Home » Articles » நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?

 
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?


ராமசாமி R.K
Author:

A  true friend is one soul and two bodies Aristotle

Sincerity , truth , faithfulness, come in to the

very essense of friendship          – William Ery

Be gracious to all men

but choose the best to be your friends- Isocrates

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

உடையை  இழந்தவனது மானத்தைக் காக்க அவன் கை உடனே சென்று.

உடையை சரி செய்வது  போல  நண்பனின் துன்பத்தை விரைந்து

உடனே நீக்குவதுதான் நல்ல நட்பாகும்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு

உள்ளத்தில் மாற்று எண்ணத்தை வைத்துக் கொண்டு, முகத்தில் மட்டும் மகிழ்ச்சியைக் காட்டி, நட்பாக நடிப்பது நல்ல நட்பாகாது. நெஞ்சத்தின்  ஆழத்திலே இருந்து உள்ளன்போடும், மகிழ்ச்சியோடும் நட்புக் கொள்வது தான் நல்ல நட்பு.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாம் கிழமை தரும்

நட்போடு  இருப்பதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமுள்ள  ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்றஉரிமையைத் தந்து விடும்.

நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

நட்புக் கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டுமல்ல

அவர் மிகுதியாக தவறு செய்யும் போது அவரை கடிந்து திருத்து வதற்குமாகும்.

– திருக்குறள்

நட்பு என்பது மிகவும் புனிதமானது,   தெய்வீகமானது,  நட்பு அமைவதெல்லாம் அவரவர் நல்வினைகளையும், முன்வினைகளையும் பொருத்ததாகும்.  நல்ல நட்பு என்பது ஆன்மாவின் சொர்க்கம் எனப்படும்.  நட்பு என்பது  ஒரு நிழல் தரும் விருட்சத்திற்கு ஒப்பானது.  இது துயரத்தைப்  பங்கிட்டு மகிழ்ச்சியைப் பெருக்கும். பெரியோர்களுடைய நட்பு  வலிமையை  சேர்க்கும்.  நண்பன் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையாக கருத முடியாது.  ஒருவனுடைய   ‘விலை மதிப்பு’   ( Worth )  என்ன என்று பார்க்க விரும்பினால்  அது அவருடைய  நண்பர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அது அமையும்.

உன் நண்பனை சொல்!  உன்னை யாரென்று சொல்கிறேன் என்பது பழமொழி. நண்பனை வைத்து நாம் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை அடையாளம் காண முடியும். பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், மனைவியிடமும் சொல்ல முடியாத ரகசியங்களை  நண்பர்களிடம் மட்டுமே  பகிர்ந்து கொள்ள முடியும்.  நட்பு அந்த அளவு நம்பிக்கையானது.

பொதுவாக நீண்ட நெடு நாட்கள் நண்பர்களை தக்கவைத்துக் கொள்வது ஒரு தவம்.  25 ஆண்டுகள் தொடர்ந்து நட்போடு  இருப்பவர்கள் நட்பிற்கு வெள்ளி விழா காண்பவர்கள் மிகக் குறைவு. தொடர்ந்து 50 ஆண்டு காலம் நட்பின் நெருக்கத்தோடு பொன்விழா காண்பவர்கள் மிகவும் அரிது,  அபூர்வமும்கூட.

உறவுகளை விட நட்பு மேலானது.  உறவுகள் ஒரு வித எதிர்பார்ப்புகளோடு இருந்து அது கிடைக்காத போது அதிருப்தி அடையும். அதனால்  உறவுகளில் விரிசல் உண்டாகும். ஆனால் நட்பு எந்த எதிர்ப்பார்ப்புகளும் இல்லாதது. அன்பு ஒன்று மட்டும் அதன் அடித்தளமாக அமைகிறது.  ஆதலின் நட்பில் எதிர்பார்ப்புக்கோ, ஏமாற்றத்திற்கோ இடமில்லை.

மனதளவில்  விரிசல்களும்,   வருத்தங்களும் வருவது நல்ல நட்பிற்கு  அழகல்ல.  நட்பினுடைய ஆழத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் மேம்படுத்திக் கொள்வதும் ஒரு மிகப்பெரிய கலை.

நண்பர்களை நாம் பல வகையாக வகைப்படுத்தலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்