Home » Articles » உயிர் உலைக் கூடம்

 
உயிர் உலைக் கூடம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

ஆகாச துகள்கள் என்பது மிக மிக நுண்ணிய அளவில் சக்தித் துகளாக மட்டுமே இருப்பதாகும். இவைதான் தற்சுழற்சியாலும், திணிவேற்றத்தாலும் காற்றாக தன்மாற்றம் அடைகிறது. இந்தக் காற்றானது மேலும் திணிவுபெற்றுச் சுழன்று அடர் காற்றான நெருப்பாகத் தன்மாற்றம் அடைகிறது. அது போலவே, நெருப்பானது அடர்த்தி பெற்று நீராகவும், நீர் அடர்த்தி பெற்று பருப்பொருளாகவும் (திடப்பொருளாகவும்) தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது. இப்படி நமது அண்டத்தில் மிகப் பெரிய பருப்பொருளாக உருவெடுத்த பின், அதன் ஊடே ஆகாசம் ஊடுறுவிய போது ஏற்பட்ட பெருவெடிப்பில் (Big Bang) வந்தவைகள்தான் கோடான கோடி விண்மீன் கூட்டங்கள் (Galaxies). இவற்றுள் ஒன்றான நமது பால்வெளியில் (Milky Way) ஒரு புள்ளிபோல் இருப்பதுதான் நம் சூரிய மண்டலம். இந்தச் சூரிய மண்டலத்தில் ஒரு கோளாக இருப்பதுதான் நமது பூமி உருண்டை. ஆக, இந்த பூமியானது (மண்ணானது) பெருவெடிப்பின் ஒரு தூசுதான் என்பது புரிகிறதா? ஆக, நமது பூமியானது ஆகாசத் துகள்களில் இருந்து வந்தது புரிகிறதா?.

அண்டசராசரத்தில் குண்டூசி முனையளவுகூட இல்லாத பூமிப்பந்தில் வாழ்ந்து அல்லது வாழ முயற்சித்து கொண்டிருக்கும் மண்ணின் மைந்தர்களே! இன்று நாம் பார்க்கப் போவது என்னவென்றால், ஆகாச சக்தியும், திடப்பொருள் (மண்) சக்தியும் எப்படி நமது உடலில் இயக்க சக்தியாக விளங்குகிறது என்பதாகும். நண்பர்களே! நம் தோலானது ஆகாச சக்தியை கிரகித்து மண் சக்தியாக தன்மாற்றம் செய்து நமது மண்ணீரலுக்குச் சக்தியளிக்கிறது. இது புரிய நமக்குத் தெரிந்த அணு குண்டு (Atom Bomb) வெடிப்பு உதாரணத்தை, நாம் பார்ப்போம். மிகவும் திணிவு நிலையில்  இருக்கும் திடப்பொருளான உரேனியம் அல்லது புளுட்டோனியம் குண்டை ஒரு அணுத் துகளவுவே இருக்கும் நியுட்ரானானது, அதி விரைவாகத் தாக்கும் போது அதிபயங்கர வெடிப்பு நிகழ்கிறது. இதனால், அளப்பரிய சக்தி வெளிப்பட்டு அளவிட முடியாத சேதாரத்தை ஏற்படுத்துகிறது. நண்பர்களே! இந்த அணு குண்டு வெடிப்பு (Atomic Fission) போலத்தான் அண்டத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பும் (Big Bang) ஆகும். அன்பு நண்பர்களே! இதே போன்று பல்லாயிரம் கோடி அணு வெடிப்புகள் ஒவ்வொரு நொடியும் நமது உயிர் உடலில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன அதிர்ச்சி அடைகிறீர்களா? அப்படி நடந்தால் நாம் நொடிப் பொழுதில் இருப்பது தெரியாத அளவுக்கல்லவா ஆகிவிடுவோம்? அப்படி நடக்கவில்லைதானே? அப்படியானால் இது சாத்தியம் இல்லைதானே? நண்பர்களே! இது சாத்தியமே. நமது அணு உலையில் அணு குண்டைப் போல பல்லாயிரம் கோடி அணு வெடிப்புகள் நிகழ்கின்றன. ஆனால், அவைகளிலெல்லாம் கட்டுப்பாடான நிலையில், சேதாரத்தை பூஜ்ஜிய அளவில்  வைத்திருக்கிறார்கள்.

நண்பர்களே! நமது உடலிலும், உணவெனும் திடப்பொருளில் ஆகாசம் என்னும் அணுவினும் சிறியப் உயிர்ப் பொருள் உட்புகுந்து அணு வெடிப்பிற்கு (Atomic Fission) அல்லது பெரு வெடிப்பிற்கு (Big Bang) இணையான வெடிப்பை நிகழ்த்தி, அளப்பரிய சக்தியை (ATP Molecules) நம் உடலுக்கு அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் உயிர் என்ற உடல் எல்லைக் கட்டிக் கொண்ட அமைப்பிற்குள் நடப்பதால், சேதாரம் பூஜ்ஜிய அளவில் இருக்கிறது. நண்பர்களே! நாம் உணவை வாயில் எடுத்து மென்று விழுங்குவதோடு நம் முயற்சி முடிவடைகிறது. பிற்பாடு அது செரித்து இரசமாகி, இரத்தமாகி, சதையாவதெல்லாம் நமது இச்சை (இஷ்ட) செயலில் இல்லை. அது நமது உள்ளே இருக்கும் இறையாற்றல் (உயிராற்றல்) பார்த்துக்கொள்கிறது. நாம் எந்த வித உணவாக இருந்தாலும், அறவை இயந்திரத்தில் போட்டு அறைத்தது போல் கூழாகிவிடுவதை நாம் அவ்வப்போது வாந்தி எடுக்கும் போது கவனித்து இருப்போம். கிட்டதட்ட திடப்பொருளாக இருந்த உணவானது அறைத்த கூழ்போல் ஆனதற்கு, ஆகாச சக்தி வடிவில் செயலாற்றிய நொதிகள்தான் காரணம். ஆக, திடப்பொருள் தூள் தூளாக மாறுவதற்கு ஆகாச சக்தியாக உள்ள உயிர்ச் சக்தி உறுதுணையாக இருக்கிறது. என்ன நாம் உள்ளே அனுப்பும் எரிபொருளானது தரமானதாக இருக்க வேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்