![]() |
Author: இராஜேந்திரன் க
|
குழந்தைகள் தங்கள் வாழ்வின் 10-12 ஆண்டுகள் பள்ளிகளில் கழிக்கின்றனர்.
குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெரும் புத்தகச் சுமையைச் சுமந்து செல்கின்றனர்.
கடுமையான வீட்டுப்பாட முறைகளால், சிறிது நேரம் கூட விளையாடவோ ஓய்வெடுக்கவோ முடிவதில்லை. படிப்பில் ஏற்படும் சிறு தவறுகளுக்கும் அதிகம் தண்டிக்கப்படுகின்றனர்.
பள்ளிப் பேருந்துகளல் அளவுக்கும் அதிகமான குழந்தைகளை அடைத்துச் செல்கின்றனர். பல பள்ளிகளில் கழிப்பிடங்கள் சுகாதாரம் இல்லாமல் இருக்கின்றன.
இவற்றைத் தடுப்பதற்கான வழிகள்
குழந்தையை உடல்ரீதியாக துன்புறுத்தக்கூடாது.இது நன்மையை விடப் பல வகைகளல் தீமையை ஏற்படுத்தும்.
குழந்தைகள் அதிக எடை உடைய புத்தகப் பையினைச் சுமப்பதால் அவர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படும். குழந்தைகளின் புத்தக எடை அவர்களன் உடல் எடையில் 10%க்கும் குறைவாகவே இருக்க வேண்டும்.
குழந்தைகளை 4 வயதில் தான் தொடக்கப்பள்ளியில் சேர்க்க வேண்டும். குழந்தைகளின் புத்தகங்களைப் பள்ளியிலே வைத்து செல்ல வசதி செய்ய வேண்டும்.
உயர்வகுப்புகளில் புத்தகங்களை விட கோப்புகளைப் பயன்படுத்தலாம். கழிப்பிட சுகாதாரம் – 60 குழந்தைகளுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் வேண்டும்.100 குழந்தைகளுக்கு ஒரு கழிவறை இருக்க வேண்டும். அவைகள் தினமும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
குழந்தைகளன் பாதுகாப்பான பயணத்திற்குப் பள்ளகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளிப் பேருந்துகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வகுப்புக்கும் 40 குழந்தைகளுக்கு மேல் அனுமதிக்க கூடாது.ஒரு குழந்தைக்கு 10 சதுரஅடி அல்லது ஒரு வகுப்பறைக்கு 400 சதுரடி இருக்க வேண்டும்.விகிதத்தில் வகுப்பறையின் இடவசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பறையும் நன்கு காற்றோட்டம் கொண்டதாகவும் குழந்தைகளன் வசதிக்கேற்ப மேசை நாற்காலிகள் உள்ளவையாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளயிலும் குழந்தைகள் விளையாட மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 4 மணி நேரம் விளையாட்டு மற்றும் இதர பொழுது போக்குகளுக்கு ஒதுக்க வேண்டும்.
குழந்தைகளின் மனதிற்கு கல்வி கற்க ஏதுவான சூழ்நிலையைப் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் மனதில் உள்ள பிரச்சனைகளைச் சரிசெய்யவும், அவர்களுக்கு ஏற்படும் அசௌரியங்களைத் தீர்க்கவும் சிறப்புப் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.
குழந்தைகள் பயிலும் பள்ளகளல் சாதி மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது. மாற்றுத் திறனாளகளுக்கு ஏற்ற உதவிகளைச் செய்து தர வேண்டும்.
படிப்பதில் கவனக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் தனிக்கவனம் செலுத்தி அவர்கள் முன்னேற உதவி செய்ய வேண்டும்.
குழந்தைகளன் உடல் மற்றும் மனம்சார்ந்த பிரச்சனைகளை உடனடியாக கண்டறியும் வசதிகள் செய்ய வேண்டும்.
இந்த இதழை மேலும்
Share

May 2015















No comments
Be the first one to leave a comment.