Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

இளைஞர்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள், அவர்களுக்காக நூல்கள் எழுதுகிறீர்கள். எப்படிப்பட்ட மனப்பான்மையுடன் இளைஞர்கள் பிற்காலத்தில் வாழ வேண்டும் என்கிறீர்கள்?

 – கவிதா, ரேஸ்கோர்ஸ், கோவை.

இளைஞர்களை நான் நேசிக்கிறேன்; அவர்களை நான் நம்புகிறேன். அவர்கள் இந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் தீமைகள் – ஏழ்மை, வேலையின்மை, படிப்பறிவின்மை, திறமையின்மை, தவறான நம்பிக்கை – ஆகியவைகளை அகற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தங்களுக்கு தானே தலைமை ஏற்கவும், தங்களது குடும்பத்திற்கு தலைமை ஏற்கவும், தங்களது வேலையில் தலைமை ஏற்கவும், தங்களை தயார்படுத்த வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.

இளைஞர்கள் உகந்த மனபான்மை (right attitude) இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. அதற்கு நான் அவர்களைக் குறைக் கூற விரும்பவில்லை; அவர்கள் சூழ்நிலை, கல்வித் தரம், கண்ட காட்சிகள், கேட்ட கேள்வி ஞானம் அவர்களை அப்படி மாற்றி இருக்கிறது. ஒரு மனிதனின் மனப்பான்மை அவனது வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணி என்றார் ‘எட்வின் லூயிஸ் கோலே’ என்னும் அறிஞர்.

பலசாலியாக இருப்பவன் சாதுவாக இருக்கும் சக மாணவனை துன்புறுத்துகிறான், கூட படிக்கும் மாணவியை கிண்டல் அடிக்கிறான், அவளுக்கு மன உழைச்சலை தருகிறான். ஒரு வேலைக்குச் சென்றஉடன், அதிகாரம் கையில் கிடைத்ததும் கீழே வேலை செய்பவர்களுக்கு இம்சை தருகிறான்.

குடும்பத்தில் கூட மனைவி மற்றும் குழந்தைகளை அடக்கத் துடிக்கிறான். இது பெண்களுக்கும் பொருந்தும். இதை என்னவென்று சொல்வது? =ஆணவம்+ என்று சொல்லலாமா? இந்த ஆணவம் என்ற குணம் அந்த இளைஞனுக்கு எந்த வகையிலும் நன்மை ஏற்படுத்தவில்லை, அதே வேளையில் அது அவனுக்கு எதிராகவே திரும்புகிறது. எல்லா இடத்திலும் அவனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அவனுடைய மனைவி, பிள்ளைகள் கூட நேரடியாக எதிர்கிறார்கள்.

இந்த =மனப்பான்மையை+ வளரும்போது இளைஞர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் “ The greatest discovery of  any generation is that a human can alter his life by a change his attitute” என்றார் வில்லியம் ஜேம்ஸ் என்றஅறிஞர். அதாவது எளியவர்களுக்கு அவமரியாதையும் கொடுமையும் இழைக்கும் மனநிலை மாறவேண்டும். அப்படி மாறும் பட்சத்தில் அவனது வாழ்க்கைத் தரமும் உயர்ந்து விடும். மனப்பான்மை என்ற வேர்கள் மாறும் போது வாழ்க்கை என்ற காயும் மாறுகிறது.

இளைஞன் ஒருவன் எப்போதும் உற்சாகத்துடன் காணப்பட வேண்டும். தினமும் தன்னுடன் வேலை பார்ப்பவர்களைப் பார்த்தும் மகிழ்ச்சி அடைய வேண்டும்; புன்னகைக்க வேண்டும்; அவர்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும்; அவர்களது திறனை எவ்வாறு வளர்க்க முடியும் என்றும் சிந்திக்க வேண்டும். அலுவலகத்தில் குறிக்கோள் என்ன என்பதை உணர்ந்து, அதை நோக்கி சக உழியர்களை அழைத்துச் செல்வதுதான் தனது கடமை என்ற மனப்பான்மை இருக்க வேண்டுமே தவிர சக ஊழியர்களை குற்றம் கண்டு, குறைக் கூறி அவர்களுக்கு மன உளைச்சல் செய்வதுதான் வாழ்வின் ஒரே நோக்கம் என்றிருக்கக் கூடாது. இதைத் தான் நவீன மேலாண்மை விஞ்ஞானமும் (Management Science)  கூறுகிறது.

பதவியல் அமர்ந்ததும், அதிகாரம் கிடைத்ததும், பண வசதி வந்ததும் நண்பர்கன் அல்லது உறவின்களின் அன்பைக்கூட உதறித்தள்ளும் இளைஞர்களுக்கு அத்தகைய உறவுகள் எவ்வளவு உன்னதமானது என்று புரியவில்லை! ஏற்றிவிட்ட ஏணியையே காலால் எட்டி உதைக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். “கர்வம்’ என்ற கீழ்தர குணத்தால் விளைபவை அவை. ஒரு சில நாட்கள்தான் வாழப்போகிறோம் என்பதை மறந்து விட்டு பதவி போதையில் ஆட்டம் போடுவதை பார்க்க முடிகிறது.

பின் ஒருநாள் நம்மை மனம் வருந்த வைப்பது துன்புறுத்தும் மனப்பான்மை அல்லது கர்வ மனப்பான்மை. அவை, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்; உறவுகளையும் முறித்துவிடும் என்ற தத்துவத்தை எப்படி விளக்குவது என்று சிந்திக்கும் வேளையில்  “”வாட்ஸ் அப்பில்” வந்த செய்தி மிகவும் பொருத்தமாக அமைந்தது, அதை உங்களிடம் பகிர்கின்றேன். இதை எழுதியது யார் என்று தெரியாது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

இதயத்தை தொடுகிறது என்று தலைப்பில் அந்த செய்தி துவங்குகிறது.

இந்த இதழை மேலும் படிக்க“”மற்றுமொரு காலை அது நான் மீண்டும் அலுவலகம் போக வேண்டும் தான்”.

ஐயோ செய்தித்தாளில்  என் படம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது, ஆனால் அது இரங்கல் பத்தியில் என்ன செய்யும்?? விநோதம்.

ஒரு நிமிடம் நான் யோசித்தேன். நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது என் மார்பில் கடுமையான வலி இருந்தது, ஆனால் அதன் பிறகு நான் எதுவும் நினைவில் இல்லை. எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கின்றேன்.

காலை இப்போது என் காபி எங்கே? ஏற்கனவே 10.00 மணி ஆகிவிட்டது? எனக்கு அலுவலகத்திற்கு தாமதமாகிறது. என் முதலாளி என் மேல் எரிச்சலில் இருக்க வாய்ப்பு இது. எங்கே எல்லோரும்?? நான் கதறினேன்.

நான் பார்த்தேன், என் அறைக்கு வெளியே ஒரு கூட்டம் பல மக்கள் ஆனால் ஏன் அழுகின்றனர்?

என்ன நடக்கிறது??? நான் தரையில் கிடக்கின்றேன்.

நான் இங்கே இருக்கிறேன் நான் கத்தினேன் நான் இறக்கவில்லை இதோ பார் நான் மீண்டும் கத்தினேன், அவர்கள் அனைவரும் படுக்கையில் என்னை பார்க்கிறார்கள்.

நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன்.

நான் இறந்து விட்டேனா? நான் என்னையே கேட்டேன்.

எங்கே என் மனைவி, என் குழந்தைகள், என் நண்பர்கள், என் அம்மா, அப்பா?

அடுத்த அறையில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

என் மனைவி அழுது கொண்டிருந்தாள், உண்மையில் அவள் சோகமாக என் சிறிய குழந்தைக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் அவன் அவனது அம்மா வருத்தமாக இருந்ததால் அவனும் அழுதான்.

‘நான் அவனை மிகவும் நேசிக்கிறேன்’ என்று என் குழந்தையிடம் சொல்லாமல் எப்படி போக முடியும்?

இந்த உலகத்தில் உண்மையில் மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி நீதான் என்று என் மனைவியிடம் சொல்லாமல் எப்படி போக முடியும்?

நான் எப்படி என் பெற்றோரிடம் உங்களால் தான் நான் என்று சொல்லாமல் எப்படி போக முடியும்?

எப்படி என் நண்பர்களிடம் ஒரு வேளை நீங்கள் என் வாழ்கையில் இல்லாமல் போனால் நான் தவறான விஷயங்களை செய்திருப்பேன் என்று சொல்லாமல் செல்வது?

ஒரு நபர் மூலையில் நின்று கொண்டு இருக்கிறார், தனது கண்ணீரை மறைக்க முயற்சிக்கிறார். அவர் என் சிறந்த நண்பர், ஆனால் ஒரு முறை ஒரு சிறிய தவறான புரிதல் எங்களை பிரித்து விட்டது. நம்மை துண்டிக்க நாம் இருவரும் வைத்திருந்த வலுவான ஈகோவே காரணம். நான் அங்கு சென்று அவரிடம் என் கை நீட்டி அன்பான நண்பா நாம் இன்னும் சிறந்த நண்பர்கள், என்னை மன்னியுங்கள் நடந்த எல்லாவற்றிற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றேன்.

அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை அவர் இன்னமும் ஈகோ வில் உள்ளார் நான் மன்னிப்பு கேட்ட பின்பு கூட ஒரு பதிலும் இல்லை.

ஒரு நிமிடம்… அவரால் என்னை பார்க்க முடியவில்லை என்று தெரிகிறது அவரால் என் நீட்டிக்கப்பட்ட கையை பார்க்க முடியவில்லை. நான் உண்மையில் இறந்து விட்டேனா?

நான் என் அருகில் உட்கார்ந்து அழுவது போல உணர்கிறேன்.

ஓ கடவுளே எனக்கு இன்னம் சில நாட்கள் கொடுங்கள் நான் என் மனைவி, என் பெற்றோர்கள், என் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்.

என் மனைவி அறையில் நுழைந்தாள். நீ அழகாக இருக்கிறாய் என்று கத்தினேன். அவளால் என் வார்த்தைகளை கேட்க முடியவில்லை உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு அவளிடம் சொல்லவே இல்லை.

ஐயோ நான் கதறினேன். இன்னும் கொஞ்ச நேரம்….. நான் அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு.

என் குழந்தையை இறுக்க கட்டி அணைக்க    என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க

என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க

என் நண்பர்களிடம் மனதார மன்னிப்பு கேட்க

இப்பொழுது நான் அழுதேன்

நான் கத்தினேன்

இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள்

இப்போது மெதுவாக விழித்தேன். என் மனைவி என் அருகாமையில் வந்து “நீங்கள் தூக்கத்தில் சத்தம் போட்டீர்கள்’ என என் மனைவி கூறினார். நீங்கள் ஏதும் கனவு கண்டீர்களா? என்றாள்.

நான் கண்டது வெறும் கனவு தான்

என் மனைவியால் தற்போது நான் கூறுவதைக் கேட்க முடிகிறது. இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நேரமாகும். நான் அவளை கட்டி அனைத்து இந்தப் பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி நான் உண்மையில் உன்னை நேசிக்கிறேன், கண்ணே! என்றேன்.

அவளின் கண்களில் இருந்து வரும் கண்ணீரையும் அவளது புன்னகையின் காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

இந்த இரண்டாவது வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.

நண்பர்களே இன்னும் நமக்கு நேரம் இருக்கிறது.நமது ஈகோவை புறம் தள்ளி விட்டு நமது பாசத்தையும் நேசத்தையும் நமக்கு நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள். ஏனெனில் இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது, பின் கிடைக்காமல் போனால் வருத்தபடுவீர்கள்.

பணத்திற்கும், பதவிக்கும் பின்னால் ஓட வேண்டாம்.

மனித வாழ்க்கை ஒரே ஒருமுறை தான். அதுவும் அந்த வாழ்க்கை மிக மிக குறுகியது. இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்யுவோம், சந்தோசமாய் இருப்போம் என்று முடிகிறது இதயத்தை தொடும் அந்த நிகழ்ச்சி.

இளைஞர்களே; “இன்று பிறந்தோம்’ என்ற மனநிலையில் வாழ்ந்தால் உற்சாகத்துடன் இருப்பீர்கள். இன்று ஒரு நாள் மட்டும் தான் வாழ்வோம் எனும் மனநிலையில் வாழ்ந்தால் எளியவர்களை மரியாதையாக நடத்தும் பண்பு உங்களுக்கு வரும். நீங்கள் உங்கள் வீட்டிற்கும்,  சமுதாயத்திற்கும்   ஏன் இந்த உலகத்திற்கும் தலைமை ஏற்கலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2015

என் பள்ளி
காலத்தின் காதலர்கள்
அஜந்தாவா எல்லோராவா
அனுபவம்… ஆனந்தமாகட்டும்
வெற்றி உங்கள் கையில்-19
அதிவிரைவு செயல்திறன் குறைபாடு
மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?
வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்
இடைவெளியை பூஜ்யமாக்கும்
நிதானம்
தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்