Home » Articles » வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….

 
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….


ராமசாமி R.K
Author:

ஒரு மிகப்பெரிய வெற்றி என்பது ஒரு ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மட்டுமே கிடைக்கும் என்பதுதான் வெற்றி பெற்றவர்களின் அனுபவ பூர்வ உண்மையாகும்.

தனிப்பட்ட முயற்சிகளினால் வருகிற வெற்றியை விட, கூட்டு முயற்சிகளினால் பெறுகிற வெற்றி உயர்வானது, நிலையானது, நிரந்தரமானது. இது மற்றவர்கள் பாராட்டுதலுக்கும், அங்கீகாரத்திற்கும் உரித்தானதாகும்.

நீங்கள் தனிப்பட்ட முயற்சிகளினால் ஒரு சாதனையாளராக, வெற்றி வீரராக வலம் வர முடியும். இருந்தபோதிலும் அந்த முயற்சி வட்டத்திற்குள் உங்களுக்கு இணையாக மற்ற தொழில் நுட்ப வல்லுநர்களையும் இணைத்துக் கொண்டு முயற்சித்தால் அவர்களோடு இணைந்து பெறுகிற வெற்றியானது உன்னதமானதாகவும், வரலாறு படைப்பதாகவும் இருக்கும்.

உங்களுடைய அனுபவங்களும், திறமைகளும், கூட்டாளிகளினுடைய அனுவங்களும் இணையும்போது அங்கே ஒரு நிறைவான, நிலையான முழுமையான வெற்றி நமக்கு கிடைக்கிறது.

தனிப்பட்ட வெற்றியாளர்கள் ஒரு வெற்றியை அடைவதற்கு எடுத்துக்கொள்ளக் கூடிய கால அளவு உண்மையாகவே அதிகமாக இருக்கும்.

தனி முயற்சியினால் வெற்றி பெறும் காலஅளவு வெற்றி கால அளவு, ஒரு ஆண்டு என்றால் அதே இருக்கிற காலங்களை உங்கள் வெற்றி சிந்தனைகளை, செயல்பாடுகளை வேறு ஒரு காரியத்திற்காக பயன்படுத்த முடியும். வெற்றியை தொடும் கால அளவு குவைதால் நேர விரயம் தடுக்கப்படுகிறது. அந்த நேரங்களிலே வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயணத்தை தொடர முடியும். தொடர் வெற்றிகளைப் பெற முடியும்.

கூட்டு முயற்சி என்று சொல்கிற போது யாரோடு கூட்டு சேர்வது என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி கண் முன்னே எழும்.

நம்மைவிட திறமைசாலிகள், நம்மைவிட சிறந்தவர்கள், நம்மைவிட அதிகமாக உழைப்பவர்கள், தொழில் நுட்பத்தில் மேன்மையானவர்கள், அணுகுமுறையிலும், நிர்வாக மேலாண்மையிலும், மக்கள் தொடர்பிலும், பணியாளர்கள் மேலாண்மையிலும் வல்லுநர்களாக இருப்பவர்களோடு கூட்டுச் சேர்ந்தால் நம்மை அவர்கள் வெற்றியின் உச்சத்திற்கு நிச்சயம் அழைத்துச் செல்வார்கள்.

இந்த வெற்றிக்கு மூன்று துணைகள் நமக்கு உதவியாக அமையும். மேலை நாட்டு அறிஞர்கள் கூற்றுப்படியும், தொழில்நுட்ப அறிஞர்களின் அனுபவப்படியும், அந்த துறையில் தோல்வியுற்று, பாடம் கற்று, மீண்டும் முயற்சித்து வெற்றியை அறிமுகப்படுத்துகின்றன.

  1. நமது உள் உணர்வு

இதுதான் நமது திறமைகளின் மையப்பகுதி. உங்கள் வளர்ச்சியின் அச்சாணி. உங்கள் மனதை நேர்வழியில் செலுத்துகிற ஒரு மாலுமி. நீங்கள் நினைத்த இடத்திற்கு நேரடியாக கூட்டிச் செல்கிற வழிகாட்டி. உங்களுடைய வாழ்க்கையின் திசைகாட்டி. இதுதான் உங்கள் மனச்சாட்சியின் குரல். பலபேர் இந்த உள்உணர்வை முதன்மையானது என்றும், வெற்றிக்கு முக்கியமான காரணி என்றும் எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் உலகத்திற்கு காட்டுவதற்காக வெளி உணர்வுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். அவர்கள் வெற்றிக்கனியை தொட முடியாது. யாரொருவர் உள் உணர்வின் வழிகாட்டுதலின்படி எது சரி என்று தோன்றுகிறதோ, அதன்படி செயல்படுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள.

  1. உங்கள் கண் முன்னே இருக்கிற தேவதைகள்

உங்கள் கவனத்தை பல வழிகளில் பல முறை ஈர்த்தவர்கள், உங்களை கவர்ந்தவர்கள், தன் திறமையால் உங்களால் ரசிக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் உங்கள் கண் முன் இருக்கும் உங்களைக் காக்கும் தேவதைகள். அவர்கள் உங்கள் நண்பர்களும் அல்ல, குடும்ப உறுப்பினர்களும் அல்ல. உங்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல. ஆனால், நேர்மறையாக உங்கள் எண்ணங்களை பாதித்தவர்கள். வெளிவட்டத்தில் அவர்களுடைய அணுகுமுறை, அவர்களுடைய திறமை, அவர்களுடைய உழைப்பு உங்களை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர்கள் உங்களுக்கு குருவாக, ஆசானாக, அமைச்சராக, ஆலோசகராக, வழிகாட்டியாக, வாழ்வை திசை திருப்பும் மாலுமியாக, நண்பராக, பாதுகாவலராக, நல்ல பயிற்சியாளராக உங்களுக்கு வழிகாட்டும் தெய்வமாக அமைகிறார்கள். அவர்கள்தான் உங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறார்கள். அவர்களுடைய அனுபவம் உங்களின் பயண நேரத்தை குறைக்கிறது. உங்களுடைய முழுத்திறமையும் வெளிக்கொணர அவர்களின் ஆலோசனை பயன்படுகிறது.

ஒரு கிரிக்கெட் பந்து வீச்சாளனுக்கு உல்ல பயிற்சியாளர் அமைந்து விட்டால் அந்த பந்து வீச்சாளனுடைய முழுத்திறமையும் வெளிக்கொணர முடியும். அது போல அப்படிப்பட்ட திறமையாளர்களை தொழில் நுட்ப வல்லுநர்களை பயிற்சியாளராகவும், துணைவராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குள் அடங்கியுள்ள முழுத்திறமையும் அவர்கள் வெளிக்கொண்டு வருவார்கள்.

உங்களுக்கு உதவ உங்கள் கண்முன்னே நிற்கும்போது அவரை ஆலோசகர்களா பெறும் பேறினை நீங்கள் அடைய வேண்டும். அவர்களின் ஆலோசனைகளை விரும்பி வேண்டி கேட்டுப் பெறுங்கள். அவர்களுடைய தாக்கம் உங்கள் வாழ்வை மாற்றியமைக்கட்டும்.

  1. இறையருள்

எல்லாவற்றையும்விட, நீங்கள் கற்பனை செய்த பார்க் முடியாத அளவு, நீங்கள் உங்களுடைய பிரார்த்தனைகளின் மூலமாகவும், தியானங்களின் மூலமாகவும், உங்களுடைய இறைசக்தியை மேம்படுத்தி இறையருள் துணையையும், வழிகாட்டுதலையும் பெற முடியும். இறைவனிடம் நீங்கள் எது கேட்கிறீர்களோ அது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைக்கும். நினைத்ததற்கு மாளாகவே உங்களுக்கு எல்லாம் நல்லபடியாகவே அமையும். நன்மைகளும் கூடி வரும்.  “அவனின்றி ஓரணுவும் அசையாது”. “அவனை நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு”. நீங்கள் முழுமையாக இறைவனிடம் சரணடைய வேண்டும். இறையருள் துணை இருந்தால் நடக்காது என்று சொன்னவை எல்லாம் நடக்கும், ஜெயிக்காது என்று சொன்னவை எல்லாம் ஜெயிக்கும், கிடைக்காது என்று சொன்னவை எல்லாம் கிடைக்கும். எல்லா துணைகளை விட இந்த இறையருள் துணை இருந்தால் “தொட்டது எல்லாம் துலங்கும்”, கைபட்டது எல்லாம் விளங்கும், உன்னை அரசு பீடத்தில் அமர வைப்பதும், உன் தலையிலே புகழ் மகுடம் சூட்டுவதும் இறையருள் ஒன்றே. அதற்கு இணையில்லை. ஆதலின் இறைவன் துணையை நாடுங்கள். எல்லா வெற்றிகளையும் அடையுங்கள்.

இன்றிலிருந்து ஒன்றை மட்டும் விட்டுவிடுங்கள். நான்தான் சாதித்தேன், என்னால்தான் இது நடந்தது, என் உழைப்பின்றி அது வந்ததில்லை, என் முயற்சியும், என் திறமையும் தான் இதற்கு அடித்தளம் என்று பேசும் ஆணவத்தையும், அகங்காரத்தையும் விட்டொழியுங்கள். இந்த வெற்றி கூட்டு முயற்சியினால் வந்தது என்று நினையுங்கள். என்னுடைய உள் உணர்வின் குரல், தொழில் சார்ந்த வல்லுநர்களுடைய உதவி. இறையருளின் துணை இவைகள்தான் வெற்றிக்கு காரணம் என்று நினையுங்கள். இதே பாணியில் கூட்டு முயற்சியால் வெற்றி என்று நினைக்க தொடங்க ஆரம்பித்தால், தொடர் வெற்றிகள் உங்கள் வாழ்க்கையை உச்சத்திற்கு இட்டுச் செல்லும். உங்கள் பெயர் வெற்றியாளர்கள் வரலாற்றில் இடம் பெறும். அப்போது நீங்கள் மற்றவர்களுக்கு குருவாக, ஆலோசகர்களாக வழிகாட்டியாக அமைவீர்கள். பலரின் வாழ்க்கை உங்களால் பயனுள்ளதாக அமையும்….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2016

என் பள்ளி
நம் உயர்வுக்காக சில வழிகள்….
பஞ்சதந்திரம் – 7
உயிர் உலைக் கூடம்
வெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு
மாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…
வாய்ச்சொல் வீரர்கள்
சிகரமே சிம்மாசனம்
ஜனநாயகத் திருவிழா – 2016
அமைதி
5 பேருக்கு நன்றி….
தன்னம்பிக்கை மேடை
முடியும் என்று புறப்படு ! ஊர் போற்றப் பெயரெடு !!
உள்ளத்தோடு உள்ளம்