Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

வேலைப்பளுவால்  மனச்சோர்வு அதிகளவில் ஏற்படுகிறது. இதை எவ்வாறு  எதிர்கொள்ள  வேண்டும்?

உங்கள்  கேள்விக்கு பதில்  அளிக்கும் முன்  ஒரு  விளக்கம் அளிக்க வேண்டும். மன உளைச்சல் என்பதை Mental Stress என்றும்,  மனச்சோர்வு என்பதை Mental Fatique என்றும், மன அழுத்தம் என்பதை Mental Depression என்றும்  மனநோய்  என்பதை Mental Disorder என்றும்  எடுத்துக் கொள்வோம்.

மனிதர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவது இயல்பு. ஆனால் மனச்சோர்வு அதிக அளவு  ஏற்பட்டுவிட்டது என்றாலும், அது அடிக்கடி ஏற்படுகிறது என்றாலும் அது நல்லதில்லை. மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் ஒருவரை மனநல பாதிப்பிற்கு அழைத்துச் செல்லக்கூடும். எனவே நாம்  அனைவரும் மனச்சோர்வு  வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மீறி வந்து விட்டால்  எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்.

காரணங்கள்

மனச்சோர்வு  வர பல காரணங்கள் உண்டு . நீங்கள்  வேலைப்பளு காரணமாக மனச்சோர்வு அதிக அளவில்  வருகிறது என்று முடிவு  செய்து வீட்டீர்கள். ஆனால்  இந்தக்  கருத்திலிருந்து நான் மாறுபடுகின்றேன். மனச்சோர்வு வருவதற்கு பாரம்பரியம் ஒரு  முக்கிய காரணம்  என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

சில  மனிதனின் மரபணுக்கள் கூட  அது இருக்கிறது. வெளியில்  நடக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகளும்  மனச்சோர்வை ஏற்படுத்தலாம்.  வேலைப்பளு என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். வேலைப்பளு அல்லாத பல விஷயங்கள் கூட அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் தன்மை உள்ளவை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக வேலை கிடைக்காத பட்டதாரிக்கு இன்னும் அதிகமான மனச்சோர்வு இருக்க வாய்ப்புண்டு .

கீழ்கண்ட சூழ்நிலைகள் இன்னும் அதிகமான மனச்சோர்வை ஏற்படுத்திவிடும்.

உடல்  நலக்கேடு, இருதய நோய், சக்கரை வியாதி, மூட்டு வலி.கடும் கோபம், குற்ற உணர்வு,சுயமதிப்பின்மை போன்ற உணர்வுகள்.

கணவன் – மனைவி உறவு விரிசல், தந்தை மகன்  உறவு விரிசல் .

நாம் நேசித்த நபரின் திடீர் மரணம், புத்திர சோகம்.

ஒழுக்கம்  கெட்ட பிள்ளைகள்.

வேலை இழப்பு, வருவாய் இழப்பு,தொழில் நட்டம் போன்றவை.

ஒருவாகன விபத்து, அதில் படுகாய மடைந்து அவதிப்படுவது.

எனவே,  மனச்சோர்வு என்ற மோசமான நிலைமைக்கு நம்மை எடுத்துச்செல்லும்  பல  சூழ்நிலைகளும்  இருக்கின்றன என்பது உண்மை. அது போன்ற சூழ்நிலை ஏற்படாமல்  பார்த்துக் கொண்டாலே மனச்சோர்வு ஏற்படாமல்  தப்பித்து விடலாம். ஒரளவுக்கு நிம்மதியாகவும் வாழ்ந்து விட்டு  போகலாம். எடுத்துக்காட்டாக அளவான உணவு உண்டு, ஒரு மணி நேரம்  ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால்  குறைந்தபட்சம் 70 வயது வரை நோய்கள் அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளலாம் .

நோய்களால் ஏற்படும்  மனச்சோர்விலிருந்தும் நம்மைக் காப்பாற்றி கொள்ளலாம். வாகனத்தை கவனமாக ஓட்டினால் விபத்தினால்  ஏற்படும் வேதனையையும்,அதனால் ஏற்படும்  மனசோர்வையும்  தவிர்த்து விடலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2016

வழிகாட்டி…
என் பள்ளி
முழுமையின் முக்கியத்துவம்
நிர்வாக மேலாண்மைக்கு சமயோசித அறிவு அவசியமா…?
உண்மையாய் செயல்படு நன்மையாய் வாழ்ந்திடு
சிகரமே சிம்மாசனம்…
வெற்றி உங்கள் கையில்
பாடம் சொல்லும் பறவைகள்
எப்படி ஜெயித்தார்கள்?
தன்னம்பிக்கை
குவாண்டம் கம்ப்யூட்டர்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்