Home » Articles » பஞ்சதந்திரம் – 7

 
பஞ்சதந்திரம் – 7


மித்ரன் ஸ்ரீராம்
Author:

பதினெண் கீழ் கணக்கு (18-ன் மகத்துவம்)

வாழ்வில் வெற்றி காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே…!

அனைத்து அம்சங்களும் பொருந்தி இருக்கிறது. இவரது வாழ்க்கை அனைத்து வளங்களோடும் அருமையாக இருக்கும் – என்று எப்போதுமே சொல்லும் ஒரு ஜோதிட விர்ப்பன்னர் – எனக்கு ஒரு தன்னம்பிக்கை வித்தகராகவே தோன்றினார்.

சமீபத்தில் ஒரு நிறுவனத்தில் பயிற்சி வகுப்பு எடுக்க அழைப்பு விடுத்தனர். அப்போது, இவர்தான் எங்கள் நிறுவனத்தின் சிறந்த “வேலையாள்” (Best Employee of the Year என்ற பரிசினை கடந்த 5 வருடங்களாக ஜெயித்துக்கொண்டிருக்கிறார் என்று ஒருவரை அறிமுகம் செய்து வைத்தனர். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படி இது சாத்தியம்…? என்று அவரிடம் கேட்டேன்.

பதில் எனக்கு மிகுந்த வியப்பாகவும், அதே நேரம் திருப்தியாகவும் இருந்தது. அந்த நண்பரின் விசாலமான பார்வையும், வாழ்க்கை குறித்த அவரின் அணுகுமுறையும் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது.

அந்த பதில்  – இதுதான்…

எனக்கு 6 நண்பர்கள் இருக்கிறார்கள். என்னுடைய வெற்றிக்காக, லட்சியத்துக்காக என்னுடனேயே இருந்து, என்னை ஊக்குவிக்கிறார்கள். எப்போதாவது நான் சோர்ந்து போனால் – என்னை உற்சாகப்படுத்தி – நாங்கள் உன்னோடு இருக்கும்போது நீ ஏன் கவலைப்படுகிறாய்…? இன்னும் நிறைய நிறைய வெற்றிகளை, புகழ்களை உனக்காக நீங்கள் நாங்கள் உருவாக்க இருக்கிறோம். அதை வரவேற்க நீ தயாராக வேண்டாமா…? என்றே சொல்வார்கள். அவர்களின் பெயர்கள் திரு. சுக்கிரன், திரு. ராகு, திரு. கேது, திரு. சந்திரன், திரு. குரு, மற்றும் திரு. சூரியன் என்று சொன்னார்.

அவர்களை பார்க்க முடியுமா…? என்றேன். என் நண்பர்கள் எல்லோருக்கும் தெரிந்த பிரபலங்கள்தான் ஆனால், பார்க்க முடியாது என்றார். வேலை நாட்கள் எப்படி…? 24 மணிநேரமும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்களா…? என்று கேட்டேன். அதிர்ஷ்ட நாட்கள் என்று ஏதேனும் உண்டா…? என்றும் கேட்டேன்.

அவர் சொன்னார், செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை நான் விடுப்பு எடுக்காத நாட்கள். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை, திங்கள் கிழமை, வியாழக்கிழமை போவே இந்த நாட்களில் எனக்கு எப்ல்போதுமே நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய வெற்றியை எனக்குத்தர காத்திருக்கிறது என்றார்.

இந்த நண்பரின் தகவல்களுடன் அந்த ஜோசியரை நான் சந்தித்தேன். ஜோதிடர், இவருக்கு ஜோதிடமே தேவையில்லை. வழக்கமாக நான் சொல்வது அனைத்துமே இவரிடம் ஏற்கனவே இருக்கிறது என்றார்.

என்ன நண்பர்களே… ஏதோ ஒரு சிறு பொறி உங்கள் மூளையை தட்டுகிறது அல்லவா…? நான் எதை சொல்ல வருகிறேன் என்ற ஊகித்து விட்டீர்கள் என்று தெரிகிறது.

உங்கள் அறிவுக்கூர்மைக்கு சபாஷ்…

இன்னும் புரியாத நண்பர்களை இக்கட்டுரையின் துவக்கத்திலிருந்து படிக்க வேண்டுகிறேன்…

சரி இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.

9 கிரகங்களையும் ஒருவன் தன் நண்பனாகவும், நன்மை செய்பவையாகவும் கொண்டு செயல்பட்டால், வெற்றியும், சாதனையும் அவரை உயரத்தில் வைக்கும் என்பதை நாம் உணர முடியும்.

சரி, கிரகங்களை விடுங்கள். வெற்றி பெற உண்மையாக விரும்பும் ஒருவரின் உண்மையான தன்மைகள் இயல்பிலேயே எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போமா…?

17 தன்மைகள் என்று மானுடம் கூறுகிறது. அதை 3 தொகுப்புக்குள் அடக்கிவிட முடியும்.

 1. தாய் தந்தை உதவியின்றி – கல்வியும், ஞானமும் பெற முடியாது. அதற்கு உதவி செய்து, தன்னலம் பாராது உழைத்து வளர்த்த பெற்றோர்களை முதியோர் இல்லத்தின் முற்றத்தில் விடும் மக்கள் மனம் மாற வேண்டும்.

மிகவும் துதிக்கப்பட வேண்டியவர்கள் தாய் தந்தை.

 1. நமது நண்பர்கள் கூறியபடி, ஒவ்வொரு நாளும் இன்பமும், வெற்றியுமாக அளிக்கும் நாட்களின் மதிப்பை உணர்வது.

மிக மிக நல்ல நாள் இன்று

 1. நம்பிக்கை துரோகமும், வன்மமும் வாழ்வின் மகிழ்ச்சியை, வளத்தை சூறையாடும் நிலையில் – அந்த வட்டத்தில் நான் இல்லை, எனக்குள் அன்பும், அமைதியுமே குடியிருக்கிறது என்று மன்னிக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வது.

மிகப்பெரிய வெகுமதி – மன்னிப்பு

 1. வல்லவனுக்க – வையகத்தில் உண்டு – என்பது முற்றிலும் உண்மை. ஆணவம் அரசனையும் அழிக்கும் என்பதற்கு துரியோதனயை கொண்டு தெளிவு கொள்வது…

மிகவும் வேண்டியது பணிவு

 1. பொருளாதார சூழ்நிலையில் ஒருவர் செல்வந்தராகவும், மற்றவர் ஏழையாகவும் இருந்தாலும் தூய்மையான அன்பை அறிந்து வெறுக்காமல், ஏளனம் செய்யாமல் சமமாக பாவித்து பழகும் குணத்தை குசேலர் – கிருஷ்ணர் நட்பிலிருந்து அறிந்து கொள்வது

மிகவும் வேண்டாததது வெறுப்பு…

 1. பல காலமாக மழையே இல்லாத ஒரு ஊரில் பெரிய மகானின் கருணையால் யாகம் செய்து, பூஜையின் முடிவில் மழை வரும் என்ற அறிவிப்பை கேட்டும் எல்லோரும் வெறுமனே பூஜைக்கு வர ஒரு சிறுவன் மட்டும் கையில் குடையோடு வந்தானே அந்த சிறுவனிடமிருந்து நாம் அறிந்து கொள்வது.

மிகப்பெரிய தேவை நம்பிக்கை

 1. பணம், புகழ், பதவி எனக்கு வேண்டும் என்பதற்கும் எனக்கே வேண்டும் என்பதற்கும் நிறைய மாறுபாடு இருக்கிறது என்று உணர்தல்.

மிகக்கொடிய நோய் பேராசை…

 1. தமிழோடு விளையாட வந்ததாக நக்கீரர் சொன்னார். நம்பினோம். ஆனாலும், சக மனிதனும் மனிதனே என்று உணர்தல்

மிகவும் சுலபமானது குற்றம் கானல் தவிர்ப்போம்

 1. ஆமை புகுந்த இடம் அழிந்துவிடும் என்பார்கள். அது உண்மையான தெரியாது. ஆனால், கல்லாமை, இல்லாமை போன்றே ஒன்றும் உண்டு என்று அறிதல்.

கீழ்த்தரமான விஷயம் – பொறாமை – அதை தவிர்த்தல்

 1. உண்மை என்ன என்று தெரிந்து கொள்ளவும் விரும்பாமல், காதால் கேட்டதை அப்படியே பரப்பி, ஒளிபரப்பி – பலரையும் குழப்புவது தேவையற்றது என்று அறிதல்.

நம்பக்கூடாததது – வதந்தி

 1. மழைநேரத்தில் – ஓஸ்ôமல் கூச்சலிடும தவளை, கடைசியில் பாம்பின் பசிக்கு இரையாகி மரணத்தை தழுவுவதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளுதல்

ஆபத்தை விளைவிப்பத – அதிக பேச்சு. அதை குறைத்துக் கொள்ளுதல்.

 1. வேற்றுமுகம் பாராமல் பழகுவதே நட்பின் சிறப்பு. அதன் உன்னதமான உயரமே மனதினை பிரதிபலிப்பது. உணர்வுகளை பகிர்வது – என்று நட்பின் தூய்மையை உணர்த்துவது.
 2. அம்பு எய்தும் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தலைகுனிந்து கர்ணன் நின்றபோது, தோல் கொடுத்து ராஜ்ஜியம் கொடுத்து, தன்னம்பிக்கையும் கொடுத்த துரியோதனனிடமிருந்து நாம் தெரிந்து கொள்ளுதல்

செய்யக்கூடியது உதவி

 1. வேலை செய்யாத ஒரு சோம்பேறிக்கு ஒருவன் பாராட்டுவிழா நடத்த முடிவு செய்து – முறையாக அழைப்பு விடுத்தான். நான்தான் நிகழ்ச்சிக்கு வரவே மாட்டேனே, யாரை பாராட்டுவாய் என்று திருப்பிக்கேட்ட அன்பரிடமிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது…

விளக்கப்பட வேண்டியது சோம்பேறித்தனம்…

 1. சரி, தவறு என்று ஏதும் பார்க்காமல், தனது மானத்தை காப்பாற்றியவரின் மீது விசுவாசம் கொண்டு போர்களத்தில், என் உயிர் போன பின்புதான் உன் உயிர்போகும் என்று உனக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லி, அதை செய்தும் காட்டிய கர்ணனிடமிருந்து நாம் கற்பது..

மறக்கக் கூடாதாததது நன்றி

 1. படைபலம் என்ன…? இந்த உறவினர்கள் உடன் பிறந்தோர்கள் என்ன…?உலகமே எதிர்த்து வந்தாலும், நீ என்னோடு இருந்தால் அதுவே போதும் என்று பணிந்து, தனக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே கீதை தந்த கண்ணன், அர்ச்சுனன் நட்பிலிருந்து நாம் உணர்ந்து கொள்வது.

பிரியக்கூடாதது நட்பு

 1. தன் பரிசோதனைக்கூடத்தில் அனைத்து பொருட்களும் – தன் கண்டுபிடிப்புகளோடு சேர்த்து தீ விபத்தில் எரிந்த பின்பும், மனம் தளராமல் மீண்டும், மீண்டும் உழைத்து பல அறிய கண்டுபிடிப்புகளை வழங்கிய – Thomas Alwa Edisson – ன் வாழ்விலிருந்து நாம் அறிய வேண்டியது…

உயர்வுக்கு வழி உழைப்பு

 1. கடுமையான காய்ச்சல் இருந்த போதும் தேர்வு நேரத்தில் தவறாமல் வந்து தன் திறமையை நிரூபித்த அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சந்தர்ப்பங்களில் தன் முத்திரையையும், தடத்தையும் பதித்த சாதனை வீரர் (Sachin Tendulkur – டமிருந்து நாம் கற்றுத்தெளிய வேண்டியது.

நழுவ விடக்கூடாது வாய்ப்பு

இந்த 18தன்மைகளும் தனது உணர்வாக, இயல்பாக, தன்மையாக வாழ்வின் நெரிக்கும், வெற்றிக்கும் இடப்பட்ட கட்டளைகளாக வாழ்ந்து வந்தால் மனிதன் மனிதனாக வாழ இவை, 18 தன்னம்பிக்ன்ப்ப்ள் அல்ல – 18 நன்மைகள் என்று அறிவோம்.

அடுத்த மாதம் மகிழ்ச்சியாக வாழ என்னதான்தேவை  என்று விவாதிப்போம்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்