சிகரமே சிம்மாசனம்…
நீயும் இயற்கையின் ஓர் அங்கமே…
இந்த நூற்றாண்டு… அறிவையும் அறிவியலையும் கைகுலுக்கி கொள்ள வைத்த நூற்றாண்டு. மனிதன் தனிமைப்படுத்தப்பட்டு அறிவியல் உலகத்திற்குள் தேடலோடு தனித்தீவாய் நிற்பான். சிரிப்பு என்பது அந்நியப்படும்; சிந்தனையில் பூட்டுத் தொங்கும் காலமாய் அர்த்தமாக்கப்படும். காலம் தரும் படிப்பினையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றாலே, இந்த நூற்றாண்டில் வாழும் முறையை வசப்படுத்திக்கொள்ளலாம்.
புறா பூரிப்போடு அது தரும் செய்தியை அழகோடு, ஆராதிப்போம். இன்றைய செய்தியே நாளைய வரலாறு என்பதை நாமறிந்தாலும் பத்திரிக்கைகளுக்கு செய்தி தருவதற்கு பற்பல செய்தி நிறுவனங்கள் இருந்தாலும், எத்தனையானாலும் ஈடுசெய்ய முடியாத, மாபெரும் சக்தியாய் ராய்ட்டர் செய்தி நிறுவனம், தரமான முதல்தர நிறுவனமாய் விளங்குகிறது. ஒற்றைவரிச் செய்தியில் உலகமே வாய்பிளக்கும் அதிசயத்தை முதல் செய்தியாய் முத்தான செய்தியாய் முந்திக் கொடுப்பதில்தான் இது அதன் முத்திரையை பதித்திருக்கிறது.
பால் ஜீலியஸ் ராய்ட்டர் என்றஜெர்மானிய மனிதருக்குள் தான் இந்த நிறுவனம் 1850ல் முகிழ்த்து எழுந்தது. தான் வேலை பார்க்கும் வங்கிக்கு “பாரீசின் ஸ்டாக் எக்ஸ்சேஞ்” விவரங்கள் தேவைப்பட “அக்ஸ்லா சாப்பெல்லா” என்னும் செய்தி தொகுப்பு நிறுவனமாய் வடிவம் பெற்று புதிய சவாலோடு வரவேற்பு வாசலில் காத்து நின்றது. வட்டமிடும் புறாக்களும் இதன் வளர்ச்சியில் தன் பங்களிப்பைச் செய்தது. ராய்ட்டர் ஜெர்மனியிலிருந்து பாரீசின் பிரஸ்சில் நகருக்கு செல்லும் ரயில் வண்டியில் புறாக்களை அனுப்பி விடுவார். அந்த இரயில் இரவு முழுவதும் பயணித்து விடியற்காலை பிரஸ்சில் நகருக்கு சென்று விடும். அங்கிருக்கும் ராய்ட்டரின் நண்பர் அங்குள்ள பங்கு மார்க்கெட் விவரம் விலை போன்றசரியான தகவல்களை எழுதி புறா காலில் கட்டி பறக்க விடுவார். புறப்பட்ட 7 மணி நேரத்திற்குள் இந்த புறாக்கள் ராய்ட்டரிடம் வந்து சேர்ந்து விடும். இது அந்த ரயில் செல்லும் வேகத்தை விட அதிகம். இந்த தொலைவை ரயில் கடக்க ஒன்பது மணி நேரம் எடுத்துக் கொள்ளும். என்ன ஆச்சரியம்…! 2 மணி நேரம் முன்பாக புறா வந்து சேர்ந்தது. விந்தையான செய்திதானே…! மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் புறாக்கள் அந்த செய்தியை கொண்டு வந்து சேர்க்கின்றன. இப்படி சுடச்சுட கிடைத்த பங்கு மார்க்கெட் (Share Market) நிலவரத்தை நல்ல விலைக்கு உடனே வியாபாரிகளுக்கு விற்றுவிடுவார் ராய்ட்டர்.
ஒரு முறைமாவீரன் நெப்போலியன் போர்பற்றி பார்லிமெண்டில் பேச இருக்கும் செய்தியை முன்கூட்டியே ராய்ட்டர் வெளியிட்டார். இது மக்களிடையே பெரும் பரபரப்பையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தெளித்தது. ராய்ட்டர் புகழின் உச்சத்திற்கு சென்றார். மேலும், ஒரு புதுமையைப் புகுத்தினார். செய்தி சேகரிப்பு ஒருபுறம் இருந்தாலும், நேரடியாக நிரூபர்களை போர் முனைக்கு அனுப்பி, அவர்கள் பார்த்தவற்றைஉள்ளது உள்ளபடி செய்தியாக எழுதி வரும்படி அனுப்பி வைத்தார். அதுவரை செய்தி சேகரிப்பில் சம்பவ இடத்திற்கு நிரூபர்கள் நேரில் சென்று நேரடியாக செய்தி சேகரிக்கும் முறைஇருந்ததில்லை. இன்று புதுமையின் புதுமையாக நிகழும் ராய்ட்டர் நிறுவனம், உலகெங்கும் 180 நாடுகளில் கிளை பரப்ப சிகரமே சிம்மாசனத்தில் நின்று கை அசைக்கும் அழகே அழகு. இங்கே புறா ஒரு போதிமரமாய் நின்று கூறுவது மனிதா… வேகங்கொள்….! தாகம்கொள்…! விடை கிடைக்கும்….!
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles