Home » Articles » ஒரு பானை சோற்றுக்கு

 
ஒரு பானை சோற்றுக்கு


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

பெற்றோர்கள் தம் குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட்டு, நல்ல பண்புகளைத் தாம் வாழும் முறையால் போதிக்கும் நிலை இன்று மிகமிகக் குறைந்து விட்டது. இருவரும் சம்பாதிக்கச் செல்வதால் போதிய கால அவகாசம் இல்லை என்பதும், அப்படிச் சம்பாதிப்பதும் அவர்களது வாரிசுகளின் கல்விச் செலவுக்கே என்பதும் பெற்றோர் தரப்பு நியாயம்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார். கல்வி கற்பிப்பவர்களைக் குரு எனக்கூறி, தெய்வமாக வழிபட்ட நிலை இன்று கடந்த காலமாகி விட்டதோ…? கல்வி நிலையங்களில் பணிபுரியும், ஆசிரியப் பெருமக்கள், அங்கு பயிலும் மாணாக்கர்களைத் தம் குழந்தைகளாக பாவித்து பாடங்களுடன், நல்ல பழக்கம் மற்றும் நற்பண்புகளை அன்று சொல்லிக் கொடுத்தனர்.

இன்று, ஆசிரியத் தொழில் என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் பணி போலாகிவிட்டது. ஒதுக்கப்பட்ட பாடங்களில் மாணாக்கர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கே இலக்குகள் இன்று கல்வி நிலையங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.
எல்லா ஆசிரியர்களும் தவறானவர்கள் அல்ல, ஆனாலும், இன்றைய செய்திகள் ஆண் ஆசிரியர்கள் சிலர் பிஞ்சுக் குழந்தைகள், சிறுமிகள், மாணவிகள் என வயது வித்தியாசமின்றி வக்கிர புத்தியுடன் செயல்படுவதாய் தெரிவிக்கின்றன.

என்ன காரணம்…?
1. ஒழுக்கமில்லாதவர்கள், ஆசிரியப் பணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்களா…?
2. பாலியலுக்குத் தூண்டும் வண்ணம் பெண் குழந்தைகளின் நடவடிக்கைகள் உள்ளதா…?
3. ஆண்களின் குடும்பத்தில் அவர்கள் திருப்தி அடைவதில்லையா…?

இதுபோன்ற பல கேள்விகள் மனதில் ஊசலாடுகிறது.

மரியாதைக் குறைவாய் மாணாக்கர்களை நடத்தவில்லை. ஒவ்வொரு மாணாக்கரின் குடும்பநிலை, பெற்றோர் வருமானம் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருந்தனர். மாணாக்கர்களிடம் ஒழுக்கக் குறைபாடு கண்ட இடத்திலேயே கடுமையான தண்டனை வழங்கினர். இது, பெற்றோர்களுக்கு, அவர்களது கடமையை நினைவூட்டியதுடன், மற்ற மாணாக்கர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்தது.

ஆசிரியர்களுக்கு சமுதாயம் சிறப்பான அங்கீகாரத்தை அளித்தது. நல்ல ஆலோசனைகள் சொல்பவராக அன்றைய ஆசிரியர்கள் வாழ்ந்தனர். ஒவ்வொரு மாணாக்கரின் எதிர்கால வாழ்விலும் தனி அக்கறை செலுத்தினர்.

கல்வி நிலையங்கள் எல்லாமே அரசாங்கம் நடத்துவதாய் அமைந்தன. அன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள் நல்ல பண்பாளர்களால் சமுதாய சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்டாலும், அரசாங்கம் நிதி உதவி செய்தது. எனவே, வாணிபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

கல்விப்பணியில் தனியாக ஈடுபடலாம் என்று எப்போது விதி தளர்த்தப்பட்டதோ, அப்போது தொழிலாக இது மாற்றப்பட்டு விட்டது.

இதற்குக் காரணம் அரசாங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். கல்விக்கூடங்களை நடத்த தனியாருக்கு அனுமதி அளித்ததில் ஊழல் ஆரமிபித்தது. இன்று புரையோடிய நிலையில் உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நீண்ட தூரம் சென்று விட்டதைப் பார்க்கிறோம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2016

கல்லறையா வகுப்பறையா
ஆட்டிசம்
இளைய தலைமுறையின் தற்போதைய ஒழுக்கக் குறைவுக்கு காரணம் என்ன?
வெற்றி உங்கள் கையில்-26
ஒரு பானை சோற்றுக்கு
சொல்வெட்டு

உள்ளத்தோடு உள்ளம்