழைந்த போது, சுரங்க மாளிகையின் ரகசிய அறையில் ஹிட்லர்  ஈவா பிரான் என்றஇணைப்பறவை இரண்டிற்கும் மரணப்பொழுதியில் மணவிழாக் காட்சி நடந்தேறியது. அதன் பின்னாலே, ஹிட்லர் தன்னைத்தானே அவனைக் துப்பாக்கியை வாயில் வைத்து மூளை சிதறும்படி சுட்டுக்கொண்டான். அவனது சர்வாதிகாரம் தலைகுப்புறவிழுந்ததை வரலாறு வகுப்பெடுத்து வைத்திருக்கிறது. ஈவாபிரான் உடலும் இணைந்து விழுந்தது அப்படியே.

சர்வாதிகாரத்தைத் தன் தலைமீது வைத்து கொண்டாடினாலும், உயிரோடு இருக்கும்போது யாரும் தன்னை உரசி விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான் ஹிட்லர். சர்வாதிகாரத்திற்குள்ளும் தன்னம்பிக்கை உச்சம் தந்த செய்தி இது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்