Home » Articles » முயன்றேன்… வென்றேன்

 
முயன்றேன்… வென்றேன்


ஆசிரியர் குழு
Author:

செல்வி மா.சங்கவி
உதவி ஆய்வாளர்
தமிழ்நாடு அரசு
பட்டுவளர்ச்சித்துறை , ஓசூர்

தேனை மறந்திருக்கும் வண்டும்

ஒளிச்சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் 

இந்தவைய முழுவதுமில்லை தோழி

எத்தனை சத்தியமான, சாத்தியமான வரிகளை பிறக்க வைத்திருக்கிறான் எட்டயபுரத்து கவிஞன். இதனை சாத்தியமாக்கிய வண்டும், பூவும், பயிரும் எப்படி பாரதியின் நன்மதிப்பை பெற்றதோ, அப்படியே நானும் ஒரு மங்கையராய் வெற்றியின் நன்மதிப்பை இச்சமூகத்தில் சாத்தியப்படுத்திúன்.

பலரும் கூறுவார்கள் “வானமே எல்லையென்று”. ஆனால், அந்த எல்லையை அடைந்தவர்களுக்குத்தான் தெரியும் வானமும் தொடும் தூரம்தான் என்று. அப்படி தொட்டுவிட்டால் போதுமா…? இல்லை வாழ்க்கை முழுவதும் வானில் தெரியும் நட்சத்திரமாய் ஒளிர வேண்டுமே.

அப்படி ஒளிரினால் மட்டும் தனித்தன்மை அடைவோமா…? அதற்கு சந்திரனாய் அல்லவா, பிரகாசிக்க வேண்டும்…? அப்படி பிரகாசித்தாலும் சந்திரனின் உயிரோட்டமாய் உள்ள சூரியனாய் அல்லவா பிரகாசித்து எரிய வேண்டும். அதுதானே சித்தாந்தம், வேதாந்தம், ஏன் இயற்கையும் கூட.

இவற்றையெல்லாம் கூறுவதற்கு காரணம் நானும் ஒரு இயற்கையின் பிரதிநிதிதான். அதனால் இயற்கையின் வண்ணம் ஒப்புமைப்படுத்தி எனது வாழ்க்கையின் சுவடுகளை இவ்விடத்தில் வரைகிறேன்.      மஞ்சள் மாநகரம் என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் ஈரோடு எனது சொந்த ஊர். பிறப்பிலேயே கவித்தன்மை உள்ளதோ என்று எண்ணி என்னுடைய பெற்றோர் எனக்கு சங்கவி என்று பெயர் சூட்டினர்.

புத்தனுக்கு எப்படி போதிமரமோ, அப்படித்தான் எனக்கும், என்னுடைய மேம்பட்ட வாழ்க்கைக்கும் போதிமரமாய் பள்ளிப்படிப்பும், பள்ளி ஆசான்களும் திகழ்ந்தனர்.

சிறுவயது முதலே படிப்பின் மீது குறையாத ஆர்வத்தினால் நிறையாத அறிவுத்தேடலும் உருவாகியது. தேடல் என்பது பயனுள்ள, செறிவுள்ள தேடலாய் இருக்க வேண்டும் என்று என் மனம் அன்றேஎனக்கு கட்டடையிட்டு விட்டது. அக்கட்டளையைஎச்சமயத்திலும் கைவிட்டுவிடக்கூடாது என்று அன்றேசபதம் எடுத்தேன்.

பெண்களின் சபதம் என்றுமே தோற்றுப்போனதில்லை என்று வரலாற்றில் எப்பொழுதோ படித்த ஞாபகம். அந்த ஞாபகத்தை ஒவ்வொரு முறையும் மகாபாரத்தின் பாஞ்சாலியின் சபதமும், சிலப்பதிகாரத்தின் கண்ணகியின் சபதமும் ஞாபகமாகவே என்னுள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

அவ்வழியில் வந்த நானும் பெண்களுக்கே உரித்தான சபதத்தை சவாலாகவே எடுத்தேன்.

அச்சவாலை எதிர்கொள்ளும் தருணமும் எனக்கு கிட்டியது. அதாவது, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் காலகட்டம் வந்தது. கல்லூரி என்பது பலருக்கும் கனவுகளை திறந்து வைக்கும் வெற்றிவாசல். அந்த வெற்றிவாசலை தேடினேன். தேடலுக்கு சரியான தடம் கிட்டியது.

ஆம், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தமையால் தேடலுக்கு சரியான தடத்தை கொடுக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் எனக்கு பாதை அமைத்தது.

அந்த பாதையில் திசையறியாமல் திகைத்து நின்றபோது, திகைத்து நின்றபோது, திகைத்து போகும் வண்ணமாய் நான் பி.எஸ்.சி., பட்டுப்புழு வளர்ப்பு (B.Sc., Sericulture) படிக்க ஆசைப்பட்டேன். காரணம் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.

அதைவிட, அப்பட்டுக்கு காரணமாய் பிறப்பெடுத்த பட்டுப்புழுக்களும், நெசவாளர்களும் என்னுடைய நேசம், பாசம் கடந்த அபிமானிகள். ஒரு நெசவாளியிடம் உள்ள நுட்பத்திறனை என் வாழ்வில் இதுவரை யாரிடமும் பார்த்தில்லை.

அப்படிப்பட்டவர்களின் வழிக்கும், வாழ்வாதாரத்திற்கும் உயிரோட்டமாய் திகழும் பட்டுப்புழு வளர்ப்பு பற்றி படிப்பதே சாலச்சிறந்தது என்று உணர்ந்தேன்.

நான்கு ஆண்டுகள். பூமி சுற்றியதும் தெரியவில்லை. நாட்கள் ஓடியதும் தெரியவில்லை. ஆனால், பட்டுப்புழுவின் தன்மையும், மேன்மையும் மேன்மை பட அறிந்தும், தெரிந்தும் கொண்டேன்.

அந்த மேன்மைக்கு உரமிட்டவர்கள் எனது பேராசிரியர்கள் என்று கூறினால் அது மிகையல்ல. அதனை மேலும், மேன்மைப்படுத்த முதுநிலை படிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்க மீண்டும் கம்பளம் விரித்தது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2016

வழுக்காத வாழ்க்கை
உலக தத்துவ தினம்…
மனம் மாறினால் குணம் மாறலாம்…
கொங்கு நாட்டு மன்னன் வீரராஜேந்திர சோழன்
பிறந்த குழந்தையின் தோல் பராமரிப்பு
முயன்றேன்… வென்றேன்
காற்றாடி…
நம்பிக்கையை உள்வாங்கு – சந்தேகத்தை வெளியேற்று…
ஆனந்த வாழ்விற்கு….
பருவத்தே பயிர் செய்
தட்டுங்கள் திறக்கப்படும்…
வெற்றி உங்கள் கையில்….
ஒரு தீக்காடு; உள்ளே சிறு சிறு பூச்சிகளும் வெளிச்சமும்…
தன்னம்பிக்கை மேடை
புதியதை உருவாக்கு! புகழை  உனதாக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்