Home » Articles » உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்

 
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்


ஆசிரியர் குழு
Author:

பதுமை என்னும் புதுமையில் புது அவதாரமாக, உலகின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக, திருப்புமுனையை ஏற்படுத்தி வருகிறார் திருநங்கை பத்மினி பிரகாஷ். அழகான அலங்காரம், அளவான புன்னகை, ஆன்மீகம் ததும்பும் பெண்மையாய், கணீர் குரலுக்கு சொந்தக்காரராக “லோட்டஸ் தொலைக்காட்சியில்” செய்திவாசிக்கும் இவரின் செய்தியைக் கேட்கும் நேயர்கள் ஒருநிமிடம் திகைத்துத்தான் போகிறார்கள்.

தமிழின் மீது காதல், தளராத தாக்கமாய் செய்தி அரங்கில் பழமையான தமிழ்நடையில் கணீர் குரலில் ஒலிக்கும் இவரது வாழ்க்கையின் வலியை வார்த்தைகளால்  கூட உதிர்க்க முடியாது. வலிகளை வழித்தடமாக மாற்றிய பத்மினி கோவையில், கலாச்சாரப்பின்னணியில் உள்ள ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவர். ஒரு திருநங்கையாய் மாறியது இவரின் தவறல்ல. பாலின பாகுபாட்டால் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாக நேரிட்டது.  ஜீன் செய்த மாற்றம் இவரின் வாழ்க்கையை சிதைத்துப் போட்டது. பள்ளிக்குச் சென்றால், பாலினச்சிக்கல், வீட்டிற்கு வந்தால் வெறுத்து ஒதுக்கும் உறவுகள் என்று பாதிப்பின் துக்கமும் இவரைத் துரத்த, மரத்துப்போன மனதுடன், பசியும், பட்டினியுமான வாழ்க்கை ஓட்டம், ஒரு கட்டத்தில் குடும்பமும் வெறுத்து ஒதுக்கியது.

அன்றைக்கு, அறியாத வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு சென்றவர், அரளி விதையை அரைத்துக் குடித்து விட்டு இடுகாட்டில் கிடந்தார். இவ்வுலகில் வாழனும் என்று இருந்தால், எவ்வழியிலும் உதவிகள் வந்து சேரும் போலும். ஆம், இவருக்கும் வந்தது, மரணத்தருவாயில் கிடந்த இவரை, மனிதநேயம் மிக்க ஒருவர் காப்பாற்றி மறுவழிகாட்டினார். ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் சாதிக்க வேண்டும் என்றவெறி, சாதனைக்கான குறிக்கோளாக, இவருள் உந்து சக்தியை ஏற்படுத்தியது.

ஆர்வம் இருந்தாலும், அன்றாடம் வயிற்றுப்பசியை போக்க வாழ்ந்தாக வேண்டும் என்றகட்டாயத்தில், தம் கூட்டத்தினருடன் ஒருகட்டத்தில் மும்பை போன்றநகரங்களில் வாழ நேரிட்டாலும், அந்த வாழ்க்கை இவருக்கு பல பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. ஒருகாலத்தில் சோதனைகளே வழித்தடமாக அமைந்தாலும், அதுவே சாதனைக்கும் வித்திட்டது.

பட்டம் வாங்காவிட்டாலும் படிப்பின் மீது இவருக்கு தீராத பசி. பாரதியாரின் கவிதைகளாகட்டும், காந்திஜியின் சத்தியசோதனையாகட்டும், நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்துப்படிப்பது இவருக்கு பிடித்தமான ஒன்று. இப்படி, படிப்பின் பிடிப்பால் தம்மை பக்குவப்படுத்திக்கொண்டவர், பரத நாட்டியத்திலும் அரங்கேற்றம் கண்டார். தனித்திறமைகள் வெளிப்படும் போது, தானாகத் தேடிவரும் வாய்ப்புகள் என்று தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றினார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…