சுதேசி கப்பல் கம்பெனியின் சார்பாக வ.உ.சி. அவர்கள் கப்பல் வாங்குவதற்காக இப்போதைய மும்பையான பம்பாய் புறப்படுகிறார்.  அப்போது தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போது கப்பலுடன்தான் வருவேன். இல்லாவிட்டால் அங்கேயே கடலில் விழுந்து விடுவேன் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

கொஞ்ச நாளில் அவருக்கு தந்தி ஒன்று வருகிறது. வ.உ.சி. அவர்களின் ஒரே புதல்வனான உலகநாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப்போராடுவதாகாவும், அவருடைய மனைவி எந்த நேரத்திலும் குழந்தையை பெற்றெடுக்க கூடிய நிலையில் இருப்பதாகவும், ஒரே ஒரு தடவை ஊருக்குத்

 திரும்பி விட்டு போகவும்  என்று தந்தி வந்திருக்கிறது.

அதற்கு வ.உ.சி. அவர்கள் “எல்லாவற்றையும் அந்தப் பேராற்றல் காப்பாற்றி விடுவார்”. அவர் என்னை விட சக்தி படைத்தவர் என்று எழுதியிருக்கிறார்.

அடுத்த சில மாதங்கள் கழித்து வ.உ.சி. கப்பலை வாங்கிக் கொண்டே தமிழகம் திரும்பி இருக்கிறார்.

மகனும் பிழைத்து, அவர் மனைவியும் சுகப்பிரசவமாகி இருக்கிறார்கள்.

நாட்டுப்பற்றும், கொண்ட கொள்கையால் உறுதியும், தயாள குணமும் நிரம்ப இருந்தவர்கள் வாழ்ந்த பூமி நம் பாரத பூமி…! அது இன்றளவும் இருக்கிறது என்பது பரவலாக வேண்டும் என்பதே நம் எண்ணம்…! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்…