Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

என்.கே.வேலு

கூடுதல் காவல் துறை

கண்காணிப்பாளர் (பணி நிறைவு)

கோவை மாவட்டம் பல்லடத்திற்கு அருகிலுள்ள கரடிவாடி என்னும் கிராமத்தில் தான் பிறந்தேன். பெற்றோர் நாச்சிமுத்து ராமாத்தாள் மிகவும் ஏழ்மையான குடும்பம். வறுமையின் வாசனை தினம் தினமும் எங்கள் வீட்டில் வீசிக்கொண்டே இருந்த சூழல் அது. இதனால் பள்ளியில் சேர முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டது. 5 வயதில் சேர வேண்டிய பள்ளிப்படிப்பு எனக்கு மட்டும் 7 வயதில் தான் கிடைத்ததது.

பள்ளிப்படிப்பைப் படிக்க வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் இருந்ததால் படிப்பின் மீது ஆர்வம் அதிகயளவில் ஏற்ப்பட்டது .இதனால் குனியமுத்தூர் அரசு ஆரம்பப்பள்ளியில் படித்தேன்.  குடும்பம் வறுமையாக இருந்தாலும் என்னை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை என் பெற்றோர்களுக்கு அதிகமாக இருந்தது. இதனால் சின்ன வயதிலிருந்தே படிப்பை ஒரு துடிப்போடு படிக்கத் தொடங்கினேன்.

ஆசிரியர்களும் எங்களுக்கு நல்லதொரு ஊக்கத்தைக் கொடுத்தார்கள். குறிப்பாக திரு.நாராயண சம்பந்தர், திரு.துரைசாமி நாயுடு அவர்களின் அனுபவத்தை எங்களிடம் வகுப்பில் சொல்லும் பொழுது இவர்களைப் போலவே சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்க வைத்தது.படிக்கின்ற காலத்திலேயே படிப்பிற்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் கொடுத்தேன்.

பி.யு.சி வரை கோவையிலேயே படித்தேன். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்ப்பட்டது. ஆசையை என் பெற்றோர்களிடம் சொன்னேன் அவர்களும் என் ஆர்வத்தைப் பார்த்து படிக்க வைக்க சம்பதித்தார்கள். இதனால் பட்டப்படிப்புப் படிக்க பெங்களூரு சென்றேன்.

கல்லூரி வாழ்க்கை மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சிவுடனும் அமைந்தது. அங்குப் பணியாற்றிய ஆங்கிலப் பேராசிரியர் கோபால கிருஷ்ணன் அவர்கள் பாடம் நடத்தும் விதம் எங்களுக்கு மிகவும் பிடிக்கும், அவர் வகுப்பில் பாடத்தை நாடகமாக நடத்திக்காட்டி விளக்குவார். இந்த முறை எல்லாருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

எனக்கு சின்ன வயதிலிருந்தே காவல்துறையின் மீது அளப்பறியாப் பற்று இருந்தது. நிச்சயம் போலிஸ் ஆகி நிறைய நம்மைகள் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்குள் எப்பொழுதும் இருந்தது. இதனால் காவல் துறை குறித்து அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்றேன். அப்பொழுதுலாம் தேர்வு மிக நேர்மையாக நடைபெறும்.

1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் இத்தேர்வில் கலந்து கொண்டார்கள். இதில் 50பேர் மட்டுமே இறுதிக்கட்டமாக தேர்ச்சிப் பெற்றோம். தேர்ச்சிப் பெற்றவுடன் சேலம் அருகிலுள்ள தலைவாசலில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்தேன்.

இங்குப் பணியாற்றிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்டத்ததில் பணியில் சேர்ந்தேன். பின்னர் பணி உயர்வு, பணி இடமாற்றம் என்று ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினேன். ஆரம்பக்காலத்தில் பெரிய அளவில் லஞ்சம் குற்றங்கள் கிடையாது, நாளடவில் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தான் தவறுகள் அதிகரிக்கத் தொடங்கியது.

லஞ்சம் தலை விரித்து ஆடும் இந்த நாட்டில் நான் எனது குடும்பம், எனது குழந்தைகள் என்று தன் முன்னேற்றத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் நாடு நிச்சியம் முன்னேற்றம் அடையாது. ஒவ்வொருவரும் தவறுகள் தன் முன்னே நடந்தால் நிச்சயம் தட்டிகேட்க வேண்டும் லஞ்சம் கேட்டாலோ அரசாங்கத்தில் கேட்கும் வேலைகளில் தாமதப்படுத்தினாலோ எங்கள் இயக்கத்தை அணுகினால் இந்தப் பிரச்சினை முடித்துத் தரப்படும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2016

என் பள்ளி
நம்மை நகர்த்தும் நம்பிக்கை
வந்தோரை வாழவைக்கும் வாழ்வியல் பூங்கா
இளமையின் அவசியம்
இள வயதில் உடல் பருமன்
ஆன்மீகம் அறிவோம்
பயன்பட வாழ உறுதி எடு! பாரதம் போற்றப் பெயர் எடு!!
பிரச்சனைகள் தரும் பாதிப்புகள்
பாரிஸ் பருவநிலை மாநாடு-2015
சின்னச் சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா?
ஒரு பானை சோற்றுக்கு
மழை
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்