Home » Articles » வாய்ப்புகளை உணருவோம்!

 
வாய்ப்புகளை உணருவோம்!


கவிநேசன் நெல்லை
Author:

என் தலையில் கடவுள் இப்படி எழுதிவிட்டார் நடப்பது நடக்கட்டும்.”

“என்னால் நன்றாக படிக்க முடியவில்லை. எல்லாம் என் தலைவிதி”.

“என் வாழ்க்கையில் எப்போதும் தோல்வியைத்தான் நான் சந்திக்கிறேன். கவலைப்பட்டே நான் கரைந்து போய்விட்டேன்” – என விரக்தியின் விளிம்பில் நின்று சிலர் சோக கீதம் பாடுவது அவ்வப்போது நம் காதில் விழுகிறது.

“வெற்றிக்கான அறிகுறி” வாழ்வில் தென்படாத காரணத்தால் சிலர் இப்படிப் பேசுவதுண்டு.

கணிதத்தில் பயன்படுத்தப்படும் “பார்முலா” போன்று வெற்றிக்கு என தனியாக ஒரு “பார்முலா” கிடையாது. வாழ்க்கையில் வெற்றி பெற சில வழிமுறைகள் இருந்தாலும், வெற்றியின் அளவு என்பது – மனிதர்களின் மனநிலை, தகுதி, திறமை, சூழல் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டவை.

இவைகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு, வாழ்க்கை வசந்தமாகிறது. வெற்றி கீதங்களால் சிறப்பு பெறுகிறது.

நம்மைச்சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளைத் தனதாக்கிக்கொண்டு உழைப்பவர்கள், வாழ்க்கையில் வெற்றிகளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத சிலர், வாழ்க்கையை ரசிக்கத் தெரியாமலும், வெற்றிபெற இயலாமலும் தவிக்கிறார்கள். எனவே, வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்ள இளம் வயதிலேயே பழகிக்கொள்வது நல்லது.

இந்த வாய்ப்புகளைப்பற்றி இளம்வயதிலேயே சிலர் அறிந்துகொள்ள இயலாமல் போய்விடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் “பயம்” (Fear) எனப்படும் “அச்சம்” முக்கியப் பங்கு வகிக்கிறது.

இளமைப்பருவத்தில் எதிர்காலத்தைப்பற்றிய பயம் பலரை நிலைகுலையச் செய்துவிடுகிறது. “அடுத்து என்ன நடக்கும்?” என்று அடிக்கடி தேவையில்லாமல் சிந்திக்கும்போது “அவசியமற்ற எதிர்பார்ப்பு” மனதிற்குள் உருவாகிறது. இது – நிகழ்காலத்தை மறந்துவிடவும், எதிர்கால பயத்தை உருவாக்கிவிடவும் அடித்தளம் அமைத்துவிடுகிறது. இதனால் – பொறுமையை இழக்கவும், நேர்மையை மறக்கவும், தன்னம்பிக்கை இல்லாமல் செயல்படவும் பலர் தானாக முன் வந்து விடுகிறார்கள். இந்தக் குணங்களால்தான், இவர்களால் வெற்றி பெறமுடியாமல் போய்விடுகிறது. எனவே – சிந்தனையில் நேர்மறை எண்ணங்களை (Positive Thoughts) உருவாக்கி எதிர்காலப் பயத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

சுமார் 35 வருடங்களுக்குமுன்பு, நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனது கல்லூரி முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்கள் அடிக்கடி மாணவர்களிடம் ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுவார்.

அந்தக் கருத்து இதுதான் – “Problem is a sign of grow” என்று அவர் சொன்னபோது மாணவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த இதழை மேலும் படிக்க

 

1 Comment

  1. palani says:

    தன்னம்பிக்கை இதழை நான் 1990 முதல் படித்து பயனுற்று வருகிறேன். பொதுவாக எந்த ஒரு மாத இதழும் அந்த மாதம் முடிந்ததும் எடை பொருளாகவே மாறிவிடும். ஆனால் தன்னம்பிக்கை மட்டும் புகைப்பட ஆல்பம் போல தகவல் பெட்டகமாய்,தன்னம்பிக்கை சுரங்கமாய்,இளையோருக்கு அவர்தம் வாழ்வு சிறக்க சீரிய சிந்தனை களஞ்சியமாய், மனிதன் குணத்தை மாற்றி உயர்ந்ததாகச் செய்வதே கடமை என்ற உத்வேகத்துடன் பணியாற்றும் தன்னம்பிக்கை நிறுவனர் தம் வாரிசுகளுக்கும், நிர்வாகிகளுக்கும்,உவகையுடன் கடமை ஆற்றும் பணியாளர்களுக்கும்,பிற வழிகளில் பங்களிக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றியுடன் வரும் 2016 மேலும் சிறப்புக்கள் பெற வாழ்த்துக்கள்!!!

Leave a Reply to palani


 

 


December 2015

முயன்றேன் வென்றேன்
என் பள்ளி
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று
அவன் தான் மனிதன்
சாதனையைச் சிந்தி… சோதனையைச் சந்தி…
ஆஸ்துமா
2016 புத்தாண்டை வரவேற்போம்
முடியாததை முடித்துக்காட்டு! வெற்றிக்கு நீயே எடுத்துக்காட்டு!!
வாய்ப்புகளை உணருவோம்!
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி? நட்பின் நெருக்கத்தை அதிகப்படுத்துவது எப்படி?
சனி வரமா? சாபமா?
ஞாலம் வரைந்த கவிதை ஓவியம் புத்தகமே!
பூச்சரம்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்