Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

திருமதி தேன்மொழி

வழக்கறிஞர்

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்….,”

என்ற மகாகவி பாரதியின் வரிகளை உண்மையாக்கி இன்றைய பல பெண்களுக்கு முன் மாதிரியாக இருக்கும் திருமதி தேன்மொழி அவர்கள் ‘என்பள்ளி’ நினைவுகள் நம்மோடு…

என் சொந்த ஊர் திருப்பூர். தந்தை இரத்தின சபாபதி, தாய் விசாலாட்சி. எனது தந்தை திருப்பூரில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். என் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதிரிகள், ஒரு சகோதரன் என மொத்தம் நான்கு பேர். எங்கள் அனைவரையும் தாய் தந்தையர் நன்றாகப் படிக்க வைத்தனர்.

நான் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை திருப்பூரில் மாவட்டத்தில் உள்ள பிரேமா மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். அடுத்து 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். நான் 12ம் வகுப்பு படித்து முடித்தவுடன் என் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடு நடந்தது.

இதை அறிந்த நான் என் தாயாரிடம் சென்று, “நான் இந்த வயதிலேயே திருமணம் செய்து கொண்டு, எனது சேவை வீட்டில் மட்டுமே இருக்க வேண்டுமா?” நான் இந்த சமூகத்திற்க்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. நான் மேலும் படிக்க வேண்டும் எனக் கூறினேன். அதற்கு என் பெற்றோர் என் விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.

கோவை சட்டக் கல்லூரியில் 5 வருட சட்டப்படிப்பை படிக்க துவங்கினேன். நான் மீண்டும் படிக்கும் பொழுது திருமணம் பற்றி என்னிடம் கேட்டார்கள். அதன்பிறகு பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நான்காம் ஆண்டு படிக்கும் பொழுது திருமணம் முடிவு செய்யப்பட்டது. அப்பொழுது மாப்பிள்ளை வீட்டார் என்னிடம் உங்களுக்கு திருமணத்திற்கு சம்மதமா? என கேட்டபோது நான் கூறியது உங்கள் மகன் கருப்பா, சிவப்பா, படித்தவரா, படிக்காதவரா, வேலையில் இருப்பவரா, இல்லாதவரா, எனக்கு இவை அனைத்தும் தேவை இல்லை.

நான் நாளை படித்து முடித்தவுடன் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும். அதற்கு சம்மதம் என்றால் திருமணம் செய்து கொள்கிறேன் என்றேன். பிறகு திருமணம் நடந்தது. திருமணத்திற்க்கு பிறகு எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் மகள் அபிராமசுந்தரி, இரண்டாம் மகள் வான்மதி. என் சட்டப்படிப்பிற்க்கு என் பெற்றோர்கள், மாமனார்,  மாமியார் கணவர் என அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். என்னுடைய கணவர் எனக்கு அடிக்கடி கூறுவது, எந்த ஒரு சிறிய வேலையாக இருந்தாலும் அதை கலைப்பு இன்றி செய். ஏனென்றால் அந்த சிறிய வேலை பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பார். என் முன்னேற்றத்திற்க்கு முக்கிய காரணம் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதுதான்.

ஒரு முறை என் தந்தைக்கு ஒரு முக்கிய வழக்கு வந்தது. அப்பொழுது அந்த வழக்கை என்னை பார்க்கச் சொன்னார். வந்தவர்கள் என் சிறு வயதையும், என் உருவத்தையும் பார்த்து விட்டு ஐயா, இந்த வழக்கை நீங்களே பண்ணிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று என் தந்தையிடம் கூறினார்கள். என் தந்தையும் சரி என ஏற்றுக் கொண்டார். எனினும் அவரால் அவ்வழக்கை நடத்த முடியாத அளவிற்கு முக்கியமான வேலைக் காரணமாக வெளியூருக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. என் திறமையின் மீது நம்பிக்கை வைத்து எனக்கு  ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்கள். வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி அந்த வழக்கை நடத்தினேன். நான் கோர்ட்டில் பேசும் பேச்சையும், எதிர் வழக்கறிஞரை கேட்கும் கேள்வியையும் பார்த்து என்னுடன் வந்தவர்கள் அனைவரும் ஆச்சிரியத்தில் உங்கள் தந்தை வழக்கு நடத்தி இருந்தால் கூட இந்த அளவிற்கு பேசி இருக்க மாட்டார். முதல் முறை வாதடியதே மிகவும் திறமையாகவும், அழகாகவும் இருந்தது என்று கூறினார்கள். நீங்கள் மிகவும் சிறப்பான முறையில் வழக்கை நடத்தினீர்கள் என்றார்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…