Home » Articles » பாரிஸ் பருவநிலை மாநாடு-2015

 
பாரிஸ் பருவநிலை மாநாடு-2015


மனோகரன் பி.கே
Author:

உலகம் பருவநிலை மாற்றம்” குறித்த ஐ.நா.வின் 21-வது சர்வதேச மாநாடு அண்மையில் 2015 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். புவி வெப்பம் அதிகரித்து வருவதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காகவும் 1992ம் ஆண்டு முதல் ஐ.நா. நடத்திவரும் பேச்சுகள் முடிவுக்கு வந்துள்ளன. முதன் முறையாக ஒரு உலகளாவிய உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இத்தருணத்தில் மாநாட்டிற்கு முன்பு இதுவரை நடந்தவற்றையும், மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் குறித்தும் விளக்குவதே கட்டுரையின் நோக்கம்.

வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உள்ளிட்ட சில வாயுக்களின் அளவு அதிகரிப்பதன் காரணமாக பூமியின் சராசரி வெப்ப அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதைத்தான் “குளோபல் வார்மிங்’ என்கிறோம்.

பூமிக்கு ஒளியையும் வெப்பத்தையும் சூரியன் தருகிறது. பூமிப்பரப்பில் எழுகிற வெப்பம் மீண்டும் விண்வெளிக்கே அனுப்படுகிறது. இயற்கையாக விண்வெளிக்கு அனுப்படும் வெப்பக்கதிர்வீச்சை இடைமறித்து மீண்டும் பூமிக்கே திருப்பி அனுப்பி விடுகிற வேலையயை பூமியிலிருந்து வெளியாகின்ற சில வாயுக்கள் செய்கின்றன. இவ்வாயுக்கள் “பசுமை இல்ல வாயுக்கள்’ எனப்படும்.

காற்று மண்டலத்தில் இடம் பெற்றுள்ள பசுமை இல்ல வாயுக்கள் பெரும்பாலும் செல்வந்த நாடுகளின் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளினால் உருவானவையாகும். இவை ஒரு பரந்த போர்வை விரிப்பு போல இருந்து கொண்டு புவியின் மேற்பரப்பில் எழும் வெப்பத்தை வெளியேற்றாமல் தடுத்து விடுகிறது. இதன் காரணமாக புவியின் காற்றுமண்டல வெப்பம் அதிகரிக்கிறது. இதனை  ‘பசுமை இல்ல’ விளைவுகள் ( கிரீன் ஹவுஸ் எஃபக்ட்) என்கிறோம்.

பூமி வெப்பமடைந்து வருவதன் காரணமாக இரண்டு துருவப்பனிப்பாறைகளும் உறுகத் தொடங்கி விட்டன. இதன் காரணமாக கடல் மட்டம் உயருகிறது. பூமியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கடல் நீர் சூடாவதின் காரணமாக மேலும் கடல் மட்டம் உயருகிறது.

இந்த நிலை தொடருமேயானால் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளை விழுங்கி விடும் அபாயம் உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க், மன்ஹாட்டன் தீவுகள், புளோரிடாவின் புகழ்பெற்றகடற்கரை நகரமான மியாமி, நெதர்லாந்து, கொல்கத்தா, வங்கதேசத்தின் சில பகுதிகள் ஆகியன கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்தப் பேராபத்து குறித்து பல்லாண்டு காலமாக உலகளவில் பல மாநாடுகளும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

ரியோடிஜெனிரோ மாநாடு ( 1992)

முதன் முதலாக தென்அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் ரியோடிஜெனிரோவில் 1992  ல் ‘புவி உச்சி மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டில் பசுமைப்பாதுகாப்பு பற்றியும், வெப்பத்தாக்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதில் தட்பவெப்பம் குறித்து தீர்மானம் ஒன்றை ஐ.நா., வெளியிட்டது.

அதில் புவிவெப்பத்துக்கு செல்வந்த நாடுகளான வளர்ச்சியடைந்த நாடுகள்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. மேலும், ஏழை நாடுகளான வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியில் அக்கறைகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதனால், அத்தகைய நாடுகள் புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ நாட்டின் நலத்திற்கு உகந்ததாக அமையாது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆக, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமை வளர்ச்சியடைந்த நாடுகளையே சார்ந்தது என்று சொல்லாமல் சொல்லியது அந்தத் தீர்மானம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2016

என் பள்ளி
நம்மை நகர்த்தும் நம்பிக்கை
வந்தோரை வாழவைக்கும் வாழ்வியல் பூங்கா
இளமையின் அவசியம்
இள வயதில் உடல் பருமன்
ஆன்மீகம் அறிவோம்
பயன்பட வாழ உறுதி எடு! பாரதம் போற்றப் பெயர் எடு!!
பிரச்சனைகள் தரும் பாதிப்புகள்
பாரிஸ் பருவநிலை மாநாடு-2015
சின்னச் சின்ன விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமா?
ஒரு பானை சோற்றுக்கு
மழை
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்