Home » Articles » இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..

 
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..


முனிராஜ் G
Author:

நான் இங்கு நம் இளைய தலைமுறை பற்றி எழுத வரக் காரணம் நிறைய இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் பாரதி, விவேகானகாந்தர் மற்றும் அப்துல் கலாம் போன்ற மிகப்பெரிய கவிஞன், ஞானி மற்றும் விஞ்ஞானி போன்றவர்கள் சொன்னதை விட நான் ஒன்றும் புதிதாகச் சொல்லப் போவதில்லை. இருந்தாலும் எனக்குள் ஒரு சின்ன ஆதங்கம் அவ்வளவுதான்.

நம் இளைய தலைமுறைக்கு நிறைய சிந்தனைகள் இருக்கிறது, அதற்கேற்றாற் போல் மாற்றங்களும் இருக்கிறது. ஆனால் அதை சற்று நல்வழிப்படுத்த வேண்டிய சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை அவர்களாகவே உணர வேண்டும். இளைஞர்களிடம் இருக்கும் குறுகிய பார்வை மற்றும் எண்ணம் மாற்றப்பட வேண்டும். அப்படி என்ன குறுகிய பார்வை மற்றும் எண்ணம் இருக்கிறது என்று தானே கேட்கத் தோன்றுகிறது.. வாருங்கள் பார்க்கலாம் என்னவென்று.

ஒரு விசயம் பாரட்டப்பட வேண்டியது, ஏனென்றால் நம் திரு. அப்துல்கலாம் ஐயா அவர்கள் கனவு காணுங்கள் என்று சொன்னார். அதை தவறாமல் கடைபிடிக்கும் என் நாட்டு மன்னர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அவர் சொன்ன விசயம் முழுவதுமாக புரிந்ததாக தெரியவில்லை. கனவு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார், நம்மை தூங்கவிடாமல் செய்வது தான் கனவு என்கிறார். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு இது பொருந்தும் என்று நம்மக்குள் எண்ணிப் பார்க்க வேண்டும். முதல் நம்முடைய கனவில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றியே கனவுத்திருடர்கள் இருக்கிறார்கள். அது நம் நண்பர்களாக இருக்கலாம், சொந்தங்களாக இருக்கலாம், ஏன் நம் பெற்றோர்களாகக் கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. விப்ரோ அஜிம் பிரேம்ஜி சொன்ன மாதிரி “உன் கனவுகளை பார்த்து யாரும் சிரிக்கவில்லை என்றால் உன் கனவு மிகச் சிறியது’ என்கிறார். எங்கே என் ஒவ்வொரு இளைஞனிடமும் கேட்டுப் பாருங்கள் அப்போது உண்மை தெரியவரும்.

கனவு காணும் இளைஞனிடம் அதை எப்படி செயல்படுத்துவது என்பது மட்டும் தான் இங்கு பிரச்சனை. பெரும்பாலான இளைஞர்களிடம் இருப்பது, ஒரு நல்ல படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை இதுக்குள்ளாகவே முடிந்து விடுகிறது. இது மட்டும் போதாதா? என்று தானே கேட்கத் தோன்றுகிறது, உண்மை.

முகநூலில் ஒரு சில வரிகளைப் படித்தேன். மிகவும் பெருமையாக இருந்தது. தொழில் செய்ய விரும்புகிறவர்கள், அடேங்கப்பா இவ்வளவு பேரா? ஏராளம்.. ஆச்சரியம் என்று நினைத்தேன். இத்தனை பேரும் தொழில் செய்தால், வெளிநாட்டினர் யாரும் இங்கு தொழில் செய்யவேண்டிய அவசியம் இல்லையே என்று எண்ண தோன்றியது. அதன் பின்தான் தெரியவந்தது. நம் இளைஞனுக்கு என்ன தேவை என்று, ஒரு சாதாரண இளங்கலை படித்த மாணவனின் எண்ணம் எப்படி இருக்கிறது என்றால் குறைந்த பட்ச சம்பளம் 4 இலக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். யாரும் தன்னை வேலை சொல்லக்கூடாது. ஒரு கணினி இன்டெர்நெட் வசதியுடன் வேண்டும். தன்னுடைய நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட வேண்டும் என்ற எண்ணமும், நண்பர்களுடன் வெளியே சென்று வருவது (இதில் பல விசயங்கள் அடங்கும்). கனவை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கான சின்ன முயற்சிகள் கூட செய்யாமல் எப்படி முடியும் கனவை அடைய.

கனவு என்பது ஒரு அகல்விளக்கைப் போன்று இல்லாமல், காட்டுத்தீயைப் போல இருக்க வேண்டும். அகல்விளக்கை ஒரு சிறு காற்றுகூட (யார் வேண்டுமானாலும் கனவை) அனைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் காட்டுத்தீயானது சிறு காற்றோ பெருங்காற்றோ அடித்தால் என்னவாகும், தீ வேகமாக பரவும். அதே போன்று நம் கனவானது அடுத்தவர் சீண்டியவுடன் காணாமல் போய்விடக்கூடாது. கனவை அடைவதற்குண்டான வேகம், செயல் அதிகமாக வேண்டுமேயொழிய, குறைய கூடாது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2015

என் பள்ளி
விவேகம் விடியலைத் தருகிறது
திட்டமிட்டு
கல்வியும் கலையும்
உங்களுக்காக சில உண்மைகள்
நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?
எதிர் மறை மனிதர்கள்
தூக்கமும் ஊக்கமும்
வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!
இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..
கன்னத்தின் அழியாத அழகு மச்சங்களே பேச்சுக்கலை
அடிப்படை உயிர்க்காப்பு வழிமுறைகள் (Basic Life Support)
எல்லை தாண்டு
நுனிப்புல்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்