February, 2015 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2015 » February (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  இந்திய வேளாண்மை வளர்ச்சியின் பன்முக பரிமாணம் “என் பாட்டி சொன்ன கதை…”

  விவசாயத்தில் தற்போதுள்ள முன்னேற்றம் அவ்வளவு எளிதாக நிகழ்ந்ததல்ல. இதன் வளர்ச்சிப்பாதையைப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் தான் படிப்படியாக அடைந்த இந்த முன்னேற்றநிலையைப் பற்றி அறிய இயலும்.

  இந்திய வேளாண்மை இன்று அடைந்து வந்திருக்கும் பல்வேறு பரிமாணங்களை, என் பள்ளிப் பருவம் முதல் கல்லூரியில் வேளாண்மைப் பாடம் படித்து தெரிந்ததும், விஞ்ஞான ரீதியாக கண்டறிந்த உண்மைகளையும், சமீபகாலத்தில் எங்களைவிட்டுப் பிரிந்த எனது அத்தாயி பாட்டியின் வாயிலாக தெளிந்த பல வேளாண் கருத்துக்களையும் உங்களுடன் பகிர்கிறேன்.

  சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த சமயம், ராசிபுரம் தாலுக்கா, மாட்டு  வேளம்பட்டி என்ற ஊரில் மூன்று மகன்கள், மூன்று மகள்கள் கொண்ட மிகப்பெரிய விவசாய குடும்பம். விவசாயம் செய்வதென்றால் வீட்டில் மாட்டு வண்டி, 10 ஜோடி எருதுகள், 4 ஜோடி பால் மாடுகள், கோழிகள், ஆடுகள் என்று கால்நடைகளும் விவசாயத்தில் முக்கிய பங்கு வகித்திருந்தன. விவசாயத்திற்கு இதுதான் மூலாதாரமாக விளங்கியது.

  காலையில் 5 மணிக்கெல்லாம் பெண்கள் எழுந்து கறவை மாட்டிலிருந்து பால் கறந்து விடுவார்கள். கறந்த பாலை பால் விற்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். தயிரில் இருந்து வெண்ணெய் எடுத்து, அந்த வெண்ணெயை வாரச்சந்தைக்கு கொடுத்துவிடுவார்கள்.

  மாடு பூட்டி கிணற்றில் இருந்து நீர் இறைப்பர். அந்த நீரைக் கொண்டு கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளைப் பரவலாக பயிரிடுவர். நெல் பயிரை குறைந்த அளவில் தான் பயிர் செய்வார்கள். அது வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே கிடைக்கும் அரிதான உணவுப் பயிர்.

  சத்தான ராகி, சோளம், கம்பு போன்ற தானியங்களின், களி போன்ற உணவுகளை முக்கிய உணவாக கொண்டதன் பயன்தான் 80 வயதான அந்த கால தலைமுறையினரின் ஆரோக்கிய வாழ்வின் இரகசியம். உணவு முறைமட்டும் அல்லாது உடல் உழைப்புடன் கூடிய விவசாய வேலைகளும் சிறந்த உடற்பயிற்சியாக அவர்களுக்கு அமைந்தது.

  அப்போது பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் பாரம்பரிய விதைகள் ஆகும். விவசாயிகள் தங்களுக்கு அடுத்த பருவத்திற்கான தானியங்களை தாங்களே சேமித்து வைத்து விதையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது பேசப்பட்டு வரும் இயற்கை வேளாண்மை அப்போது முழுதாக பின்பற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது.

  விவசாயிகள் தங்களது வீட்டில் 50க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து பராமரித்து வந்தனர். நிறைய மரங்கள் வயலைச்சுற்றிலும் இருக்கும். இதுவே தேவையான எரு மற்றும் தழைச்சத்துக்களுக்குப் போதுமானதாக இருக்கும். 20 ஏக்கர் வைத்து விவசாயம் செய்த பெரும்பாலனவர்களும் இந்த முறையைத் தான் கடைபிடித்தார்கள்.

  பெரும்பாலனவர்கள் விவசாயத்தையே அடிப்படைத் தொழிலாக கொண்டிருந்தார்கள். தங்களது குடும்பத் தேவைக்குப் போக மீதமுள்ள தானியங்களை வியாபாரிகளுக்கு விற்று வருமானத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். தானியப் பயிர்களுடன் மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற பணப்பயிர்களும் வருமானத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்து வந்தன.

  கிராமத்து இளைஞர்கள் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டிருந்ததாலும், மிகக்குறைந்த அளவிலான பள்ளிகளே நகரப் புறங்களில் இருந்ததாலும் கிராமத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத் தான் இருந்தது. அப்படியே படித்தாலும் 8ம் வகுப்பு வரை படிப்பதே உயர்ந்த படிப்பாகக் கருதப்பட்டது. 10வது தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக காமராஜர் நியமித்ததில் மாற்று கருத்துக்கு வாய்ப்பில்லை. விவசாய தொழில் நுட்பங்கள், பக்கத்து விவசாயியிடம் அல்லது முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது தான் நிதர்சனமான உண்மை.

  விவசாய நிலங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஆற்றுக்கு பக்கத்தில், ஏரிகளுக்கு அருகில் என மழை பெய்யும் காலங்களில் நீர் ஆதாரம் கிடைக்க ஏதுவாக இருக்கும்படி விவசாய நிலங்களை அமைத்துக் கொண்டனர். நீர் நிலைகளுக்கு அருகில் அமைந்த காடுகளை எல்லாம் விவசாய நிலங்களாக மாற்றி தானியம் மற்றும் பணப்பயிர்களை பயிர்செய்து வந்தனர்.

  இந்தக் காரணத்தால் தான், அத்தாயி அம்மாள் போன்ற குடும்பங்கள் அதிக நீர்நிலை உள்ள மலைக்கு அருகில் அமைந்த பூசப்பாடி கிராமத்திற்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இது போலவே விவசாய மக்கள் நல்ல நிலம், நீர் நிலைகளைத் தேடி சேலம் மாவட்டத்தில் இருந்து தற்போதைய தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள்.

  தங்களின் ஒருபகுதி வருமானத்தில் புதிய நிலங்களை பூசப்பாடி கிராமத்தில் வாங்கியிருக்கிறார்கள். இந்த மானாவாரி விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த இந்தப் பகுதி மக்களுக்கு, மேம்படுத்தப்பட்ட விவசாயத்தை அறிமுகம் செய்த பெருமை சேலம் பகுதி மக்களைச் சாரும்.

  அந்தப் பகுதிகளில் மானாவாரியாக பயிர் செய்யப்பட்டு வந்த சாமை, வரகு போன்ற பயிர் ரகங்களின் பகுதி குறைந்தது. நீர் ஆதாரத்தைப் பெருக்க கிணறுகள் தோண்டப்பட்டன. ஏற்றம் இறைத்து வயல்வெளிகளில் நீர் பாய்ச்சப்பட்டன. நெல் மற்றும் பணப்பயிர்கள் பயிர் செய்யப்பட்டன.

  இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இம்மாதிரியான விவசாய முறைதான் இருந்து வந்தது.

  ஆடு மாடுகளை மலைப்பகுதிகளில் மேய்த்து, மானாவாரி பயிர்களை பயிர் செய்து  விவசாயம் செய்த காலம் அது. விவசாயிகளும் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான குடும்பங்கள் சேலம் பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டம், தர்மபுரி மாவட்டம் பகுதிகளில் குடிபெயர்ந்தது. இதற்குக் காரணம்.

  விவசாயிகள் தொடக்கப்பள்ளி கல்வியைக் கூட முடிப்பது கிடையாது. எனவே வேளாண்மை நுணுக்கங்களும், செய்முறைகளும் பாரம்பரியமாக பின்பற்றி வருபவையே.

  விவசாயிகள் தங்கள் சுயதேவைக்கான விவசாயம் செய்வது மாறி வணிக ரீதியான விவசாயம் செய்வது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகவே பயன்பாட்டில் உள்ளது. விவசாயிகளின் படிப்பறிவும், தொழில்நுட்ப அறிவும் குறிப்பிடும் படியாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

  எப்போது கிணறுகள் தோண்டி, ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின்சார மோட்டார் உதவியுடன் நீரை பயிருக்கு பாய்ச்ச ஆரம்பித்தார்களோ, அப்போதே தங்களது தேவைக்கும் போக உற்பத்திகளை வெளிச்சந்தைகளுக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

  பசுமை புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக்கூடிய ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, அதிக விளைச்சல் செய்த தமிழக விவசாயிகள் அதிக உணவுப்பொருட்களையும் உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர்.

  தற்போது கிராமத்து இளைஞர்கள் நகரத்தை நோக்கி சென்றுவிட்டார்கள். விவசாயத்தை நம்பி இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும் 40 வயதிற்கு மேலுள்ள விவசாயிகள் மட்டுமே இப்போதுள்ளனர். எனவே இந்திய விவசாய மக்களில் பெரும்பாலும் முதியோர்கள் அடங்கிய கூட்டமாகத் தான் இப்போது இருக்கிறது.

  முந்தைய காலத்தைப் போல இயற்கை விவசாயத்தை செய்து பாரம்பரிய இரகங்களைப் பயன்படுத்தி தேவையான உணவு உற்பத்தியை எல்லாம் தற்போது செய்ய இயலாது.

  இரசாயன உரங்கள், அதிக விளைச்சல் தரும் பயிர் ரகங்களை வைத்துத்தான் அதிக உணவு உற்பத்தி செய்ய இயலும். அதேசமயம் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு தானியங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு விற்பனை செய்வதால் அதிக விலையில் உற்பத்திகளை விற்க இயலும்.

  இந்த இதழை மேலும்

  என் பள்ளி

  கேரளா மாநிலத்தில் ஒட்டப்பாலம் என்ற பசுமையான கிராமத்தில் பிறந்தேன். ஆனால் பள்ளி வாழ்க்கை எல்லாமும் பழனியில் தான் அமைந்தது. அப்பா சசிதரன், சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கிறார். அம்மா ராதா, இல்லத்தரசியாக இருக்கிறார். ஒரு சகோதரி ராஜலட்சுமி. இதுதான் என் குடும்பம்.

  பள்ளி வாழ்க்கை தான் ஒருவருக்கு நல்ல அடிக்கோடிடும். இதனால் பள்ளிப்படிப்பை மிகக்கவனமாக தேர்ந்தெடுத்து நல்ல பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள். அதுபோல் என்னை அக்கறையோடும், அன்போடும் என் பெற்றோர் என்னைச் சேர்த்த பள்ளி அக்ஷயா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் சேர்ந்தால் எங்கும் இடைநிறுத்தம் இன்றி தேர்ச்சி பெறலாம். அந்த அளவிற்கு பள்ளி மேலாண்மையும், ஆசிரியர்களும் மிக நேர்த்தியான முறையில் ஒவ்வொரு மாணவரையும் முறையாக வழிநடத்துவார்கள்.

  ஆசிரியர்களின் அணுகுமுறை என்னை வெகுவாக கவர்ந்தது. இதனால் படிப்பின்மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டானது. இதனால் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தேன்.

  பள்ளியில் மறக்கமுடியாத ஆசிரியர் என்றால் உடற்கல்வி ஆசிரியராக இருந்த திரு. சீத்தாராமன், இவரது பணி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதில் முழுஈடுபாட்டோடு செய்வார். இவரைப்பார்த்து தான் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வேலையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.

  பள்ளியை முடித்ததும் பொள்ளாச்சியில் உள்ள NPDC கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். இங்கு படிக்கும் பொழுது படிப்பில் காட்டும் அக்கறையை விளையாட்டிலும் செலுத்தினேன். கூடைப்பந்து (Basket Ball) எனக்கு மிகுந்த விருப்பமான விளையாட்டானது. நேரு அரங்கில் கிளப் மூலம் தொடர்ந்து இவ்விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டேன்.

  இவ்விளையாட்டின் மீது ஏற்பட்ட ஆர்வமே ராணுவ அதிகாரித் துறையிலும் என்னை ஈடுபடச் செய்தது. எங்கள் வீட்டில் எனது அம்மா ராணுவப் பணி என்றதும் சற்று பயந்தார். என்றாலும் எனது ஆசை இதுவாகத்தான் இருந்தது. எனவே ராணுவம் தொடர்பான தேர்வினை எழுதி, தேர்வில் வெற்றியும் பெற்றேன்.

  தேர்வு முடிவுகள் வீட்டிற்கு வந்தது. முதலில் எனது தந்தை தான் அதைப் பார்த்தார். டேராடூனில் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக இப்பயிற்சிக்கு என்னால் செல்ல முடியவில்லை.

  பயிற்சியை முடித்ததும் பொறியியல் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள நேரு இன்ஸ்டிடியூசன் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். இரண்டாம் ஆண்டில் பார்க் இன்ஸ்டிடியூட்டின் முகாம் ஒன்றில் பங்கேற்றேன். இங்கு பெற்ற பயிற்சி அனுபவங்களும் உறுதுணையாக அமைந்தது. அதன் பின்பு கோவையிலுள்ள டிஃபென்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற சேர்ந்தேன். அங்கு தான் திரு. கர்னல் ஜெயவேல் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் ஆலோசனை என்னை வெகுவாக கவர்ந்தது. அவரது ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு உந்துகோலாக அமைந்தது. அவரைப் போலவே சுகுனேஷன், அசோக்குமார், விஜயகுமார் ஆகியோரின் பயிற்சியும் எனக்கு பெரிதும் பயன்பட்டது.

  படித்து பெற்ற அறிவைக்காட்டிலும் அனுபவமாக பெற்ற அறிவே பெரிதும் துணைபுரிந்தது. என்னுடைய மாமாவும் ராணுவத்தில் இருந்ததால் எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.

  என்னைப் பொறுத்தவரை ஒரு பணியை எடுத்துக்கொண்டால் அதனை கடமைக்கு செய்யக்கூடாது. சற்றும் தளராமல் அந்த வேலையைச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் தன்னால் எல்லாம் முடியும் என்றதன்னம்பிக்கை ஏற்படும்.

  என்னைப்போல் பல இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து பணிபுரிய ஆர்வமுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை புதிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிறக்கிறோம். சிலர் வாய்ப்புகளைத் தவறவிடுகின்றனர். சிலர் முறையே வாழ்க்கையை அமைத்து சாதிக்கின்றனர். சாதித்தவர்களின் பட்டியலில் உங்களது பெயரும் இடம் பெறவேண்டும். அதற்கு கடின உழைப்பு வேண்டும். வாழ்வு உயர்வு பெறும்.

  இந்த இதழை மேலும்

  வேலை நேர சோலை

  சோலைகள் மலர்களும், பசுமையான தாவரங்களும், செடிகொடிகளும், பறவைகளும், காய்கனிகளும், ஈரமண் வாசனையும், சில்லென்றகாற்றும், வண்டுகளின் ரீங்காரமும், தென்றலின் சுகமும், பனிக்காற்றின் குளிர்ச்சியும், நுரையீரல் வரை இனிக்கின்ற தெள்ளத்தெளிவான தேன் சேகரித்துச் செல்லும் விதவிதமான தேனடைக்களின் குறுக்கு மறுக்கான பறப்பும் நிறைந்து காணப்படுகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் கும்லா மாவட்டம். அதில் இருந்த விருந்தினர் மாளிகைத் தோட்டத்திற்குள் ஒற்றைப்படை வெப்பநிலையில் பூத்துக் குலுங்கிய ரோஜாக்கள் அப்படியானவைதான்.

  அதிகாலை நேரத்தில் இருபதுக்கு கீழான டிகிரி செல்சியஸில் எழுந்து கொள்வது வரை சரிதான், ஆனால், சீதோஷ்ண நிலைக்கு உடலை படிப்படியாக எடுத்துச் சென்று, பக்குவப்படுத்தி, பழக்கப்படுத்தி, பின்பு ஆறு மணிக்கெல்லாம், விளையாட்டு மைதானம் சென்றால் நுரையீரல் ஒருவேளை சிரமப்பட்டிருக்காது. ஆனாலும் பதினைந்து நாட்களில் சப்பாத்தி உணவோடான பயிற்சியில் நாற்பது வயதில் ஒரு மாத பயிற்சிக்கு அனுப்பப்பட்ட கதிரேசன் அவர்களது கற்பனை உடல்குறித்த இந்தக் கட்டுரை முழுக்க கற்பனையே. ஏனெனில் கதிரேசன் அதுபோன்ற பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை.  பெயரும், சம்பவங்களும் நிஜமா கற்பனையா? என்பதல்ல முக்கியம் அதன் மூலம் ஏதும் பலன் கிடைக்குமா? என்று காண்பதல்லவா இங்கே அவசியம்? அப்படிப் பார்த்தால் ஏராளமான விசித்திரமான அனுபவங்கள் வேலை நேரச் சோலையில் கிடைக்கின்றன.

  லிட்டி சொக்கா என்பது, பீஹார் மாநிலத்தின் மிகச்சிறப்பான உணவு, அது கிட்டத்தட்ட கிரிக்கெட் விளையாடும் இரப்பர் பந்து மாதிரியே இருக்கிறது.  தமிழ்நாட்டில் கிடைக்கும் தினை மாவுபோல ஜார்கண்டில் கிடைக்கும் “சத்து” என்கின்ற சிறுதானிய வகை மாவை அரைத்துவைத்து அப்படியே வரட்டியின் வெப்பத்தில் தீயில் வாட்டி சமைத்துசூடாக, பேங்கன் கி பர்த்தா என்னும் கத்தரிக்காய் சட்னியோடு தருகின்றனர். தோனியின் வீட்டு வழியாக விமான நிலையத்தில் இருந்து நாம் இராஞ்சிக்குள் நுழையும் பொழுது, திறமை என்பது எப்படியும் நிரூபிக்கப்பட்டு உயர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை என்ற நம்பிக்கை மரம் செழிக்கின்றது.

  வேலை நேர சோலை என்று தலைப்பு வைத்து ஜார்க்கண்ட் சோலையில் ஆரம்பித்து லிட்டி சொக்காவிற்குள் நுழைந்து தோனி வீட்டு வரை அழைத்துச் சென்றது கதிரேசனின் கற்பனை வரலாறு என்றால் மிகையாகாது.

  அவரை ஒரு வங்கி அதிகாரி என்று தெரிந்துகொண்டால் வங்கிப் பணிக்கிடையே உடற்பயிற்சி செய்வதும், இலக்கியம் படிப்பதும், தோனியின் வரலாறை பின்பற்றி படிப்பதும், குதிரை ஏறுவதும், கவிதை எழுதுவதும், எவ்வாறு கவனச் சிதைவு இன்றி செய்ய முடிகின்றது என்பதைக் காட்டிலும் … இவ்வளவும் செய்த பிறகு மீண்டும் எப்படி ஓய்வு நேரம் கிடைக்கின்றது? என்பதே கேள்வி? ஒரு வேளை குடும்பத்தினருக்கு குறைவான நேரம் ஒதுக்கப்படுகின்றதோ? என்றால்… அதுவும் இல்லை… குழந்தைகளுக்காக… நாளொரு அத்தியாயமாய் எழுதி பத்து அத்தியாயம் கொண்ட புத்தகத்தையே கதிரேசன் கம்பளீட் செய்துவிட்டதாக கேள்வி…

  அவரது நண்பர் டாக்டர் செந்தில்ராஜ் தேவக்கோட்டையில் மருத்துவராக இருந்தார். இந்தமுறை மடக்கிவிடுகின்றேன் என்று வார்த்தை விளையாட்டுகளில் உற்சாகம் தளும்ப தொலை பேசியில் பேசி வைத்தபிறகும், நினைத்துப்பார்த்து சந்தோஷம் அடையும் வண்ணம் எப்படியும் ஏதாவதொரு கருத்து சொல்லப்பட்டு இருக்கும். தொலைபேசியில் பேசுகையில்

  “அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

  தீதின்றி வந்த பொருள்”

  என்ற குறள் விவாதிக்கப்பட்டது. இவ்வளவு எளிமையான திருக்குறளுக்கு கூட இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தந்தேயாக வேண்டும் என்று அவரது நண்பர் கேட்ட பொழுது எப்படிப்பட்ட காசு சந்தோசம் தரும்னு? வள்ளுவர் கிட்டே கேட்டோம்னா? திறமையினால் வர்றகாசு… அதுலயும் திறமைய பயன்படுத்தி தவறேதும் செய்யாமல் நல்லது மட்டுமே செய்த பின்பு (தீதின்றி) வருகின்றகாசு இன்பத்தை கொடுக்கும்னு சொல்றார், அது மட்டுமா? அது. அடுத்த உலகத்திற்குத் தேவையான அறம் என்று சொல்லக்கூடிய புண்ணியத்தையும் தரும் என்று திருவள்ளுவர் இந்த ஏழு சீர்களில் (சீர் என்றால் செந்தமிழில் வார்த்தை என்று பொருள்) எதையுமே எடுத்துவிட முடியாதவாறும், எதையும் அதிகமாக சேர்க்க வேண்டிய தேவை எழாதவாறும் எழுதியிருக்கின்றார் என்ற பொழுது புத்தாண்டுக்குப் பொருத்தமாக இந்தக் குறள் கிடைத்து இருக்கின்றது என்று மகிழ்ந்தார்.

  தினந்தோறும் குறைந்தபட்சம் மூன்று கிலோ மீட்டர் ஓடியாக வேண்டும் அதுவும் ஐந்தரை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்குமுன்பு பத்து நிமிடம் நற்பண்புகளைக் கொடுக்கின்ற நிர்வாகத்திறன் வளர்க்கின்ற ஏதேனும் படிப்பு நெட்டுறு போடவேண்டிய ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் போன்ற பாடல்களை பாராயணம் செய்து விட்டு  இருபது நிமிடம் கையோடு தியானம், அதற்கும் முன்பாகவே காலைக் கடன்களை குளிர்ந்த நீரில் முடித்தல் என்று வரிசைப்படுத்தினால் கிட்டத்தட்ட பாரதிதாசனாரது குடும்ப விளக்கு பாடல்… இல்லத்தலைவி… எழுந்து கொள்கின்ற… நேரத்தில் எழுந்தாக வேண்டிய அவசியத்தை கதிரேசனின் கம்ப்ளீட் ப்ளான்னிங் காட்டிவிடுகின்றது.

              பயிற்சி செய்யும் பொழுதுதானே. சீன் அப்போட் இடம் பவுன்சரில் அடிவாங்கி காலமாகிப்போன பெப் ஹியூஸ் மாதிரி பயங்கரமான பந்துவீச்சுக்களை பக்குவமாக விலகிக் கொண்டு தப்பிக்கின்ற பக்குவம் கிடைக்கின்றது. வள்ளுவர் பொறையுடைமை என்று ஒரு அதிகாரத்தை வைத்திருக்கின்றார். அடி வாங்கி தாங்கிக்கொள்வது மிகவும் நல்ல பண்பு என்று ஆலோசனை தருகின்றார். அனைத்தையும் யோசித்த பின்பே சொல்லியிருப்பார் போலும். டோனி தனது கையுறையில் எவ்வளவு பந்துகளை வாங்கி வலி தாங்கியிருப்பார்? என்று கதிரேசன் யோசித்துப் பார்க்கின்றார் (உலகின் மூன்றாவது அதிக செல்வம் சேர்த்திருக்கின்ற விளையாட்டு வீரர் என்கின்ற புள்ளி விவரத்தைக் கேட்டு… ஒத்தெல்லோ… டெஸ்டிமோனாவை சந்தேகப்பட்டதுபோல் எல்லாரும் பட்டுவிடக்கூடாதென்பதால், அடி பட்ட வேதனையை அவர் தாங்கி கொண்டதன் சன்மானத்தைத்தான் பெற்றுள்ளார் என கருதினார். இதுவரை ஆடியதிலேயே அதிக வெற்றிகளை டெஸ்ட் மேட்சுகளில் (இருபத்தேழு) பெற்றுத்தந்த ஒரே கேப்டன் என்று புகழ் பெறஇவர் தாங்கியது எவ்வளவோ? என்று தெரியாது திருவள்ளுவர்,

  துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்

  இன்னாச்சொல் நோற்கிற் பவர்

  என்று சொல்லி இருக்கின்றார். மறுபடியும் செந்தமிழில் திருக்குறள் சொல்லிவிட்டு, மீனிங், சொல்லலை என்றால் என்ன பலன்? என்பவர்களுக்காக இந்த நூற்றி ஐம்பத்தொன்பதாவது குறளை – புரியும் படியாக  நவீன காலத்திற்கு தகுந்தமாதிரி கதிரேசன் ஸ்டைலில் – மாற்றினால்… எவ்வளோ பேர் … கழுவி கழுவி… ஊற்றினாலும், திட்டினாலும்… அவர்கள் சரியானவர்கள் அல்ல… அல்லது சரியான விஷயத்தை சொல்லவில்லை? அல்லது தவறாக புரிந்து கொண்டு அவதூறாகவோ? காரமாகவோ மிரட்டலாகவே பேசுகின்றனர் என்று நினைத்தால், என பொறுத்துக்கொண்டு, பதிலுக்கு பதில் பேசி டெம்பரேச்சரை ஏத்தி ஒரு வாங்கு வாங்கி அப்போதைக்கப்போதே திருப்பிக் கொடுத்து அல்ப சந்தோசமாகாதவர்கள், காயமே இது பொய்யடா என்று காட்டுக்குள் போயோ, அல்லது டென்ஷன் நிறைந்த ஆஃபீஸீக்கு வருஷம் ஒரு முறைஐந்து பத்து நாள் லீவைப் போட்டு புண்ணிய ஸ்தலமாய்ப் போய் தியானம் செய்து கூல் ஆஃப்  ஆகின்றவர்களைக் காட்டிலும் தூய்மை உடையவர், அதாவது தவத்தில் பெரியவர் தியானத்தில் உயர்ந்தவர் என்று அர்த்தம். இந்தக் காலகட்டத்தில் வங்கிப் பணியில் ஏராளமானவர்களை சந்திக்க வேண்டியிருக்கின்ற கதிரேசன். மனசு கஷ்டமாக இருக்கிறதென டென்ஷன் ஆனால், அவ்வளவுதான். ரெண்டு நம்பரை மாற்றிப் போட்டுவிட்டால் செக்… அவரை நாக் அவுட் செய்துவிடும். உடலும் மனமும் பவுன்சர்களைப் போல சீறிப்பாயும். சுடுசொற்களை விரிசல் கண்டுவிடாத மனசோடு, விலகியும், மட்டையில் விலக்கியும் தாங்கி கொண்டு களத்தில் நிற்க வேண்டும். எந்தக் காலத்திலும் பேட்ஸ் மேன் பந்தை எவ்வளவு கோபம் வந்தாலும் உன்னை அடிப்பேன் என்று பவுலரை நோக்கி வீசப்போவது இல்லை. இதையே கதிரேசன் ஒரு நாள் காலையில் பத்து நிமிட வழிபாட்டுப் படிப்பில் அதாவது  வழிகாட்டிப் படிப்பில் எடுத்த ஸ்டீவன் கோவே அவர்களின் எட்டாவது பண்பு என்கின்ற புத்தகத்தில் விக்டரி ஃப்ரேங்கள் என்கின்ற ஜெர்மனியின் நாஜிக்களின் கான்சன்ட்ரேஷன் கேம்பில் மாட்டிக்கொண்டு தப்பித்து வந்த உளவியல் மேதை தான் மனதில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு, வெளியே நல்ல விளைவுகளை மட்டுமே கொடுப்பேன், புன்னகைத்தவாறே இருப்பேன் என்று முடிவு செய்து விட்டமையால் வெற்றிகரமாக வெளியே உயிர்தப்பி வந்தார். இந்தக் கொடுமையால் இரண்டாம் உலகப் போர் சமயம் இலட்சக்ணக்கானோர் உயிரிழந்தது தனி கதை. நம் தாங்கும் சக்தி – அந்த அளவுக்கு இருக்க வேண்டியதில்லை என்று அந்த புத்தகத்திலேயே சொல்லியிருக்கின்றார் ஸ்டீவன் கோவே. இப்படி உலக இலக்கியங்களில் இருப்பதை இரண்டாயிரம் வருஷம் முன்பே சொல்லியிருப்பதை படித்து கதிரேசன் கன்னா பின்னாவென்று இன்ஸ்பையராகிக் கொண்டு இருபத்தோரு வயசிலிருந்த இரண்டு ஜார்க்கண்ட மாணவ விளையாட்டு வீரர்களோடு நூறு மீட்டர் (அவர்கள்… கோரிக்கைக்கிணங்க) ஓடி செயித்து தட்டிக்கொடுத்துக் கொண்டது தனிக் கதை… இப்படிச் சின்னச் சின்ன பயிற்சிகள் காலைநேரத்தில்… தயாரான பிறகு ஒரு நாளின் பலதரப்பட்ட பந்து வீச்சுகளுக்கு பொறுமை, திறமை இரண்டையும் கொண்டு பொறுத்தமான ரீஃப்ளக்ஸ் கொடுக்கலாகின்றது.

  கதிரேசனுக்கு தெரியும் இங்கே லைஃபில் ரீப்ளே கிடையாதென்று, நாகமண்டலா என்று கிரிஷ் கர்னார்டு உடைய நாடகத்தின் கிளைமேக்ஸில் இராணி நாகப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டு, என் வாழ்நாளில் இரண்டே ஆண்களையே கையில் தொட்டுள்ளேன் ஒன்று இந்த பாம்பு இன்னொன்று என் கணவன், அப்பன்னா என்று சொல்வாள். இதில் இந்த சொற்களை தவிர வேறு மொழியை பயன்படுத்தியிருந்தால் கதை கந்தல் ஆகியிருக்கும். சொற்கள் சரியான நேரத்தில் சரியாக பயன்படுத்தப்பட வேண்டுமெனில் இராபின் சர்மா தனது “நீ இறக்கையில் அழுவார் யாரோ?”புத்தகத்தில் சொல்லியுள்ளவாறு கதிரேசன் செய்வதைக் காண்கின்றோம். இப்படி தயாராகையில் நாள்தோறுக்குமான, வாரத்திற்கான, வருடத்திற்கான, ஏன் வாழ்க்கைக்கான செயல்திட்டம் தயாராகிவிடுகின்றது. எதிர்பாராத திருப்பங்கள் ஏராளமான பொறுமை காரணமாக எக்கச்சக்கமான சந்தோஷங்கள் கொடுக்கின்றன. எவ்வளவு  சிக்கலான சூழ்நிலையோ? அவ்வளவு அதிகமான மகிழ்ச்சி எடுக்கலாம் என தெரிந்து கொண்ட கதிரேசனின் நாள் முழுதும் வேலையிடையே சோலை உருவாகின்றது. பாரதியார் சொன்ன வண்ணம் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று அந்தச் சோலையிலே உலாவிக்கொண்டே கதிரேசன் கேட்கின்றது, கேட்கின்றதா?

  இந்த இதழை மேலும்

  தன்னை உயர்த்தும் தன்னம்பிக்கை

  எவரும் என்னை மதிப்பதே இல்லை. எல்லோரும் என்னை மிகவும் இழிவாக நினைக்கிறார்கள்! என்று நீங்கள் உங்களைப் பற்றித் தாழ்வாக நினைக்கிறீர்கள்! யாரோ உங்களைப் பற்றி மோசமாக நினைக்கட்டும்! மோசமாக பேசட்டும்! மிகக் கேவலமாக விமர்சனம் செய்யட்டும்! அவைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாமா? உங்களைப் பற்றி நீங்கள் உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருக்க வேண்டாமா? மற்றவர்கள் சொல்கிறார்களே என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொண்டால் எப்படி? எந்தச் சந்தர்ப்பத்திலும் நீங்கள் உங்களைத் தாழ்த்திக்  கொள்ள நினைக்காதீர்கள்!

  உங்களை உயர்த்திக் கொள்ள உங்களால் மட்டுமே முடியும்! மற்றவர் எவரும் உங்களை உயர்த்துவதற்கு வரமாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! உங்கள் மனைவி, மக்கள் எல்லோருமே உங்களிடமுள்ள குறைகளை, உங்கள் மனம் புண்படும்படியாகச் சொல்லித் திட்டிக்கொண்டே இருப்பார்கள். உங்களை உயர்த்துவதற்கு முன் வரமாட்டார்கள். அந்தக்காலத்தில் பரந்த மனப்பான்மையுள்ள மனிதர்கள் பரவலாக இருந்தார்கள். ஒருவர் மற்றவரை உயர்த்துவதற்குத் தன்னாலியன்ற உதவிகளையெல்லாம் செய்தார். காலம் மாறிவிட்டது. இன்று உதவும் கரங்கள் எதுவுமே இல்லை!  கடல் முத்துக்களை எடுப்பதைப் போல, மிகவும் சிரமப்பட்டுத்தான் உதவும் கரங்களைத் தேட வேண்டும். பொறாமைக்குணம், பேயாட்டம் போடுகின்ற காலமிது!

  வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று எண்ணுகின்றவன், தன்னம்பிக்கை நிறைந்தவனாக  இருப்பான். அவன் தன்னை நம்புவதுதான் தன்னம்பிக்கை ஆகும். தன்னை உயர்த்துவது  தன்னம்பிக்கையே என்பதை அவன்  நன்கு அறிவான். ஒருவன் தன்னை நம்பாமல் வெறுப்புணர்வோடு இருப்பது அவநம்பிக்கை ஆகும்.

  நீங்கள் மிகவும் அச்ச உணர்வு உள்ளவராக இருந்தால், உங்களை கதாநாயகனாக எண்ணிக் கொள்ளுங்கள். அனைவரிடத்திலும் மனம்விட்டுப் பேசுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை அற்றவராக இருந்தால், எதையும் சாதிக்கத் துடிப்பவராக உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள். உறவினர்களுடன் பேசுவதற்குக் கூச்சமா? உறவினர்களுடன் விவாதம் செய்து, அவர்களைப் பேச்சில் மடக்குவதாகவும் வெல்வதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்!

  இந்தக் கற்பனை பல அற்புதங்களை விளைவிக்கும். நீங்கள் கண்ட கனவு, நிச்சயமாக நனவாக மாறிவிடும். பேசுவதற்கே கூச்சப்படும் நீங்கள் பேசுவதற்கே மற்றவர்களிடத்தில் காசு கேட்கும் நீங்கள், மற்றவர்களிடத்தில் வளவளவென்று நிறையப் பேச ஆரம்பிப்பீர்கள். உங்கள் முன்னால் இருக்கும் அனைவருக்கும் அறிவுரை வழங்குவீர்கள்! தன்னம்பிக்கையின் நாயகனாகத் திகழ்வீர்கள்.

  வெற்றியையும், மனஉறுதியையும் தரும் தன்னம்பிக்கையை நீங்களாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும். விலைமதிக்க முடியாத தன்னம்பிக்கையை உங்களால் தான் உருவாக்கிக் கொள்ள முடியும். தன்னம்பிக்கை உங்கள் வாழ்க்கையில் கொடி கட்டிப் பறக்கும்போது, நீங்கள் நினைக்கும் எதையும் சாதிக்கலாம். மற்றவர்களை நம்பி நீங்கள் பல சமயங்களில் ஏமாற்றப்பட்டு இருக்கின்றீர்கள். உங்களை ஏமாற்றும் பேர்வழிகளை நம்பி நீங்கள் மனதில் துயரங்களையும், தாங்கிக் கொள்ள முடியாத  மன உளைச்சல்களையும் வீணாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா? மற்றவர்களை நம்பிக் கெட்டுப்போகின்றீர்கள். முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள்!

  உங்களைப் பற்றி நீங்கள் தாழ்வாக நினைப்பது, உங்களுடைய திறமைகளை வீணடித்துவிடும். உங்களைப் பற்றி நீங்கள் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டிருங்கள். அப்பொழுதுதான் நீங்கள் பல முன்னேற்றங்களைப் பெறமுடியும்.

  உங்களுடைய பெற்றோர்களோ, அல்லது ஆசிரியர்களோ உங்களைத் திட்டிக் கொண்டே இருந்திருந்தால், மாணவர் பருவத்தில் மகிழ்ச்சியுடனா நீங்கள் இருந்திருப்பீர்கள். மக்கு! எந்தக் காரியத்தையும் நீ உருப்படியாகச் செய்வதில்லை! எதிர்காலத்தில் நீ முன்னுக்கு வரமாட்டாய்! என்றெல்லாம் சொல்லி மற்றவர்களின் முன்னால் உங்களை மட்டம் தட்டியிருப்பார்கள், உங்கள் பெற்றோர்கள்.

  இப்படியெல்லாம், கண்டிப்புடனும் வேண்டாத திட்டுதல்களுடனும் தங்கள் மகனை அதட்டி மிரட்டி வைத்தால் மகன் ஒழுங்காக இருப்பான். தங்களுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பான் என்றெல்லாம் சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் தங்களைவிட்டு எங்கும் போகமாட்டான் என்ற எண்ணத்தில் அவனை ‘பிரெயன் வாஷ்” (மூளைச் சலவை) செய்துவிடுகின்றார்கள்.

  இப்படியெல்லாம் சில பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் போது சில பிள்ளைகளின் மனநிலை மாறிவிடுகின்றது. அதனால் அவர்கள் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. சில பிள்ளைகள், தங்கள் பெற்றோர்களின் கண்டிப்பையும், அதட்டல்களையும் சிறிதும் ஏற்றுக் கொள்ளாமல் வீட்டைவிட்டே ஓடிவிடுகிறார்கள். அதனால்தான் வள்ளுவரும் ‘கடிதோச்சி மெல்ல எறிக!’ என்று கூறி அதிகமான கண்டிப்பைக் கடிந்துரைக்கிறார்.

  பல பிள்ளைகளின் மனங்கள் பாழ்பட்டுப்போய் மிகவும் வருந்திச் சோகமாய் இருப்பதைப் போல நீங்கள் இருக்காதீர்கள். உங்களுடைய பெற்றோர்கள் உங்களை “மக்கு” என்றும், மடையன் என்றும் சொல்லித்திட்டி, உங்களிடம் குறைகளைக் கண்ட போது, அவைகளைப் பல வருடங்களாக அவைகளையே நினைத்து  வருத்தப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள். எதிர்நீச்சல் போடுங்கள்! மற்றவர்களை நீங்கள் நம்பாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் உங்களை நம்புங்கள்!  உங்கள்மேல் நீங்கள் அபாரமான தன்னம்பிக்கை கொள்ளுங்கள்! அந்த தன்னம்பிக்கை உங்களை உயர்த்தும்.

  உங்களை உயர்த்திக் கொள்ளப் பல வழிகளிலும் முயற்சி செய்யுங்கள்! தன்னம்பிக்கையும், கடுமையான முயற்சியும், இடையறாத உழைப்பும், எதற்கும் கலங்காத மனமும் இருக்குமானால் நீங்கள், உங்கள் பெற்றோர்கள் வியக்குமளவுக்கு முன்னேறிவிடுவீர்கள்!

  பள்ளியில் ஒரு மாணவனை எப்பொழுதும் திட்டி அவனை அடக்கி வைத்து, அவனை உருப்படாமல் செய்துவிடுகிறார், ஒரு ஆசிரியர்.

  பிற்காலத்தில் அந்த மாணவன் எந்த முன்னேற்றமும் பெறாமல் வீணாக அலைந்து கொண்டும், வீதியில் திரிந்து கொண்டும் இருப்பதைக் காணும் ஆசிரியர், ‘பள்ளிக்கூடத்தில் இவன் படிக்கும் பொழுதே சொன்னேன்! இவன் உருப்படாமல் போய்விடுவான் என்று! அதேபோல் ஆகிவிட்டான்” என்று மற்றவர்களிடம் தன்னுடைய எதிர்காலக் கணிப்பைப் பற்றி பறைசாற்றிக் கொண்டிருப்பார்.

  வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில் ஆசிரியர்கள் என்று மாறி மாறிக் கண்டித்துத் திருத்த நினைக்கும் போது, ஒருவனுடைய மனம் பாழ்பட்டுப் போய்விடுகிறது. அவசியமான கண்டிப்புகளோடு, அரவணைத்துச் செல்கின்றஅன்பும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்குமானால், பிள்ளைகள் பொறுப்புள்ள  குடிமகன்களாக மாறுவார்கள். இவர்களிடத்தில் தன்னம்பிக்கை என்னும் தீபம்   எப்பொழுதும் சுடர்விட்டுப்  பிரகாசித்துக்  கொண்டிருக்கும்.

  உங்களுடைய மனதை வைரமுடைய நெஞ்சாக, வைராக்கியமுடைய நெஞ்சாக மாற்றிக் கொள்ளுங்கள்.

  மற்றவர்கள்  உங்களைத் தரக்குறைவாகப் பேசும் போதோ, தகாத வார்த்தைகளால் நேருக்கு நேர் உங்களைப்  பார்த்து அர்ச்சனை  செய்யும் போதோ, அவர்களைப் பார்த்து கர்ச்சனை (கர்ஜனை) செய்யாதீர்கள். கோபத்தினால்  எழுச்சி பெற்றுத்துடிக்கும் உங்களை மனதை முதல் அடக்கி வையுங்கள்.

  “எவர் எதைப் பற்றிச் சொன்னாலும் அதைப்  பற்றி எனக்குக் கவலையில்லை” என்று உங்களை  மிகவும் விரும்பக்கூடிய நண்பனிடத்தில் சொல்லுங்கள். உங்கள் மேல் குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் “பொறாமை உணர்வு”கொண்டவர்களை ஒதுக்கித் தள்ளுங்கள்! உங்கள் மனதை நீங்கள் எதற்கும்  கலங்காத  நெஞ்சமுடையதாக மாற்றிக் கொள்ளுங்கள்! இது உங்களால் முடியும்!

  எதையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று புலம்பாதீர்கள்! மற்றவர்கள் உங்கள் மேல் கொண்ட பொறாமை உணர்வால் உந்தப்பட்டு உங்களை வெறுக்கட்டுமே! நீங்கள் மட்டும் எப்பொழுதும் உங்களை வெறுத்து விடாதீர்கள்! முதலில் உங்களை நீங்கள் விரும்புங்கள்!

  உங்களிடம் எண்ணற்ற திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அந்தத் திறமைகளை நீங்கள் வெளியே கொண்டு வர வேண்டும். அந்தத் திறமைகளை முறையாகப் பயன்படுத்தி நீங்களும், உறவினர்களும் பயன்பெறவேண்டும். முதலில் தன்னம்பிக்கை என்ற ஒப்பற்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

  “என்னிடத்தில் தன்னம்பிக்கை இருப்பதால் முன்னுக்கு வந்துவிடுவேன்!”

  இதை அடிக்கடி சொல்லுங்கள். கண்டிப்பாக நீங்கள் முன்னுக்கு வந்து விடுவீர்கள்! எண்ணம் போலத் தானே வாழ்க்கையும் அமையும்! தன்னம்பிக்கையும், ஆர்வமும், விடாமுயற்சியும், கடுமையான உழைப்பும் இருந்தால் ஏன் முன்னுக்கு வர முடியாது?

  உங்களுக்கு விடாமுயற்சி, ஆர்வம், கடுமையான உழைப்பு ஆகியவைகள் இருந்தாலும் உங்கள் மேல் உங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கை வேண்டும்!

  உங்களையே நீங்கள் நம்பவில்லையே, மற்றவர்ளை நீங்கள் எப்படி நம்புவீர்கள்? அசைக்க முடியாத தன்னம்பிக்கை உங்கள் உள்ளத்தில் இருக்குமானால்  யாராலும்  உங்களை வெல்ல  முடியாது.

  உங்களுடைய திறமையின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள்!  எஃகை விடப் பலம் வாய்ந்த உங்களுடைய அபாரமான நம்பிக்கையைப் பார்த்து மற்றவர்கள் வியக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

  உலகமே திரண்டு வந்து உங்கள் மேல் போர்தொடுத்த போதிலும், ஒருபோதும் உங்களை நீங்கள் வெறுக்காதீர்கள்! உங்களையே நீங்கள் வெறுத்தால் சாதிக்க வேண்டிய செயல்களின் மீதும், உங்களுக்கு வெறுப்பு வரத்தான் செய்யும். வெறுப்பு தோன்றிவிட்டால், செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண்பது எப்படி? சிந்துத்துப் பாருங்கள்.

  பிறஉயிர்கள் மேல் காதல் கொள்வது இயல்பானது. ஆனால் ஒருவன் தன் மேல் காதல் கொள்வது கடினமானது. தன் மேல் காதல் கொண்டிருப்பவன், தன்னம்பிக்கைக் கடலில் நீந்திக் கொண்டிருப்பான்.

  இந்த உலகில் பெரிய பெரிய சாதனைகளைச் செய்தவர்கள் அனைவருமே தன்னம்பிக்கைக் கடலில் நீந்தியவர்கள்தாம்! அவர்கள் அனைவருமே தங்களை மிகவும் விரும்பினார்கள், தங்களையே காதலித்தார்கள். அதனால்தான் மகத்தான சாதனைகளை அவர்களால் செய்ய முடிந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தோற்றத்தைக்  கண்ட அனைவரும் விமர்சனம் செய்தனர். ஆனால் லிங்கன் முகம் பார்க்கும்  கண்ணாடியில் தன் முகத்தை  அடிக்கடி பார்த்து, தன்னை விரும்பத் தொடங்கினார். தன்மேல் அவருக்கு காதல் பிறந்தது. தன்மேல் கொண்ட தன்னம்பிக்கை அவரை  உயர்த்தியது.

  ‘சே! நான் இந்த உலகத்தில் பிறந்திருக்கவே கூடாது!’ என்று சொல்லி உங்களை நீங்கள் வெறுக்காதீர்கள். உங்களை நீங்கள் வெறுக்கும் போதுதான் கோழையாகிவிடுகின்றீர்கள்! தற்கொலை எண்ணங்கள் எல்லாம் உங்கள் மனதைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.

  உங்களை நீங்கள் விரும்பும் போதுதான் தன்னம்பிக்கை மிகுந்தவராக விளங்குவீர்கள். உங்களைப் பற்றித் தாழ்வான எண்ணம் இருந்தால், தன்னம்பிக்கை என்ற வெடி, அதைத்தூள் தூளாக்கிவிடும். உங்களிடம் ஏகப்பட்ட திறமைகள் இருக்கின்றன. அந்தத் திறமைகளை வெளியே கொண்டு வந்து பயன்படுத்துங்கள்.

  உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பமும், ஈடுபாடும் இருக்கிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து விடாமுயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருங்கள். உங்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியும் ஆர்வம் என்ற நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  உங்கள் செயல் – உழைப்பில் “போதும்” என்ற மனப்பான்மையைக் கொண்டு வந்துவிடாதீர்கள்! உழைத்துக் கொண்டே இருங்கள்! ஊக்கத்தோடுசெயலாற்றுங்கள்!  உங்களிடத்தில் சோம்பல் இருக்குமானால் இந்தச் சோம்பலைச் சாம்பலாக்கிவிடுங்கள்!  இந்த உலகத்தில் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை. ஆர்வம் இருந்தால் எந்தக் காரியத்தையும் அழகாகச் செய்து முடிக்கலாம். உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். உங்கள் மேல் நீங்கள் யாராலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் போது, எச்செயலையும் நீங்கள் சுலபமாகச் செய்யமுடியும். உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் இந்த உலகத்தில் வேறு யாரை நீங்கள் நம்பப் போகிறீர்கள்!

  உங்களுக்கு விளையாட்டின் மேல் ஆர்வம் அதிகமாக உள்ளது. தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு முத்திரை பதிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். ஜமைக்கா நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் உசேன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், ரிலே ஓட்டம் ஆகியவைகளில் தங்கப்பதக்கம் பெற்றதோடு மாபெரும் உலகசாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். இவரைப்போல நீங்களும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும்.

  உங்களால் முடியும். உங்களுக்குத் திறமை இருந்தும் அதைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்தாமருக்கின்றீர்கள்! உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லை. அதுதான் காரணம்!

  மனஉறுதி உள்ளவனுக்கு தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் அதிகமாக இருக்கும். மாவீரன் நெப்போலியனுக்கு, அவனுடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத்  தட்டி இசையெழுப்பி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது முடிந்ததும் நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டுவெடிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளைத் தளபதிகள் செய்திருந்தார்கள்.

  நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது. அனைவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிய பின்பு, குண்டு வெடித்தது. தளபதிகளின் கைகளிலிருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன.

  ஆனால் நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்கவில்லை. அவன் கையிலிருந்த கிண்ணத்தில் பழரசம்கூடத் ததும்பவில்லை.

  இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்.

  “பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடுதான்! இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களைத் தவறவிட்டுவிட்டோம். ஆனால் உங்களுடைய கை கொஞ்சம் கூட நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று பாராட்டினார்கள்.

  உடனே நெப்போலியன் சொன்னான். “அதனால்தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றான்.

  உண்மைதான்! நெப்போலியனுக்குத் தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தது. அத்துடன் எதிலும் ஏமாந்துபோகாத விழிப்புணர்வு அதிகமாக இருந்தது.

  நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள்தான் காரணம்!

  ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை மிகவும் நம்பினான். ‘வெற்றி! வெற்றி! வெற்றி!” என்று அவன் முழங்குவதற்கு, அவனுடைய தன்னம்பிக்கையே காரணம்.

  எனவே நீங்களும் உங்களை நம்புங்கள்! உங்களுக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, உங்களுடைய எதிரிகள் கூட உங்களை வாழ்த்துவதற்கு முன்வருவார்கள். நீங்களும், தன்னம்பிக்கை உணர்வோடு விளங்குங்கள். தன்னம்பிக்கையையும், உங்களையும் பிரிக்க முடியாதபடி, இரண்டும் ஒன்றேஎன்று கூறும்படி தன்னம்பிக்கையோடு ஒன்றிவிடுங்கள்! இந்தத் தன்னம்பிக்கை உங்களை உயர்த்திக் கொண்டே போகும்! உயர உயரப் பறந்து செல்லும் பறவையைப் போல, நீங்களும் வாழ்க்கை என்றவான் வெளியில்  உயர்ந்து  கொண்டே செல்வதோடு, கவிஞனாலும் ஒப்பிட்டுக் கூற முடியாத பேரின்பத்தைப் பெற்று, மிகச்சிறந்த இன்பத்தைப் பெறுவீர்கள்!

  இந்த இதழை மேலும்

  எளியமுறை உடற் பயிற்சி

   “உடற் பயிற்சியால் நம் உடலின் அனைத்து மூட்டுகளும் அசையும் தன்மைக்கு வர வேண்டும் உடற் பயிற்சியால் உடல் பலம், உயிராற்றல் மேம்பட்டு, மன அழுத்தம் குறைய வேண்டும்” அன்பு நண்பர்களே! நாம் ஒரே மாதிரியோ அல்லது பல விதமாகவோ, இலகுவாகவோ அல்லது கடுமையாகவோ உழைத்தாலும் நாம் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். காரணம் உடற்பயிற்சிதான் நம் உடலின் அனைத்து பாகங்களையும் ஒழுங்கிற்கு கொண்டுவந்து இரத்தம், காற்று, சத்து மற்றும் சக்தியைப் பாயச்செய்து உடலை புத்துணர்வாக்குகிறது. நாம் உடற்பயிற்சி என்றவுடன் நம் உடலின் அனைத்து பாகங்களையும் முறுக்கேற்றும் கடுமையான உடற்பயிற்சிகளையோ அல்லது எந்திரங்கள் மூலம் நம்மை அதிக அழற்சிக்கு இட்டுச் செல்லும் பயிற்சிகளையோ நான் இங்கு குறிப்பிடவில்லை. நாம் ஒன்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கத் தயாராகவில்லை. உடலை மிக அதிகமாக வருத்தி வெற்றியை பறித்து பின்னர் உடலின் அதீத தளர்ச்சிக்காக வருத்தப்பட வேண்டியதில்லை. நாம் இங்கு ஆரோக்கியமாக இருக்க எளமையான உடற்பயிற்சியே போதும். நம் உடலை முறுக்கும் எந்த ஒரு உழைப்பு அல்லது உடற்பயிற்சியானது நம் ஆரோக்கியத்தைக் காவு கேட்கும். அதனால் கிடைக்கும் வெற்றியும் உடல் தோற்றமும் தற்காலிகமானவையே.

  சரி, ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சியானது நம் உடலின் ஒவ்வொரு மூட்டுக்களையும் இலகுவாக அசைப்பதாக இருந்தால் போதும். இதற்கு வேதாத்திரி மகரிஷியின் எளய உடற்பயிற்சி அல்லது வாழும் கலையின் மூச்சுப் பயிற்சியுடன் கூடிய யோக முத்திரைகள் (யோகாசனங்கள்) அல்லது ஈசா யோகாவின் உடற்பயிற்சிகள் யாவும் எளய முறை உடற் பயிற்சிகளே. இவைகளை அந்தந்த யோக அமைப்புகளன் மூலம் கற்று ஏதேனும் ஒன்றை கைகொள்வது பயனளக்கும்.

  அன்பு நண்பர்களே! எந்த ஒரு உடற்பயிற்சியையும் முழு விழிப்புணர்வோடு செய்யும்போது அது நம் ஆழ்மனதின் பழக்கமாகி அதனை நாம் தொடர்ந்து செய்யும் படி ஆகிவிடும். அய்யய்யோ! இப்படி உடற்பயிற்சிக்கு அடிமையாகிவிட்டால் நாம் என்னாவது என்று பயப்பட வேண்டாம். உண்மையில் உடற்பயிற்சிக்குப் பழக்கமாவது என்பது படுக்கையை விட்டு எழுவதற்குச் சோம்பல்பட்டு அப்படியே கிடப்பதைவிட மேலானது. உடற்பயிற்சியால் நம் உடல் தன்மை இளமையாகவும் உயிர்த் தன்மை சக்தியாகவும், மனம் அழுத்தமின்றியும் ஆகிறது.

  அப்புறம் உடற்பயிற்சி செய்யும்போது நம் வயிறு காலியாக இருக்க வேண்டும். சாப்பிட்டு நான்கு மணி நேரம் ஆகியிருக்க வேண்டுமாதலால் நாம் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.  உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் குளத்துவிடுவது நல்லது. அப்புறம் உடற்பயிற்சி செய்தவுடன் குளப்பதுதான் மிகவும் கெடுதலானது. உடற்பயிற்சி செய்து ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் ஆனபின்பு  குளப்பது நல்லது. உடற் பயிற்சி செய்துவிட்டு சுடு நீரில் குளத்தால் நமக்கு நரம்புத் தளர்ச்சி வரும். ஆக, ஆரோக்கியத்திற்காக உடற் பயிற்சி செய்துவிட்டு அப்புறம் ஆரோக்கியம் கெட சுடு நீரில் குளப்பானேன்.

  அன்பு நண்பர்களே! உடற் பயிற்சிக்கெல்லாம் நாங்கள் தயாராய் இல்லை. இலகுவான வேறு ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கு ஒரு அற்புதமான வழி இருக்கிறது. அது என்னவென்றால் வீட்டின் அன்றாட வேலைகளை நாமே செய்வதுதான். வீட்டம்மாவுக்கு நாம் காய்கறிகளை விருப்பத்தோடு நறுக்கிக் கொடுப்பது, குழந்தைகளை பள்ளக்கு அழைத்துச் செல்வது, அலுவலகத்தில்  நடக்க வேண்டிய தூரங்களை நடந்தே செல்வது, வீட்டுத் தோட்டங்களை பராமரித்து இயற்கையான காய்கறிகளுக்கு வழி காண்பது உள்ளட்டவைகளைச் செய்யலாம். அப்புறம் நடைப்பயிற்சி என்ற ஒன்றைப் பற்றி நான் ஏதும் கூறவில்லைதானே? அன்பு நண்பர்களே! நடைப் பயிற்சி என்பது நாம் யாரோடு பேசாமல் நம் உள் நோக்கிய கவனிப்பாக உடல் நடப்பது சுமையாகத் தோன்றாமல் இருக்க வேண்டும். அப்படிச் செய்வதுதான் உண்மையான பலனைக் கொடுக்கும். மற்றதெல்லாம் மூட்டு வலியையும் ஊளைச் சதையுமே கொடுக்கும். அதற்கு எளய முறை உடற்பயிற்சியே மேலானது.

  இந்த இதழை மேலும்

  சிரிப்பு வங்கித் தேசமாய் ஆகட்டும்

  சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையின் பிரதிபலிப்பு. உற்சாகத்தின் வெளிப்பாடு. இறைவன் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய மாபெரும் அருட்கொடை. “வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பது நாள்பட்ட வியாதிகளையும் மருந்தின்றியே மாய்த்துவிடும் வல்லமை படைத்ததென அறிவார்ந்த ஆய்வாளர்கள் கூறுவர்.

  நீங்கள் பாடுபடுங்கள். அப்போதுதான் நீங்கள் பூமியுடன் சமாதானமாக பூமியின் ஆத்மாவுடன் சமாதானமாக இருக்க முடியும். உழைக்கும்போது நீங்கள் புல்லாங்குழலாகி விடுகிறீர்கள். அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை, ஓர் இசையாக மாற்றிவிடுகிறது.

  எல்லோரும் ஒன்றுசேர்ந்து பாடும்போது, உங்களின் ஊமையாய், மௌனமாய் இருக்கும் நாணல் யார்? உழைப்பை ஒரு சாபமென்றும் வேலை ஒரு துரதிர்ஷ்டம் என்றும் பலமுறை உங்களிடம் சொல்லியிருப்பார்கள். ஆனால் நான் சொல்கிறேன், நீங்கள் வேலை செய்யும்போது பூமியின் அடுத்த கனவை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். அந்த கனவு பிறக்கும்போதே, அது உங்களுக்காக ஒதுக்கப்பட்டது.

  உங்களை உழைப்பில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது நீங்கள் உண்மையாக வாழ்வை நேசிப்பவர் ஆகிவிடுவீர்கள். உழைப்பின் மூலம் வாழ்வை நேசிப்பது வாழ்வின் ஆழ்ந்த ரகசியத்தோடு நெருக்கமாக உறவு கொள்வதாகும்.

  வாழ்க்கை ஒரு இருள் என்று உங்களிடம் சொல்லியிருப்பார்கள். சலித்துப் போனவரின் அந்தக் கூற்றை நீங்களும் களைத்துப்போன வேளையில் எதிரொலிக்கிறீர்கள். நீங்கள் அன்புடன் பணியாற்றும்போது உங்களை உங்களுடன் இணைத்துக் கொள்கிறீர்கள். ஒருவருடன் ஒருவரையும் கடவுளுடனும் இணைத்துக் கொள்கிறீர்கள். இது கலீல் கிப்ரான் பார்வை.

  உற்சாகம்  மனிதனுக்கு ஒரு சிறந்த டானிக். வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்ற மனிதர்கள் நிறைந்த உற்சாகத்தின் நிலைக்கலன்களாகவே இருந்திருக்கின்றனர். அளப்பறிய அறிவாற்றல் இருக்கலாம். சிறந்த கற்பனை வளம் இருக்கலாம். ஆனால் உற்சாகத்துடன் செயல்படும் திறன் இல்லையாயின் எல்லாமே வீண்.

  உற்சாகம் ஒரு தொற்றுநோய் போன்றது. கண்டவரையெல்லாம் பீடிக்கும் சக்தி படைத்தது. உற்சாக உணர்வு, நம்முன்னே உள்ள பய உணர்வுகளை வெல்லும். உடன் பணி செய்பவர்களை ஊக்குவிக்கும். நமது நடையிலேயே ஒரு உற்சாகம் மிளிர வேண்டும். நமது பேச்சிலே அது தொனிக்க வேண்டும். நமது கண்களிலே உற்சாகம் ஒரு ஒளியாய்ச் சுடர்விட வேண்டும்.

  சின்னக்குழந்தைகளின் தனிச்சிறப்பே அவர்களின் தணியாத உற்சாகம் தான். வாழ்வில் அனைத்து நிகழ்ச்சிகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவர்கள் இயல்பான அன்புடன் அனைவரையும் நேசிக்கின்றனர். தாமஸ் ஹக்ஸ்லி என்ற அறிஞர் சொல்லுவார், “அறிவுடைமைக்கு அழகுகுழந்தைப் பருவத்தின் உற்சாகத்தை வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்துவைத்திருப்பது ஆகும்”.

  தொடர்ந்து உற்சாக உணர்வைத் தக்க வைத்துக் கொள்வது பலருக்கு இயலாத காரியம். வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பியது கிடைக்கவில்லையென்றால் உங்களுடைய உற்சாக நிலையில் எங்கோ குறைபாடு உள்ளது என்பதே பொருள். உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் செயல்பட்டால் வானம் நமக்கு வசப்படும். சீக்கிரமே சிகரத்திலும் சிம்மாசனம் கிடைக்கும்.

  எண்ணங்களும் அவற்றின் விளைவான உணர்வுகளும் நம் உடலைப் பாதிக்கின்றன. எவ்வாறு மன அழுத்தத்தினை உருவாக்கும் எண்ணங்கள் உடலுக்கு தீங்கினை விளைவிக்க முடியுமோ அதேபோன்று உள்ளத்திற்கு உவகையூட்டும் உணர்வுகள் உற்சாகத்தையும், உடலுக்கு நலன்கள் பலவற்றையும் நல்குகின்றன. எனவே வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரிப்பது மேன்மைமிக்கதாகக் கருதப்படுகிறது.

  உள்ளத்திற்கு உடன்பாடற்ற எண்ணங்கள் தசை விரப்பினை ஏற்படுத்துகின்றன. நாள் முழுதும் இத்தகைய எண்ணங்கள் உங்களை ஆட்டிப்படைத்தால் உங்களின் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? இதை உணர்வதற்கு ஒரு வழி: உங்களின் வலது கை முட்டியினை சற்று இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். சற்றுநேரம் அப்படியே வைத்திருங்கள். என்ன நிகழ்ந்தது? சாதாரணமாக இருக்கும் போது ஏற்படாத வலி இப்போது ஏற்படும்.

  கோபம், கவலை, பயம், ஏமாற்றம், வெறுப்பு இவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் மருத்துவமனை நோக்கி விரைந்து சென்று கொண்டுள்ளனர் என்பதில் ஐயமில்லை. இவ்வுணர்வுகள் குணமாக்க இயலாத கொடிய நோய்களை தோற்றுவிக்கும் வல்லமை படைத்தவை.

  நியூ ஓர்லியன்சில் உள்ள ஓக்ஸ்னர் கிளினிக்கில் ஒரு காலகட்டத்தில் 386 நபர்கள் அல்லது 77 விழுக்காடு இத்தகைய உணர்வுகள் உருவாக்கிய வியாதிகளினால் பீடிக்கப்பட்டவர்களாக இருந்தனர். இவற்றைக் கண்டறிவதும், குணப்படுத்துவதும் அதிகமான பொருட்செலவினை ஏற்படுத்தின.

  அவ்வாறாயின் இதன் மறுபக்கம் உண்மையா? வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகுமா? ஆம் என்கின்றன ஆய்வுகள். அதிக ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்பவர்கள் வாழ்வினை ஆய்வு செய்ததில், அவர்களிடம் மலிந்திருந்த உடன்பாட்டு எண்ணங்களும் அவர்கள் வாழ்வில் எதிர்கொண்ட எண்ணற்ற இருக்கங்களை நகைச்சுவை உணர்வோடு அவர்கள் எதிர்கொண்ட பாங்குமே அவர்களின் வெற்றியின் இரகசியமாகக் கண்டறியப்பட்டது. உள்ளத்திற்கு உவகை தருபவற்றில் வயிறு குலுங்கச் சிரிப்பதே தலையாயதுதெனக் கருதப்படுகிறது.

  வாய்விட்டுச் சிரிக்கும்போது உடலில் வியத்தகு இரசாயன மாற்றங்கள் பல ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் செய்யும் செப்படி வித்தை உள்ளத்தில் ஊடுருவது ஒரு இனிமையான உணர்வை ஏற்படுத்தி சிலிர்ப்பூட்டும்.

  நகைச்சுவையாளர் லேய் அன்னே ஜேஸ்வே அவருடைய Don’t Get Mad Get Funny என்றபுத்தகத்தில் நகைச்சுவை உடலுக்கும் உள்ளத்திற்கும் ஏற்படும் நலன்களை பட்டியலிடும்போது, உங்கள் உமிழ்நீரில் நோய் எதிர்ப்புச் சக்தியினை உருவாக்கி உங்களின் சுவாசப்பகுதியில் நோய்க்கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. இரத்தத்தில் உருவாகும் சீரம்கார்டிசாலை குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தின் பாதிப்பிலிருந்து உங்களைக் காக்கிறது. அல்சரை உருவாக்கக்கூடிய அமிலங்களிலிருந்து இரைப்பையை காக்கும் என்ஸைமை சுரக்கிறது. உடம்பு முழுவதும் தசைகளை இறுக்கமற்று நெகிழச் செய்கிறது. தீராத சுவாசக் குழாய் நோய்களின் கடுமையைக் குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. விரைந்து துடிக்கும் இதயத்தை சமநிலைப்படுத்துகிறது. தொற்று வியாதிகளை எதிர்க்கும் சக்தியினை உங்களிடம் அதிகரிக்கிறது. இயற்கை வலி நிவாரணியை உங்கள் உடலில் சுரக்கச் செய்கிறது. உடலின் திசுக்களுக்குத் தேவையான பிராண வாயு மற்றும் எரிபொருட்களை விரைவாக எடுத்துச்செல்ல உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சுகமான இதமான உணர்வை அல்லவா வாரி வழங்குகிறது.

  இடுக்கண்களையும், இடையூறுகளையும் நகைமுகத்துடன் எதிர்கொள்வோம். தொங்குஜா கவாட் செட்  தாய்லாந்துப் பெண்மணி 54 வயதில் தொடர்ந்து 562 விநாடிகள் சிரித்து உலக சாதனை. 4 பிள்ளைகளுக்குத் தாய்.

  இந்த உலகம் எங்கு நோக்கினும் சிரிப்பு மயமாய் ஆக வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  டெங்கு காய்ச்சல்

  டெங்கு காய்ச்சலின் காரணிகள்

  டெங்கு காய்ச்சல் என்பது கொசுக் கடியினால் வேகமாகப் பரவக் கூடிய ஒரு வைரஸ் நோயாகும். உலகிலுள்ள அனைத்துப் பகுதியில் வசிக்கும் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுப்புறச்சூழல் அசுத்தத்தின் காரணமாகவும், மழைநீர்த் தேக்கங்களன் காரணமாகவும் கொசுக்கள் தங்கி தங்கள் இனப்பெருக்கத்தை ஆரம்பிக்கின்றன. இதனால் நகரங்களலும், கிராமப்புறங்களலும் எளதாக கொசு பரவி மனிதனைக் கடிக்கிறது. இதனால் ஒரு நபரிடமிருந்து மற்றொரு மனிதனுக்குக் கொசு மூலம் தொற்று பரவுகிறது.

  கடந்த 50 வருடங்களல் டெங்கு காய்ச்சல் 30 மடங்காக அதிகத்துள்ளது.

  டெங்கு காய்ச்சல் உண்டாகும் முறை

  கொசுக்கடியின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது. ஈடீஸ் எஜிப்டி (Aedes aegypti) வகை கொசுக்கள் இந்த நோயை உண்டாக்குகின்றன. இந்த வகை கொசுக்கள் ஒருவித வெள்ளை நிற உடம்பு மற்றும் கால்களுடன் இருக்கும். இதனை ஒரு பாமரன் கூட கண்டுபிடிக்க இயலும். இந்த வகை கொசுக்கள் நீரில் வசிப்பவை மற்றும் 100 – 200மீ வரை பறக்கும் தன்மை கொண்டவை. இந்தக் கொசு டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளயின் இரத்தத்தை உறிஞ்சும் போது டெங்கு வைரஸ் கிருமியினையும் பெற்று விடுகிறது.

  ஈடிஸ் கொசு உருவாகும் இடங்கள்

  1. வீட்டைச் சுற்றியுள்ள இடங்களல், பயன்படுத்தும் கலன்களல் நீர் தேங்குதல், பயன்படுத்தப்படாத ஆட்டுக்கல், டயர், கண்ணாடி பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பானைகள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றில் நீர் தேங்கியிருத்தல்.

  2. மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்

  3. வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள்

  பரவும் முறைகள்

  டெங்கு காய்ச்சல் ஈடிஸ் எஜிப்டி (Aedes aegypti) எனும் கொசு மூலம் பரவுகிறது. ஈடிஸ் கொசு பகலில் மட்டுமே கடிக்கக் கூடியது.

  இந்தக் கொசுவானது மனிதனைக் கடிக்கும் பொழுது வைரஸை உட்செலுத்துகிறது. வைரஸ் மனித உடலுக்குள் சென்றபின் 4லிருந்து 10 நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் ஆரம்பிக்கின்றன.

  அறிகுறிகள்

  டெங்கு காய்ச்சலை, அறிகுறிகளைக் கொண்டு டெங்கு காய்ச்சல் என்றும், தீவிர உயிர்க்கொல்லி வகையான டெங்கு இரத்தக் காய்ச்சல் என்றும் பிரிக்கலாம்.

  டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

  • தீடீரென உண்டாகும் அதிக காய்ச்சல்
  • நெற்றிப் பகுதியில் கடுமையான வலி
  • கண்களன் பின்புறம் வலி
  • தசை, மூட்டுக்களல் வலி
  • பசியின்மை, தூக்கமின்மை
  • மார்பு பகுதியிலும், தோள் பகுதியிலும் தட்டம்மை போன்ற தோல் சிவந்து தடிப்புகள் ஏற்படுதல்.
  • குமட்டல், வாந்தி.

  டெங்கு இரத்தக் காய்ச்சலின் அறிகுறிகள்

  • கடுமையான தொடர் வயிற்று வலி
  • தோலில் வெளுப்பு ஏற்படுதல் தோல் ஜில்லிட்டுப் போதல்
  • மூக்கு, வாய் ஈறுகளல், குடல்பகுதியில் இரத்தப் போக்கு உண்டாகுதல்.
  • அடிக்கடி வாந்தி மற்றும் இரத்த வாந்தி
  • தூக்கமின்மை, அமைதியின்மை
  • அதிகரித்த நாக்கு வறட்சி (உலர்ந்த வாய்)

  டெங்கு காய்ச்சலின் நிலைகள்

   இது மூன்று வகைப்படும்.

  1. காய்ச்சல் நிலை
  2. தீவிர நிலை
  3. குணமாகும், சரியாகும் நிலை

  காய்ச்சல் நிலை

    இந்நிலையானது 2 லிருந்து 7 நாட்களுக்கு இருக்கும்.

  தீவிர நிலை

  இந்நிலையானது 3 லிருந்து 7 நாட்களுக்கு நீடித்திருக்கும். இந்நிலையில் இரத்தத் தட்டணுக்கள் எண்ணிக்கையானது குறைந்து காணப்படும். இதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதிக இரத்தம் வெளியேறும். இதனால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு இறக்கவும் நேரிடலாம்.

  சரியாகும் நிலை

   இந்நிலையில் முறையான சிகிச்சையினால் அறிகுறிகள் குறையத் தொடங்குகின்றன மற்றும் இரத்த தட்டணுக்களன் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

  பரிசோதனை முறை

  நேரிடையாகவோ, (அ) மறைமுகமாகவோ ஆய்வுக்கூடங்களல் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த முடியும். இந்த ஆய்வுகள் டெங்கு தொற்று நோயினை உறுதிப்படுத்துகின்றன. மேலும் சில ஆய்வுகளை உபயோகப்படுத்தியும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யலாம். ஆனால் அந்த ஆய்வுக்கூடங்கள் முறையான அனுமதி பெற்ற ஆய்வுக் கூடங்களாக இருக்க வேண்டும்.

  சிகிச்சை முறை

  1) வீட்டில் கையாளக் கூடிய சிகிச்சை முறை

  நீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுதல். எடுத்துக்காட்டாக, பழச்சாறு, ஓ.ஆர்.எஸ்.

  காய்ச்சலுக்கான சிகிச்சை முறை

  • பாராசிட்டமால் (6 மணி நேரத்திற்கு ஒரு முறை)
  • தண்ணீரால் உடம்பை துடைத்து விட வேண்டும்
  • நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும்.

  ஏதேனும் கடுமையான அறிகுறிகள் தோன்றினால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவைகள் இரத்தக் கசிவு, கடுமையான வயிற்று வலி, தொடர்ச்சியாக வாந்தி எடுத்தல், தோல் ஜில்லிட்டுப் போதல்.

  2) மருத்துவமனை சிகிச்சை முறை

  • இரத்த பரிசோதனை (வெள்ளை அணுக்கள், இரத்த தட்டணுக்கள்)
  • குளுக்கோஸ் ஏற்றுதல்
  • காய்ச்சலுக்கு சிகிச்சை
  • தீவிரமாக கண்காணிக்கப் பட வேண்டும்.
  • இரத்தம் செலுத்துதல்

  டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டியவை

  • வீட்டைச் சுற்றியுள்ள இடங்களல் பயன்படுத்தும் கலன்களல் நீரைக் தேங்காமலும்,  பயன்படுத்தப்படாத ஆட்டுக்கல், டயர், கண்ணாடி பாட்டில்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பானைகள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றினைக் கவிழ்த்து தண்ணீரை அப்புறப்படுத்தி ஈடிஸ் கொசு வராமல் தடுக்க வேண்டும்.
  • மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கொசு புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும்.
  • வீட்டைச் சுற்றி தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
  • உடல் தெரியாமல் கை, கால்களை மூடிய ஆடைகளை அணிய வேண்டும். இவ்விதம் செய்வதால் ஓரளவிற்குக் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.
  • குழந்தைகளை உடையில்லாமல் அரைகுறை உடையுடன் வெளியில் விளையாட அனுப்பக் கூடாது.
  • டெங்கு கொசுக்கள் பகல் நேரங்களல் கடிக்கும். அதிகப்படியான சூரிய உதயத்தில் இருந்து 2 மணிநேரம் வரையிலும், சூரியன் மறையக்கூடிய மாலை வேளைகளலும் கடிக்கும். கொசுவலை பகலில் தடுக்க மிகவும் நல்லது.
  • கொசு வலை, கொசு விரட்டும் பத்திகளை, மின்சார ஆவியாகக்கூடிய மேட்டுகளைப் பயன்படுத்தலாம்.

   இந்த இதழை மேலும்

  வெறுப்பை விடு! பொறுப்பை எடு!

  நம்மை நாம் உயர்த்திக் காட்டுவது எப்படி? என்கிற கேள்வியை, இன்றைக்கு கேட்காத மனித மனங்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த விசயம் மிகவும் சிக்கலானதாகிவிட்டது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

  அது என்ன அவ்வளவு கடினமான விசயமா? இல்லவே, இல்லை. அது மிக எளிதான சமாச்சாரம் தான். நாம் தான் அதை கடினமானதாக்கிவிட்டோம். வீரத்துறவி சுவாமி விவேகானந்தரிடம் இது குறித்து ஒருமுறை கேட்டபோது அதற்கு அவர் அழகாக, சுருக்கமாக, மிகத் தெளிவாக சொன்னார்…

  “உங்கள் தோள்கள் சுமக்கும் அளவிற்கு, நீங்கள் பொறுப்பை எடுக்கும் போதுதான் உங்கள் எல்லையானது மிகவும் விரிவடைந்து உங்களை உயர்த்திக் காட்டுகிறது” என்றார்.

  ஆம் நண்பர்களே! பொறுப்பெடுத்தல் ஒன்றால் மட்டும்தான் நம்மை நாம் நிச்சயம் உயர்த்திக்காட்ட முடியும். நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும், நாம் தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பு என்பதை எப்போது உணர்கிறோமோ, அப்போதே நாம் விரிவடையத் தொடங்கி விடுகின்றோம்.

  நான் பொறுப்புடையவன் என்கின்ற மனோபாவம் உங்களை மையங்கொண்டு விட்டால் போதும் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடைபோட முடியாது. எப்போது அந்த மனோபாவத்துடன் நீங்கள் வாழத்தொடங்கி விட்டீர்களோ அப்போது இருந்தே உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டதாகும் என்பது உறுதி.

  இதுவரை நாம் இருந்த இடத்தில் இருந்து, இம்மி அளவு கூட முன்னேற்றம் அடையாததற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அது வேறு ஒன்றும் இல்லை. நம் சார்ந்த பொறுப்புக்களை எல்லாம், நாம் மற்றவர்கள் தலையில் போட்டுவிட்டு, அதனால் வரும் இடர்பாடுகளுக்கு எல்லாம் காரணம் அவர்களே என்று விட்டு விலகிச் சென்றது தான் என்பது மறுக்கமுடியாத உண்மை இல்லையா? இதை சற்று அமைதியாக உட்கார்ந்து ஆழமாக யோசித்துப் பார்த்தால் நமக்குத் தெளிவாகப் புரியும்.

  உங்களைச் சுற்றி நடப்பதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று உணரத் தொடங்கும்போது தான் உங்களில் இருந்து ஒரு தலைவன் வெளிப்படுகின்றான். தலைமைப் பொறுப்புணர்வு வந்த உடன் உங்கள் வாழ்வின் அனைத்து பாகத்திலும் உருமாற்றம் நிகழ்வதுடன், உங்களைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையிலும் உருமாற்றம் செய்யும் சக்தியை நீங்கள் பெற்றுவிடுகின்றீர்கள்.

  மேலும் மேலும் எதிர்பார்ப்பற்று நீங்கள் எந்த அளவிற்கு பெரிய பொறுப்பை எடுக்கின்றீர்களோ அல்லது மேற்கொள்கின்றீர்களோ அந்த அளவிற்கு உங்களின் வளர்ச்சி, உன்னதத் தன்மையை எட்டுகின்றது.

   நாம் பொறுப்பை எடுக்கும் முன் சிந்திக்க வேண்டிய விசயங்கள் முக்கியமானது. இரண்டு,

  1. வாழ்க்கை என்பது வளரக் கூடியதே என்கிற நம்பிக்கையில் உறுதியாக இருத்தல்
  2. ஏற்கப் போகும் பொறுப்பில், ஆத்மார்த்தமாக, ஈடுபடும் சக்தி வந்து நம்மைச் சேரும். அதில் வெற்றியடையும் வரை பொறுமையாகச் செயல்பட வேண்டும் என்கிற விசயம்.

  மேற்கண்ட இரண்டு விசயத்தை உள்ளடக்கித்தான், ஷீரடி சாய்பாபா மிக உயர்ந்த உன்னதமான வாழ்க்கை தத்துவத்தை வகுத்தார்.

  “பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள்ஙு” இதுதான் வாழ்க்கையின் சாரம் என்று.

  முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள். என்னால் முடியும் எதையும் சாதிக்க… என்னால் முடியும் என்று. அத்துடன் முழுமனதோடு செயல்படுங்கள். அதன்பிறகு பாருங்கள் எல்லாப் பொறுப்புகளுக்கும் நீங்கள் விரிவடைந்து சென்றுகொண்டே இருப்பீர்கள். எவ்வளவு பொறுமையுடன், உங்கள் வளர்ச்சியை நீங்கள் அமைதியாக அனுமதிக்கின்றீர்களோ, அந்த அளவு அதன் உயரம் தடைபடாமல் விண்ணை நோக்கிவிரைந்து கொண்டே இருக்கும் இது சத்தியம்.

  இதுவரை உங்களால் முடிக்க முடியாத ஒரு காரியத்தை இப்போது எடுத்துக்கொண்டு, அதை முடித்துக் காட்டுவேன் என்ற பொறுப்புடன், அதற்கென்ற ஒரு கால அளவை நிர்ணயம் செய்துகொண்டு இயங்கிப் பாருங்கள். நிச்சயம் அது நீங்கள் குறித்த காலத்திற்குள்ளே முடிந்துவிடும்.

  அதன்பிறகு பாருங்கள் உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிவிடும். மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையிலும் மலரத் துவங்கிவிடும். புதுவிதமான பரவசநிலை உங்களைச் சூழ்ந்து கொள்ளும். நீங்களே, நீங்கள் நினைத்ததை, சாதித்த சாதனையாளராக, நிமிர்ந்து பெருமிதத்துடன் இந்த உலகை, உள்ளார்ந்த அன்புடன் பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள். அந்தப் பார்வையே உங்களை உயர்ந்த இடத்தில் எப்போதும் நிறுத்திவைக்கும்.

  இந்த இதழை மேலும்

  தொழிலை நேசி! சாதிப்பை சுவாசி!!

  டாக்டர் அ. ஜலீல் அகமது, DCH

  குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர், கோவை

  குழந்தைகள் நல சிகிச்சைக்காக கோவையில் பல மருத்துவ முறைகளையும், புதிய மருத்துவ கருவிகளையும் அறிமுகப்படுத்தி வருபவர்

  • “உங்கள் உடலினை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே நீங்கள் வாழ்வதற்கான ஒரே ஆதாரம்” என்று சிந்திக்கத் தூண்டும் மருத்துவர்
  • இலக்குகளுக்கும், சாதனைகளுக்கும் இடையேயான பாலம் என்பது நேர்மைமிகு செயல்பாடுதான் என்று உணர்த்தி வருபவர்
  • மற்றவர்கள் நலனில் அக்கறைகொண்டு வாழும் வாழ்க்கையே பயனுள்ள வாழ்க்கையென வாழ்ந்து வருபவர்
  • எதை நோக்கி பயணப்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்குதல் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அச்செயலினை சாதித்துக் காட்டுபவர்

              இப்படி பல்வேறு சிறப்புகள் உடைய கோவை குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர்

  உங்களின் இளமைக் காலத்தின் இனிமையான நினைவுகள் பற்றி சொல்லுங்கள்…

  நான் பிறந்தது சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி என்னும் வரலாற்று சிறப்புமிக்க ஊரில் தான். இவ்வூரில் தான் 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறன் நாயனார் தோன்றினார். எனவே இவ்வூர் வரலாற்று சிறப்புமிக்க ஊராக இன்றும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இல்லையென்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் விருந்தோம்பல் உபசரிப்பாலும் இப்பெயர் பெற்றது எனச் சொல்லலாம்.

  இவ்வூரில் சாதாரண குடும்பத்தில் கல்வி பின்புலம் அல்லாத பெரிய குடும்பத்தில் பிறந்தேன். ஐந்து பெண்பிள்ளைகள், ஒரு அண்ணன் மற்றும் ஒரு தம்பி என்று என்னுடன் சேர்த்து என் குடும்பத்தில் மொத்தம் 8 பேர். என் தந்தை ஆரம்பகாலத்தில் பர்மாவில் பணிசெய்து கொண்டிருந்தார். அதன்பிறகு மலேசியா போன்ற பிறநாடுகளில் பல இடங்களுக்குச் சென்று தன் வாழ்நாளில் பாதியை வெளிநாடுகளிலேயே வாழ்ந்து வந்தார். இப்படி கடல்கடந்து சென்று ஈட்டிய வருமானத்தில் எங்களை நன்றாக வளர்த்தார்.

  எனது படிப்பின் மீது என் தாய் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். படிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வத்தாலும், பற்றாலும் என்னுடன் சேர்ந்து எனது கல்வியில் எனது தாயும் அக்கறைசெலுத்தினார்.

  இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் நல்ல மதிப்பெண் பெற்றதால் இலவசக் கல்வித்திட்டத்தின் கீழ் திருச்சியிலுள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் இடம் பெற்றேன். அந்தக் கல்லூரி எனது எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது என்றே சொல்லலாம்.

  கிராமப்புறத்தில் பிறந்து நகர்ப்புற கல்விமுறையை எதிர்கொண்டதைப் பற்றி?

  கிராமப்புறத்தில் அரசினர் பள்ளியில் படித்து நகர்ப்புறத்தில் படிக்கும் பொழுது சற்று கடினமாகத்தான் இருந்தது. முதன்முதலில் கிராமத்தைவிட்டு வெளியூருக்குச் செல்கிறோம் என்பதில் தயக்கமாக இருந்தது. அந்த தயக்கமே எனக்கு பெரும் ஊக்கமாகவும் இருந்தது. காரணம் என்னை தயார்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

  நான் மருத்துவம் படித்த காலகட்டத்தில் மருத்துவம் என்பது மிகவும் கடினமானதாக இருந்தது. முதன்முறையாக மருத்துவ தேர்வு எழுதிய பொழுது அதில் தேர்வாகவில்லை. மூன்றாவதாக எழுதிய தேர்வில் தான் வெற்றி பெற்றேன். இவ்வெற்றிக்கு என்னை பலவகையில் தயார்படுத்திக் கொண்டேன். காரணம், மருத்துவத்தின் மீது நான் கொண்டிருந்த ஈர்ப்பு தான் என்னை வெற்றி பெறவைத்தது. எதை நோக்கி பயணம் செய்தாலும், அப்பயணத்திலிருந்து சற்றும் பின்வாங்குதல் கூடாது என்பதை இத்தேர்வின் மூலம் கற்றுணர்ந்தேன்.

  தொழில் செய்யும் குடும்பப் பின்னணியில் பிறந்த நீங்கள் மருத்துவத்தை தேர்ந்தெடுக்க காரணம்?

  எங்கள் ஊரிலும் சரி, எங்கள் குடும்பத்திலும் சரி அனைவரும் வெளிநாட்டில் தொழில் செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். எங்கள் ஊரில் எங்கள் குடும்பத்திற்கென்று தனிப் பெயர் வைத்துத்தான் அழைப்பார்கள். எங்கள் வம்சவழியினருக்குக் கொடுத்த பட்டயம் அது. ‘தங்கக் கம்பி’ என்பதே அது. காரணம், என் முன்னோர் நெசவாளர் என்பதாலும், அவர்கள் நெய்து கொடுப்பது மிகவும் உறுதியாக இருக்கும் என்பதாலும் இப்பெயரால் அழைக்கப் பெற்றோம்.

  எங்கள் பரம்பரையில் நான் நான்காவது தலைமுறையைச் சார்ந்தவன். அதுமட்டுமின்றி அதிகம் படித்தவன் நான் தான். படிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை ஊக்குவித்த என் பெற்றோர்கள் என்னை நம்பிக்கையுடன் மருத்துவ சேவைக்கு அனுப்பி வைத்தார்கள்.

  உங்களுக்குள் “முயன்றதை முடித்துவிட்டேன்” என்று எப்போதுதோன்றியது?

  எந்த ஒரு தேர்விற்கும் தேர்வு முடிவு ஒன்றிருக்கும். இம்முடிவு தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல பெரிதும் உறுதுணையாக இருக்கும். அதுபோல பல்கலைக்கழகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றபொழுது எனக்குள் இருந்த பயம், தாழ்வு மனப்பான்மை அனைத்தும் தகர்ந்து போனது.

  படிப்பை வெறும் படிப்பாக மட்டுமே நினைத்திருந்தால் பி.எஸ்.சி. வேதியியல் படித்து அதைச்சார்ந்த ஏதேனும் துறையில் பணியாற்றியிருப்பேன். நான் படிப்பை ஒரு குறிக்கோளாக எடுத்து படித்ததால் தான் மருத்துவத்தைப் படிக்கின்ற அளவிற்கு ஆற்றலை வளர்த்துக் கொண்டு அதிலும் வெற்றி பெற்றேன்.

  போட்டி நிறைந்த மருத்துவத்துறையில் உங்களின் தனித்திறமையை எவ்வாறு வெளிக்கொண்டு வந்தீர்கள்?

  மருத்துவத்தை மகத்தான தொழில் என்பர். படித்த, படிக்காத எல்லா பெற்றோர்களுக்கும் தனது பிள்ளைகளை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலரால் மட்டுமே அது முடிகிறது. காரணம் ஈடுபாட்டுடன் கூடிய படிப்பு.

  எனக்கு மருத்துவத்தில் மிகவும் ஈடுபாடு இருந்தது. உதாரணமாக, ஒரு மருத்துவரின் மகன் மருத்துவராகிறான் என்றால் அது பெரிதான சாதனையாக தெரியாது. ஆனால் சாதாரண குடும்பத்தில், படிப்பில் எவ்வித பின்புலமும் இல்லாத ஒருவன் மருத்துவராகிறான் என்றால் அதில் அக்குடும்பத்தின் பெருமையே அடங்கி இருக்கிறது.

  என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை நான் ஒருபோதும் இழந்ததே கிடையாது. போட்டியிருந்தால் தான் வெற்றியை வெகுவாக வெல்ல முடியும் என்பதை நான் கற்றும் பெற்றும் கொண்டேன்.

  நீங்கள் மருத்துவராக இருப்பதற்கும், உங்களது எதிர்கால தலைமுறையினர் மருத்துவராக இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளாக நீங்கள் நினைப்பது?

  இப்போது இருக்கும் தலைமுறையினர், நினைப்பதெல்லாம் வேகமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். காரணம், இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி நிலை, தகவல் தொடர்பு ஆளுமை போன்றவை இருந்த இடத்தில் இருந்தே எல்லாம் கிடைக்கிறது.

  எல்லாவற்றிலும் நேரத்தை அளவாக செலவிடுகிறார்கள். ஆரம்ப கால வளர்ச்சியில் இவை எல்லாம் சற்று கடினமாகத் தான் இருந்தது. இப்போதும் மருத்துவப் படிப்பு கடினமாக இருந்தாலும் கூட எளிமையான முறையில் தேவையான குறிப்புகள் எளிமையாக கிடைக்கப் பெறுகிறார்கள். மருத்துவக் கருவிகளும் எளிய முறையில் கையாளப்படுகின்றன.

  மருத்துவத்தில் பல பிரிவுகள் இருந்தாலும், குழந்தை நல மருத்துவராக வரக்காரணம் என்ன?

  மருத்துவத்தில் இப்பிரிவு சவாலான பகுதியாகும். ஒரு பெண் தாய்மை நிலை அடைகிறாள் என்பது பெண் பருவங்களில் முக்கியமான தருணம். இதை நான் விருப்பத்துடன் தேர்வு செய்யக் காரணம், நான் மருத்துவப் படிப்பை முடித்த உடன் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றினேன். அங்கு டாக்டர் ராமசாமி அவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்மிடம் வரும் நோயாளிகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும், வயிற்றில் இருக்கும்போதே குழந்தையின் பண்பு நலன்களை எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் போன்ற உத்திகளைப் பற்றிய பயிற்சிகளைக் கொடுத்தார்.

  குழந்தைப் பிரிவுகளில் மருத்துவராக இருப்பது அவ்வளவு சாதாரணமல்ல. ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால், முதலில் என்ன என்று குழந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அவருடன் இருக்கும் பெற்றோர்களிடமும், உற்றார்களிடமும் அதைப்பற்றி புரிய வைக்க வேண்டும்.

  மருத்துவத்துறையில் இப்பிரிவால் வருமானம் கிடைக்கப் பெறாத நிலையிலும், ஒரு பெண்ணின் தாய்மைப் பண்பிற்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதும் இல்லை என்ற சேவையே மனதிற்கு போதுமான அளவு திருப்தியை அளிக்கிறது. இந்த மகத்தான பணிக்கு என்னை ஈடுபடுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 30 வருட மருத்துவப் பணியில் பல ஆயிரம் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகளை முக்கியமாக குறைமாத, குறையுள்ள குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறேன். இந்தப் புனிதப் பணிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது.

  நீங்கள் தேர்ந்தெடுத்த இம்மருத்துவ பிரிவிற்கு ‘கோவை’ ஏற்றது தானா?

  தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் தனிப்பெயர் பெற்ற ஊர் கோவை தான். காரணம் சூழல், இடம் போன்றவை அனைத்தும் இங்கு நன்றாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இன்னும் வராத சில மருத்துவ இயந்திரங்கள் கூட கோவையில் உள்ளது. எனது சொந்த ஊரில் மருத்துவமனையைக் கட்டியிருந்தால் கூட இங்கு கிடைக்கப்பெறும் சூழல்கள் நிச்சயம் அங்கு கிடைப்பதில் சிரமமாகத்தான் இருக்கும்.

  கோவையிலுள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன செயற்கை சுவாசக் கருவியை அறிமுகம் செய்தது, சுவாசத்தை எளிதாக்கும் குறைமாத குழந்தைகளுக்கான ‘நன்ழ்ச்ஹஸ்ரீற்ஹய்ற்’ எனும் மருந்தை முதன் முதலில் சோதனைகளில் அறிமுகம் செய்தது நான் தான்.

  இதை முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே இம்மருத்துவத்தில் வெற்றி பெறமுடியும். உதாரணமாக, சாதாரண இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு 150 முறை நுரையீரலுக்கு சுவாசத்தைக் கொடுக்கும். இந்த அதிநவீன சுவாசக்கருவி மூலம் பல நூறு பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

  ஆரம்ப காலத்தின் குழந்தை பிறப்பிற்கும், இப்போதைய குழந்தை பிறப்பிற்கும் உள்ள மாறுதல்கள் என்னென்ன?

  என் முப்பதாண்டு கால மருத்துவ அனுபவத்தில் பல பெற்றோர்களைப் பார்த்துள்ளேன். குழந்தைகளின் எடை குறைவாக இருந்தால் அதற்கேற்றாற்போல் மருத்துவமுறையைக் கொடுக்க வேண்டும்.

  குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் நல்ல அறிவாளியாக இருப்பார்கள். அவர்களை முறையாக கையாள வேண்டும். நான் பார்த்த குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இப்பொழுது மருத்துவராகவும், பொறியாளராகவும் வளர்ந்திருக்கிறார்கள்.

  எடைக்கு தகுந்தவாறு குழந்தைகளுக்கு நல்ல மருத்துவத்தைக் கொடுத்து அவர்களுக்கு சிகிச்சையை அளிக்க வேண்டும்.

  இப்பிரிவில் மருத்துவம் சார்ந்த சவால்கள் சிரமமா? அல்லது பெற்றோர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது சிரமமா?

  ஆரம்பத்தில் மருத்துவர்கள் சொல்வதை பெற்றோர்கள் கேட்பார்கள்.  இப்போதிருக்கும் பெற்றோர்கள் நவீனமாக இணையதளத்தில் பல தகவல்களைச் சேகரித்துக் கொண்டு அதிலிருந்து நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.

  இவர்களுக்கு முறையாக பதில் கூறிவிட்டு பிரசவத்திலும், குழந்தை நலனிலும் எவ்வாறு அக்கறை காட்ட வேண்டும் என்பதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். அதற்கு தனித்திறன் (Skill) வேண்டும்.

  இத்துறையில் திறன் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அத்துறையில் திறன் இருந்தால் மட்டுமே அதில் வெற்றி பெறமுடியும். வேலையில் நல்ல ஒழுக்கமும், பண்பு நலனும் இருத்தல் அவசியம். வேலையில் ஒழுங்கம் இருந்தாலே வெற்றி கிடைத்துவிடும்.

  இந்த நீண்ட பயண அனுபவத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றி…

  போட்டி நிறைந்த உலகில் சவால்களை திறம்பட எதிர்கொண்டால் தான் சாதிக்க முடியும். என் அனுபவத்தில் சவால்களுக்கு எல்லையே இல்லையெனச் சொல்லலாம். ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு எதிர்பார்ப்புடன் வருவார்கள். அவர்களது எதிர்பார்ப்பை முடிந்த அளவு பூர்த்தி செய்ய, ஒவ்வொரு முறையும் புதிய உத்திகளைக் கையாள வேண்டி இருக்கிறது.

  சற்று நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் பிரசவத்திற்காக வந்தார். இதற்கு முன்பு அவருக்கு முதல் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. மறுபிரசவத்திற்கு அவர் வந்த போதும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் சவால் நிறைந்ததாகத் தான் இருக்கும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.

  மிகப்பெரும் சவாலாக எடுத்துக்கொண்டு அவருக்கு இரண்டாம் குழந்தைக்கான சிகிச்சையை அளித்தேன். தாய் சேய் இருவரும் நலம். அப்பொழுது அவர்கள் பெற்ற சந்தோசத்திற்கு அளவே கிடையாது. இதுபோன்ற சந்தோசத்திற்கு முன் எதுவும் இல்லை.

  இப்படி எண்ணிலடங்கா சவால்களைச் சந்தித்து வெற்றி பெறும்போது தான் தேர்ந்தெடுத்த துறையில் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுகிறோம்.

  “குழந்தை பிறக்கும் போதே இறப்பு” இது குறித்து…

  மரபணு சம்பந்தப்பட்ட நோய் என்பது பொதுவாக அரிய வகை நோயாகும். மேற்கத்திய நாடுகளில் இந்நோய் அதிக அளவில் உள்ளது. இந்நோய் வளரும் நாடுகளில் அதிகளவில் இருந்தாலும் அதைக்கட்டுப்படுத்த நம்மிடையே சிகிச்சை முறைகள் வரவில்லை.

  இப்பொழுதும் கூட 120 வகையான மரபு ரீதியான நோய்களைக் கண்டறிய, போதுமான அளவில் இதைப்பற்றிய விழிப்புணர்வு கிடைக்கப் பெறுவதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

  குழந்தை வயிற்றில் இருக்கும் போதே குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சி முதலே கணிப்பொறி திரையில் காணும் அளவிற்கு வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.

  புரோட்டின், கார்போஹைட்ரேட், கொழுப்பு இது மூன்றும் குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் துணையாகும். இந்த மூன்றில் ஏதேனும் மரபு ரீதியாக மாறுதல்கள் ஏற்பட்டால் கூட நிச்சயம் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பே இல்லை.

  நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொண்டால் மரபு ரீதியான பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இம்மாதிரியான நிகழ்வினைத் தடுப்பதன் மூலம் இந்நோய்களைத் தவிர்க்கலாம்.

  தனியாள் மேலாண்மைக்கும், ஒரு குழுவை மேலாண்மை செய்வதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி…

  பதவி உயர்வு என்பது ஒருவரின் உழைப்புக்கு கிடைக்கும் வெற்றி. ஆரம்பகாலத்தில் எவ்வாறு மேலாண்மை பொறுப்புகளைச் செய்து வந்தேனோ அம்மாதிரி தான் இப்பொழுதும் மேலாண்மையைச் செய்து வருகிறேன்.

  என்னைப் பொறுத்தவரையில் மேலாண்மை பொறுப்பில் இருப்பதால் அனைவரையும் கண்டிப்பதும், காரணம் இல்லாமல் கோபப்படுதலும் கூடாது. அனைவரிடமும் அன்பாக பழகினாலே அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவிடலாம்.

  குடும்பமாகட்டும், தொழிலாகட்டும் இரண்டையும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் பார்த்தாலே போதும் வெற்றி பெற்றுவிடலாம்.

  பரபரப்பான மருத்துவப்பிரிவில் இருக்கும் நீங்கள் உங்கள் உடல்நலனில் எவ்வாறு அக்கறை செலுத்துகிறீர்கள்?

  மனதில் ஏதேனும் துன்பம் இருந்தால் உடலில் நோய் வந்து ஒட்டிக்கொள்ளும். ஆனால் என்னிடம் வரும் சிகிச்சையாளர்கள் அவர்களை சந்தித்து அவர்கள் நலனில் அக்கறை குழந்தைகள் நலனில் அக்கறை என்று 24 மணிநேரமும் அவர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதால் என் மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

  நேரடியாக பெற்றோர்களை சந்தித்து அவர்களிடமே தனது நிறைகுறைகளைச் சொல்லிவிடுவேன். பெற்றோர்களிடம் நேரடியாக பேசி அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதால் அவர்களுக்கு தேவையான தீர்வுகள் கிடைக்கப் பெறுவார்கள்.

  இப்படி எப்போதும் என்னை நம்பிவரும் பெற்றோர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருவதால் என் உடல் நலமும் நன்றாகவே இருக்கிறது. எனது உடல்நலனில் என்றும் எனக்கு உறுதுணையாக இருந்து வருபவர் என் மனைவியும் தான்.

  உங்களின் அடுத்த இலக்கு…

  இந்தத் துறையில் நான் மிகுந்த மகிழ்ச்சியாகவும், மன அமைதியாகவும் இருக்கிறேன். நான் எதைச் செய்தாலும் விரும்பி செய்வதால் எவ்வித இடையூறும் இல்லாமல் செய்ய முடிகின்றது. வெளிநாடுகளிலுள்ள மருத்துவ இயந்திரங்களில் சில இன்னும் கோவைப் பகுதிக்கு வரவில்லை. புதிய கருவிகளை அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகள் நல சிகிச்சைக்காக கோவையில் பல மருத்துவ முறைகளை அறிமுகம் செய்து வைத்ததில் பெருமை அடைகிறேன்.

  அடுத்தது என்ன என்பதையே என் இலக்காகவும், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் எனக்குள் கேட்டுக் கொள்வேன்.

  உங்களைப் போலவே உங்கள் பிள்ளைகளும் மருத்துவராக உருவானதன் நோக்கம் என்ன?

  என் பெற்றோர் மருத்துவர் இல்லை. நான் நன்றாக படித்ததால் என்னை மருத்தவராக்கினார்கள். நான் மருத்துவராக இருப்பதால் அவர்களையும் மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அவர்களை மருத்துவராக்கவில்லை.

  இயல்பாகவே அவர்களுக்கும் மருத்துவத்துறையில் பற்றுதல் உண்டு. எல்லா குழந்தைகளும் தங்களது பெற்றோர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதைப் போலத்தான் என் பிள்ளைகளும் என்னை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  இப்பயண வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த நபர் என்று யாரைக் கூறுவீர்கள்?

  ஒவ்வொருவர் வெற்றிக்கும் காரணம் யாரேனும் ஒருவர் உந்துதலாக இருப்பார்கள். என் இன்ப துன்ப காலத்திலும் சரி, வெற்றி தோல்வியிலும் சரி, எனக்கு உறுதுணையாக இருப்பவர் என் மனைவி மட்டுமே.

  முதலில் என்னை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்றெண்ணி என்னைச் செதுக்கிய என் தாய் அவர்களுக்கு இந்த இடத்தில் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  அவர்களின் அரவணைப்பும், வீட்டு மேலாண்மையைப் பற்றியும் கண்டு நிறைய தெரிந்து வியந்திருக்கிறேன்.

  விடுமுறை காலத்தில் உங்களின் பொழுதுபோக்கு என்னவாக இருக்கும்?

  குடும்ப உறுப்பினர்களுடன் பொழுதைக் கழிப்பது மிகவும் பிடித்த ஒன்று. விளையாட்டு, இசை கேட்பது, பயணம் செய்வது போன்றவையும் பிடிக்கும்.

  நேரத்தை குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவிடுவது அவர்களை மகிழ்ச்சியான, மனநிறைவுடன் செயல்படுத்துவதாக இருக்க வேண்டும் என விரும்புவேன்.

  பிடித்த புத்தகம் எது?

  மனதிற்கு பிடித்த புத்தகங்கள் நிறைய இருக்கிறது. என்றாலும் எனக்கு படித்தவுடன் பிடித்த புத்தகம் என்பது பொன்னியின் செல்வன்.

  இளைய தலைமுறையினருக்கு தாங்கள் கூறவிரும்புவது?

  நம்பிக்கை… தன்னம்பிக்கை எதற்கும் இது இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்.

  தன்னம்பிக்கை இருந்தால் எதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோமோ அது தானாகவே வந்து சேர்ந்துவிடும்.

  உங்களின் வெற்றிக்கு அடிக்கோடிட்ட ஒரு சொல் என்றால் அது என்ன?

  கர்வமின்மை… சாதித்து உலகமே உன்னைப் போற்றினாலும் கர்வம் சற்றும் வரவோ, வளரவோகூடாது.

  உங்களின் நினைவலைகளில் தன்னம்பிக்கையின் தந்தை இல.செ.க. பற்றி…

  எதிர்கால தலைமுறையினர் வாழ்க்கைக்கு தனது எழுத்துக்களால் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தவர். அவரின் நேர்மை, தனித்திறமை அனைத்தும் என்னை கவர்ந்தவையாகும்.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கைமேடை

  வாய்ப்புகளை எப்படி உருவாக்கிக் கொள்வது?

  க. விஜயன், ஈரோடு

  வாய்ப்புகளை எப்படி வேண்டுமானாலும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதனுக்கு வாய்ப்புகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கும். மாணவனாக இருக்கும் உனக்கு இன்று விஞ்ஞானம், கணிதம், மொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஒரு அரிய வாய்ப்பு. உலகில் வாழும் 72 மில்லியன் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவில் 12% இளைஞர்களுக்குத் தான் கல்லூரியில் சேர்ந்து படிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்திருக்கும் வாய்ப்புக்களை உணர்ந்து கொள்ளவும், அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் தெரிந்தவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது. மீண்டும் வாய்ப்புக்களும் உருவாகிறது.

  பள்ளியிலோ, கல்லூரியிலோ சேர்ந்துவிட்ட உனக்கு ஒவ்வொரு நாளும் இன்றியமையாத நாட்கள்; அவை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ளும் நாட்கள் தான். எடுத்துக்காட்டாக கணினி மொழியைக் (computer language) கற்பதில் உனக்கு அதிக ஆர்வம் வந்து பல கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக்கொண்டால், நீயே உனக்கு வாய்ப்பு ஏற்படுத்திவிட்டாய் என்று தானே பொருள்? உனக்கு பெரிய கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான ‘மைக்ரோசாஃப்ட்’ கூட வேலை தந்துவிடும்.

  மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவன், அந்த வாய்ப்பை மிகப்பெரிய வாய்ப்பாக அங்கீகரிக்க வேண்டும். மருத்துவக் கல்வியை நன்கு பயின்று அவன் ஒரு நிபுணன் ஆகிவிட்ட நிலையில் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் தனக்கு ஒரு வாய்ப்பை அவரே ஏற்படுத்துகிறார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்பட்டு அவர் ஹாப்கின்சன் (Hopkinson) மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்படலாம். அவருக்கு புற்றுநோய்க்கான உயர்நிலை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒரு வாய்ப்பு அங்கு கிடைக்கலாம். பிற்காலத்தில் மனித குலத்திற்கு பெரிய ஒரு பரிசைத்தர அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தினாலே பல வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும். நாம் மூச்சு விடும் காலம் வரை வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

  வாய்ப்புக்களை உருவாக்கு:

  “You will find a path… or you will make one” என்றார் ரோம் மீது படையெடுத்த கத்தாகினியன் போர் தளபதிஹேனிபல் (Hannibal). “ஒரு பாதை இருக்கும், அப்படி இல்லாவிட்டால் நீ ஒரு பாதையை ஏற்படுத்திவிடு” என்பதுதான் அதுஙுகி.மு. 247 – 181 வரை வாழ்ந்த உலக வரலாற்றில் மிகவும் மகத்தான போர்த்தளபதி ஆவார்.

  ஏகாதிபத்திய அரசாங்கத்தை எதிர்த்ததால் சிறைபிடிக்கப்பட்டார் நெல்சன் மண்டேலா என்ற தென்னாப்பிரிக்க வழக்கறிஞர். ஆனால் அவர் சிறை சென்றிருந்தபோது, அவரை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி போராட்டம் வெடித்தது. அதை எதிர்கொள்ள முடியாமல் அரசு அவரை விடுவித்தது. ஆனால் அவ்விடுதலையை நிராகரித்த அவர், ஆப்ரிக்க நாட்டு கறுப்பின மக்களுக்கு சம உரிமை கிடைத்தால் தான் சிறையில் இருந்து வெளிவருவேன் என்ற நிபந்தனையை அரசிடம் விதித்தார். பின்னர் தனிமை காவலில் வைக்கப்பட்டார். இறுதியில் அவர் கோரிக்கையை நிறைவேற்றி அவரை விடுதலை செய்தது. மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகள் சிறைகாவலுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டு தென்னாப்பிரிக்க அதிபர் ஆனார்.

  வாய்ப்புக்களை உருவாக்கியவர்கள் என்னென்ன செய்தார்கள்?…

  • அவர்கள் உலக விவகாரங்களில் அக்கரை காட்டினார்கள்.
  • ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் அடைந்தார்கள். அதற்கு அந்தத் துறையில் 10,000 மணிநேரம் செயல்பட்டார்கள்.
  • வாய்ப்புகள் கண்டறிய கண்களையும், காதுகளையும், மனதையும் திறந்து வைத்திருந்தார்கள்.
  • நேர்மறை மனநிலை (Positive Attitude) உள்ளவராக இருந்தார்கள்.
  • இது சரியானது என்று உணர்ந்தால், அதைத் தயக்கமின்றி செய்தார்கள்.
  • ஒரு காரியத்தில் இறங்கியபின் எக்காரணம் கொண்டும் அதிலிருந்து பின்வாங்கவில்லை.
  • ஒரு வேலையில் வெற்றி அடைந்த உடன் அடுத்த செயலை ஆரம்பித்தார்கள்.
  • வாய்ப்புகள் அமையாத போது, வாய்ப்புகளை தாமே உருவாக்கிக் கொண்டனர்.

  ஒருமுறை ஒரே முறை:

  சில வாய்ப்புகள் ஒருமுறைதான் வரும். பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பது, கல்லூரியில் சேர்வது, தொழில் முதலீடு, திருமணம் செய்வது ஆகியவை ஒருமுறைதான் வரும். அவை பலமுறை வருவது விரும்பத்தக்கது அல்ல. ஆகையால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் கவனமாக முடிவு எடுத்தல் வேண்டும். இவற்றில் ஒரு சிறிய தவறு என்றாலும் அது வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

  “உலக சாதனையாளர்கள் பலர் ஏதாவது வகையில் தங்களுக்கு என்று வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளனர். உலகத்தை யாரும் படைக்கவில்லை, அதாவது மனிதனை யாரும் படைக்கவில்லை; அவன் படிப்படியாக வளர்ச்சி அடைந்து நவீன மனிதன் ஆனான்” என சார்லஸ் டார்வின் (1809 – 1882) நிரூபித்து, உலக சிந்தனையை தலைகீழாகப் புரட்டிப் போட்டார். இவரது தந்தை, இவரை டாக்டருக்குப் படிக்க வைக்க எடின்பர்க் (Edinburg University) மருத்துவக் கல்லூரியில் சேர்த்துவிட்டார். இவரோ படிப்பதற்குப் பிடிக்காமல் அக்கல்லூரியை விட்டு வெளியேறினார். அவருக்கு செடி கொடிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. தாவரவியலில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. பேராசிரியர் ஹென்ஸ்டான் என்பவரது கவனத்தை ஈர்த்தார். படிப்பை முடித்து வெளியே வந்த இவருக்கு பேராசிரியர் ஹென்ஸ்டானிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவர் பேராசிரியர் சார்லஸ் டார்வினை ஓர் ஊதியமல்லாத இயற்பியல் ஆராய்ச்சி பதவிக்கு எச்.எம்.எஸ். பீகில் (HMS Beagle) என்ற கப்பலில் பயணிக்க சிபாரிசு செய்திருந்த கடிதம் அது. இந்த கப்பலில் 7 ஆண்டுகள் உலக நாடுகளின் கடற்கரைக்கு சென்று ஆராய்ச்சி செய்வதாக இருந்தது. தந்தைக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் சார்லஸ் டார்வினுக்கு இது மிகவும் பிடித்துவிட்டது. எச்.எம்.எஸ். பீகில் கப்பல் தலைவன் ரோபர்ட் பிட்ரோஸ்-க்கு அவர் எழுதிய ஒப்புதல் கடிதத்தில், “நன்றி. எனது இரண்டாவது வாழ்க்கை இதிலிருந்து ஆரம்பம் ஆகிவிட்டது, எனக்கு இனி தினம் தினம் பிறந்த நாள் தான்” என்று எழுதி சம்மதம் தெரிவித்தார். இப்படி வாய்ப்பைத் தனக்கு ஏற்படுத்திய சார்லஸ் டார்வின் தான் இந்த 7 ஆண்டுகள் ஆராய்ச்சியில் கண்ட உண்மைகளை “உயிரகங்களின் தோற்றம்” (The Origin of Species) என்ற அறிவியல் உலகின் புரட்சிநூலை எழுதினார். அது இப்போதும் உலகம் போற்றும் நூலாக அமைந்து வருகிறது. உயிரினங்கள் தோன்றியதா (Evolution) அல்லது உருவாக்கப்பட்டதா (Creation) என்ற சர்ச்சை இன்னும் ஓயவில்லை என்றாலும், இந்த சர்ச்சைக்கு முதல் காரணம் இந்த ஒப்பற்ற அறிவியல் நூல் தான்.

  ஃபோரன்ஸ் நைட்டிங்கேல் (1820 – 1910), அன்னை தெரசா (1910 -1997), பெஞ்சமின் ப்ராங்கிளின் (1706 – 1790) போன்றவர்களும் அவர்களது வாய்ப்புக்களை அவர்களே தான் ஏற்படுத்திக் கொண்டனர்.

  செய்வதை ஒழுங்காகச் செய்:

  வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள எளிய வழிமுறைகளைச் சொல்லலாம். உங்களுக்கென ஒதுக்கிடும் பணிகளை முழு மனதுடனும், முழு நுணுக்கத்துடனும் உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக செய்ய முனையுங்கள். இந்தப் பணியில் உங்களை மிஞ்சிவிட வேறொருவர் இல்லை என்ற அளவிற்கு உழையுங்கள். உங்களுக்கென்று ஒரு உயர்தரம் (ஏண்ஞ்ட் நற்ஹய்க்ஹழ்க்) நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்போது முதல் உங்களுக்கு வாய்ப்புகள் வந்துகுவியும். கல்லூரியில் ஆசிரியர்கள் என்றால் அந்த பணியில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செய்து வாருங்கள். நீங்கள் கவுரவிக்கப்படுவீர்கள். இன்னொரு கல்லூரியில் உங்களைத் துறைத்தலைவராக நியமிப்பார்கள். சில ஆண்டுகளில், வேறொரு கல்லூரியில் உங்களை முதல்வராகக் கூட நியமிக்கும் வாய்ப்புகள் உருவாகும். இப்படி செய்யும் வேலையைச் செவ்வனே செய்யும்போது நீங்கள் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தராக ஆகும் வாய்ப்பு கூட உருவாகலாம். செய்யும் பணியை திருந்த செய்வதுதான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சிகளில் மகத்தான மகிழ்ச்சி. நிரந்தர இன்பம்.

  வாய்ப்புகள் அதுவாகவும் வரலாம்; அல்லது நீங்களாகவும் ஏற்படுத்தலாம். வாய்ப்புகள் உருவாக பல வழிகள் உண்டு. வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தாலே அந்த வாய்ப்புகள் உங்கள் புலன்களுக்குத் தென்படும். பெரும்பாலும் நம் கையில் வைத்துக்கொண்டே வாய்ப்புகளைத் தேடுவோம்.

  நீங்கள் தேடி அலையும் எல்லா செல்வங்களும் உங்களிடமே, உங்கள் வீட்டிலே, உங்கள் தலையணையின் அடியிலே, உங்கள் நூல்களிலே மறைந்து கிடக்கிறது.

  ஒரு பழைய தேவாலயதின் அருகில் நின்ற சைகாமோர் (Sycamore) மரத்தின் கீழ் உறங்கிய சாண்டியாகோ என்றஆடு மேய்க்கும் சிறுவன் ஒரு கனவு காண்கிறான். எகிப்திய பிரமிடுகளுக்கு பயணம் மேற்கொண்டால் உனக்கு மறைத்து வைத்திருக்கும் ஒரு ‘பொக்கிஷம்’ கிடைக்கும் என்று சிறுவன் ஒருவன் சொல்வதாக அந்த கனவு. வயதான ஒரு பெண்மணி இது ஒரு தீர்க்கதரிசனம் என்று கூறியதும் பயணத்தைத் தொடங்குகிறான் சாண்டியாகோ. மெர்சிசேடக் என்னும் மகான் நல்ல சகுணங்களைச் சொல்லி ‘உர்ம்’ மற்றும் ‘தூமிம்’ என்னும் கற்களையும் தந்து (இவை நல்ல சகுணம் சொல்லும் கற்களாம்) வழியனுப்பினார். ஆடுகளை விற்று வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள் திருடர்கள். நகைக்கடையில் வேலை செய்தான். பதினொரு மாதங்கள் கழித்து எகிப்திற்குப் பயணமானான். அரேபிய பாலைவனத்தில் இரும்பை தங்கமாக்கும் ‘அல்கெமிஸ்ட்’ என்ற இரகசியத்தைக் கண்டறிய புறப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரை சந்திக்கிறான். பின்னர் ஒரு அழகிய அரேபிய பெண்ணைப் பார்த்து வியந்து போகிறான். பல சண்டைகளில் பங்குகொண்டு சிரமப்படுகிறான். பிறகு இரும்பைத் தங்கமாக்கியதாக கூறிக்கொள்ளும் ‘அல்கெமிஸ்ட்’-டையும் சந்திக்கிறான். அது அவனுக்குப் புரியவில்லை. தான் அடைய வேண்டிய எகிப்திற்குச் சென்று பிரமிடுகளின் அடியில் தோண்டிய போது அங்கு எந்த பொக்கிஷமும் இல்லை. திருடர்கள் அவனை அடித்து உதைத்து அவனிடமிருந்த பணத்தை மீண்டும் கொள்ளையடித்தனர். அதில் ஒரு திருடன், பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் சைகாமோர் மரத்தடியில் புதைக்கப்பட்ட பொக்கிஷத்தை எடுப்பது தான் தனது கனவு என்று கூறுகிறான். அந்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்ட சாண்டியாகோ, அண்டுலீசியாவிற்கு வந்து அந்த பாழடைந்த தேவாலத்திற்கு அருகில் அவன் படுத்துறங்கிய சைகாமோர் மரத்தடியில் தோண்டிய போது அவன் கண்களில் பட்டது அவன் தேடியலைந்த பொக்கிஷம்ஙு

  பாஃலோ கோயலோ (Paulo Coelho) என்பவர் எழுதிய ‘அல்கெமிஸ்ட்’ (Alchemist) என்னும் நூலில் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

  முதலில் உங்களைச் சோதனையிடுங்கள்… உங்களதுதிறமைகளைத் தேடுங்கள்ஙு அப்போதுநீங்கள் தேடும் பொக்கிஷங்கள் கிடைக்காமல் போகாது. பல வாய்ப்புகள் வெகு தொலைவில் இல்லை; உங்கள் கைக்கு எட்டும் இடத்திலே தான் இருக்கின்றன.

  மேலும் www.sylendrababu.com என்ற

  இணையதளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

  இந்த இதழை மேலும்