Home » Articles » இரவா பகலா?

 
இரவா பகலா?


அனுராதா கிருஷ்ணன்
Author:

அன்பு நண்பர்களே! நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் இயற்கையின் இருவேறு எதிரெதிர் தன்மைகளின் அற்புத இணக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அண்டசராசரத்தை எடுத்துக் கொண்டால் அசையாத சுத்தவெளியும் (சிவமும்), சுத்தவெளியால் இயக்கப்படும் சக்திகளமும் (சக்தி) எதிரெதிர் நிலைகளைக் கொண்டுள்ளன. நம் உடலும் நிலையான உடலும் அதனுள் சக்தியாக உயிர் ஓட்டமும் இயங்குவதால்தான் நம் இந்த பூமி வாழ்க்கை நடைபெறுகிறது. அதுபோலவே, நிலையாகச் சூரியனும் அதனைச் சுற்றும் கோள்களாலும் தான் பருவ காலம் ஏற்படுகின்றன. இன்னொரு நிலையில் நிலையான அச்சில் அசராத பூமியின் தற்சுழற்சியால்தான் இரவும் பகலும் உண்டாகிறது. ஆக, இறைநிலையின் இரு எதிரெதிர் இயக்கத் தன்மைகளை நாம் புரிந்துகொண்டால் நாமும் அதனை மதித்து அதற்கு இணக்கமாக இயந்து வாழலாம். அன்றாடம் வந்து போகும் ஒரு நாளன் இரவு மற்றும் பகலை நாம் எவ்விதம் கையாள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

நாம் பகலில் உழைப்பதும், இரவில் தூங்குவதும்தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படியில்லாவிட்டால், ஷிப்ட்டு வேலை செய்பவர்கள் முழுமையாக இரவு வேலை செய்வதும் பகலில் குறிப்பிட்ட காலம் ஆழமாகத் தூங்குவதுமாகப் பழக வேண்டும். ஆனால், அனேக ஷிப்ட்டு வேலைகள் 10 நாட்களுக்கு ஒரு முறை முதல் ஷிப்ட்டு, இரண்டாவது ஷிப்ட்டு அல்லது மூன்றாவது என்று மாறி மாறி ஒரு நிலைப்பாட்டிற்கு வழி தராமல் இருப்பது உண்மையில் தவறான வாழ்க்கை முறைதான்.

அடுத்து, செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளைப் பகல் 12 மணிக்குள் சாப்பிடவேண்டும். உதாரணமாக கீரை, தயிர் மற்றும் அசைவ உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. அதேபோல், இரவில் வெப்பம் தணிந்த சூழலில் உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளையும் இரவில் சாப்பிடக்கூடாது.

உதாரணமாக அதிக அமிலம் மற்றும் மசாலா உள்ள காரசார உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது. அதேபோல், பகலின் வெப்பச் சூழலில் கெடும் உணவுகளை எடுக்கக்கூடாது. உதாரணமாக பகலில் பால் (காப்பி மற்றும் டீயையும் கூட) சாப்பிடக் கூடாது. இவற்றைமாற்றி எடுக்கும்போது நம் உயிர்ச் சக்தி விரையமாகி நோய்த் தன்மைக்கு இட்டுச் செல்லும்.

அதேபோல், எனிமாவைக் காலை முதல் பகல் 12 மணி வரையும், பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் எடுக்கலாம். அதேபோல், எண்ணெய் தேய்த்து தலைக்கு குளத்தலை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும்தான் செய்ய வேண்டும். ஒரு வேளை மட்டும் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமாயின்  அது இரவு உணவை தவிர்த்துவிட்டு தூங்கப் போகலாம். காலை உணவைத் தவிர்க்கும் விரதம் கூடாது.  அதேபோல், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு முழு உண்ணாவிரதம் இருக்க வேண்டுமாயின் அதனை மாலைப் பொழுதில் பழச்சாற்றை முதலில்  அருந்தி, பின்னர் இலகுவாகச் செரிக்கக்கூடிய உணவைக் குறைவாக சாப்பிட்டு, பின்னர் இரவு ஆழ்ந்து தூங்க வேண்டும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், பகலில் எக்காரணம் கொண்டும் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது. நம் வேலை மற்றும் பயணம் காரணமாக இதை மாற்றிச் செய்வது மிகவும் உடல் நலனுக்குக் கேடானது.

உடற்பயிற்சியினைக் காலையிலும், மூச்சுப் பயிற்சியினை மாலையிலும் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் மூச்சுப் பயிற்சியைக் காலையில் செய்வதால் பாதகம் இல்லை. ஆனால், உடற்பயிற்சியை உடல் உழைப்பிற்குப் பின், மாலையில் செய்தால் நம் உடல் சோர்வுறும். தியானத்தை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். தினமும் எல்லா பருவ காலத்திலும் காலையில் அவசியம் குளக்க வேண்டும். வேண்டுமானால் கூடுதலாக மாலையில் குளக்கலாம். அதேபோல், காலைக் கடனை காலையில்தான் அடைக்க வேண்டும். பகல் 12 மணிக்குப் பிறகு காலைக் கடனை அடைத்தால் நமக்கு உயிர்ச் சக்தி இழப்பு ஏற்படும். ஆக, இரவா பகலா என்ற விழிப்புணர்வு நமக்கு அவசியம் வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2015

என் பள்ளி
மனித வாசத்திற்கு அஞ்சும் பாம்புகள்
காலக் கணித மாமேதை
இரவா பகலா?
எழுந்து நட! சிகரம் தொட!
விடுதலை நெருப்பில் பூத்த தியாக தீபங்கள்
தாய்ப்பாலின் மகத்துவம்
வெற்றி உங்கள் கையில் 20 நேரம் இல்லையே…!
தானியங்கள் உதிராமல் இருக்க காரணமானதும் இரையை தேடி அலைந்த மனிதனை விவசாயம் செய்ய வழிவகுத்ததுமான ஜீன் (Gene) கண்டுபிடிப்பு
குணம் நாடி… குற்றம் நாடி…
தூண்டில்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்