December, 2015 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2015 » December (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  சனி வரமா? சாபமா?

  ஏழரை நாட்டுச் சனி என்பது இன்றல்ல, என்றும் பலரது புலம்பலாகவே உள்ளது. இது என்ன? இதனால் நமக்கு வரும் நன்மை, தீமை என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

  வானியல் (ASTRONOMY)  வானியல் என்பது வானத்தைப் பற்றிய தகவல்கள் ஆகும். இதை வானசாஸ்திரம் என்றும் சொல்கிறோம். அந்தரத்தில் மிதந்து கொண்டு, தன்னைத் தானே சுற்றிக் கொண்டுள்ள சூரியன், சில கோள்களையும் (PLANTS) சேர்த்துப் பிடித்துக் கொண்டுள்ளது.

  தன்னோடு அந்த கிரகங்களையும் இழுத்துக் கொண்டே சுற்றுகிறது. சூரியன் 25 நாட்களுக்கு ஒருமுறை தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. இதுபோல் பல சூரியன்கள் வானத்தில் உள்ளன. அவைகள் வெகு தூரத்தில் இருப்பதால், நமக்கு நட்சத்திரங்களாகக் காட்சியளிக்கின்றன.

  சூரியனை நீள்வட்டப்பாதையில் முறையே புதன் (மெர்க்குரி), சுக்கிரன் (வீனஸ்), பூமி (எர்த்) அங்காரகன் (செவ்வாய் or மார்ஸ்), குரு (ஜூபிடர்), சனி ஆகியன சுற்றி வருகின்றன.

  இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதுடன், சூரியனையும் சுற்றி வருகின்றன.

  இவற்றின் சுழற்சி, இதனால் உண்டாகும் சூரிய உதயம், அஸ்தமனம், சூரிய-சந்திர கிரஹணங்கள் முதலியவைகள் சிறிதும் பிசகாமல் சரியாக நடைபெறுவதைக் கணக்கிட்டுக் கூறுவதுதான் வானசாஸ்திரம்.

  பூமியும் சனியும் : பூமியானது சூரியனிலிருந்து சுமார் ஒன்பது கோடி மைல் தொலைவில் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. தன்னைத் தானே 24 மணி நேரத்துக்கு ஒருமுறை சுற்றிக் கொள்கிறது. சூரியனை மையமாக வைத்துச் சுழல்வதால் 12 மணி நேரம் சூரியனைக் காண்கிறோம். இதுதான் பகல். அடுத்த 12 மணி நேரம் நாம் இருக்கும் பூமிப்பகுதியின் பின்புறம் சூரியன் இருப்பதால் இருட்டில் இருக்கிறோம்; இதுதான் இரவு.

  இதே பூமி ஒன்றுக்கு 15 1/2 இலட்சம் மைல்கள் சூரியனைச் சுற்றி  ஓடி ஓடி, ஒருமுறை முழுதாகச் சுற்றி வர 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதை வருடம் என்று கூறுகிறோம்.

  பூமியிலிருந்து சனி சுமார் 79 கோடி மைல் தொலைவில் உள்ளது. சூரியனிலிருந்து இத்தூரம் சுமார் 88 கோடி மைல்களாகும். சனி சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 30 ஆண்டுகளாகும்.

  இந்த இதழை மேலும் படிக்க

  ஞாலம் வரைந்த கவிதை ஓவியம் புத்தகமே!

  புத்தகம் என்பது இதயங்களின் காதல் கவிதை. மகிழ்ச்சியை நடவுச் செய்யும் இலக்கிய நாற்றாங்கால். தூரத்தில் இருப்போரையும் அருகே வந்து அரவணைக்கும் இதயக்குளிப்பு.

  “”ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும் என்பார்” ஹென்றி டேவிட் தோரோ. “”ஒருவன் மரணமடைவதற்கு முன்பு பத்தாயிரம் புத்தகங்களை படித்திருக்க வேண்டும்” என்பது சீன நாட்டின் பழமொழி. பழமொழிக்கு என் தலையின் தாழ்ந்த வணக்கங்கள்.

  “புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறைபோன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கிறது” என்பார் சிந்தனையாளர் “பிளேட்டோ’.

  புத்தகம் சில பொழுதை போக்கும்; சில பொழுதை ஆக்கும்

  புத்தகம் சில கரைய வைக்கும்; சில உறைய வைக்கும்

  புத்தகம் சில எழ வைக்கும்; சில அழ வைக்கும்

  புத்தகம் சில பொங்க வைக்கும்; சில தங்க வைக்கும்

  புத்தகம் சில வாழ்க்கையைச் சொல்லும்; சில வாழ்ந்திடச் சொல்லும் என்று தற்போது நான் எழுதிய சில வரிகளை ஈரங்காயாமல் இறக்கி வைக்கிறேன்.

  புத்தகத்தோடு பொழுது நடத்திய வாசிப்போடு வாழ்க்கை நடத்திய தன் புத்தக அறைக்கு ‘மனநல மருத்துவ நிலையம்’ என்று பெயர் சூட்டினான் “பாரோ’ என்ற எகிப்து நாட்டு இலக்கிய அரசன்.

  “தோழனே

  இது புத்தகமல்ல

  இதைத் தொடுபவன்

  என்னையே தொடுகிறான்

  நீயும் நானும் நெருக்கமாகிறோம்.

  இதோ…

  இதன் பக்கங்களிலிருந்து

  உன் கரங்களுக்குத் தாவுகிறேன்” என்று அமெரிக்க கவிஞன் வால்ட் விட்மன் “புல்லின் இதழ்கள்’ கவிதையில் தன் இதழ் பதித்து எழுதியிருப்பான். “”தினமும் எவரும் படிக்காததை படியுங்கள். யாரும் சிந்திக்காதவற்றைச் சிந்தியுங்கள். எப்பொழுதும் ஒருமித்த கருத்தின் அங்கமாக இருப்பது என்பது மனதிற்கு கெடுதல்” என்பார் கிறிஸ்டோபர் மோர்லே.

  புத்தகத்தில் எழுதப்படுவை வெறும் கிறுக்கல்கள் அல்ல; அவை உலக வரலாற்றையே புரட்டிப்போட்டிருக்கிறது. மானுட தர்மத்தின் மகிமைகளைப் புத்தகங்கள் சில புரிய வைத்திருக்கிறது. விஞ்ஞானத்தின் விந்தைகளை விவரித்திருக்கிறது. காகிதத்தில் சில கவிதைகளை இறக்கி வைத்து இதயங்களின் இணைப்புப் பாலம் நடத்தியிருக்கிறது. மர்மம் நிறைந்த சில முடிச்சுக்களை அவிழ்த்திருக்கிறது. வாழ்க்கை வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும் உரியவை என்பதை புரிய வைத்திருக்கிறது.

  புத்தகத்தில் இருப்பவை தாள்கள் அல்ல; அவை இதயம். இது காகிதமல்ல; காகித விருட்சம். இது ஆர்ட்டீசியன் ஊற்று அல்ல; இதய ஊற்று. காலம் வரைந்த கவிதை ஓவியம். கற்பனைக்கும் எட்டாத ஞாலப்பை. எழுத்து யாகம்; எழுத்து வேள்வி; எழுத்து ஒரு தவம்! மக்களுக்கான எழுத்துதான் புனிதமாகும். மக்களுக்காக பேசும்போதுதான் அது இதயமாகும். எங்கே கலையழகோடு எழுத்துத்தேர் புறப்படுகிறதோ அங்கேதான் மானுடம் தழைக்கிறது; புதிய பூபாளத்திற்கான கதவு திறக்கப்படுகிறது. புதிய விடியல் பிறக்கிறது. என்னைப் பொறுத்தவரை எழுத்தை நான் எழுத்தாகப் பார்க்கவில்லை; காதலி தரும் முதல் முத்தமாகவே நினைத்து கரைந்து உருகிறேன்.

  இந்த இதழை மேலும் படிக்க

  பூச்சரம்

  பூக்கள் எல்லா தேசங்களிலும் ஆராதிக்கப்படுகின்றன.

  மலர்கள் மனம் முழுதும் மணம் வீச செய்கின்றன.

  பூந்தோட்டங்கள் பாரெங்கிலும் பாராட்டப்படுகின்றன.

  பூங்கொத்துக்கள் இல்லத்தோறும் ஆராதிக்கப்படுகின்றன.

  அவசர உலகில்கூட அவ்வப்போது பூச்சரங்கள் குறுக்கிடுகின்றன.

  சற்றே சில நிமிடம் நிதானித்தால் அவற்றின் அருமையை உணர முடிகின்றது. எழுதுவதும் படிப்பதும் போல பூக்களைப் பார்ப்பதே புண்ணியம் என்றுகூட சொல்லிவிடலாம். நிறைய மலர்கள் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன. சமீபத்தில் கதிரேசன் சென்னை புறநகரில் ஒரு பிரம்மாண்டமான திருமண விழாவிற்கு சென்றிருந்தார். விடிந்தால் திருமணம். உடன் விநாயகர் சதுர்த்தியும் கூட. மண்டபத்திற்கு வருகின்ற கார்களின் சரவரிசையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, ஆறுமணிக்கே மண்டபத்திற்கு சென்றுவிட்டார். ஆனால், பந்தியில் கை நனைத்துவிட்டு திரும்பும்போது மற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் அவர் வாகனத்தை எடுக்க சிரமப்பட்டது, தனி கதை. கொஞ்சம் நிதானமாக கதிரேசன் மண்டபத்தில் ஒரு ஓரமாக அமர்ந்தார். அப்பொழுது அந்த வழியாக மணமக்களின் மாலை கொண்டு வரப்பட்டது. அதை அருகே சென்று பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

  அந்த பூச்சரம் மல்லிகை மொட்டுக்களால் கோர்க்கப்பட்டு இருந்தது. கொஞ்ச நேரம் அல்ல…. நிறைய நேரம் உற்று பார்க்கும் அளவு வேலைப்பாடு. அந்த மல்லிகை மலர் மொட்டுக்கள் இன்னும் மலராதவை. அவற்றின் தண்டுவழியே மிக மெல்லிய நைலான் இழை செலுத்தப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இடையே ரோஜா மலர்களை பொருத்தி பூச்சரம் பூமாலையாக மாற்றப்பட்டு இருந்தது. எவ்வளவு நேர்த்தியான பணி. அதற்கு தகுந்தவாறு பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாலையாம் அது. மணமக்களை பார்க்கவும், வாழ்த்தவும் வருபவர்கள், கதிரேசன் போல, சுமார் அரைமணி நேரம் மாலையை ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கும் குறைவாக அந்த திருமணத்தில் இருந்த மலர் அலங்காரத்தை இரசிக்கும் வழியே இல்லை. அதற்குரிய மனப்பாங்கோடு மெல்லிய மலராய் மனதை பராமரிக்கும் கலை இன்றைய விமானப் பயண வேக உலகில் உள்ளதா? என்று பூச்சரம் வினவியது.

  அதற்கான பதிலை அப்புறம் கேட்போம்.

  உங்களுக்கு பிடித்த மலர் எது என்று கேட்டால்…

  பதில் சொல்லுமுன்பு. பல மலர்கள் வரிசையில்

  வந்து மனதில் அணி வகுக்கலாம்….

  செங்காந்தள் மலர் தமிழகத்தின் மாநில மலர். தாமரை தேசிய  மலர். அதுதவிர ரோஜா முல்லை மல்லிகை என வாசனைகளில் மதுரமயமான மனநிலையை உருவாக்கும் பூக்களின் வரிசை தனி.

  இவை தவிர கதிரேசனின் மனதில் வந்த மலர்கள் பப்பாளி மலர், மாங்கனி மலர், மக்காச்சோள மலர். மலர்களிலும், ஆண்கள் இருக்கிறார்கள் என்றும் கவிஞர் கதிரேசனுக்கு தெரிய வந்தது. விலங்கியலில் முதுகலை பெற்றவர்கள், தாவரவியலின் தனித்தன்மையோடு முதல்முறை ஸ்பரிசிக்கும் பொழுது ஒரு தினுசாகத்தான் இருக்கிறது.

  தன்னம்பிக்கை மேடை

  அப்துல்கலாம் ஐயாவின் கனவான 2020யில் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்பதுதான். அவரின் கனவை நிறைவேற்றவேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருக்கிறது. இதற்கு என்னென்ன தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  விஸ்வநாதன்

  நீலகிரி மாவட்டம்

  பாரத ரத்னா அப்துல்கலாம் அவர்கள் உங்களைப் போன்ற இளைஞர்களைப் பார்த்து “கனவு காணுங்கள்” என்றார். இந்தியாவை 2020ம் ஆண்டு ஒரு வல்லரசாக்க வேண்டும் என்றும் கூறினார். இன்னும் ஐந்தே ஆண்டுகள் உள்ள நிலையில், நம்மால் வல்லரசாகிவிட முடியுமா…? என்று சில இளைஞர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களது சந்தேகம் நியாயமானதுதான்.

  “இந்தியா 2020” என்ற நூல் அவர் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்கும் முன்னர் எழுதிய நூல் ஆகும். அதில், இந்தியாவின் பலவீனம் மற்றும் பலத்தை ஆராய்ந்து, 2020ம் ஆண்டு உலகின் 4வது முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இந்தியா என்றஇலக்கினை அடைய சில வழிமுறைகளை வகுத்திருக்கிறார்.

  இந்த நூல், மற்றநாடுகள் தங்களின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான இலக்கை வகுத்துள்ளனர், 2020ம் ஆண்டு தொழில்நுட்பம், உணவு, இரசாயனம், உற்பத்தி, தயாரிப்பு, தொழிற்சாலை, சுகாதாரம், உடல்நலம் ஆகியவற்றில் இந்தியா வல்லரசாவது எப்படி…? என்றெல்லாம் விவரமாக தெரிவித்திருக்கிறார். அதோடு, இது வெறும் கற்பனையல்ல, சாத்தியமாகும் லட்சியம்தான் என்றும், இதை நாம் செயல்படுத்தலாம்; வெற்றியும் காணலாம் என்றும் கூறியிருக்கிறார்.

  சரி, இனிமேல் உங்கள் கேள்வியின் பதிலுக்கு வருவோம்…! வல்லரசு என்று எந்த நாடுகளைச் சொல்கிறோம்…? முதல் நான்கு வல்லரசு நாடுகள் என்று அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை எடுத்துக் கொள்வோம். (நார்வே, சுவிட்சர்லாந்து, ஸ்விடன், தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்கங் ஆகிய நாடுகள் வல்லரசு இல்லை என்றாலும் இந்த நாட்டு மக்கள் நல்ல உயர்ந்த வாழ்க்கை  தரத்ததுடன் வாழ்கிறார்கள்  என்பது வேறு விஷயம்)

  அ) சில நாடுகளை ஏன் வல்லரசு என்கிறோம்?

  • இந்த நாடுகளில் தனிமனித வருமானம் அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் தனிமனித வருமானம் 35 லட்சம்; ஜெர்மனி – 30 லட்சம்; சிங்கப்பூர்  53 லட்சம்; ஜப்பான் – 24 லட்சம். இந்தியாவின் தனிமனித வருமானம்  3.7 லட்சம். இந்தியாவில் கொளுத்த பணக்காரர்கள் இருப்பதால், அவர்களின் வருமானத்தையும் சேர்த்துக் கூட்டி சராசரி வருமானத்தைக் கணக்கிட்டு இருப்பதால், இந்த 3.7 லட்சம் என்பது எல்லா இந்தியருக்கும் ஆண்டுக்கு 3.7 லட்ச வருமானம் என்ற பொய்த் தோற்றத்தைத் தரும். ஆனால் அடித்தட்டு மக்களின் வருமானம் இதை விட மிகக்குறைவு. அப்படி பரம ஏழைகள் கோடிக்கணக்கில் இருக்கும் நாடுதான் நம் நாடு.
  • வல்லரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி இருக்கிறது. அதுவும் தரமான கல்வி இருக்கிறது.
  • வல்லரசு நாடுகளில் பொருள் உற்பத்தி (Production) அதிகம். விமானம், கப்பல், கார், மருந்து போன்றவற்றைத் தயாரித்து மற்றநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
  • இந்த இதழை மேலும் படிக்க

  உள்ளத்தோடு உள்ளம்

  இரண்டு ரயில் தண்டவாளம். ஒன்றில் இரயில் வராது. இன்னொன்றில் இரயில் வந்து போகும். இரயில் வராத தடத்தில் ஒரு குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருக்கிறது. இரயில் வரும் தடத்தில் பத்துக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

       இந்தக் காட்சியை தூரத்திலிருந்து பார்க்கிறோம். அந்நேரம் இரயில் வருகிறது. வரும் இரயில் தடத்தை மாற்றும் கருவி நம் அருகாமையில் இருக்கிறது. அப்போது நாம் என்ன செய்வோம் ஒரு குழந்தையா? பத்துக் குழந்தைகளா? என்று யோசித்து விட்டு, இரயில் வராத தடத்தில் விளையாடும் ஒரு குழந்தையின் உயிர் போனால் போகட்டும் என்று தடத்தை மாற்றி விடுவோம் இரயில் வரக்கூடும் என்று தெரிந்தே தவறு செய்து விளையாடிய குழந்தைகள் காப்பாற்றப்பட்டு விடுகிறது.

       தெரிந்தே தவறு செய்து வருபவர்கள் காப்பற்றப்படுகிறார்கள். நல்லது செய்யும் “தனிமனிதர்’ தண்டிக்கப்படுகிறார் என்கிற இந்நிலை மாறுகிறபோதுதான் ஏற்றத்தாழ்வின்றி எல்லோருக்கும் “உயர்நிலை’ உரித்தானதாகும்.

  வாழ்வெல்லாம் வெற்றிதான்

  தஞ்சாவூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், சோழமண்டல சாரிட்டபிள் டிரஸ்ட்

  மற்றும் ஆனந்த் சுகமான உள்ளாடையுடன் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 20.12.2015; ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : மாலை 5-00 மணி முதல் 8.00 மணி வரை

  இடம் : பெசன்ட் அரங்கம் AC ஹால், தஞ்சாவூர்

  தலைப்பு   :”வாழ்வெல்லாம் வெற்றிதான்”

  சிறப்புப் பயிற்சியாளர்: JC.HGF.S. வைரமணி ங.A M.Ed.M.Phil ஊக்குவிப்பு பயிற்சியாளர், பெரம்பலூர் 9442082152

  தொடர்புக்கு:

  திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  95972 85160

  திரு. டோமினிக் சேகர்  9845353113

  ஜெயிப்பது நிஜம்

  கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம்

  வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 27.12.2015; ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : மாலை 6 மணி

  தலைப்பு   : “ஜெயிப்பது நிஜம்”

  சிறப்புப் பயிற்சியாளர்: JC.HGF.S. வைரமணி M.A M.Ed.M.Phil

  ஊக்குவிப்பு பயிற்சியாளர்,

  பெரம்பலூர் 9442082152

  இடம் தொடர்புக்கு:

  திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  95972 85160

  திரு. தர்மர்  97880 41089

  வாழப் பழகுவோம்

  சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும்  சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 27.12.2015; ஞாயிற்றுக்கிழமை

  நேரம் : காலை 10.30 மணி

  இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

  4 ரோடு, சேலம்-7.

  தலைப்பு   :”வாழப் பழகுவோம்”

  சிறப்புப் பயிற்சியாளர்: நம்பிக்கை நாவரசு ச.கோபிநாத் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், சேலம்.

  செல் : 9790231240

  தொடர்புக்கு:

  Jc. G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

  விவசாயி மகன்

  பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 11.12.2015; வெள்ளிக்கிழமை

  நேரம் : மாலை 6 மணி

  இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

  திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

  தலைப்பு   : “விவசாயி மகன்”

  சிறப்புப் பயிற்சியாளர்: Jc. M. பிரவீன், DCE

  JCI மண்டல பயிற்சியாளர், ஈரோடு.

  செல்: 94422 32038.

  தொடர்புக்கு:

  ஒருங்கிணைப்பாளர்: திரு. சீனிவாசன் செல்: 98435 45986

  இணைச் செயலாளர்:திரு. M. ராதாகிருஷ்ணன் செல் : 99657 95856

  PRO: JC. வைரவேல் – 73733 33777

  இன்றைய தமிழ்

  திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 13.12.2015; ஞாயிற்றுக்கிழமை

  நேரம்: காலை 10-30 மணி

  இடம் : அரிமா சங்க அரங்கம்

  குமரன் சாலை, திருப்பூர்

  தலைப்பு: “இன்றைய தமிழ்”

  சிறப்புப் பயிற்சியாளர்: கவிஞர் மகடேசுவரன்

  திருப்பூர் கவிஞர், இலக்கியப் பேச்சாளர்

  செல் : 9443936477

  தொடர்புக்கு

  திரு. A. மகாதேவன் 94420 04254

  திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

  திரு. S. மாரப்பன் 95242 73667