Home » Articles » நம் உயர்வுக்காக சில வழிகள்….

 
நம் உயர்வுக்காக சில வழிகள்….


பூபதி P
Author:

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை என்பது தனிப்பெரும் செல்வம். தன்னம்பிக்கை அனைவருக்கும் இருக்கும். ஆனால், நம் உள்மனதில் இருந்து உறுதியாக ஒரு செயலை முடித்து வெற்றி பெறுபவனே வெற்றியாளன். தோல்வியைப்பற்றி கவலைப்படாதவனே தன்னம்பிக்கை உள்ளவன். ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை தேவை. வளர்ப்போம், வெற்றி பெறுவோம்…

குறிக்கோள்

ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாததது உணவு. அதே போல் நம் வாழ்க்கையில் குறிக்கோள் இன்றியமையாத ஒன்று. குறிக்கோளை நோக்கிய பயணம் செய்தால் நாம் வெற்றி பெறுவத சுலபம். ஆகவே, குறிக்கோளை முடிவு செய்யுங்கள்.

அடைவதற்கான வழிகள்

திட்டமிடுதல்

நாம் ஒரு செயலைச் செய்வதற்கும், ஆழமாக சிந்தித்து திட்டமிடல் அவசியம். திட்டமிடாத செயல் வெற்றியடையாது என்பது சான்றோர் கூற்று.

நேர மேலாண்மை

நாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன் திட்டமிடல் அவசியம். அதேபோல் நேர மேலாண்மை முக்கியம். அனைவருக்கும் 24 மணி நேரம் என்றால் நேரத்தை பயன்படுத்துபவனுக்கு 25 மணி நேரம் கிடைக்கும்.

முயற்சி

மேலே கூறிய வழிகளை பயன்படுத்தினால் வெற்றி நமை தேடி வரும்

உடல்

உடல் விலைமதிப்பற்ற சொத்து. இதை வைத்து பணம், பெயர், புகழ், நன்மதிப்பு என்று எதையும் சம்பாதிக்க முடியும். உங்கள் உடலை நேசியுங்கள், உடல்நலத்தைக் காக்கும் 100 சதவீதப் பொறுப்பையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை நீங்கள் நேசித்தால் உங்கள் உடல் மீது உங்களுக்கு மரியாதை ஏற்படும். என்றுமே இளமையும் தோற்றத்தில் மிளிரும் (என் உடலை நேசிக்கிறேன்) என்று தினமும் சொல்லவும்.

உறக்கம்

மனிதனின் திசுக்கள் புத்துயிர் பெற, நமக்கு 6 மணி நேரம் உறக்கம் தேவை.

தியானம்

நம் மனதையும், உடலையும் கட்டிப்போட முடியாது. ஆனால், தியானத்தால் வெல்ல முடியும். இன்றிலிருந்து தொடங்குங்கள் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

உடற்பயிற்சி

ஒவ்வொரு மனிதனின் உடல் இயற்கையாக படைக்கப்பட்டது. நம் உடல் மீது அக்கறை கொண்டால், உடற்பயிற்சி செய்ய தூண்டு, உற்சாகமாக வலம் வந்து உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

சரிவிகித உணவு

நமக்கு கடவுள் அளித்த வரம் உணவு. உணவை நாம் தினமும் சரிவிகிதமாக எடுத்து நம் உடலுக்கு சக்தியை கொடுத்து வளமாக வைத்துக் கொள்வோம்.

சந்தோஷம்

மேலே கூறப்பட்ட தலைப்பு அனைத்தையும் கடைப்பிடித்தால், சந்தோஷம் தானகவே கிட்டும். ஆனால், முயற்சி, விடாமுயற்சி, தொடர்ச்சி, பயிற்சி போன்றவை அவசியம். அனைவரும் இதை கடைப்படியுங்கள் 30 நாட்களுக்குள், உங்களுக்குள் ஒரு மாற்றம் வரும். இந்த சந்தோஷம் தான் மனமகிழ்ச்சி. இதுவே வெற்றியை நம் மனதுக்கு கொடுக்கும் அருமருந்து.

உள்ளத்தில் இளமையைப் பாதுகாப்பதே

முதுமையை வெல்ல உண்மையான வழி

கடந்த காலச் சோதனைகளின் சுருக்கம்

தான் அனுபவம்.

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்

செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துவோம்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்