Home » Articles » இசையும் இசைவும்

 
இசையும் இசைவும்


அனுராதா கிருஷ்ணன்
Author:

ஓரறிவு தாவர இனம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை இசையின் அதிர்வால் வளர்ச்சித் தூண்டல் ஏற்படுவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன.  ஆறறிவு உள்ள மனிதன் இசையால் பயன்பெற முடியாதா? ஒரு நல்ல இசையை அல்லது பாடலைக் கேட்பதன் மூலமும் நாம் ஆரோக்கியமாக வாழலாம். நம் உடலின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் யாவும் இசையின் தாள இலயத்திற்கு ஏற்ப தூண்டப்பட்டு சீரான இயக்கத் தன்மைக்கு கொண்டுவரப்படுகிறது. வீட்டிலும், ஊர் பயணங்களிலும் இசையை இரைச்சலாக பாவிப்பவர்கள் உண்மையில் பாவப் பட்டவர்களே. அவர்களும் இசையை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தோடு கேட்டு இரசித்தால், அவர்களின் இசை அலர்ஜிக்குக் காரணமாக இருக்கும் காரணிகள் அந்த இசையால் நீக்கப்பட்டு இசையை விரும்பும் தன்மைக்கு மாறுவர். ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இசையில்லையாயின் மனிதன் விலங்காகிவிடுவான், அதுவே இசையால் மனிதன் தெவாம்சமாவான். அன்புத் தோழதோழியர்களே! நாம் இசையை எப்படி நம் ஆரோக்கியத்திற்கு இசைவாக கையாள முடியும் என்பதைப் பற்றி இனிப் பார்ப்போம்.

பஜனைகள் :

நாம் இறை உணர்வோடு ஒன்ற இசை ஒரு பாலமாக இருப்பதற்கு சான்றுதான் நம் பஜனைகள். பஜனைப் பாடல்களை குழுவாக, இசைப் பின்னனியில் கைதட்டி, உள்ளம் உருகிப் பாடும்போது மிகவும் சக்தி வாய்ந்த அதிவுகளை நம் உடலில் ஏற்படுத்துகின்றன. இதனை நாம் ஒவ்வொரு பஜனைப் பாடல் பாடி முடித்த பின்னர் உள்முகமாக கவனித்துப்பார்த்தால் நம்முள் ஆனந்தப் பிரவாகம் உற்றேடுப்பதைக் உணர முடியும். குழுவாக பஜனை நிகழ்வதால் நமக்கு நிறைவான பலன் கிடைக்கிறது. மாதம் ஒரு முறை இம்மாதிரி பஜனைகளில் கலந்துகொண்டு நம்மை இசை சிகிச்சைக்கு ஆட்படுத்தலாம்.

இசை நடனம் :

இசை நடனத்தில் கலந்துகொள்ள நாம் கிளபுகளுக்கு போக வேண்டாம். நம் வீட்டிலேயே, நம் குடும்ப உறுப்பினர்களோடு ஆனந்தமாக இசையின் பின்னனியில் நடனமிடலாம். இசை நடனமாட நமக்கு நடனமாடத் தெரியவேண்டுமென்று கட்டாயம் ஏதுமில்லை. நம் உடலை மிகத் தளர்வாக வைத்துக்கொண்டு நம் இஷ்டம்போல் கை, கால் மற்றும் உடலை வலைத்து நெளித்து கூச்சமின்றி ஆடினால் போதும். நாம் நம் குழந்தைகளோடு ஆடும்போது நம் பிள்ளைகளும் நம்மோடு நட்புணர்வு பாராட்ட இசை நடனம் பாலமாக இருக்கும். குடும்பத்தில் உறவு முறை பலப்பட இது மிகவும் உதவியாக இருக்கும்.

நேர்மறைப் பாடல் கேட்டல் :

நம் புத்திக்கு நேர்மறைச் சிந்தனையை ஊக்குவிக்கும் பாடல்களை நாம் வேலை செய்யும்போது கேட்பதால் நம் வேலையும் தொய்வின்றி நடப்பதோடு, நம் உள்ளமும் குதுகளிப்பதோடு, நாமும் வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் பெறுவோம். நம் பிள்ளைகளுக்கு நாம் நேரடியாக அறிவுரை சொன்னால் பிடிக்காமல் போகலாம். ஆனால், நேர்மறைப் பாடல்களை நம் வீட்டில் நாம் கேட்கும்போது, நம் பிள்ளைகளின் காதுக்கும் சிறிது பாயும். அதற்காக “தம்பி இதைக் கேளு’ என்று சொல்லி காரியத்தைக் கெடுக்ககூடாது.

மந்திர இசை :

மந்திர சக்திமிக்க இறை நாமங்களை இசையின் துணையோடு ஒலிக்கச் செய்வதால் நம்முள் அற்புதமான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நாம் வீட்டில் அவ்வப்போது இவ்வித இசையை ஒலிக்கச் செய்வதால் நம் வீட்டில் தெய்வீக ஆற்றல் நிலைக்கொள்ளும். அதேபோல் நம் வீட்டில் வாஸ்துக் குறைகள் (சக்தி ஓட்டம், காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி பரவல் ஆகியவற்றில் குறைகள்) இருப்பின் இவ்வித மந்திர இசை மாயம் செய்யும். உதாரணமாக ஓம், காயத்திரி மந்திரம், சுப்ரபாதம், கந்த ஸஸ்டி கவசம் உள்ளிட்ட பல இசை தயாரிப்புகள் நம் வீட்டிலும் நம்மிலும் ஆற்றலை பரவச் செய்யும்.

சிகிச்சை இசை:

நம் உடலின் ஒவ்வொரு தன்மைக்கும் நம் மனதின் ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட இசை வடிவ தயாரிப்புகள் கிடைக்கின்றன, அவற்றை நாம் விழிப்பாகவும் ஆழ்ந்தும் கேட்பதால் நிச்சயம் பலன் உண்டு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2015

என் பள்ளி
உலகின் முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்
இளைய தலைமுறை எழுச்சி பெற
காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் யானைகள்
பாராட்டுகள் – பாராட்டு எல்லோருக்கும் பிடிக்கும்
வெற்றி தரும் விஜய தசமி
இரத்தசோகை
இசையும் இசைவும்
புத்தக சவால்
குழுநிலவு
வெற்றி பயணங்கள்
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்!
காலப்பேனா ஞாபகக் பேழையில் செருகட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்
வேலையை நேசி… மகிழ்ச்சியை சுவாசி…