Home » Articles »

 


ஆசிரியர் குழு
Author:

ஒரு மகனை பெற்ற தந்தையாய் உங்களிடம் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். நவநாகரீகம் என்றபெயரில் நிறைய பிள்ளைகள் வழிதவறியப் பாதையில் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற பெற்றோர்களான நாங்கள் என்ன செய்ய வேண்டும்…?

இராமலிங்கம்

சேலம் மாவட்டம்.

பிள்ளைகள் பெற்ற சில பெற்றோரின் கவலை உங்களிடத்திலும் இருக்கிறது. இது நியாயமான கவலைதான் என்றாலும் நாகரீகம் என்ற பெயரில்தான் பிள்ளைகள் வழி தவறிய பாதையில் பயணம் செய்கிறார்கள் அல்லது பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள் என்று நினைப்பது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். நாகரீகம் என்பது நல்லது, அநாகரீகம் என்பது கெட்டது.

இன்று அதிகமாக கல்லூரிகள் வந்துவிட்டன. அதிலும் பொறியியல் கல்லூரிகளே 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள். கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் பாதிப்பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பதுதான் உண்மை. ஆக பொறியியல் பட்டம் வாங்கி விட்டாலும் இவர்களுக்கெல்லாம் ஒரு நியாயமான வேலை கிடைக்குமா என்றால் அது கிடைக்காது என்ற பதிலைத்தான் வல்லூநர்கள் தருகிறார்கள். ஒரு சில கல்லூரிகளில் படிக்கும்  ஒரு சில மாணவ, மாணவியருக்குத்தான் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். மற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் பட்சத்தில் குறைவான அளவு சம்பளம் கிடைக்கும். அனேகருக்கு வேலை கிடைக்காது என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை. ஏன் வேலை கிடைக்காது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அது (அ) வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. (ஆ) இந்த மாணவர்களுக்கு வேலை தெரியாது என்பது. ஆக பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லை, சம்பளம் இல்லை, சுயமாக வேலை தொடங்கவோ அல்லது நடத்தவோ திராணி இல்லை என்பதை நினைத்து ஒரு தகப்பனார் கவலைப்படலாம் அல்லது பீதியடையலாம். அது நியாயமானது. இதுதான் உண்மையான பிரச்சனை.

நாகரீகம் என்றபெயரில் பிள்ளைகள் வழிதவறிப் போய்விடுவார்கள் என்றகவலை நம்போன்ற பெற்றோருக்கு உண்டு. நாகரீகம் என்று எதைச் சொல்கிறோம்…? புகைப்பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்றவற்றைக் கூறுகிறோம். ஆனால், இவை அனைத்தும் நாகரீகத்தின் அடையாளங்கள் அல்ல…! இவை நமது சமுதாயத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்த அநாகரீகம். வெற்றிலை பாக்கு சாப்பிட்டார்கள், கள் அருந்தினார்கள், குழந்தைகளுக்கு திருமணம் செய்தார்கள்; இவை அனைத்தும் நாகரீகம் இல்லாத காலத்தில் சாதாரணமாக நடந்தவைகள்தான். இன்னும் பல மோசமான பழக்கங்கள் கூட இருந்தது. ஆனால், அவற்றை சொல்வது நாகரீகம் ஆகாது என்பதால் நான் சொல்ல முன்வரவில்லை. ஆக, நீங்கள் கூறும் வழிதவறிய பாதை என்பது இன்றைய நாகரீகத்தால் ஏற்பட்டது என்று சொல்வது தவறானது. அது எல்லா காலத்திலும் இருக்கிறது. எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறது.

நாகரீகம் என்ற பெயரில் பல நல்ல காரியங்கள் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. அவற்றை வரவேற்போம்.

நாகரீகமானவர்கள் உலகில் எங்கு வேண்டுமென்றாலும் போக முடிகிறது; யாரையும் சந்தித்துப் பேச முடிகிறது. அவர்களோடு வியாபாரம் செய்ய முடிகிறது. உலக பிரஜைகள் ஆகிவிடுகிறார்கள்.

நாகரீகமானவர்கள் கழிவறையை உபயோகிக்க கற்றுக்கொண்டோம். எனவே, நோய் நொடி இல்லாமல் சுகாதாரமாகவும், சுகமாகவும் வாழக்கற்றுக்கொண்டோம்.

நாகரீகமானவர்கள் நோய் என்று வந்தால் விஞ்ஞான மருத்துவத்தை நாடி நோயை குணப்படுத்திக் கொள்கிறோம்.

நாகரீகமானவர்கள் விஞ்ஞான விவசாயத்தைக் கற்றுக்கொண்டு அதிக விளைச்சலைப் பெறுகிறோம். 126 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்கிறோம். இன்னும் அற்புத நாகரீக விவசாயத்தை இஸ்ரேலியர்கள் செய்கிறார்கள்.

நாகரீகத்தால் எந்த உணவு எவ்வளவு தேவை என்பதை அறிந்து கொண்டு உடல் நலம் பேணுகிறோம். உடற்பயிற்சி செய்கிறோம்.

நாகரீகம் வந்த பிறகு நரபலி, நோய் வந்ததும் உடலின் ஒரு பகுதியை வெட்டி எறிதல் போன்ற மோசமான பழக்கங்களைக் கைவிட்டு விட்டோம்.

இருப்பினும் நாகரீகம் தழைத்தோங்கும் பல நாடுகளில் வாழும் மக்களின் நாகரீகத்தை நாம் இன்றும் புரிந்து கொள்ளவும் இல்லை. அவற்றை கடைப்பிடிக்கவும் இல்லை. அதென்ன…? நாகரீக மக்களின் பழக்கங்கள் நமக்கு தெரியாதவை அல்லது புரியாதவை என்று கேட்கிறீர்களா…? உலகில் முன்னேறி விட்ட மக்கள் பின்பற்றி, நாம் பின்பற்றாத சில நாகரீகங்களை இங்குப் பார்ப்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2016

கல்லறையா வகுப்பறையா
ஆட்டிசம்
இளைய தலைமுறையின் தற்போதைய ஒழுக்கக் குறைவுக்கு காரணம் என்ன?
வெற்றி உங்கள் கையில்-26
ஒரு பானை சோற்றுக்கு
சொல்வெட்டு

உள்ளத்தோடு உள்ளம்