Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

ப. புஸ்கலா

தலைமை ஆசிரியர் (ஓய்வு)

வீரப்பன் சத்திரம் அரசு மகளீர் மேல்நிலைப் பள்ளி ,ஈரோடு

பெருமை மிகு மதுரை மாநகரின் மேற்கில் 80 கி.மீ., தொலைவில் (தற்போதைய தேனி மாவட்டம்), மேற்குத் தொடர்ச்சி மலைகள் சுற்றிலும் சூழ்ந்து இயற்கையன்னையின் தொட்டில் போல அமைந்திருக்கும் போடிநாயக்கனூர் எங்கள் ஊர். 1950 களிலேயே நகரவை அந்தஸ்து பெற்றிருக்கும் அழகிய ஊர். முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் தேக்கடி, குமுளி எங்கள் ஊரிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ளது.

பச்சை பசேலென்று இன்றைக்கும் வயல்வெளிகளைக் காணலாம். கரும்பு, தென்னை, தோப்புகள் என்று மூணார், போடித் தொட்டு, ஏலமணம் வீசும் தென்றல் காற்று தாலாட்டும் அழகிய ஊர்.

அந்த ஊரில் பிறந்ததற்காக மட்டுமல்ல, இன்றைக்கு நான் ஒரு ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி, ஓய்வு பெற்றிருக்கும் நிலைக்குக் காரணமான அடிப்படைக்கல்வியைத் தந்த அருமையான ஊர்தான் அது. எனது தந்தை சொக்கலிங்கம்  தாய் சரோஜினி அம்மாள் பற்றி சில வார்த்தைகள் பேசாமல் போனால் எனது பிறவிப்பயன் முழுமை பெறாது.

சோலை செட்டியார், காமாட்சியம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வன் எனது தந்தையார். எனது ‘அவ்வா’ மண்சோறு சாப்பிட்டு விரதமிருந்து பெற்றஒரே மகன் என்று அடிக்கடி கூறுவார். ஆனால், என் தந்தை மிகப்பெரிய ஆலமரத்தின் வேர். பலதார மணம் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில், சொத்துக்கள் நிறைய இருந்த காரணத்தால், எனது தந்தையார் நான்கு மனைவிகளைத் திருமணம் புரிந்து, 22 குழந்தைகளைப் பெற்றவர். எனது அன்னைக்கு நான் பத்தாவது குழந்தை. எனக்குப் பிறகு மூன்று தம்பிகள், ஒரு தங்கை. எங்கள் வீட்டில் நாங்கள் ஏழு பெண்கள், 15 ஆண் பிள்ளைகள். எங்கள் முன்னோர் செய்த தர்மம், புண்ணியம் காரணமாக நாங்கள் அனைவரும் இறையருளால் சிறப்பாகவே வாழ்ந்து வருகிறோம். ஆலமரத்தின் விழுதுகளாய் எங்கள் குடும்பம் தற்போது கண்டங்கள் தாண்டி விரிந்து பரந்துள்ளது.

எங்கள் ஊரில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும், நான்கைந்து ஆரம்பப் பள்ளிகளும் 1950ல் இருந்தன. நான் படித்தது நகரவைப் பெண்கள் பாடசாலை. நாங்கள் ஏழு பெண்களும் அந்தப்பள்ளியில்தான் எங்கள் கல்வியைத் தொடங்கினோம். அப்போதே அந்தப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை சுமார் நானூறு பேர் படித்துக்கொண்டிருந்தனர். முதல் நாள் அழுது கொண்டே அந்தப்பள்ளியில் சேர்ந்தபோது, நானும் ஒரு ஆசிரியை ஆகிவிடுவேன் என்று என் அன்னை கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

பெண்கள் படிப்பதை விரும்பாத சமூகத்தில் நாங்கள் பிறந்திருந்தோம். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., (SSLC) மட்டுமே படித்திருந்த எனது தந்தையார் படிப்பின் அவசியத்தை உணர்ந்திருந்ததால், எங்களுக்கும் படிப்பின் மீது ஆர்வம் அதிகம் இருந்ததால், இன்றைக்கு இந்த நிலைக்கு உயர முடிந்தது எனலாம்.

நான் படித்த பள்ளியைப் பற்றிச் சொல்லவேண்டும். எங்கள் பள்ளித்தலைமை ஆசிரியர் பெரிய டீச்சர். தூய வெண்ணிறப்புடவை உடுத்தி, கையில் பிரம்புடன் பார்ப்பதற்கு கடுமையானவர் போலத் தோற்றமளிப்பார். ஆனால், மிகவும் அன்பாகவும், அருமையாகவும் பாடம் கற்பிப்பார்.

அந்தப்பள்ளியில்தான் காந்தித்தாத்தாவும், நேரு மாமாவும், ஏசுவும், புத்தனும் எனக்கு அறிமுகமானார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே ராட்டை, நூற்று, சிட்டம் தயாரித்து கதராடை அணிவது போன்றவற்றின் அறிமுகம் எங்களை நன்னெறிக்கு அழைத்துச் சென்றது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2016

இங்கு இவர் இப்படி
உழவுத் தொழிலுக்கு வாருங்கள்
குழந்தை உணவு
ஓடுவது கடிகார முள் அல்ல, உன்னுடைய வாழ்க்கை
கலைவரிசை
கறுப்புப் பணத்திற்குக் கடிவாளம்
திசைமாறிய பயணம்
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்
சிகரமே சிம்மாசனம்
என் பள்ளி
வெற்றி உங்கள் கையில்
தலைமை கொள்
வாணிகத்தில் வளர்ச்சியைப் பெற தனி மனிதனின் பங்கு
ஸ்ரீலங்கா சுற்றுலா
மனக்கிளர்ச்சி – வெற்றிக்கு முதல்படி…
தன்னம்பிக்கை மேடை
திறமையை எருவாக்கு! வெற்றியை உருவாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்