Home » Articles » விவேகம் விடியலைத் தருகிறது

 
விவேகம் விடியலைத் தருகிறது


சுவாமிநாதன்.தி
Author:

விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக்கூர்மை, மதிநுட்பம், ஞானம் அறிவு, சாமர்த்தியம் என்று பொருள் கொள்ளலாம் விலங்கினங்கள் எதற்குமே அடிமையாவதில்லை. ஆனால் மனிதனே, பணத்தாசை பிடித்தவனாக, பாசத்தால் பலவீனமானவனாக உயிருக்கு பயப்படுவனாக, முரடனாக, அப்பாவியாக, பல்வேறு பட்ட குணம் படைத்தவனாக இருக்கிறான். இதனால் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் விவேகம் என்பது தீமையை குறைத்து நன்மையை நாடுவதாகும்.

கடும்போட்டிகள் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று விவேகம். அடுத்து என்ன செய்வது? என்று எல்லா காலகட்டங்களிலும் தெளிவாக அறிந்து இருப்பதுதான் விவேகம். நான் இன்று, இங்கு இந்த நொடி என விவேகத்துடனும், துடிப்புடனும் செயல்பட துடிக்கும் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும். இன்றைய இளைஞர்கள் வேகமாக சிந்திக்கிறார்கள்.

தெரிந்ததை தெரியாததிலிருந்து பிரிக்கிறது விவேகம். அறிய வேண்டியதை அறியும். செய்யத்தக்க செயல்களையே செய்யும். கடலின் ஆழத்தில் முத்தைக் கண்டுபிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, தீர்வைக் கண்டுபிடிக்கிறது விவேகம். ஒரு மனிதன் தான் செய்யும் செயலை, எப்போது? எப்படி? எங்கே? ஏன் செய்கிறோம் என முதலில் சிந்திக்க வேண்டும். இந்த அறிவே விவேகம்.

விவேகம் ஏட்டு சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர்கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள். நமக்கு ஒரு சிக்கல், துன்பம் பிரச்சனை வருகிறது. நாம்தான் முடிவெடுக்க வேண்டும். சிலர் எல்லோரிடமும் புலம்புகிறார்கள். சிலர் நேரம் சரியில்லை என நொந்து கொள்கின்றனர். சிலர் பொறுத்துக் கொள்கின்றனர். சிலர் மாற்று வழியை விவேகத்துடன் தேடுகின்றனர். எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகமாகும். இருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சமோ உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது. விடியலைக் காண்கிறது.

இராமன் மிக மென்மையானவன், அறம் தவறாதவன், கைகேயி மீது ஏராளமான பிரியம் அன்பு வைத்திருப்பவன். ஆனால், கைகேயி இராமனிடம் கூறியது என்ன? நீ அரண்மனையை விட்டு காட்டுக்குச் செல்ல வேண்டும். என் மகன் பரதன் நாட்டை ஆள்வான் என்று, எத்தனை குரூரம்? எவ்வளவு சுயநலம்? எவ்வளவு வஞ்சகமாக சொல்கிறாள். அப்படி சொல்லும்படி ஆகிறது. அப்படித்தான் வாழ்க்கையில் எல்லாம் நடந்து விடுகிறது. அதுதான் மனித அனுவம். நடைமுறை வாழ்க்கையில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்படுகிறது.

தலைமைக்குக் தேவை விவேகம் :

வளைகுடாப் பகுதியில் சமீப காலங்களில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் உலக நாடுகளை செய்வதறியாது திணறடித்துக் கொண்டிருக்கையில் இந்திய அரசு ஏமன் நாட்டிலிருந்து இந்திய குடும்பங்கள் அனைவரையும் மிகப் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்திருந்தது. இப்படி அதிரடியாய் மீட்புப் பணிகளை மேற்கொண்ட இந்திய கப்பற்படையை மற்ற நாடுகள் தொடர்பு கொண்டு தங்கள் நாட்டு பிரஜைகளையும் அழைத்துவர உதவ முடியுமா? என்று கோரிக்கை வைக்கவும் செய்தது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விசயம்.

சில ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கின் போது அந்த கரடுமுரடான மலைப்பிரதேசத்தில் காட்டாற்று வெள்ளம் சாலைகளைப் பியத்து எடுத்திருந்த வேளையில், அங்கு சிக்கிக் கொண்ட பல ஆயிரம் குடும்பங்களை விவேகத்துடன் செயலாற்றி காப்பாற்றிய பெருமை நம் இந்திய விமான படைகளுக்கு உண்டு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்